பெருமூச்சு!

வெந்த புண்ணில் வேலைப் பாச்சுற மாதிரி துளசி ஒரு வேலை செய்து போட்டா! ஹ்ம்ம்..!! அவ சொல்லுறதை சொல்லிட்டுப் போய்ட்டா...என்ட மனம் படுற பாடு எனக்குத் தானே தெரியும்.


அப்பிடி என்னதான் செய்தா/சொன்னா என்று சுட்டில போய் பாத்துட்டு வந்திருப்பீங்க. பாக்காதவர்களுக்கு: வலைப்பதிவர்கள் இப்ப விளையாடிக் கொண்டிருக்கிற விளையாட்டாம் (நான் இதை தட்டச்சி முடிக்க முதல் அவங்க விளையாடியே முடிஞ்சு போம்!) என்று என்னையும் இழுத்து விட்டா இந்த துளசி(க்கா/ம்மா). அவங்கவங்கட புத்தக அலுமாரில என்னென்ன இருக்கு, இப்ப என்ன வாசிச்சுக் கொண்டிருக்கிறாங்க என்று எழுத வேணுமாம். எல்லாருக்கும் புத்தக அலுமாரி என்டா எனக்கு அது புத்தக 'அழு'மாரி! வேறென்ன பின்ன..இருக்கிற ரெண்டிலயும் நிறைஞ்சு வழியிறது கணவரது முகாமத்துவம், கணக்கியல் மற்றது என்னுடைய கணினி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் தான். இதெல்லாத்தையும் விட்டிட்டுப் பாத்தா கொஞ்ச கணினி, பொருளாதார, ஆ.வி/குமுதம் , ரீடர்ஸ் டைஜஸ்ட், 3 குறுக்குத் தையல் டிசைன் இதழ்களும் இரண்டு பேருடைய பாடக்குறிப்புகளும் ஆங்கில அகராதியும் என்சைக்ளோபீடியாவும் மிச்ச இடத்தில் முக்கால்வாசியை ஆக்கிரமிச்சுக் கொண்டிருக்கும்.

அதெல்லா.. ஆ..ஆ..த்துக்கும் பிறகு ஒரு 3 - 7% வீதம் மிச்சம். இதுக்குள்ளதான் 'புத்தகங்கள்'.
கவனமா நோண்டிப்பாத்ததில:

சிவகாமி இன்னும் அவட சபதத்தோட மாமல்லரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறா.(இவவோட சேர்த்து புத்தகக்டையில இருந்தது காணும் என்டு கூட்டிகொண்டு வந்த வந்தியத்தேவன், குந்தவை, வானதி, அருண்மொழி எல்லாரும் இலங்கையிலே நிண்டிட்டாங்கள்.)

பாரதியாரும் கவிதை பாடிக்கொண்டிருக்கிறார்.

சத்தியமா இந்த பாரதியார் கவிதையும் சிவகாமி சபதமும் ஆ.வி/குமுதமும்தவிர வேற ஒரு தமிழ்ப்புத்தகமும் வீட்டில இல்லை! (அண்ணியிட மாமாட நினைவுப் புத்தகம் தான் 4வது) வந்து..இந்த எண்கணிதச் சாத்திரப் புத்தகத்தையும் இதுக்குள்ளே சேர்க்கலாமோ?

ஒரு இந்து சமயப் புத்தகம் "Dance of Siva"
மாண்டூக்கிய உபநிஷதம்
மைக்கல் ஜக்சன்ட Moon Walking
ஸ்டீபன் கிங்கின் IT
In the footsteps of Eve
2 - 3 ISKON புத்தகங்கள்.
The Twentieth Train to Auchswitz


இவ்வளவுந்தான் என்ட 'அழு'மாரியில.

எல்லாரும் எல்லாரையும் கூப்பிட்டிட்டாங்க. நான் என்ட பங்குக்கு இந்த விளையாட்டில பங்கு கொள்ள இன்னும் அழைபடாதவர்களையும் வசந்தனையும் க்ருபாவையும்(இவங்களை யாரும் எனக்கு முன்னமே கூப்பிட்டிருந்தா நான் பொறுப்பில்ல.) கூப்பிடுறன்.

சரி அழைப்பிதழ் அனுப்பியாச்சு!

அங்க இலங்கையில வீட்டில இருந்த புத்தகங்கள்...ஹ்ம்ம்...பெருமூச்சுத்தான் விடேலும். அடுத்த முறை போககிடைச்சா எல்லாப்புத்தகங்களையும் சுருட்டிக் கொண்டு வாற திட்டத்தில இருக்கிறன். அம்மாட்ட சொல்லிடாதீங்க...உஷ்ஷ்!! அடுத்த பதிவில எப்பிடி வாசிப்புப் பழக்கம் தொடங்கினது..வளந்தது என்டு இந்தப் பதிவுக்கு ஒரு prequelம் இப்ப என்ன வாசிச்சுக் கொண்டிருக்கிறன் என்று ஒரு sequel உம் 2 in 1ஆகத் தாறன்.

5 படகுகள் :

வசந்தன்(Vasanthan) June 14, 2005 1:49 pm  

ஏற்கெனவே ரெண்டு இடத்திலயிருந்து அழைப்பு வந்திருக்கு. எண்டாலும் அழைப்புக்கு நன்றி.

`மழை` ஷ்ரேயா(Shreya) June 14, 2005 2:00 pm  

// வசந்தனையும் க்ருபாவையும்(இவங்களை யாரும் எனக்கு முன்னமே கூப்பிட்டிருந்தா நான் பொறுப்பில்ல.) கூப்பிடுறன். //

my disclaimer!! :o)

ஜெ. ராம்கி June 15, 2005 9:48 pm  

கிருபாவை கூப்பிட்டேன். பிகு பண்ணிக்கிறான். எளக்கிய பிகு?!

`மழை` ஷ்ரேயா(Shreya) June 16, 2005 12:13 pm  

ஒருவேளை வெட்கப்படுறாரோ?(க்ருபா usually வெட்கம் கிலோ எவ்வளவு என்று தானே கேட்பார்!) :oD

`மழை` ஷ்ரேயா(Shreya) June 16, 2005 2:56 pm  

துளசி..என் புத்தக லிஸ்ட் பாத்து ஒன்றுமே சொல்லவில்லையே? எவ்வளவு "பெரிய(!?)" தமிழ்ப்புத்தக லிஸ்ட் பாத்தீங்களா?

பெட்டகம்