கணிதம்

கணிதத்தின் மேல் எப்பவும் ஒரு விருப்பம் இருந்ததுண்டு. இன்னும் இருக்கிறது. சதுரக் கோடு போட்ட கொப்பிகளும், பாடமாக்கியே தீர வேண்டியிருந்த வாய்ப்பாடுகளும், மடக்கைப் புத்தகமும், இன்னும் வேணும் என்று கணக்குகள் கேட்க வைத்த திருமதி ஜோணும் என்று கணிதம் பற்றிப் பல ஞாபகங்கள்.

அநேகமானோருக்கு இனி இல்லை என்டளவு வறண்டதாய் அலுப்படிக்கக் கூடியதென்று தோன்றும் புத்தகங்கள் அதிசயமாய் எனக்குப் பிடித்து போகின்றன. அப்படி வாசித்தவைகளில் இரண்டு The Seven Daughters of Eve மற்றும் In The Footsteps of Eve. இன்னொன்று ஆப்பிரிக்காவிலும் ஈராக்-ஈரானை அண்டிய பகுதிகளிலும் மேற்கொண்ட தொல்பொருளாய்வு பற்றியது. அதன் பெயர் எப்பவாவது ஒருநாள் திரும்பக்கூடும்.
:O) அப்படியான ஒரு வரிசையில் கண்ணில் பட்டு நான் வாசிக்க ஆரம்பித்திருக்கிற "The crest of the peacock: Non-European roots of mathematics " எனும் புத்தகம் ஐரோப்பா தவிர்ந்த ஏனைய இடங்களில் கணிதம் பற்றிப் பேசுகிறது. இதனை வாசிக்கும் வரையில் எப்படி உலக நாகரிகங்களில் கணிதம் இருந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தது மிகமிகக் குறைவு. வந்திருந்தாலும், அது எகிப்தை மையமாக வைத்தே இருந்து, பார்க்கிற எகிப்து பற்றிய ஆவணப்படங்களினூடாக விடையளிக்கப்பட்டிருக்கிறது.

புத்தக ஆசிரியர் பரவலாகக் காணப்படுகிற "கிரேக்கக் கல்வி --(இருண்ட காலம்)--> கிரேக்க அறிவு பற்றிய கண்டுபிடிப்பு --(ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம்)--> ஐரோப்பிய/அதன் குடியேற்ற நாடுகளின் அறிவு/வளர்ச்சி" என்கிற ஒருதலைப்பட்சமான கற்பித்தலைப் பற்றிப் பேசுகிறார்.

கிரேக்க வழி வந்து மேம்படுத்தப்பட்ட கணித அறிவு தவிர, ஏலவே இருந்திருக்கிற நாகரிகங்களில் கணிதம் பற்றி உலகம் பேசுவதில்லையென்றும் அவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதென்றும் இப்புத்தகத்தில் சொல்லப்படுகிறது.

இதுவரை வாசித்ததிலிருந்து இரு பந்திகள்:

1. The neglect of the Arab contribution to the development of European intellectual life in general and mathematics in particular is another serious drawback of the 'classical' view. the course of European cultural history and the history of European thought are inseparably tied up with the activities of Arab scholars during the Middle Ages and their seminal contribution to mathematics, the natural sciences, medicine and philosophy. In particular, we owe to the Arabs in the field of mathematics the bringing together of the technique of measurement, evolved from its Egyptian roots to its final form in the hands of Alexandrians, and the remarkable instrument of computation (our number system) which originated in India; and the supplementing of these strands with a systematic and consistent language of calculation which came to be known by its Arabic name, algebra. An acknowledgement of this debt in more recent books contrasts sharply with a failure to recognize other Arab contributions to science.*

*[They include:

(a) An early description of pulmonary circulation of the blood, by Ibn al-Nafis, usually attributed to Harvey, though there are records of an earlier explanation in China;

(b)The first known statement about the refraction of light, by Ibn al-Hayatham, usually attributed to Newton;

(c)The first known scientific discussion of gravity, by al-Khazin, again attributed to Newton;

(d)The first clear statement of the idea of evolution, by Ibn Miskawayh, usually attributed to Darwin;

(e)The first exposition of the rationale underlying the 'scientific method', found in the works of Ibn Sina, Ibn al-hayatham and al-Biruni, but usually credited to Francis Bacon.

A general discussion of the western debt to the Middle East is given by Savory(1976), while detailed references to the specif contributions of Arab science are given by Gillespie(1969-) ]


2. AL-Kwarizmi wrote a [second] book, of which only a Latin translation is extant: Algorithmi de nomero indorum, which explained the Indian number system. While al-Khwarizmi was at pains to point out the Indian origin of this number system, subsequent translations of the book attributed not only the book but the numerals to the author. Hence, in Europe any scheme using these numerals came to be known as an 'algorism' or later, 'algorithm' (a corruption of the name al-Khwarizmi) and the numerals themselves as Arabic numerals.


வாசிக்க வாசிக்க, எப்படி நாம் பைதகரசையும், ஆர்க்கிமிடிசையும் தவிர வேறிடங்களில் கணிதம்/அறிவியல் போன்றவற்றினைப் பற்றிச் சிந்திக்காமல் போனோம் -கேள்விகள் இல்லாதிருந்தோமென்று ஆச்சரியமாயிருக்கிறது. படிப்பு என்பது புத்தகத்திலிருப்பதைச் சப்பியோ கரைத்துக் குடித்தோ பரீட்சையில் சத்தியெடுப்பது என்றளவில் இருக்கிறவரைக்கும் கேள்விகள் மாணவர்களால் எழுப்பப்படாது போல..

(தொடர்ந்தும் இப்புத்தகம் பற்றிப் பதியப்படக்கூடும்.)

6 படகுகள் :

கானா பிரபா April 24, 2008 11:33 am  

கணிதத்துக்கும் எனக்கும் எட்டாப் பொருத்தம், வகுப்பில் எடுக்கும் கடைசிப்புள்ளி அதுக்குத் தான். இந்த லட்சணத்திலை நீங்கள் சொன்ன புத்தகத்தை நான் திரும்பியும் பாக்க மாட்டன் ;-)

`மழை` ஷ்ரேயா(Shreya) April 24, 2008 2:29 pm  

ஏன் உங்களுக்கும் கணிதத்துக்கும் பொருத்தம் எட்டாமப் போனது? எனக்குக் கொஞ்ச நாள் (7ம் ஆண்டு) கணக்கு பிடிக்காமப் போனதுக்கு வாத்திதான் காரணம்.

Anonymous May 14, 2008 8:53 pm  

//refraction of life,//
Light u mean :)

`மழை` ஷ்ரேயா(Shreya) May 15, 2008 9:01 am  

நன்றி கார்திக். பதிவில் திருத்தியிருக்கிறேன்.

Anonymous March 04, 2010 7:12 pm  

Very curiously :)

Anonymous March 13, 2010 9:21 am  

I can suggest to visit to you a site on which there is a lot of information on a theme interesting you.

பெட்டகம்