போகுமிடம் ஒளி வீச...

கொஞ்ச நாளா தொ(ல்)லைக் காட்சியில் ஒரு விளம்பரம் போடுறாங்க. ஒராள் இரவில கட்டிலால எழும்பி, பிய்ச்சுப் போட்ட கடதாசி துண்டுகளை சாளரத்துக்குள்ளால வெளியில எறியிறார். அதை எறிஞ்ச சாளரம் வழியாவே தானும் குதிச்சு (எலும்புகள் ஒன்றுமே உடையாம!!) ஓடுகிறார். காட்டுக்குள்ளாலயெல்லாம் ஓடுறார்..கரடியொண்டு துரத்துது, அவர்ட கால் படுற இடமெல்லாம் வெளிச்சம் வருது. (நல்ல காலம்..ஊரில இந்தாள் இல்ல..இல்லாட்டி, சாமீ! என்டு பகல்ல சனமும் ..களவெடுக்க வசதியா இருக்கும் என்று இரவில கூட்டிப் போக கள்ளனும் க்யூவில நிப்பாங்க!!) சரி..இப்பிடியே விளம்பரம் தொடர்ந்து போகுது.

இவ்வளவு நாளும் சப்பாத்து உற்பத்தியாளர்கள், "எங்க சப்பாத்தில சொகுசு அதிகம்", "காற்றோட்டம் உள்ளது" என்று தானே யோசிச்சு உருவாக்கிட்டு விளம்பரப்படுத்தியிருக்கிறாங்க. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசில மனிசனைக் கடிச்ச கதை மாதிரி தான் இப்ப ஆகிப் போச்சு(அது என்ன கதை??யாராவது சொல்லுங்க!) ஏன் அப்பிடிச் சொல்றேன் என்றால், இப்பவெல்லாம் கடிகாரத்தில இருந்து ஏவுகணை வரைக்கும் எல்லாத்திலயும் micro processors இருக்குது தானே.( புதுசா ஏதாவது சொல்லு என்கிறீர்களா..சொல்றன், சொல்றன்)

அதே micro processorsல ஒன்றைத் தூக்கி சப்பாத்துக்குள்ள வைச்சிருக்கிறாங்க, அடிடாஸ். அந்த processor, நீங்க கால் பதிக்கிற விதம், பாதத்தில் எந்த இடத்தில் கூடுதலாக cushioning வேணும் & இன்னும் கொஞ்சம் வேற விஷயங்களையும் எல்லாம் கணக்குப் போட்டு நீங்க நிலத்தில கால் வைக்கும் விதத்துக்கு ஏத்த மாதிரி வளைஞ்சு குடுக்குதாம். விலைதான் மயக்கம் போட்டு விழ வைக்கிற அளவில இருக்கும் என்று நினைக்கிறன்..ஒரு வேளை பர்ஸின் கனமறிந்து அதுக்கும் வளைஞ்சு குடுக்குமோ??. :o)

சிட்னிக்கு இப்பத்தான் வருகுது இந்தச் சப்பாத்து..ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடாவில முதலே வந்திருக்குமென்டு நினைக்கிறன்.

இந்தப்பதிவை தட்டச்ச ஒரு ஞாபகம் வருது.. எனக்கு அப்ப ஒரு 10- 12 வயசிருக்கும்.அப்ப புதுசா ஒரு சப்பாத்து வந்தது. நடக்கும் போது சப்பாத்தின் அடியில் உள்ள லைட் எரியும். அதை வாங்கித் தரச் சொல்லி அம்மாக்கு ஒரே நச்சரிப்பு. எவ்வளவு அரியண்டப் படுத்தியும் அது கிடைக்கல்ல!! (ஹ்ம்ம் <-- ஏக்கப் பெருமூச்சு!..வேற ஒன்றுமில்ல!!) :o(

3 படகுகள் :

Chandravathanaa April 29, 2005 4:45 pm  

Sherya
இந்தச் சப்பாத்து பற்றி முன்னர் ஒருமுறை வெங்கட் எழுதினார். நான் அதை எனது படித்தவை பகுதியில் வைத்திருக்கிறேன்.

`மழை` ஷ்ரேயா(Shreya) April 29, 2005 4:54 pm  

தகவலுக்கு நன்றி சந்திரவதனா.

வித்யாசாகரன் (Vidyasakaran) April 29, 2005 9:34 pm  

ஆகா! அரியண்டம்! ரொம்ப நாள் கழிச்சு கேட்கறேன் இந்த வார்த்தையை. இந்த வார்த்தையோட வேர் என்ன, இது எப்படி வந்திருக்கும்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்.
எங்க சித்தியை, சின்னப் பிள்ளையில, 'அரியண்ட நாயகி'ன்னு எங்க பாட்டி கூப்பிடுவாங்களாம்! :-)
நல்லா இருக்கில்லே இந்தப் பேரு?

பெட்டகம்