ஏன்?எப்படி?உங்களுக்குமுண்டா?

குறிப்பட்டதொரு பதிவைத் தேடுகையில் இது கண்ணில் பட்டது. சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் எழுதி draft ஆகவே இருந்தது. இன்றைக்குப் பதிகிறேன்.

````````````````````````````````````

உங்களுக்கும் இப்பிடித் தோன்றியிருக்கக் கூடும்; அநேகமாக எதையாவது பார்த்தால் ஒரு சொற்றொடரோ அல்லது ஒரு சொல்தானும் மனதில் சட்டெனப் படும். புல்லைப்பார்த்தால் "அட! புல்லு" என்பதையோ, கடலைப் பார்த்து எவ்வளவு பெரிதாயிருக்கிறது என்று நினைத்துக்கொள்வதையோ இங்கு சொல்லவில்லை.

போன கிழமை படிக்கட்டில் கால் வைத்த போது ஏனோ "உதறி விரித்தது போல"
என்று தோன்றிற்று. எப்பவாவது வாசித்த ஒரு கவிதையிலிருந்தோ கட்டுரை/கதையிலிருந்தோ வந்திருக்க வேண்டும். குட்டையான கட்டிடங்களுக்கு மத்தியில் உயரமானதைக் கண்டால், ஒரு bookmark போல என்று நினைத்துக் கொள்வேன். என் நண்பிக்கு எல்லாக்கட்டிடங்களும் (குறிப்பாக கபில (brown) நிறப் பூச்சுள்ளவை) கேக் துண்டுகள் மாதிரித்தான் தெரிகின்றன. :O) கிளைபரப்பி அடர்ந்து நிற்கும் மரத்தைக் கண்டால் "காற்றுக்கு விசிறி விடுகிறது" என்றும், இலைகள் சலசலக்க கிளைகள் ஆடுகையில் "அலையடிக்கிறது" என்றும் தோன்றும். இப்படி நிறைய.

இதெல்லாம் தன்னிச்சையாகத் வந்து விழுகின்றனவா அல்லது நாங்கள் முதலில் வாசித்த/பார்த்த ஏதாவது மனதில் தங்கி, ஒரு சிறு தூண்டல் கிடைத்ததுமே வெளி வருகிறதா? உதாரணமாக, இலையுடன் கிளை அசைகையில் அலையடிப்பது என்று எனக்குத் தோன்றுவது நேற்று நீருக்கடியிலுள்ள பவழ(ள?)ப்பாறைகள் பற்றிய விவரணப்படத்தில் பார்த்த கடற்தாவரத்தின் இலை அசைவு மனதில் தங்கியதினாலாயிருக்கலாம். காரணமிருந்தேயாக வேண்டிய கட்டாயமில்லை.

இதைப்போலவே மாறாய், ஒரு சொல்லை/ வசனத்தைச் சொன்னதும் சில உருவங்கள்/வடிவங்கள்/பிம்பங்கள் மனதில் தோன்றும். இப்படி, மனம் எதனால் இப்படிச் செயற்பட்டு புரிந்து கொள்ள முடியாத இணைப்புகளை உருவாக்குகிறது? இந்த இணைப்புகளின்/உருவ(க)ப்படுத்தல்களின் பயன் என்ன?

38 படகுகள் :

வல்லிசிம்ஹன் June 28, 2006 11:19 am  

ஷ்ரேயா, உண்மைதான்.எதைப் பார்க்கும்போதும் நாம் உணர்வது ஒன்று. அது சம்பந்தமான சொல் நினைவுக்கு வருவதும் வழக்கம் தான்.நிம்மதியாகப் பயணம் போகும் நாட்களில்மனம் சலனம் இல்லாமல் இருக்கும் நேரத்தில் வார்த்தைகள் தோன்றும்.(எனக்கு).மஷ்ரூம் பார்க்கும்போது எனக்கு சாப்பிடத்தோன்றாது.தி.ஜானகிராமன் எழுத்துக்களைப் படிக்கும்போது கண்முன்னே விரியும் காட்சி போல் அந்தந்த நிலமைக் கேற்றபடி வார்த்தைகள் தோன்றும்.நிச்சயமாக என் நினைவுகளில் சாப்பாடுதான் ஆக்கிரமிக்கும்.:-))

`மழை` ஷ்ரேயா(Shreya) June 28, 2006 11:37 am  

நினைவுகளைச் சாப்பாடு ஆக்கிரமிப்பது உங்களுக்கு மட்டுமல்ல, பலருக்கும் உள்ள ஒன்றுதான். :O)

காளான் பார்த்தால் சாப்பிடத் தோன்றாதா?ஏன்?

