இன்று!


முக்கியமான சிலருக்கு இன்றைக்குப் பிறந்த நாளாம் என்று கேள்விப்பட்டதில் உங்களுக்கும் சொல்லலாம் என்று நினைத்தேன். எங்களூர் பிரதமருக்கு இன்றைக்கு 66 வயதாகிறது. இவருடன் பிரபல எழுத்தாளர் பேர்னார்ட் ஷா, உளவியலாளர் கார்ல் ஜங், இசைக்கலைஞர் மிக் ஜாகர், நடிகர் கெவின் ஸ்பேசி, நடிகை சான்ட்ரா புல்லொக், கிரிக்கெட் வீரர் ஜொன்டி றோட்ஸுக்கும் இன்றைக்குப் பிறந்த நாளாம்.

இவர்களுடன்.. என்னுடைய ஒரு தோழியின் அப்பாவும், தன் பிறந்த நாளை என் அப்பாவுடன் கொண்டாடும் இன்னொரு தோழியின் அப்பாவும் நானும் இன்றைக்கு எங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். :o)

31 படகுகள் :

Unknown July 26, 2005 10:09 am  

பிறந்த தின வாழ்த்துக்கள்.

துளசி கோபால் July 26, 2005 10:28 am  

ஷ்ரேயா,


என் மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!

நல்லா இருங்க.

என்றும் அன்புடன்,
துளசி.

NONO July 26, 2005 11:15 am  

வாழ்த்துக்கள்!!!!

`மழை` ஷ்ரேயா(Shreya) July 26, 2005 12:27 pm  

அப்டிபோடு, துளசி, நோ நோ, சிறுமி - வாழ்த்துக்களுக்கு நன்றி.

சிறுமி - கேக் தானே வேணும் இந்தாங்க! ;o)

முகமூடி July 26, 2005 12:39 pm  

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷ்ரேயா...

கேக் கேட்டா அல்வா தரீங்க... அதனால ஒரு சர்ப்ரைஸா $10 எனக்கு DD ஆகவோ WT ஆகவோ எனக்கு அனுப்பி வையுங்களேன்... நானே கேக் வாங்கி சாப்பிட்டுக்கறேன்

முகமூடி July 26, 2005 12:41 pm  

நீங்க கட்-அவுட் வச்சி, கரகோஷம் போட்டு, பணமுடிப்பு கொடுக்கறதா இருந்தா சொல்லுங்க... எனக்கும் ஒரு பிறந்த நாள் விழா கொண்டாடிவோம்

இளங்கோ-டிசே July 26, 2005 1:22 pm  

பிறந்தநாள் வாழ்த்து ஷ்ரேயா!

`மழை` ஷ்ரேயா(Shreya) July 26, 2005 1:40 pm  

நன்றி முகமூடி. நான் எங்கே அல்வா கொடுத்தேன்..cake கேட்டா சிறுமி, எந்த cake அவக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை..அதனால சுட்டினேன்.

//அதனால ஒரு சர்ப்ரைஸா $10 எனக்கு DD ஆகவோ WT ஆகவோ எனக்கு அனுப்பி வையுங்களேன்... நானே கேக் வாங்கி சாப்பிட்டுக்கறேன்//

முகமூடி ..பேராசை பெருநட்டம்!! ஆசைப்பட்டு நீங்க கேட்க, நானும் காசனுப்பி நீங்க கேக்கை வாங்கிச் சாப்பிட்டு, உங்களுக்கு நீரிழிவு வியாதி வர நான் காரணமாயிருக்கக்கூடாது. :oP

//கட்-அவுட் வச்சி, கரகோஷம் போட்டு...எனக்கும் ஒரு பிறந்த நாள் விழா கொண்டாடிவோம் //

ஆகா...உங்களுக்கும் இன்றைக்குப் பிறந்த நாளா? வாழ்த்துக்கள்.(இல்லையென்றால் எப்ப பிறந்த நாளோ அதற்கு இப்பவே வாழ்த்துக்கள்) :o)

வாழ்த்துக்களுக்கு நன்றி டிசே

ஜோ/Joe July 26, 2005 1:54 pm  

ஷ்ரேயா,
உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Anonymous July 26, 2005 1:59 pm  

ஷ்ரேயா,

மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன் . . .

குமரேஸ் July 26, 2005 2:17 pm  

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Anonymous July 26, 2005 3:42 pm  

வாழ்த்த வயதில்லாததால் வணங்குகிறேன்.

