ஈழம்+தமிழர்+போராட்டம்

இலங்கையில் 'தமிழர்' எனப்படுவோர் தென்னிந்தியப் படையெடுப்புகளின் போது இலங்கை வந்து அங்கேயே தங்கிவிட்ட தமிழ்நாட்டவர்கள் என்பது என்னுடன் பணிபுரியும் (முன்னாள் இந்திய ராணுவ) நண்பரின் கருத்து.

அந்நண்பர் இன்றைக்கு என்னிடம் கேட்டார் "உனது பாட்டன் பாட்டி எங்கே.. இலங்கையிலா?"

நான்: "இப்போது அவர்கள் உயிருடனில்லை..என்னுடைய உறவினர்களில் சிலர்தான் அங்கே இருக்கிறார்கள்"
அவர்: "இந்தியாவிலுள்ள உறவினர்களோடு தொடர்பற்றுப் போயிருக்கும் என நினைக்கிறேன்"

எனக்கு முதலில் விளங்கவில்லை & இலங்கைத்தமிழர் பற்றிய அவரது கருத்தையும் மறந்து போயிருந்தேன்.

"எனக்குத் தெரிந்து இந்தியாவில் எங்கள் குடும்பத்தினர் யாரும் மணமுடிக்கவில்லை, அதனால் உறவினர்களும் இல்லை" என்று சொல்லவே, அவர் என்னை ஆமோதித்து "உறவினர்கள் இருந்தாலும் உங்களுக்குத் தெரிந்திருக்காது, சில நூற்றாண்டுகளுகளாயிற்றே இலங்கையில் குடியேறியும்! அதனால் தொடர்புகள் அற்றுப் போயிருக்கும்"என்றார்.

நான் மீண்டும் விளங்கப்படுத்த வேண்டியதாயிற்று - விசயன் வந்து குடியேற முதலே இலங்கையில் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களது வழித்தோன்றல்கள்தான் நாங்கள் என்று. அவருக்கோ தாளாத ஆச்சரியம்; "உண்மையா" என்று பலதடவை கேட்டுக் கொண்டார்.

பிறகு சொன்னாரே ஒன்று! "அப்படியானால்(அதாவது விசயன் வரமுதல் இலங்கையில் (வடபாகத்திலெல்லாம்) மனிதர்கள் இருந்தபடியால்) பிரபாகரன் செய்வது சரி. புலிகள் சொந்தமல்லாத இடத்தைக் கேட்பதாக நான் நினைத்திருந்தேன்".


இந்த இடத்தில் முகமூடி, எனது ச்சரியான ஹொட்டா இருக்கப்பா! பதிவில் கேட்ட கேள்வி ஞாபகம் வருகிறது. அவர் கேட்டது:

//... ஆரம்பித்த பொழுது இருந்த போராட்ட வீரியம் அடுத்த தலைமுறையினரிடம் அதே அளவு உள்ளதா? (களத்தில் இருப்பவரிடம்... வெளியிலிருந்து ஆதரவு தருபவர்களிடம் அல்ல) //


(எந்தப் போரிலென்றாலும்) களத்திற்குச் சென்றிருப்பவரைப் பற்றிக் கதைக்க எனக்குத் தகுதியில்லை. அதற்குத் தேவையான மனத்திடமும் துணிச்சலும் நினைத்தும் பார்க்க முடியாதவை.

முகமூடியின் கேள்விக்கு எனது அறிவுக்கு எட்டியவரை பதில்:
முதல் தலைமுறை பாராட்டத்தில் குதித்ததற்கான காரணம் எல்லாருக்கும் தெரியும். இளைய தலைமுறைப் போராளிகள் முதல் தலைமுறையினரின் அதே காரணங்களுக்காகவும் அத்துடன் அக்காரணங்களுக்கான போராட்டம் தம்மில்/தம் (குடும்ப /கல்வி /பொருளாதார/இன்னபிற) சூழலில் ஏற்படுத்திய தாக்கங்கள், மாற்றங்களால் உந்தப்பட்டும் களத்தில் குதித்தவர்கள். இரு தலைமுறையினருக்கும் போராட்டத்தின் காரணங்கள் சற்றே வேறுபட்டாலும் போராட்ட வீரியம் சமமானதே. இன்னும் சொல்லப்போனால் இளைய தலைமுறைப் போராளிகளுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்றே எனக்குப் படுகிறது. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

11 படகுகள் :

வசந்தன்(Vasanthan) July 06, 2005 12:08 pm  

இந்த பூர்வீகம் பற்றிய கதை பல நேரங்களில் அலுப்பையும், சில நேரங்களில கடுமையான விசனத்தையும் தருகிறது.