படமெடுக்க ஒரு யோசனை தந்திருக்கிறீங்க. காளானின் வரம்பு பிரித்த அடிப்புறத்தைப் படமெடுக்க வேண்டும்.

கார்திக்வேலு June 28, 2006 1:23 pm  

Our brain does not like uncertainity , does not like surprises..any thing we see feel touch smell needs to be categorised and hyperinked and indexed in some way or the other ...and very complex in that.

Every piece of information in our brain is part of a huge complex interconneciton.Some people argue that this "interconnectedness"
in our brain is what we call as our conscience .(of course ...there are multitude of theories about what "consciousness" is and what or who is the "me".)

These hyperlinks or interconnections are triggered by some unique "keywords" .
Usually our sense of smell is a very strong trigger ....it can pull out informations we think never existed ....from years and years back .

could be a certian fragrance ...bark of a tree....a certain aroma of food ..
certain music .....certain visual .or certian words heard after a long time ...the neurons start ...firing away and pulls out any hyperlinked information and ..also related ...."feelings".

certain patterns of data/information interconnection ..or patterns of how our neurons fire might be an emotion / feeling ...the other way too is possible e...a certain sequence of informaton input can be a keyword for that feeling /emotion.
------------------
(coming to why we have a preconceived notion about something and somepersons can be explained through this , i guess.

A certain name ...certain ...sound ...and hearing it from a certian source already creates a "prejudiced notion" of a person.We almost meet the person before we actually meet them.)

`மழை` ஷ்ரேயா(Shreya) June 29, 2006 12:42 pm  

அப்பாடா,என் Dejavuக்கெல்லாம் ஓரளவுக்கு விளக்கம்!! :O)

ஆனால் ஒரு கேள்வி எழுகிறது. முதன்முதல் பார்க்கும் எதையும் எப்படி எங்கள் மூளை வகைப்படுத்துகிறது? என்னென்று, ஒப்பிட இன்னொன்று இல்லாமலிருக்குமிடத்து, சுட்டிகள் கொடுக்கப்படக்கூடும்?

கடைசி வரிகள் - பெரும்பாலும் உண்மை. ஆனால், அப்பிடி நடக்காமல் இருக்கவும் (அதாவது prejudice, pre-conceived notions உடன் பார்க்காமல், அனுபவிக்காமல் இருக்க)முடிகிறதுதானே. ஒரு விழிப்புணர்ச்சிதானே இவைகளால் பாதிக்கப்படாமலிருந்து வருகிறதைப் புலன்களாலும் அனுபவத்தாலும் அறிய/உணர வைக்கிறது?

ஒரு சம்பந்தமில்லாத கேள்வி - மனிதர்கள், தாம் கற்ற பாடங்கள்/அனுபவங்கள் என்பவற்றை வாழ்க்கையில் பிரயோகிக்காமல்/பயன்படுத்தாமல் இருந்தால் என்னவாகும்?

கார்திக்வேலு June 29, 2006 1:43 pm  

/முதன்முதல் பார்க்கும் எதையும் எப்படி எங்கள் மூளை வகைப்படுத்துகிறது?//

some information ..necessary for our survival ..has been "imprinted" in our

brain in some form.Not sure if this is empirically provable.From generation to generation we are passed on a certain "imprint" to our brain ....all of them related to survival.

If we consider we are seeing "something" for the first time still our brain will try hard to make sense of it ..sometimes it even fails miserably .Remember the "visual gimmicks" like the perpetual water fountain.
