பெண்பால் என்ன??

காரிலே ஏறி, வானொலிக் குமிழைத் திருகினால், எங்கேயோ எப்பவோ கேட்ட ஒரு ஹிந்திப் பாடல் ஒலித்தது .. மே ஷாயர் தோ நஹி.(நான் கவிஞன்/புலவன் இல்லை) மகர் ஏசி ஹசி....என்று ஆரம்பித்து ஷாயரீ ஆகயீ (கவிஞை/கவிதாயினி வந்துவிட்டார்) என்று முடியும். ஒரு தடவை டிவிடியில் பார்த்தபோது அர்த்தம் போட்டதில் தெரிந்து கொண்டேன்.

நேற்று முழுக்க யோசித்தும் பிடிபடவில்லை. நீங்களாவது சொல்லுங்க.. ஆசிரியன், ஆசிரியை, ஆசிரியர் / தோழன், தோழி, தோழர் ..இப்படி, கவிஞனுக்கும் பெண்பால் & பொதுப்பால் தெரியும். ஆனால் புலவனுக்கு??

புலவர் என்பது பொதுப்பால். பெண்பால் என்ன?

15 படகுகள் :

`மழை` ஷ்ரேயா(Shreya) July 14, 2006 3:22 pm  

பதிவை publish செய்துட்டு நான் இங்க வர முன்னமே பிழையா வகைப்படுத்தின நலம்விரும்பி யாருங்கோ? :O\

கார்திக்வேலு July 14, 2006 3:41 pm  

//பிழையா வகைப்படுத்தின நலம்விரும்பி யாருங்கோ? :O\ //

தலைவரு திமிங்கலந் தானுங்கோ :-)
[not me ..]

அருமையான பாடல் !!!

but not sure if your interpretation/understanding is right .

//ஷாயரீ ஆகயீ(கவிஞை/கவிதாயினி வந்துவிட்டார்//

"கவிதை வந்தது" என்று தான் பொருள் கொண்டுள்ளேன் .I might be wrong aswell...any one well verse in Hindi could clarify.

புலவர்-- பெண்பால் இல்லையோ ?
ஒரு வேளை அதற்குத் தேவை இருக்கவில்லையோ ?!

`மழை` ஷ்ரேயா(Shreya) July 14, 2006 3:48 pm  

//but not sure if your interpretation/understanding is right/

என் விளக்கமெல்லாம் subtitle பார்த்து வருவதுதான்.. அவை நம்புவதற்கில்லை என்பதை மறந்து விட்டேன்!! :O)

//பெண்பால் இல்லையோ? ஒரு வேளை அதற்குத் தேவை இருக்கவில்லையோ ?!//
அப்ப ஔவையார்? :O(

கார்திக்வேலு July 14, 2006 4:16 pm  

ஆண் / பெண் என்ற பாகுபாடு இந்தத் துறையில் தேவை இருக்கவில்லையோ ?! ...meaning there might not be much difference what a male/female poet wrote so was no need to segregate a group of poets based on their sex.

or

There were too few of female poets those days ..which did not warrant a seperate,new gender based nomenclature.

"Politically incorrect " times ,they were :-)

[Shayari ..is a Urdu word by origin I guess]

சினேகிதி July 15, 2006 1:01 pm  

hmm i have the same doubt Shreya :-)

FAIRY July 15, 2006 6:19 pm  

எனக்கும் தெரியவில்லை தெரின்தல் சொல்லவும். நேரம் கிடைத்தது இன்னிக்கு தான் தமிழை தேடி எழுத

FAIRY July 16, 2006 12:33 pm  

shaayar is a poet as you said.

shaayari - means a poem

song- is that the poem started coming to mind, though i am not a poet.

But i dont know the later part - the gender

`மழை` ஷ்ரேயா(Shreya) July 17, 2006 10:29 am  

ஷாயரீ என்றால் கவிஞை என்றும் சொல்றாங்க (ஹிந்தி தெரிந்த என் தோழியிடம் கேட்டேன்) கவிதை என்றும் (இங்கே)சொல்றாங்க. எது சரி?

ஹிந்திய விடுங்க, நான் கேட்டதுக்குப் பதில்?? :O)

கஸ்தூரிப்பெண் July 17, 2006 12:13 pm  

'ஷாய்ரி' உருது வார்த்தைங்க. கவிதைன்னு அதனோட அர்த்தமுங்க.
"நான் கவிஞனா இல்லை, ஆனாலும் உன்னை பார்த்தவுடன் கவிதை பிறக்கிறது என்னுள்" இப்படி வசனம் பேசித்தானே சோப்பு போடவேண்டியுள்ளது.
// //பெண்பால் இல்லையோ? ஒரு வேளை அதற்குத் தேவை இருக்கவில்லையோ ?!//
ஒரு காலத்தில் இதற்கெல்லாம் நம்மிடம் தனி அகராதியிருந்தது. அதனுள்ள சில தமிழாக்கிய சொற்கள்: கவிஞி, புலவி, அறிஞி……..

`மழை` ஷ்ரேயா(Shreya) July 17, 2006 1:15 pm  

நன்றி கஸ்தூரிப்பெண். நிறையச் சொற்களைத் தொலைத்து விட்டோம் தான்.

//அதனுள்ள சில தமிழாக்கிய சொற்கள்: கவிஞி, புலவி, அறிஞி……..//

தமிழ் ஆக்கிய சொற்களா? பிற மொழியிலிருந்ததை அப்படியே தமிழாக்கியதைச் சொல்றீங்களா அல்லது தமிழ் உருவாக்கிய சொற்கள் என்கிறீர்களா? அல்லது தமிழை ஆக்கிய சொற்களா? :O)

கவிஞி/அறிஞியா? நான் இவ்வளவு நாளும் கவிஞை/அறிஞை என்று நினைத்திருந்தேனே... பிழையா?

`மழை` ஷ்ரேயா(Shreya) July 17, 2006 1:20 pm  

புலவன் - புலவி...

ஹ்ம்ம்..

கஸ்தூரிப்பெண் July 17, 2006 1:30 pm  

நாங்களே தமிழாக்கிய சொற்கள்.

//கவிஞி/அறிஞியா? நான் இவ்வளவு நாளும் கவிஞை/அறிஞை என்று நினைத்திருந்தேனே... பிழையா//
ஓ!!!!இப்படிக் கூட இருக்கிறதா? எனது தமிழ் ஆசான் இதையெல்லாம் பார்த்தால் எம்மை கொலை செய்யவும் தயங்கமாட்டார். ஒரு வேளை அவரும் தமிழைத் தொலைத்திருக்கலாம்!!!!!

`மழை` ஷ்ரேயா(Shreya) July 17, 2006 2:59 pm  

கஸ்தூரிப் பெண் - தெளிவாச் சொல்லுங்க, உங்கட தமிழாசான் யாரைக் கொல்லப் போறார், உங்களையா? என்னையா? :O)

//ஒரு வேளை அவரும் தமிழைத் தொலைத்திருக்கலாம்!!!!!//

..லாம்! :O)

கஸ்தூரிப்பெண் July 18, 2006 10:02 am  

இரண்டு பேரும் சேர்ந்துதான்!!!!!

வல்லிசிம்ஹன் July 25, 2006 5:57 pm  

யாமறிந்த தமிழிலே பெண் புலவரெ உண்டு.
புலவி என்பதற்கு அர்த்தமே வேறுதான்.
அகராதியும் வேறுதான்.சினிமாலெல்லாம் அப்படித்தானே சிவாஜி கூப்பிடுவார். பெண் புலவர்( ஏ ) என்று.:-)))

பெட்டகம்