ஆண்களின் புத்தகம்

கைக்குக் கிடைக்கும்.. கிடைக்கும் என்று நூலகத்திலுள்ள பிரதியை எதிர்பார்த்து அலுத்துப் போய் தள்ளுபடியில் $12.95க்குப் போட்டிருந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். என்ன புத்தகம்? ஆண்டு தொடங்கியது முதல் (ஒரு வேளை அதற்கும் முன்னரே??) தொடர்வண்டியில் 60% பேர் வாசித்த புத்தகம்.

டா வின்சி கோட் தான். பிரபலமான புத்தகம். புத்தகமே வாசிக்காத என் சக பணியாளருக்கே இப்புத்தகத்தைப் பற்றித் தெரிந்திருந்தது. "ஒரு நாளும் நான் வாசிக்க மாட்டேன் : இது ப்ளாஸ்ஃபெமி (blasphemy)" என்று சொன்னா!!

வார இறுதியில் வாசிப்போமென்றால்..எங்கே? நேரம் கிடைத்தால் தானே! வெள்ளிக்கிழமை வாங்கியதை திங்கட் கிழமை தான் வாசிக்க ஆரம்பித்தேன். தொடர்வண்டியில் காலைநேரக் கோழித்தூக்கம் போடும் நேரம் (லிட்கமிற்கும் பேர்வூடுக்கும் இடையிலான 10 - 15 நிமிடம்! ) தவிர மீதி நேரமெல்லாம் இந்தப் புத்தகம் தான். நேற்றுப் பின்னேரம் வண்டியில் வாசித்துக் கொண்டிருந்தேனா..யாரோ தட்டுகிறார்கள் என் தோளில். நிமிர்ந்து பார்க்கிறேன். ஒரு நண்பி. கதைத்துக் கொண்டே பயணம் தொடர்ந்தது.

"என்ன புத்தகம் வாசிக்கிறீங்க"

"டா வின்சி கோட்"

"ஆ??? அப்பிடியெண்டா?"

இந்தப்புத்தகம் பற்றித் தெரியாமல் கூட யாராவது இருக்கிறார்களா! என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் "கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் கதை மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம்" என்றேன்.

புத்தகத்தை வாங்கி, பின்புறம் திருப்பி பின்னட்டையில் இருந்த கதைச்சுருக்கத்தை வாசித்தா.

"ஆணகளின் புத்தகம் வாசிக்கிறீர்களே"

இப்போது நான் "ஙே!". "ஆண்களுக்குரிய புத்தகமா? அப்படியென்றால்??" விளங்காமல் கேட்கிறேன்...புத்தகங்களிலும் ஆண்களுக்குரியது பெண்களுக்குரியது என்று இருக்கிறதா என்ன!

கேட்டதற்குப் பதிலாக அவ சொன்னது: "இந்த மாதிரிக் கதைகள் ஆண்கள் வாசிப்பதற்குத்தான் உகந்தது. அவர்கள் தான் இதை அதிகம் விரும்புவார்கள். பெண்கள் வாசிக்க எத்தனையோ "நைஸ் சப்ஜெக்ட்ஸ்" புத்தகங்கள் இருக்கின்றனவே".

அந்த " நைஸ் சப்ஜெக்ற்ஸ்" என்னென்ன என்று நான் கேட்கப்போகவில்லை. இந்த மாதிரி ("ஆண்கள்") புத்தகம் எனக்கும் பிடிக்கும் எனச் சொல்லிவிட்டுப் பேசாமலிருந்து விட்டேன்.

படைப்பில்(புத்தகமோ, சலனப்படமோ, ஓவியமோ எதுவென்றாலும்)ஆண்களுக்குரியது பெண்களுக்குரியது என்று வேறுபாடு எங்கிருந்து முளைத்தது?

18 படகுகள் :

Agnibarathi July 13, 2005 1:27 pm  

ungaL thOzhi anEgamAga Mills and Boone ragam endRu ninaikkiRen!! :) All said and done, Da Vinci Code nalla puththagam AnAl media hype konjam athigam endRu thOndRugiRathu.