கறுப்பி கூட அந்த இந்திய இராணுவச் சிப்பாய் கூறியதைப்போல ஒரு கருத்தைக் கூறியிருந்தார். மேலும் சிங்களவர்கள் மலையாளிகளின் வம்சத்தவர் என்றும் போகிற போக்கில் சொல்லியிருந்தார். தொப்புட் கொடி உறவு என்று சொல்வதுகூட எந்த அர்த்தத்தில் என்பது எனக்குக் குழப்பமாயுள்ளது. நான் வைத்திருக்கும் அர்த்தம் அவர்களின் வழித்தோன்றல் என்ற கருத்திலன்று. ஒரே தாயிலிருந்து வந்த சகோதரங்களுக்கிடையிலான உறவை என்னவென்பது?

தொல்பொருளியல் ஆய்விற்கூட தமிழகத்தைவிடவும் மூத்த திராவிட ஆதாரம் ஈழத்தில்தான் கிடைத்துள்ளது.

எனக்கென்னவோ எதிர்த்தரப்புப் பரப்புரை மிகமிகப் பலம் வாய்ந்தது போலவே படுகிறது. இல்லையென்றால் இவ்வளவுக்குப் பேய்க்காட்டி வைத்திருப்பார்களா?
ஆனால் அந்த முன்னாள் இந்திய இராணுவச்சிப்பாயின் பிரதம தளபதி டிக்சிற் தன் நூலில் ஆச்சரியப்படும் விதத்தில் இதுபற்றிக் கூறியுள்ளாரே. அதில் தமிழரின் பூர்வீகத்தை ஆணித்தரமாக ஒத்துக்கொள்வதோடு சிங்களத்தின் புரட்டையும் வெளிப்படுத்துகிறார். ஆனால் அத்தலைமையின் கீழ் இருந்த அந்தச் சிப்பாய்க்கு அது தெரியாமற் போய்விட்டது.

வசந்தன்(Vasanthan) July 06, 2005 12:18 pm  

முகமூடியின் கேள்விக்கான உங்கள் பதில் சரியானதே. தொடக்கக் காலத்தில் சிங்களவனைக் கொல்ல வேண்டுமென்பதைத் தாண்டி பெரிய விளக்கமோ நம்பிக்கையோ போராட்டத்தின்பால் அத்தலைமுறைக்கு இருந்ததில்லை. குறிப்பாக போராட்டத்தின் வெற்றி பற்றிய எந்த நம்பிக்கையுமிருக்கவில்லை.

ஆனால் இளந்தலைமுறைக்கு பழைய வரலாற்றோடு, போரின்போது அவர்கள் அனுபவித்தவையும் (பொருளாதாரத்தடை, குண்டுவீச்சுக்கள், படுகொலைகள், இடப்பெயர்வுகள், இராணுவ அடக்குமுறைகள்) சேர்ந்து போராட்டத் தேவையின் அவசியத்தையும் அதன் பாலான விளக்கத்தன்மையையும் அவர்களுக்குக் கொடுத்துள்ளது. அதையும்விட வெற்றி பற்றிய நம்பிக்கை உள்ளது. இராணுவத்தை வழிமறிக்க முடியும், சிங்கள அரசைப் போரில் மண்டியிட வைக்க முடியும் என்ற நம்பிக்கையும், படைக்கட்டுமானம் தொடர்பான தெளிவும் இளந்தலைமுறையிடம் இருக்கிறது.

யுத்த நிறுத்த காலம் என்பது ஒருவேளை குழப்பமான காலமாயிருக்கலாம். ஆனால் யுத்தம் தொடங்கினால் பழையபடி எல்லாம் மாறும். இன்னொரு விடயம், பிரதேசங்களைப் பொறுத்து அது மாறுபடும். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் கட்டுப்பாடற்ற பகுதிக்குமிடையிலான வித்தியாசம். அதைவிட இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும், எதிரியின் அணுகுமுறை தொடர்பான வித்தியாசங்கள்,- எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்தையும் கிழக்கையும் ஒரே மாதிரி இராணுவம் அணுகுவதில்லை.