Or even "Abstract paintings" ...somehow we will try to "infer" some data from that source.
As and when ..we get more information and process them better ....the data in out temporary / unsorted repository will be slowly get indexed better and better .....how ....by asking questions and thinking :-))

if we considering seeing "anything" new ...say like a baby ...any input is linked to the basic needs of the baby.
Our knowledge is "need" and "survival" driven to start with
amma face ---> food provider
smile at amma ----> get food and comfort
loud noise ----> threat / unsafe ----> cry (imprint in our brain ??!!)

//அப்பிடி நடக்காமல் இருக்கவும் (அதாவது prejudice, pre-conceived notions உடன் பார்க்காமல், அனுபவிக்காமல் இருக்க)முடிகிறதுதானே//


Its very difficult to see anything without ANY prejudiced notion ...(only the

degree of it varies ).....if ......if some one is able to do that ..then he is

blessed
He will be able to see a "rose as a rose" ....everytime ....every rose will

be new for him.
IT IS BUDDHA

For him time does not make any difference ....or does not exists.
prejudice is a form of past knowledge, for him there is no "past"
When one does not have a "past" he would not think of future

He need not have to ask questions like, for example
"What exactly is time, and why does it have to hurry?" :-)


What happens with us mortals ...is we start with prejudice ...and apply our

rational logic and common sense to it ..and constantly ...try to make

sense of things.Like guiding a car on a freeway which is constantly

veering off-lane

இது தான் விழிப்புணர்வு .....தெரிநிலை....It processes our prejudice ...in real

-time and more we are aware ..more we get closer to the bliss .

("தனித்திரு பசித்திரு விழித்திரு" ..வில் வரும் விழித்திரு ..இதுவே என்பது

என் எண்ணம்)


//மனிதர்கள், தாம் கற்ற பாடங்கள்/அனுபவங்கள் என்பவற்றை வாழ்க்கையில் பிரயோகிக்காமல்/பயன்படுத்தாமல் //
Interesting question to think abt ..but am hungry in the meantime ...what to u think ,will happen ?

(i've used he as to make things simple ...he/she applies everywhere )

ரவி June 29, 2006 4:24 pm  

இது கூட பரவாயில்லை...சிலசமயம் யாரோடவாவது பேசும்போதோ / அல்லது எங்காவது போகும்போதோ...அல்லது ஏதாவது சம்பவம் நிகழும்போதோ

இதுமாதிரி ஏற்க்கனவே நடந்திருக்கே !!! இதே வார்த்தைகளை ஏற்க்கனவே பேசி இருக்கோமே...

என்று கிரேசியாக எனக்கு தோன்றும்..

`மழை` ஷ்ரேயா(Shreya) June 29, 2006 5:16 pm  

கார்திக் - உங்களுக்குப் பதில் சொல்ல நிறைய யோசிக்கணும். அதைச் செய்திட்டு வாறேன்.

செ. ரவி - உங்களுக்கும் dejavu ஆ.. எனக்கு நிறைய நடந்திருக்கு.

ஒருநாள் பேசிட்டு இருக்கும் போது ஒரு நண்பர் திடீரென்று சொன்னார், "இதே உரையாடல் முன்னமே நடந்திருக்கு எங்க மத்தியிலே" என்று. எங்கே எப்போது என்று நிறைய நேரம் மண்டையை உடைத்துக் கொண்டார். பிறகு கண்டுபிடிச்சதும் அப்பிடி ஒரு மகிழ்ச்சி அவர்லே. முதல் நாள் இரவு கனவுலே கண்டதாம். :O\

X-Filesலே ஒரு கதை, நடக்கணும் என்றிருப்பது நடக்கிற வரை அதே நிகழ்ச்சி திரும்பத் திரும்ப நிகழ்ந்துக்கிட்டே இருக்குதுனு. (Mulder க்கு dejavu வாற மாதிரிக் காட்சி.)பார்த்திருப்பீங்களோ தெரியல்ல.

