அலுமினியப்புழு


கொழும்பிலோடும் ஒற்றை டபிள்டெக்கர் போல் - இதுவும்
இரு தட்டில், பலதும் காவும் மனிதர்களைக் காவும்
நல்லவற்றைக் கண்டால் திறந்து கொள்ளும் மனது போல
ஒவ்வொரு நிறுத்தத்திலும் கதவு திறக்கும்,
புதிதாய் உள்வாங்கியும்,
முதல் வாங்கியதில் சிலதைத் துப்பியும் ஆன பிறகு
காது கிழிக்கும் சீழ்க்கை ஒலி தரும் அனுமதியுடன் கதவு பூட்டி
அலுமினியப்புழுப்போல ஊர்ந்து போகும்.

6 படகுகள் :

சினேகிதி July 08, 2005 9:57 am  

Shreya Super!!

துளசி கோபால் July 08, 2005 10:19 am  

என்ன சொல்லணுமுன்னு தெரியலை!

துளசி.

Anonymous July 08, 2005 10:30 am  

// என்ன சொல்லணுமுன்னு தெரியலை! //
துள்சியக்கா இதில ஒன்னச் சொல்லுங்க.
1) இதவிட நியுசிலாந்தில ரொம்ப நல்ல வண்டி இருக்கு தெரியுமா... அல்லது
2) இது நியுசிலாந்திலான் செஞ்சது தெரியுமா

துளசி கோபால் July 08, 2005 10:41 am  

சரியாப் போச்சு. இங்கேயே நட்டத்துலே ஓடுதுன்னு 'செளத்'க்குப் போற ரயிலையே
நிப்பாட்டியாச்சு. சுற்றுலா ஆளுங்களை நம்பி ஒரே ஒரு ரயில் கிறைஸ்ட்சர்ச்லே இருந்து
'க்ரேமெளத்' போய்வருது.

நான் வந்து 18 வருசம் ஆச்சே, இதுவரை ஒரு நா ரயிலிலே போனேனா? ஊஹூம்...
டிக்கெட் விலைக்கு வீட்டையே எழுதிக்கொடுத்துரணுமே:-)

இருங்க இருங்க, ஒரு நாள் ஆஸி வந்து ரயிலே போவேன்!!!

என்றும் அன்புடன்,
துளசி.

பி.கு: ஆக்லாந்து, வெல்லிங்டன்னில் உள்ளூர், நகரப் ப்யணங்களுக்கு ரயில் இருக்காம்!!!

Anonymous July 08, 2005 10:52 am  

என்ன துள்சியக்கா, புளுகுமூட்டை விடணும்னா கொஞ்சம் பொய் சொல்லக் கத்துகனும். :) நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்க! ச... நான் ஆஸிக்காரனில்லை... நான் வட அமெரிக்கனாக்கும்.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 08, 2005 10:59 am  

நன்றி சினேகிதி.

அனானிமஸ் :o)

துளசி- இங்கே மட்டும் என்ன? ஒருவாரத்துக்கு வேலைக்கு வந்து போறதுக்கு மொத்தமா வாராந்தர சீட்டு எடுப்பேன்..$33.00. ஒரு நன்மை, அந்த ஒரு கிழமையிலே நீங்க எத்தனை தரம் வேணுமானாலும் போய் வரலாம்.

இப்படி மாத ($நூற்றி இருவத்தி சொச்சம்)/வருஷாந்தர(எவ்வளவு என்று தெரியாது) டிக்கெட் கூட இருக்கு!

பெட்டகம்