அது சரிங்க ஷ்ரேயா, இந்த நன்னாளில் எங்களை மாதிரி இளைஞர்களுக்குத் தங்களின் அறிவுரை என்ன? :-))

Anonymous July 26, 2005 4:03 pm  

ஷ்ரேயா சகோதரி,

மழை மழையாய் பூத்தூவும் உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Agnibarathi July 26, 2005 4:12 pm  

vAzhththukkaL!! Nice to know somebody who shares their b'day with Shaw!!

`மழை` ஷ்ரேயா(Shreya) July 26, 2005 4:21 pm  

வாழ்த்துக்களுக்கு நன்றி ஜோ, தங்கமணி, குமரேஸ், மூர்த்தி & அக்னிபாரதி.

//வாழ்த்த வயதில்லாததால் வணங்குகிறேன்.//

க்ருபா - இதானே வேணாங்கிறது. தனிமடல்லே தங்கச்சி என்று பாசமா(!?) எழுதிட்டு இங்கே வந்து, ஏதோ நான் 60 வயசுப் பாட்டி மாதிரியும் நீங்க 10 வயசு பேரன் மாதிரியும் சொல்றீங்களே!! :o(

அறிவுரையா? அதுதான் கைவசம் நிறைய இருக்கே..முக்கியமான ரெண்டு சொல்றேன்..கேட்டு கடைப்பிடியுங்க அண்ணாச்சி :o)

1. உலாப் போவீங்கதானே..போய்ட்டு வந்தா இந்த அலம்பல் வேலையெல்லாம் பண்ணக்கூடாது. வயிற்றெரிச்சலைக் கிளப்பாத மாதிரி பதிவும் படமும் போடணும்.

2. தேவதை என்று வந்தால்..கனவுலே மட்டுமில்ல நனவுலயும் நல்லா "கவனிச்சுக்கணும்"..அதாகப்பட்டது: அடிக்கடி உரையாடணும்..பரிசுப்பொருட்கள் வாங்கிக் கொடுக்கணும் எட்ஸெட்ரா எட்ஸெட்ரா... :o)

(காதல் வளர) அறிவுரை இங்கே வழங்கப்படும் என்று யாராவது வந்து பலகை மாட்ட & வரிசையில மக்கள் வந்து நிற்க முன்னம்..நான் அறிவுரை வழங்கும் படலத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்! :o)

Chandravathanaa July 26, 2005 4:26 pm  

ஷ்ரேயா,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Vijayakumar July 26, 2005 4:29 pm  

அட!! மழை இன்று பிறந்ததா? அவங்களுக்கு பிறந்த நாள் இவங்களுக்கு பிறந்தநாள்ன்னு சொல்லி சுத்தி வளச்சி மழை பெஞ்சிருக்கு போல. வாழ்த்துக்கள்.

ஒரே வாழ்த்துக்கள் மழை தான்னு சொல்லுங்க. :-)

வசந்தன்(Vasanthan) July 26, 2005 4:31 pm  

நேற்று டி.சே.க்கு. இண்டைக்கு உங்களுக்கா?
வாழ்த்துக்கள்

Anonymous July 26, 2005 4:31 pm  

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

//தன் பிறந்த நாளை என் அப்பாவுடன் கொண்டாடும் இன்னொரு தோழியின் அப்பாவும் நானும் இன்றைக்கு...//

Weird! :-)

Ramya Nageswaran July 26, 2005 4:35 pm  

பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஷ்ரேயா. என் மகளுக்கு 28ஆம் தேதி 6வது பிறந்த நாள்.

தருமி July 26, 2005 6:52 pm  

அன்புள்ள ஷ்ரேயா
என்ன ஆச்சர்யம்! உங்கள் பதிவு வாசித்துவிட்டு, பின்னூட்டங்களில் பாதிவரை 'மேய்ந்து' கொண்டிருக்குபோது, அலுவலக நண்பர் ஒருவர் திடீரென வேகமாக வந்து மாடிவரை அவசரமாக வாருங்கள் என்றழைக்க, விரைந்தால், அங்கே ஒருவருக்கு பிறந்தநாள் விழா கேக் வெட்டி..
அங்கே கேக் சாப்பிட்ட கையோடு...

many many happy returns of the day, shreya

from both ..dharumi and sam uncle

பினாத்தல் சுரேஷ் July 26, 2005 7:14 pm  

வாழ்த்த வயதில்லை - வணங்குகிறோம்..