க்ரேசி என்டெல்லாம் யோசிக்காதீங்க. அதான் கார்திக்வேலு விளக்கம் சொல்லியிருக்கிறாரே!! எல்லாம் சுட்டிகளும் இணைப்புகளும் செய்ற வேலை! :O)

ரவி June 29, 2006 6:43 pm  

நன்றி மழை..

புதுமை விரும்பி June 30, 2006 12:23 am  

DEJAVU EXPLAINED
I am happy to see a very useful discussion going on here. I too had the Dejavu experience and I used to link it with some ESP power. But thanks to some scientific information that it happens because of some ERROR by BRAIN in connecting the time with the event. Brain sometimes messes things by connecting the same event with present and past time and hence we see that the event has happened earlier too. I can later on add more points and I stop here as I think that long english text is very boring for anybody. By the way, thanks for Karthikvelu for sharing information.

வல்லிசிம்ஹன் June 30, 2006 1:02 am  

ஷ்ரேயா, டெஜாவு எப்போதுமே வரும். நான் அதை மறுப்பதே இல்லை.பேசிக்கொண்டு இருக்கும்போது இதை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் என்று தோணும். ஒரு இடம் பயணம் செல்லும்போது இதற்குப்பிறகு அந்த வளைவு வரும் என்று தெரியும்.அதே போல் வந்ததும் சில சமயம் அந்த நினைவு வேண்டாமே என்று கூடத் தோன்றும். இது பல நிகழ்வுகளின் ப்ரதிபலிப்பு என்று நினைக்க வேண்டியிருக்கிறது.உணர்வுகளை நம்பலாம்.அர்த்தம்தான் தெரியவில்லை.

துளசி கோபால் June 30, 2006 12:23 pm  

அப்ப இருக்கும் 'மூடு'க்குத் தகுந்தாப்பலே எண்ணங்கள் வரும்.

முக்கியமா, காட்டுப் பகுதியிலே போகும்போது மரப்பொந்துகள், காளான்கள் எல்லாம் பார்த்தால்
சின்னப் பசங்க புத்தகத்துலெ படிக்கிற
தேவதைகள், எல்வ்ஸ் ஞாபகம் வரும்.

கார்திக்வேலு June 30, 2006 1:21 pm  

//மனிதர்கள், தாம் கற்ற பாடங்கள்/அனுபவங்கள் என்பவற்றை வாழ்க்கையில் பிரயோகிக்காமல்/பயன்படுத்தாமல் //

Then I suspect if we will be here today ..discussing this subject.

Adaptation has been one of the key ingrediants in the struggle for "survival".

Adaptation required to think and evaluate a situation..which is based on prior knowledge.

If only we did not apply what we already know ..we would have perished as a race long time back .

`மழை` ஷ்ரேயா(Shreya) June 30, 2006 4:56 pm  

புதுமை விரும்பி -
//scientific information that it happens because of some ERROR by BRAIN in connecting the time with the event. Brain sometimes messes things by connecting the same event with present and past time and hence we see that the event has happened earlier too.//
அப்படியானால் நிறைய dejavu வருபவராயிருந்தால் அவரது மூளை கொஞ்சம் குறைச்செயற்பாடானது என்ற பொருள் கொள்ளலாமா? :O)
dejavu வருவது, மூளையின் இணைப்புகளில் ஏற்படும் குளறுபடியால் என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும் எதிர்பார்த்தேனோ என்னவோ.. :O\

manu - இப்படித்தான் பலவற்றிற்கு அர்த்தம் தெரியாமல் போய் விடுகிறது. ஆனால், இந்த "முதலே தெரிகிற" எண்ணம் நம் மூளைக்குள் எப்படி உருப்பெறுகிறது? எதனால் தூண்டப்படுகிறது? அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

`மழை` ஷ்ரேயா(Shreya) June 30, 2006 5:07 pm  

துளசி - அந்தந்த நேரத்து் மனநிலைதான் எழுகிற எண்ணங்களுக்கும், தூண்டப்படுகிற யோசனைகளுக்கும் காரணமா? ஒரு moodம் இல்லாமே நாங்க "சும்மா" எப்பவாவது இருக்கிறோமா?