Anonymous July 13, 2005 1:41 pm  

நல்ல புத்தகம். ஒரு 60% உண்மை இருக்குமென நான் நினைகிறேன். இயேசு தப்பியதும், மேரி, தாமஸின் இயேசு பற்றிய குறிப்புகளை படித்திருக்கும் பட்சத்தில் இன்னும் நன்றாக இருக்கும்.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 13, 2005 2:04 pm  

கதையிலுள்ளது எவ்வளவுக்கு உண்மையோ தெரியாது. ஆனாலும் எனக்குப் பிடித்திருந்தது. நான் மேரி மக்டலீன் பிரான்சுக்குத் தப்பிப் போனதைப் பற்றி எங்கோ வாசித்திருக்கிறேன். எனக்கு இந்த conspiracy theory வகை நிறையவே பிடிக்கும்!! ;o)

Dan Brownன் ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ்சும் பிடித்திருந்தது - அந்த anti-matterக்காக!! :o)

`மழை` ஷ்ரேயா(Shreya) July 13, 2005 2:39 pm  

இப்படி இலங்கை/இந்தியாவிலுள்ள ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள், கோயில்களை வைத்து யாராவது எழுதினால் எவ்வ்வ்வ்வ்வ்வளவு நல்லாயிருக்கும். :o)

Ganesh Gopalasubramanian July 13, 2005 7:07 pm  

நல்ல புத்தகம். dan brownம் paulo coelhoவும் இன்றைய தேதியில் மிகப் பிரபலமான எழுத்தாளர்கள்.

படைப்பில்(புத்தகமோ, சலனப்படமோ, ஓவியமோ எதுவென்றாலும்)ஆண்களுக்குரியது பெண்களுக்குரியது என்று வேறுபாடு எங்கிருந்து முளைத்தது?
புரியாமல் படித்த வாசகர்களிடமிருந்துதான்

Chez July 13, 2005 11:26 pm  

அதெல்லாம் எப்பவோ வந்துடுச்சுங்க! ஆண்கள் னா crime கதைகள்... பெண்கள் னா romance கதைகள் ன்னு!

ஆனா,'டா வின்ஸி கோட்' அருமையான புத்தகம்.. உண்மையா பொய்யான்னு நிறைய ஆராயலாம்.. but, ரொம்ப interesting plot.. :-)

`மழை` ஷ்ரேயா(Shreya) July 14, 2005 10:41 am  

//அதெல்லாம் எப்பவோ வந்துடுச்சுங்க! ஆண்கள் னா crime கதைகள்... பெண்கள் னா romance கதைகள் ன்னு!//

இது என்ன மனப்பாங்கு? உண்மையில் எனக்குப் புதிராக இருக்கிறது! :o(

Da Vinci Code கதைக்கரு நல்லாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஊடகங்களில் இது தேவையில்லாதளவுக்கு விளம்பரப்படுத்தப்பட்டதோ (hype- அக்னிபாரதி சொன்ன மாதிரி) என்று தோன்றுகிறது. அதனாலேயே எனக்குக் கதையின் கரு ஓரளவுக்குத் தெரிய வந்து விட்ட படியால் ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ் வாசித்த போது இருந்த விறுவிறுப்பு இப்புத்தகத்தை வாசிக்கும் போது இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

எல்லாப் படைப்புகளுக்கும் இதேதான் நிலை. அந்நியன் படத்தின் விமர்சனங்களை நிறையவே வாசித்து விட்டதால், அதைப் பார்த்த போது படத்தை "objective" ஆகப் பார்க்க முடியவில்லை. வாசித்த விமர்சனங்களுக்கூடாகவே அந்நியனை நான் பார்த்தேன். :o(

நந்தன் | Nandhan July 15, 2005 2:36 pm  

Davinci code padichutu athukapuram than Dan brown oda matha novelkala padichen. DaVinci codela irundha paraparapu matha edhuliyum ille :(

`மழை` ஷ்ரேயா(Shreya) July 15, 2005 4:46 pm  

Dan Brownன் புத்தகங்களில் நான் முதலில் வாசித்தது Digital Fortress. ஆனால் Angels & Demonsதான் எல்லாத்தையும் விட விறுவிறுப்பா இருந்துது.(எனது தொல்பொருள்/ கல்வெட்டு/conspiracy theory "வாசனை" போல) :o)

Da Vinci Codeஐ நீங்கள் எப்போ வாசித்தீர்கள்? Media hypeக்கு முதலா? பிறகா?