துளசி கோபால் July 06, 2005 12:34 pm  

ஷ்ரேயா,

கனகாலத்துக்கு முன்னாலே இந்தியா இலங்கை எல்லாம் ஒட்டியே இருந்திருக்குன்னு 'கோண்டுவானா'காலம் சொல்லுதே. அப்ப எல்லாரும் ஒண்ணாத்தானே இருந்து அங்கெயும் இங்கெயுமா
போயிருக்கணும்?

ஒண்ணும் புரியலையே!!

என்றும் அன்புடன்,
துளசி.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 06, 2005 1:57 pm  

//எனக்கென்னவோ எதிர்த்தரப்புப் பரப்புரை மிகமிகப் பலம் வாய்ந்தது போலவே படுகிறது//

உண்மை. இலங்கை விவகாரத்தில் பலரும் (படித்தவர்களுமே) சரியாக வாதப் பிரதி வாதங்களை ஆராய்ந்து, தரவுகளைப் பார்த்து யோசித்து முடிவெடுக்காமல் வேறு யாராவது சொல்லுவதை போகிற போக்கில் தங்கள் முடிவாகவும் கொள்கிறமை வருந்தத்தக்கது. இந்நிலை சற்றே மாறிவருவது கொஞ்சம் நம்பிக்கை தருகிறது. நான் இன்னும் கொஞ்சம் விளக்கமாக ஏன் இந்தத்தலைமுறைப் போராளிகளின் போராட்ட வீரியம் அதிகமாக இருக்கும் என்பதைப் பற்றி எழுதியிருக்க வேண்டும். ஆனால் உங்கள் பின்னூட்டம் அதை நிவர்த்திக்கிறது! நன்றி வசந்தன்.


//நான் வைத்திருக்கும் அர்த்தம் அவர்களின் வழித்தோன்றல் என்ற கருத்திலன்று. ஒரே தாயிலிருந்து வந்த சகோதரங்களுக்கிடையிலான உறவை என்னவென்பது?//

வசந்தன் நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை.


துளசி - விசயன் வரமுதல் இருந்தவர்கள், பிறகு விசயன் வந்த பிறகு அவன் கலப்பில் தோன்றிய ஆட்கள், மேற்கூறிய 2 தரப்பின் பரஸ்பர உறவுகளால் விருத்தியடைந்து வந்த சமுதாயமே இலங்கையர் என்பது எனது கருத்து. எனது நண்பருக்கு நான் சொல்ல விழைந்ததுவும் அதுவே. இலங்கையில் தமிழர் என்பவர் இப்ப சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்து குடியேறியவர்கள் அல்ல என்பதை விளக்கவே அப்படிச் சொன்னேன். (ஏனென்றால் அப்படித்தான் இலங்கை அரசின் பிரச்சாரம் அமைந்திருக்கிறது)

இதற்கும் 'கோண்டுவானா' காலத்திற்கும் ஒரு பிரச்சனையும் இல்லை. If anything, எனது கருத்திற்கு மேலும் வலுச்சேர்க்கிறது. கோண்ட்வானா = குமரிக்கண்டம். குமரிக்கண்டத்தின் (ஒட்டியே இருந்த) இரு பகுதிகள் தான் தமிழ்நாடும் இலங்கையும் என்றால்..இரு பகுதிகளிலுமே மனிதர்கள் இருந்திருப்பார்கள்தானே, அப்படிப் பார்க்கையில் இலங்கையில் 2500+ வருடங்களுக்கு முன் வந்திறங்கிய விசயனுக்கு முன் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக இதைக் கொள்ளலாம்! சரியா துளசி?

Unknown July 06, 2005 3:26 pm  

'குமரிக் கோடும் கொடுங்கடல் கொல்ல'ன்னு ஒரு பாட்டு., எப்பவோ படித்தது., அது மீண்டும் படிக்கக் கிடைத்தால்., உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கக்கூடும்.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 06, 2005 3:42 pm  

//'குமரிக் கோடும் கொடுங்கடல் கொல்ல'..//

கொல்லவா கொள்ளவா?

எப்பிடிப்பார்த்தாலும் ஒரே அர்த்தம்தான்! அட!