அப்படி இருந்தோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்ப:
1) எண்ணங்கள்/யோசனைகள் எழாதா? 2) அவை எழுமாயிருந்தா, அதுக்கான தூண்டுதல் என்ன?
((பாய்க்கு சொல்லிரவா? :O))

`மழை` ஷ்ரேயா(Shreya) June 30, 2006 5:27 pm  

கார்திக் - you are of a different calibre. நிறைய யோசிக்க வைக்கிறீங்க.
தொடர்ந்த விழிப்புணர்வுடன் இருப்பதுக்கு நிறைய்ய்ய்ய்யப் பயிற்சி வேணும். புதிதாய் எதையுமே, அதுவாயே பார்க்கையில் (ரோசாவை, மற்றப்பூக்களுடனோ, முதல் பார்த்திருக்கிற ரோசாக்களுடனோ ஒப்பிடாமல் கண்ணுக்கு முன்னிருக்கும் ரோசாவாய் மட்டுமே பார்ப்பது போல்) அங்கே prejudice, judgements, preconceived ideas etc என்பவற்றுக்கு இடமில்லாமற் போய்விடும். அதைத்தானே சொல்கிறீர்கள்?

//...He need not have to ask questions like, for example "What exactly is time, and why does it have to hurry?" :-)//
சந்தடி சாக்குலே நைசா கவிழ்ப்பு வேறே.. :O)
பௌதிகவியல்/பூதியல் (physics) கேள்வியாக் கூட இதைக் கேட்க விட மாட்டீங்களா? :O))

துளசி கோபால் June 30, 2006 6:36 pm  

ஒரு டஜன்( பேக்கர்ஸ் டஜன்) பாய் ப்ளீஸ்

கார்திக்வேலு June 30, 2006 7:05 pm  

//அதைத்தானே சொல்கிறீர்கள்?//

ஓம்.

There are conflicting theories about Deja-vu ..but I am able to accept that our brain misfires and sometimes and confuses itself.

It has also been related to a form of "memory dream", our brain trying to scrub some memory.?!

Apart from some neurological conditions like epilepsy .....Wish-fulling and anxiety are also ..considered to be related to
Deja-vu ness .

//"What exactly is time, and why does it have to hurry?" //
சொல்ல மறந்தது
இது ரொம்பக் கவித்துவமான வரி !!!


//பௌதிகவியல்/பூதியல் (physics) கேள்வியாக் கூட இதைக் கேட்க விட மாட்டீங்களா? :O)) ///

When Einstein asked ....why can't we ..it would be "Relative" though :-))

சின்னக்குட்டி June 30, 2006 8:43 pm  

நாம ஏதாவது பாட்டை நினைத்து முணு முணுக்க அதே நேரம் றேடியோவில் அதே பாட்டு பாடும்... அது எப்படிங்க

புதுமை விரும்பி July 01, 2006 12:11 am  

மழை

//
புதுமை விரும்பி -
//scientific information that it happens because of some ERROR by BRAIN in connecting the time with the event. Brain sometimes messes things by connecting the same event with present and past time and hence we see that the event has happened earlier too.//
அப்படியானால் நிறைய dejavu வருபவராயிருந்தால் அவரது மூளை கொஞ்சம் குறைச்செயற்பாடானது என்ற பொருள் கொள்ளலாமா? :O)
dejavu வருவது, மூளையின் இணைப்புகளில் ஏற்படும் குளறுபடியால் என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும் எதிர்பார்த்தேனோ என்னவோ.. :O\//

I am giving here the scientific explanation for De javu: I am planning to write in a simpler way in Tamil about this in my blog.

Psychological experimentation has solidly established that the human brain can only distinguish two individual visual events, with respect to time, if they occur more than about 25 milliseconds (0.025 second) apart. Since, in normal people, the signals from the eyes, through the two optic nerves, arrive at the brain and are processed well within this time interval, the brain interprets them (properly) as two slightly different views of the same scene, giving us the impression of a single event, which includes depth perception.