இதைச் சொல்வதற்கு (பார்க்க தமிழக அரசியல்) வயதின் arithmetic மட்டுமே காரணம் கிடையாது - அறிவு, அந்தஸ்து, ஆளுமை எனப்பல காரணங்கள் உண்டு:-)

தகடூர் கோபி(Gopi) July 26, 2005 7:27 pm  

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷ்ரேயா...

இந்த நாளைப் போலவே இனி வருகின்ற எந்த நாளும் உங்களுக்கு நன்னாளாய் அமைய எல்லாம் வல்ல இறைவனைப் ப்ராத்திக்கிறேன்.

கயல்விழி July 26, 2005 8:32 pm  
This comment has been removed by a blog administrator.
கயல்விழி July 26, 2005 8:33 pm  

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷ்ரேயா.

பதினாறும் பெற்று
பல்லாண்டு காலம்
பொல்லூண்டி வாழ்க

`மழை` ஷ்ரேயா(Shreya) July 26, 2005 9:18 pm  

வாழ்த்துச் சொன்ன எல்லாருக்கும் நன்றி.

கயல்விழி - இன்ஷா அல்லாஹ்..பொல்லூண்ட இன்னும் கொஞ்சக் காலம் கிடக்கு! :o)

தருமி July 26, 2005 10:32 pm  

"பொல்லூண்டி வாழ்க" / "பொல்லூண்ட இன்னும் கொஞ்சக் காலம் கிடக்கு!"

அது என்ன - 'பொல்லூண்டி' ?

சினேகிதி July 27, 2005 2:01 am  

Belated birthday wishes Shreya

`மழை` ஷ்ரேயா(Shreya) July 27, 2005 8:51 am  

தருமி - "பொல் ஊன்றி வாழ்க" அதாவது நீண்ட காலம் வரை தடி ஊன்றி(யும்) வாழ்க. "ஊன்றி" என்பது தான் பேச்சு வழக்கில் "ஊண்டி" என்று ஆகிவிட்டது. பொல்லூன்றி = பொல்லூண்டி. பல்லாண்டுக்கு rhyme பண்ணுகிற மாதிரி பொல்லூண்டி என்று கயல்விழி வாழ்த்தினவ.

வாழ்த்துக்கு நன்றி சினேகிதி.

Anonymous July 27, 2005 3:22 pm  

சுரேஷ் சொன்ன மாதிரி, தனி மடல்ல 'தங்கச்சி'னு சொன்னதுக்கு "வயதின் arithmetic மட்டுமே காரணம் கிடையாது - அறிவு, அந்தஸ்து, ஆளுமை எனப்பல காரணங்கள் உண்டு."

:-))

முதல் அறிவுரையைக் கடைப்பிடிக்கிறேன். இப்போ கூட சி.டி. முழுக்க ஒரே புகையா, ச்சீ, புகைப்படமா இருக்கு.

ரெண்டாவது அறிவுரையில், பகுதி b...பரிசுப்பொருள்!!!! தேவதை ஏதாவது பரிசுப்பொருள் வாங்கிக் கொடுத்தா சந்தோஷமா வாங்கிப்பேன். ;-)

`மழை` ஷ்ரேயா(Shreya) July 27, 2005 4:11 pm  

//'தங்கச்சி'னு சொன்னதுக்கு "வயதின் arithmetic மட்டுமே காரணம் கிடையாது - அறிவு, அந்தஸ்து, ஆளுமை எனப்பல காரணங்கள் உண்டு."//

ஆ!!ஆனாலும் இவ்வளவு அடக்கமா!!!...அடக்கி வாசிங்ணா!!!
தன்னடக்கத்தின் தானைத்தலைவரே போய் ஒரு கரும்பு ஜூஸ் தகையுங்கள். :o)


//ரெண்டாவது அறிவுரையில், பகுதி b...பரிசுப்பொருள்!!!! தேவதை ஏதாவது பரிசுப்பொருள் வாங்கிக் கொடுத்தா சந்தோஷமா வாங்கிப்பேன். ;-)//

அ(ட)ப்பாவியா இருக்கீங்களே அண்ணாச்சி!! பரிசை, தேவதை தந்து நீங்க வாங்க முதல், அவக்கு நீங்க குடுக்கிற வழியப் பாருங்க! கடமையைச் செய் பலனை எதிர்பாராதே! (என் தோழன் சொல்லற மாதிரி பலனைச் செய் கடமையை எதிர்பாராதே என்று தேவதைகளிடம் சொல்லக்கூடாது!!) ;o)

பெட்டகம்