செய்து கொண்டிருக்கிறதெல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு, அம்மாவின் மடியில் போய் சுருண்டு கொள்ள/சாய்ந்து கொள்ள வேண்டும் போல எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட காரணமுமின்றி அப்படிச் செய்ய வேணும் போல் மனதில் தோன்றிற்று.
அரிதாக எப்போதாவது எனக்கு ஒரு பயமும் வருவதுண்டு. ஒன்றுமே நடந்திராது, காரணமும் இருக்காது..ஆனாலும் ஏன் எதற்கென்று தெரியாமலே பயப்படுவேன். இது குளிர்காலத்தில் எற்படும் (winter blues) பாதிப்பல்ல. பதின் வயது முதலே இருக்கிறது என நினைக்கிறேன்.இந்த மாதிரி பயமாக இருக்கும் போதும் முதலில் சொன்னது போல அம்மாவின் மடியில் சுருண்டு கொள்ள அல்லது மிக நெருங்கியவர்களுடன் இருக்க வேண்டும் போலிருக்கும். சில சமயங்களில் 2- 3 நாட்களுக்கும் தொடரும் இந்தப் பயத்திற்குக் காரணம் யாருக்காவது தெரியுமா?
4 படகுகள் :
homesick
no...not today. :o)
நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கீங்கன்னு அர்த்தம். வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்குன்னு அர்த்தம். ஆனால் இந்த மகிழ்ச்சியை வெளிமனதிற்கு உணர்த்தமுடியாத உள்மனம், ஏதேதோ ஒரு நிலையற்ற தன்மை வாயிலாக புரிய வைக்க முயற்சிக்கிறது என்று அர்த்தம். Don't worry, you are in the safe hands of humans. :-)
பி.கு.: மேலே நான் விட்ட உடான்ஸை நம்பாதீங்க
சீரியசா.. யாராச்சும் என்ன நடக்குது என்று சொல்லுங்க...இல்லாட்டி க்ருபா மாதிரி "வைத்தியர்கள்" சொல்றதை அவங்க பேச்சையும் மீறி நம்ப வேண்டியதாயிடும்!!! :o)
Post a Comment