Let's consider if a person had a physiological impairment in one optical signal path, such that one optic signal arrived at the brain more than the 0.025 second after the other. The brain would not necessarily know it to be the same scene and might interpret it as the Deja Vu phenomenon. An alternative way this could occur would be that the optic processing centers of part of the brain had a flaw or temporary impairment (maybe electrolyte imbalance or other biochemical deviation) that caused a delay in processing one of the signal trains.

கொழுவி July 02, 2006 2:59 pm  

ஒரு டொக்டரிடம் கொண்டு போய் காட்டுங்கோ

`மழை` ஷ்ரேயா(Shreya) July 03, 2006 10:06 am  

துளசி :O)

//When Einstein asked ....why can't we ..it would be "Relative" though :-))//
அதேதான் கார்திக். நாங்கள் "மாட்டி ஏற்றும் சட்டத்தில்(frame)"தான் எல்லாம் இருக்கிறது.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 03, 2006 10:13 am  

சின்னக்குட்டியர் - ம்ம்..அதுவும் நடப்பதுதான். பாட்டுப்போட்ட நேரம் பணியில இருந்த ஒலிபரப்பாளர் உங்கட நண்பராயிருந்திருக்கக்கூடுமோ? அல்லது ஒருவேளை தொலையுணர்வோ தெரியவில்லை.. :O)

கொழுவி - :OP

`மழை` ஷ்ரேயா(Shreya) July 03, 2006 10:15 am  

புதுமை விரும்பி - நீங்க எளிமையா தமிழ்ல பதிவு போடுங்க. இதெல்லாம் அவசரமாய் வாசித்துப் போகிற விதயமில்லை என்று நினைக்கிறேன்..

கஸ்தூரிப்பெண் July 04, 2006 2:03 pm  

//இதெல்லாம் தன்னிச்சையாகத் வந்து விழுகின்றனவா அல்லது நாங்கள் முதலில் வாசித்த/பார்த்த ஏதாவது மனதில் தங்கி, ஒரு சிறு தூண்டல் கிடைத்ததுமே வெளி வருகிறதா?//
ஆழ் மனது நினைவுகளே என்று நினைக்கிறேன்.
ஒரு பொருளை/நிகழ்வை/ஆட்களை பார்க்கும் பொழுது தொடர்புடைய வேறொன்றை நினைப்பது உங்களது வித்தியாசமான ரசனையை குறிப்பதாகும்.

கஸ்தூரிப்பெண் July 04, 2006 2:09 pm  

//ஆனால் ஒரு கேள்வி எழுகிறது. முதன்முதல் பார்க்கும் எதையும் எப்படி எங்கள் மூளை வகைப்படுத்துகிறது?//
When you see things/persons/happening for the first time in your life, we usually tend to classify or assign them to things/persons/happenings which we have already known (may be to what exists in our databank). In otherwords we tend to relate to them and then we conceive that, that is where it belongs.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 04, 2006 3:34 pm  

கஸ்தூரிப்பெண் - அப்படியென்றால் எல்லாமே வகைப்படுத்தல் தானா? :O(

அப்படி "வகைப்படுத்தல்" இல்லாமல் இருப்பதுக்கு கார்திக் விவேகானந்தரை மேற்கோள் காட்டிச் சொன்ன "விழித்திரு"ப்பது தான் வழியா?

கார்திக்வேலு July 04, 2006 6:03 pm  

Being in a state of "awarness" is not that difficult/mystical as it sounds ..it can be learned and practiced ..like how we learn to ride a bike.

(Have you seen the movie "50 First Dates" .Its an interesting movie abt a girl who ..forgets everything ..that happened to her the previous day how everyday .. is a new day for her )

`மழை` ஷ்ரேயா(Shreya) July 04, 2006 8:26 pm  

ஆமாம். பார்த்தேன். படத்திலே மறதி காரணமாத்தானே ஒவ்வொரு நாளும் புதுசா இருக்கு.. ஆனா (மறதி இல்லாமல், with a clean slate) நாட்களை ஆரம்பிக்கலாம் என்பது கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. பயிற்சியின் மூலம் சாத்தியமாகவும் கூடும்.