துளசி கோபால் July 06, 2005 4:45 pm  

//குமரிக்கண்டம். குமரிக்கண்டத்தின் (ஒட்டியே இருந்த) இரு பகுதிகள் தான் தமிழ்நாடும் இலங்கையும் என்றால்..இரு பகுதிகளிலுமே மனிதர்கள் இருந்திருப்பார்கள்தானே, அப்படிப் பார்க்கையில் இலங்கையில் 2500+ வருடங்களுக்கு முன் வந்திறங்கிய விசயனுக்கு முன் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக இதைக் கொள்ளலாம்! சரியா துளசி?//

மெத்தச் சரி!!!!

துளசி.

Anonymous July 06, 2005 6:59 pm  

vadivEl eRindha vAnpagai poRAdhu

pahRuLiyARRudan panmalai yadukkaththuk

kumarikkOttudan kodungdal koLLa

vadathisai gangaiyum imaiyamum venRu

then thisai yANda thennavan vAlzI!

சினேகிதி July 07, 2005 2:14 am  

30,000 வருடங்களுக்கு முதலே இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்று அண்மையில் எரிமலையில் படித்தேன் அதன்படி பார்த்தால் விஜயன் தான் இலங்கையின் முதல் மனிதன் என்ற மகாவம்சக் கூற்றுப் பிழையல்லவா?? மற்றது பல்லாயிரம் வருடங்களுக்கு முதல் இலங்கை இந்தியா இன்னும் சில நாடுகள் ஒன்றாக இருந்துள்ளன.அதாவது கடலால் பிரிக்கப்படாது தனி மன்னர்களால் ஆளப்பட்டிருக்கின்றன பின்பு கடற்கோள்கள் ஏற்பட்டுப் பிரிவடைந்திருக்கின்றன.ஆதலால் இலங்கையர்கள் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்களாக இருக்க வேண்டியதில்லை.மலையகத்தில் வாழும் பெரும்பாலான தமிழர்கள்தான் பெருந்தோட்டப் பயிற்செய்கைக்காக இந்தியாவிலிருந்து போர்த்துக்கேயரால் கொண்டுவரப்பட்டவர்கள்.

அப்புறம் இதையும் வாசிச்சு விளக்கம் சொன்னால் என் குட்டித்தலைக்கு குழப்பம் குறையும்.
(http://snegethyj.blogspot.com/2005/06/blog-post_26.html)

`மழை` ஷ்ரேயா(Shreya) July 07, 2005 8:57 am  

//If the Singhalese say that the Tamils came and colonised Ceylon later than the Kalingas, they are just seeking to belittle the Tamils and also to gain sole proprietorship rights to the island.

And that will be chauvinistic arrogance of the first order! //

அதுதானே நடக்கின்றது!.

//When Tamils want to know something that they need to know, or ought to know, but do not know from where to know...., where are the sources? We are good in forming committees and nominating members//

உங்கள் கருத்துகளில் உண்மை இருக்கின்றது. ஆதிகாலத்தைப்பற்றி உண்மையை அறிய விழையாமல் சும்மா பழங்கதை பேசிக் கொண்டிருக்கிறோம்!

மிக்க நன்றிArthur Avalon

`மழை` ஷ்ரேயா(Shreya) July 07, 2005 9:07 am  

சினேகிதி - மகாவம்சம் விசயனை இலங்கையின் முதல் மனிதன் என்று சொல்லுதோ? அப்பிடியெண்டா அவர் இலங்கைக்கு வந்து மணமுடித்த குவேனி யாராம்? அவவுக்கு அம்மா அப்பா தாத்தா பாட்டி இருக்கல்லையா?

உங்கட பதிவில தெளிவாத்தானே எழுதியிருக்கிறீங்க..என்ன குழப்பம்? கடைசிக் கேள்வியா?

//இலங்கையின் முதல் மனிதன் என்று மகா வம்சத்தில் சொல்லப்படுகின்ற விஜயன் என்பவர் சிங்கத்துக்கும் இளவரசிக்கும் பிறந்தவராம்…அறிவியல் சார்ந்து இது எவ்வளவு சாத்தியம்.?//

அது சும்மா சொல்லுறது. அப்பிடியே உண்மையென்டு எடுத்துக்கொண்டாலும் பிறக்கும் 'சிங்கப்பிள்ளை' இனவிருத்தி செய்ய இயலாது. இது அறிவியல் பூர்வமாக சாத்தியமற்றது. கற்பனையில மட்டுந்தான் நடக்கும். எங்கட புராணங்கள்ல சொல்லுற/நடக்கிற மாதிரி ஒரு அதீதமான கற்பனை. அவ்வளவுதான்!

பெட்டகம்