தருமி July 16, 2005 3:41 am  

எல்லோரும் சொல்வதைப் பார்த்தால் Irving Wallace-ன் THE WORD மாதிரி இருக்கும்போலத் தெரிகிறது; பார்ப்போம்.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 16, 2005 11:07 am  

தருமி - நீங்கள் Da Vinci Code வாசித்து விட்டீர்களா?

The word பற்றித் தெரியாது. நூலகத்தில் தேடி எடுத்து வாசிக்க வேண்டும். (அது என்ன "இளகிய மனது"க்காரர்களின் புத்தகமா தருமி? ;o) )

தருமி July 17, 2005 2:33 am  

இன்னும் வாசிக்கவில்லை, ஷ்ரேயா.
வாங்கி வாசித்துவிட்டு- மெல்ல - மீண்டும் இங்கே வருகிறேன்.
"அது என்ன "இளகிய மனது"க்காரர்களின் புத்தகமா தருமி? ;o) ) "
வேணாம்..வேணாம்!!

THE WORD -5th gospel ..அது இதுன்னு வரும்.ரொம்ப பழசு..எங்க காலத்துது..இல்ல..ஆனா ரொம்ப gripping

enRenRum-anbudan.BALA July 17, 2005 5:09 am  

//அந்த " நைஸ் சப்ஜெக்ற்ஸ்" என்னென்ன என்று நான் கேட்கப்போகவில்லை. இந்த மாதிரி ("ஆண்கள்") புத்தகம் எனக்கும் பிடிக்கும் எனச் சொல்லிவிட்டுப் பேசாமலிருந்து விட்டேன்.
//
Good response, I think :)

I am yet to read the novel to find out about its gender ;)

NONO July 17, 2005 3:33 pm  
This comment has been removed by a blog administrator.
NONO July 17, 2005 3:35 pm  

Davinci code நான் வாசிக்கவில்லை ஆனால் அதைப்பற்றி நிறைய கேள்விப்பட்டதுன்டு/படித்ததுண்டு!!! எனக் என்னவோ Davinci code கதாசிரியரின் கற்பனை கதைமாதிரித்தான் தெரிகின்றது!!! (படிக்காமல் இருப்பதுக்கு அது தான் முக்கிய காரணம்)

Chez July 17, 2005 9:33 pm  

தமிழ்ல சொல்றதை விட ஆங்கிலத்துல girlishனு ஒரு characterization சொல்வாங்களே... like how 'giggles' are associated with girls.. :-)

அதான், sherlock holmes னா ஆண்களுக்கு, Mills and Boons னா பெண்களுக்குன்னு ஒரு வரையறை.. ஆனா உண்மையில் என்னை பொறுத்த வரை எல்லா புத்தகங்களையும் எல்லாரும் படிக்கலாம்! :-)

`மழை` ஷ்ரேயா(Shreya) July 18, 2005 8:59 am  

புத்தகம் முழுக்க முழுக்க கற்பனையாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. குறைந்த பட்சம் ஒரு 40 - 50% உண்மை இருக்கும் என நினைக்கிறேன்.

கற்பனை என்றால் இன்னும் இலகுவாகி விடுமே..வாசிக்க!! ஏற்கெனவே நம் மனதில் பதிந்திருப்பவைகளுடன் ஒப்பிட வேண்டிய தேவை வராது..என்ன நினைக்கிறீர்கள் நோ நோ?

செல்வேந்திரன் March 31, 2006 10:23 pm  

இப்படி இலங்கை/இந்தியாவிலுள்ள ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள், கோயில்களை வைத்து யாராவது எழுதினால் எவ்வ்வ்வ்வ்வ்வளவு நல்லாயிருக்கும். :o)

>>>

ஏனில்லை !! அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" படித்து
பாருங்கள் !! எனக்கு மிகவும் பிடித்த ஒரு காவியம் அது !!

பெட்டகம்