உடனேயே வழக்கம்போல் கேள்வி வருது: முந்தைய நாள் தந்த பாடங்களுக்கூடாக இன்றைய நாள் அனுபவிக்கப்படுமா? அல்லது புத்தம் புதிதாக ஆரம்பிப்பதால் மீண்டும் அவை கற்றுக் கொள்ளப்படுமா? (ஏதோ ஒன்றைத் தவற விடுகிறேனென்று தெரிகிறது.. இன்றிரவாவது என் மண்டைக்கு எட்டுமா என்று பார்ப்போம் :O)

வல்லிசிம்ஹன் July 04, 2006 8:31 pm  

எனக்கு ஏற்கனவே பாய் ,தலயணை எல்லாம் வைச்சுகிட்டுப் பேசறேன்.:-)
அப்புறம் இந்த வாசனை வரது பத்தி யாராவது சொன்னா தேவலியே.
எனக்கு சந்தோஷம் வரும்பொது,உ-ம் ஒரு கல்யாணம்
இல்லை அல்லாத ஒரு நிகழ்ச்சி என்றால் வேறு ஒரு மாதிரி ஸ்மெல்.
என்னை இதற்குப் பின்னாலும் பின்னூட்டம் இட அனுமதிப்பிர்களா?

`மழை` ஷ்ரேயா(Shreya) July 04, 2006 8:56 pm  

//எனக்கு ஏற்கனவே பாய் ,தலயணை எல்லாம் வைச்சுகிட்டுப் பேசறேன்.:-)// ஏற்கெனவே இருக்கா? நல்லதொரு வியாபார வாய்ப்பைக் கெடுத்துட்டீங்களே!! :O))

வாசனை கனவுல வருமா இல்ல நனவிலயா? புதுசா இருக்குங்க.. :O\

(நான் தான் இந்த மாதிரி weird விதயங்களில் அரசி என்று பார்த்தேன்.. இந்தாங்க கிரீடம்..நான் இளவரசியா இருந்திட்டுப் போறேன் ;O)) பொறுங்க உங்க "பிரச்சனைக்கு" (பிரச்சனையா இருக்கா இல்ல சும்மா பெருமையா எடுத்து விட்டீங்களா???:O) கார்திக் என்ன தீர்வு சொல்றார் என்று பார்க்கலாம். அவர்தான் ஆஸ்தான தத்துவ ஆசான்.. :OD

மதுமிதா July 04, 2006 9:09 pm  

ஷ்ரேயா இதோ இங்கே பாருங்க
http://madhumithaa.blogspot.com/2006/07/blog-post_04.html

கார்திக்வேலு July 04, 2006 10:03 pm  

///முந்தைய நாள் தந்த பாடங்களுக்கூடாக இன்றைய நாள் அனுபவிக்கப்படுமா? அல்லது புத்தம் புதிதாக ஆரம்பிப்பதால் மீண்டும் அவை கற்றுக் கொள்ளப்படுமா?///

முடியும் என்றே தோன்றுகிறது.
We can gradually reach that stage.

சட்டையையோ ....செருப்பையோ வேண்டும் பொழுது அணிவது போல
இதுவும் சாத்தியமென்றே தோன்றுகிறது.

We can selectively / voluntarily "suspend" from using our prior knowledge.

Decision making in such situations might be very difficult / flawed though , as we make decisions based on that given situation.So not a good option while driving a car :-)

On the other hand ..in speaking to someone, enjoying a scenario or listening to music maybe a good place to start with.

Also in a less obvious and powerful way we can use this trick on ourselves ...to see ourselves in a new light .. trying to see the real US... very interesting one to try :-)

புதுமை விரும்பி July 04, 2006 11:37 pm  

Hello Manu , If you can read about "SYNESTHESIA" in wikipedia or google this word, you will know answers for your questions.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 05, 2006 10:19 am  

நேற்றிரவு நானும் தேடி இதேதான் அகப்பட்டது புதுமை விரும்பி. வந்து சொல்றதுக்குள்ள நீங்க சொல்லிட்டீங்க.

