என்னத்தைச் சொல்ல!


நான் சொல்லவில்லை.. பத்திரிக்கையொன்றில் வந்திருந்ததாய் நண்பரொருவர் அனுப்பியிருந்தார். குஞ்சு, குட்டி பற்றிக் கூடவா படத்துக்கு "விளக்கம்" எழுதியவருக்குத் தெரியாமல் போய்விட்டது? :O(

13 படகுகள் :

Peter Matthes July 06, 2006 2:59 pm  

That is one of the best photos I have seen in a very long time. Swans are the best.

வசந்தன்(Vasanthan) July 06, 2006 3:18 pm  

அது குஞ்சு என்று நீங்கள் தானே சொல்லிறியள்.
அந்தப் பறவைக்கு அது குட்டியாக இருக்கலாம். வசனம் எழுதியவர் அதை அறிந்திருக்கலாம்.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 06, 2006 3:39 pm  

ம்ம்.. எழுதினவருக்கும் அன்னத்துக்கும் மட்டும் தெரிஞ்ச விசயமா இருந்திருக்கும் போல! :O))

நீர் சொல்றது சரியாயிருக்கும் வசந்தன், மனுசக்குட்டிகளையே "குஞ்சு" என்டு கூப்பிடேக்க அந்தத் தாய் அன்னம் அன்னக்குஞ்சைக் குட்டியெண்டு கூப்பிட்டாப் பிழையில்லத்தான்!! :O)

sivagnanamji(#16342789) July 06, 2006 3:56 pm  

அவருடைய ஆர்வத்தைப்பாராட்டுவோம்;
குறையை மறப்போம்.
தற்பொழுதைய மாணவர்களின் தமிழ்
அறிவை நீங்கள் அறிய வாய்ப்பில்லை போலும்

`மழை` ஷ்ரேயா(Shreya) July 06, 2006 4:21 pm  

சொல்வது சரி சிவஞானம்ஜி. குறையை மறந்துவிடலாம். அழகான ஒரு நிழற்படத்தைப் போட்டதற்குப் பாராட்டுவோம்.

//தற்பொழுதைய மாணவர்களின் தமிழ்
அறிவை நீங்கள் அறிய வாய்ப்பில்லை போலும்//
"தமிழ் தெரியாமை" தொடர்கதை ஆகும் போல இருக்கே நீங்க சொல்றதைப் பார்த்தா!! :O(

manu July 06, 2006 5:31 pm  

ஷ்ரேயா, அன்னத்துக்குத் தன் குஞ்சு குட்டியானதோ?

தமிழ் தெரி ஆமை.
இந்த அன்னத்துக்கும்
தமிழ் தெரிய வாய்ப்பில்லாததால்

அதைப் படம் எடுத்தவருக்கும் இப்படித் தோண்றியதோ?

`மழை` ஷ்ரேயா(Shreya) July 06, 2006 5:36 pm  

//தமிழ் தெரி ஆமை.//

???
:O\

manu July 06, 2006 7:54 pm  

அதுவா..ஆமைக்குத் தமிழ் தெரியும். அன்னத்துக்குத் தெரியாது.

அதனால்தான் தமிழ் தெரி யாமை என்று வந்து இருக்கிறது.!!!

Anonymous July 07, 2006 4:03 am  

comment எழுதுனவர் ரொம்ப சங்கோஜியா இருப்பாரு. குஞ்சுன்கிரது அவருக்கு கெட்ட வார்தைன்னு சின்ன வயசுல சொல்லி கொடுத்திருப்பாங்க.

Anonymous July 15, 2006 6:32 pm  

//That is one of the best photos I have seen in a very long time. Swans are the best.//
தமிழ் தெரியாதவர் அந்தப்படத்தின் அழகைப் பார்த்தார்.
//குஞ்சு, குட்டி பற்றிக் கூடவா படத்துக்கு "விளக்கம்" எழுதியவருக்குத் தெரியாமல் போய்விட்டது?//
தமிழ் தெரிந்தவர் அதில் குறைகண்டார்.

அது சரி, தெரியாமல் தான் கேட்கிறேன். அன்னத்துக்குக் குட்டி இருக்கக்கூடாதா?

`மழை` ஷ்ரேயா(Shreya) July 17, 2006 10:23 am  

//அன்னத்துக்குக் குட்டி இருக்கக்கூடாதா?//

dear Annony, as said to வசந்தன்: //மனுசக்குட்டிகளையே "குஞ்சு" என்டு கூப்பிடேக்க அந்தத் தாய் அன்னம் அன்னக்குஞ்சைக் குட்டியெண்டு கூப்பிட்டாப் பிழையில்லத்தான்!! :O)//

கிவியன் July 18, 2006 1:10 pm  

படதுக்கு 'ஓ' போட்டு குட்டி என்பது ரொரண்டொ வட்டார வழக்குன்னு வுட்டுருங்கோ, இதுக்கு போயி என்னத்த சொல்ல முடியும்? நா வளர்ந்த மருதேல எங்க தெருவுல பாலக்காட்டுலர்ந்து வந்த இருந்தாய்ங்க. காலேல வாசல்ல உட்கார்ந்து ப்ளாஸ்டிக் பக்கெட்டை பத்தவைத்துக்கொண்டிருந்தார். என்னாச்சுன்னு கேட்டப்ப "பக்கெட கிழுஞ்சுட்டான்னு" பதில வந்தது. அப்புறம் கிளம்பரப்ப, ராகவன் வந்து "இருந்தது" இத உங்கிட்ட குடுக்கசொன்னது" என்று தனி தமிழில் பேசினதால அவர என்ன முதியோர் கல்விக்கு அனுப்பவா முடியும்? இல்ல இந்த தெருவ விட்டு காலி பண்ணீருன்னுதான் சொல்ல முடியுமா? ஒண்ணியும் பண்ண முடியாது.

Johan-Paris September 22, 2006 9:49 pm  

இந்தக் குஞ்சு;"குட்டி"ச்சவாரி செய்வதால் ;குட்டி என்டிடாரோ!! அதுசரி மற்றக் குட்டிகள் ;மன்னியுங்க குஞ்சுகள் எங்கே??, அழகிய; தாயும் சேயும்
நன்றி
யோகன் பாரிஸ்

பெட்டகம்