தொடர்வண்டிப் பயணத்தின் போது மனதிற்குள்ளேயே அழகாய் உருக்கொடுத்துச் சிங்காரித்திருந்தேன் அந்த இடுகையை. வீட்டுக் கதவு திறந்தேன். அந்த இடுகையெங்கே? வண்டியிலேயே மறந்து விட்டேனா? அல்லது இறங்கி நடந்து வரும் வழியில் தொலைத்தேனா? "துளிர்த்து, வளர்ந்து, நிறம் மாறி, உதிர்ந்து காற்றிலலைந்து, தரை தடவி், மக்கி, உரமாய் மண்ணுக்குள் ஊறி, வேர் பிடித்து மரத்துக்குள் போய், சத்தாகித் திரும்பத் துளிர்த்து வரும் அந்த இலை போலே என்றென்றைக்குமான எங்கள் அலைதல்களோடேயே நீயும் நானும்" என்று நினைவில் பிசுபிசுத்தது எப்படியோ தொற்றிக் கொண்டு வந்துவிட்ட ஒற்றை வரி.
அணிந்தணிந்து மென்மையாகிப் போன பிரியமானதொரு ஆடையைப் போலே கவிந்திருக்கிறது வெள்ளியிரவு. மிஞ்சிக் கிடந்த அந்த ஒற்றை வரியை நூல் போலப் பிடித்துக் கொண்டு மீதி இடுகையை திரும்பவும் நெய்துவிடலாமென்று பார்க்கிறேன். வரவேயில்லை. காணாமல் போய்விட்ட அந்த இடுகை, இளவரசியின் பதினெட்டு மெத்தைகளுக்கும் கீழே இருந்த பட்டாணியைப் போல என்னை உறுத்துகிறது. யோசித்துக் கொண்டு அவவைப் போலவே விழித்திருக்கிறேன். இளவரசி பாவம். அவவுக்கும் வலைப்பதிவிருந்திருந்தால் ஒருவேளை பட்டாணியால் பறிபோன நித்திரையைப் பற்றி ஏதேனும் எழுதியிருக்கக்கூடும்.
அந்த ஒற்றை வரி
Posted by
`மழை` ஷ்ரேயா(Shreya)
27 June 2009
வகை: கிறுக்கினது
10 படகுகள் :
உதித்து பின் அது மனதில் பதித்து அதை கிடைக்கும்நேரத்தில் உருக்கொடுத்து கொண்டு கொண்டு வந்து ப்ளாக்கில் கொட்டிசெல்வது என்பது இம்புட்டு கஷ்டமா என நினைக்கவைத்தது
கலக்கல் பாஸ் :)))
//இளவரசியின் பதினெட்டு மெத்தைகளுக்கும் கீழே இருந்த பட்டாணியைப் போல என்னை உறுத்துகிறது//
அவ்வ்வ்வ் அது பட்டாணி பிரச்சனை இல்ல மனசுதான் காரணம் - பதினெட்டு பெட்டுக்கும் கீழ இருக்கிற பட்டாணி உறுத்துத்து சொன்னா அந்த இளவரசி எம்புட்டு டெர்ரரான ஆளா இருக்கும் :)))))))))
அச்சோ இதுபோல எத்தனையோ ஒற்றை வரிகளத் தொலைத்திருக்கிறேன் மழை ஷ்ரேயா!!!
பட்டாணி இல்லைப்பா அது.
ஒரு தலை முடி.
அதைக்கூட உணரும் மென்மேனி அந்த இலவரசிக்கு!!!
என்றைக்காவது எப்போதாவது ஒரு நாள் மனசின் மூலையில் க்ளிக்காகும். அப்போ உடனே எழுதிவச்சுக்குங்க.
ஆயில்ஸ் - துளசி சொன்னதைப் பார்த்தீங்களா? பட்டாணி இல்லையாம், ஒரு தலை முடியாம்!!! :O)
அருணா - :O)
துளசி - நான் படிச்ச புத்தகத்தில பட்டாணி என்றுதான் இருந்துது. ப்தினெட்டு மெத்தைக்கும் மேலே இளவரசி படுத்திருந்ததும் ஒன்றிலிருந்து மற்றதை வேறுபடுத்த ஒவ்வொரு மெத்தைகும் ஒவ்வொரு வண்ணமும் designம் இருந்ததும் இன்னமும் ஞாபகம். :O)
//என்றைக்காவது எப்போதாவது ஒரு நாள் மனசின் மூலையில் க்ளிக்காகும். அப்போ உடனே எழுதிவச்சுக்குங்//
டீச்சர் என்றைக்கோ எப்போவோ இல்ல ”மழை”க்கு டெய்லி சின்ன சின்ன தூறல் போடுதாம் :))))
/மழை` ஷ்ரேயா(Shreya) said...
ஆயில்ஸ் - துளசி சொன்னதைப் பார்த்தீங்களா? பட்டாணி இல்லையாம், ஒரு தலை முடியாம்!!! :O)///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வாவ்..கலக்கல் ஷ்ரேயா! ஒற்றை வரியே மிக அருமையாக இருக்கிறதே...பதிவு வந்திருந்தால்..ஆகா!! :-)
ஆனா வரல்லயே?? :O(
நன்றி ஆச்சி.
ஆயில்யன், எனக்கே தெரியாது தூறல் போடுறது.. அப்பிடி நடக்குதுன்னு கண்டால் உடனே என்க்குச் சொல்லிருங்க என்ன! :O)
Post a Comment