யாகூ மின்னஞ்சல் புது வடிவமா புதுசா வடிவா வந்திருக்கு என்று போன வாரம் கிட்டத்தட்ட 2 மாசத்துக்குப் பிறகு யாகூவை எட்டிப்பார்த்த போது கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன். நேற்றுப் பார்த்தா "சுடு அஞ்சல்" அந்த ஐடியாவத் தானும் சுட்டு புதுப் பிறவி எடுத்திருக்கு! எல்லாரும் கூகிளின் "சுயமாகப் புதுப்பிக்கிற" விளையாட்டுத்தான்.
ஹொட்மெயிலில், அவுட்லுக்கில் செய்வது போல வலதுசொடுக்கில் செய்கைகளுக்கான தெரிவும், சொடுக்கி, ஒன்றிலிருந்து இன்னொரு ஃபோல்டருக்கு (இதுக்குத் தமிழ் என்ன? "கோப்புப் பை"யா?) இழுத்துப் போடவும், அஞ்சலின் உள்ளடக்கத்தைப் பார்க்க ஒரு பகுதியுமென்று நல்லாத்தானிருக்கிறது.
யாகூ தனது இணையத்தளத்தையும் புது வடிவமாக்கியுள்ளது. அஞ்சல் கணக்கில் நுழைந்தால் கிறுக்குவதற்கு கிறுக்கற்புத்தகமும் தருகிறார்கள்.
ஆறுதலாய் ஆராய்ந்து பார்த்து ஒரு ஒப்பீடு எழுதணும்.
புதுசு
Posted by
`மழை` ஷ்ரேயா(Shreya)
17 May 2006
வகை: குழையல் சோறு
2 படகுகள் :
Hi S,
you havent been blogging much recently.
Google has also released their notepad recently ,very interesting tool,check out.
http://www.google.com/notebook
நன்றி கார்த்திக்வேலு. இந்தப் பதிவைப் போட்ட பின்பு, நேற்றிரவுதான் கூகிளின் நோட்புக் பார்த்தேன். வித்தியாசமாய்த்தான் இருக்கிறது.
கொஞ்சம் வேலை அதிகம் என்பதால் இந்தப்பக்கம் அதிகம் வர முடிவதில்லை.
Post a Comment