திங்கள் - வெளிர் மஞ்சள், புதன் - பச்சை என்றெல்லாம் நான் நாட்களுக்கு நிறம் கொடுப்பதும் கூட Manuவின் "வாசனை" போல ஒன்றுதானாம்.

இளவரசி, திரும்ப அரசியாகியாச்சு!! கிரீடம் இன்னொண்டு செய்து கொள்ளோணும். Manu, அரியணையில கொஞ்சம் இடம் விட்டு உட்காருங்க please!! :O)

`மழை` ஷ்ரேயா(Shreya) July 05, 2006 10:27 am  

Manu - நீங்க "மனு"வா "மானு"வா??? :O)

நன்றி மதுமிதா, பதிவு பார்த்தேன்.

கார்திக் - மத்தவுங்களுக்காகவோ அவங்க பார்வையிலோ நாம எப்பிடி இருக்கிறோம் என்றில்லாமல், நாங்களே எங்களை ஆராய்வது.. ம்ம்ம்.. செய்து பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் July 05, 2006 11:06 am  

அரசி, அம்மா வணக்கம்.
இப்போவே போய் அந்த சைந்தி சைட்டெ போயி பார்க்கிறேன்.
ரொம்ப ரொம்ப நன்றிப்பா. இது விஷயம் என்னை ரொம்ப நாள் பயமுறுத்தி இருக்கு.நீங்கள் ஆரம்பித்து நானும் படிக்க நேர்ந்தது ஒரு முக்கிய சான்ஸ்.யாரிடமும் சொல்ல தயக்கம்.
பாயைப் பிராண்ட இப்பொ சத்திக்கு வேற விஷயம் இல்லை. வந்தால் எங்கே எழுதணும்னு தான் தெரிகிறதே.
அப்புறம்,,, அந்த பாட்டு கேக்கற விஷயம்! அதை மதன்,விகடனில் விளக்கி இருந்தார். அது ஒண்ணும் நம்மளோட ஈ.ஸ்.பி எல்லாம் கிடையாதாம்.பழைய காலத்திலே நமக்கு அப்படி புலன்கள் எல்லாம் கூர்மையாக இருந்ததாம். செவி மட்டும் அந்தக் கூர்மையை இழக்கவில்லையாம்.
அதனால் தான் நமக்குக் கேட்குதாம்.அய்யடா, நாம் ரொம்ப ஸ்பெஷல் என்று ஏமாந்தேனே. நாங்க மானு,வல்லி தாங்க.மனு, வள்ளி இல்லை.துளசி அக்காவுக்கு அக்கா.இணைய அக்கா.
:))))))))))))

`மழை` ஷ்ரேயா(Shreya) July 06, 2006 4:05 pm  

//அரசி, அம்மா வணக்கம்.//
நீங்களும் நானும் இணை அரசியர்... சரி பாதியா அரியணையைப் பங்கிட்டுக்கலாம் என்ன! :O)

//பாயைப் பிராண்ட இப்பொ சத்திக்கு வேற விஷயம் இல்லை. வந்தால் எங்கே எழுதணும்னு தான் தெரிகிறதே//
ஆகா! :OD

ஆமா , நீங்க "மானு"தாங்கிறது துளசிதளத்துலே தெரிஞ்சு கொண்டேன். ஆனா நீங்க துளசி(ம்மா)க்கே அக்காங்கிறது இப்பத்தான் தெரியும்!!

பாட்டு கேக்கறதுக்கான மதனுடைய விளக்கம் குழப்புதே... :O(

Chandravathanaa July 06, 2006 4:07 pm  

ஏன் எதற்கு என்று சரியான காரணங்களைச் சொல்ல முடியவில்லை. அல்லது தெரியவில்லை.
ஆனால் இப்படியான உணர்வுகள், நினைவுகள்... வருவது உண்மை.

பெட்டகம்