நானும் மைக்கல் ஜாக்சனும்

9ம் ஆண்டில் நான் வேறு ஒரு பாடசாலையில் சேர்ந்தேன்.
எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது - என் வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகளில் சிலர் ஒரு கூட்டமாக இருந்து ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டிருந்தார்கள். நான் அது வரை படித்திருந்தது தமிழில்."என்னடா இது, அம்மா திடீரென்று English medium இல் கொண்டு வந்து சேர்த்து விட்டாவே" என்று எனக்குள்ளேயே நினைத்துப் பயந்து போனேன்.அம்மாவை ஏசாத குறை! ஆசிரியர் வந்து தமிழில் பாடம் நடத்தத் தொடங்கிய பின்தான் நிம்மதியாயிற்று.


அன்றே இன்னொரு சம்பவமும் நடந்தது.
எனக்குப் பக்கத்திலிருந்த பெண் "do you listen to English songs?" என்று கேட்டாள். ஏனோ "yes "என்று சொல்லி விட்டேன்.அடுத்த கேள்வி வந்தது..." Do you have black or white?"
நான் யோசிக்கிறேன் - என்னத்தில் கறுப்பா வெள்ளையா இருக்கிறது எனக் கேட்கிறாள் இவள் என்று!(அப்போது எனக்குத் தெரியாது என்னிடம் Michael Jackson பாடிய Black or white பாட்டைப் பற்றித் தான் கேட்கிறாள் என்று!!) இல்லை என்று சொன்னால் என்ன நினைப்பாளோ என்பதற்காக "white" என்னிடம்இருக்கிறது என்று சொன்ன ஞாபகம்.என்னை ஒரு மாதிரிப் பார்த்தாள். வேறு ஒன்றும் சொல்லவில்லை. நாள் போகப் போக நாங்கள்நல்ல நண்பிகளாகி விட்டோம்.இந்தச் சம்பவம் அவளுக்கு நினைவிருக்குமோ தெரியவில்லை. (என்னத்தைக்
கேட்டாள் எனக்குத் தெரியவில்லையே என்ற வீராவேசத்திலும், இவள் கேள்வி கேட்டால்சொல்வதற்கும் என்றே வீட்டில் ஆங்கிலப் பாட்டு கேட்டதும் வானொலியில் english station பிடித்து வைத்திருந்ததும் தனிக்கதை.)

3 படகுகள் :

கார்திக்வேலு June 15, 2006 11:23 pm  

:-)

ஜி February 10, 2007 1:08 am  

இதே மாதிரி நிகழ்வு எனக்கும் நடந்திருக்குது....

நீங்க தென் தமிழ் நாடா... இல்ல இலங்கையா.. இலங்கை தோரணையாகவும் இருக்குது... "ஏசு" போன்ற வார்த்தைகளைப் பார்க்கும்போது தெந்தமிழ்நாட்டு மொழிநடையாகவும் இருக்கின்றது. அதான் கேட்டேன்.. :)))

`மழை` ஷ்ரேயா(Shreya) February 12, 2007 10:05 am  

ஜி - இலங்கை. நிறையப்பேர் சொல்லியிருக்காங்க.

பெட்டகம்