உன்னை 1 கேட்பேன்..

இதெல்லாம் தேசத்துக்கு மிகவும் முக்கியமான கேள்விகளா என்றெல்லாம் ஆராயாமல்..பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

1. முகில்களின் நிறை அளக்கப்படுவதுண்டா? எப்படி அளக்கிறார்கள்?

2. கவலையாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.நண்பர் வந்து தேற்றுகிறார்.."இதுக்கெல்லாம் போய் கவலைப்படாதே...எத்தனை பேர் உன்னை விட கஷ்டமான நிலமையில் இருக்கிறாங்க என்று யோசி". பேச்சுக்கு உங்களை விட கஷ்டத்தில் "க" என்பவர் இருப்பதாக வைத்துக் கொண்டால், அவருக்கும் ஒரு நண்பர் வந்து (உங்களூக்கு உங்கள் நண்பர் சொன்னது போலவே) தேறுதல் சொல்லலாம் தானே...அப்போ உங்களுக்கு "க" போல "க" வுக்கு "ப" என்று ஒரு ஆள் வரக்கூடும். "ப" வுக்கு ஒரு "ச" இருப்பார்.(என்னை "நீ போய் 'சா' " என்று சொல்லக்கூடாது ஆமா!!)இப்படியே போனா யார்தான் அந்த மகா..ஆ..ஆ துர்பாக்கியசாலி?தேற்றுவதற்கு நண்பர் இல்லாதவரா?

3. "அ" ஒரு விதவை. "அ" வை திரு."எ" திருமணம் செய்தால், "எ" விதவைக்கு வாழ்வளித்தவர் எனப்படுவார். ஆனால் அதே "எ" ஒரு தபுதாரனாயிருந்து "அ" அவரைத் திருமணம் செய்து கொண்டால் "அ" 2ம்(2/3/4 எது வேணா போட்டுக்கொள்ளலாம்) தாரம். அது எப்படி? ஏன் "அ" "எ"க்கு வாழ்வளித்தவராகக் கூறப்படுவதில்லை?

இனிமேலும் கேட்கப்படும்...(ஏன் ஓடுறீங்க??) ;o)

5 படகுகள் :

பினாத்தல் சுரேஷ் June 06, 2005 5:58 pm  

பதில்தானே? சொல்லிட்டாப் போச்சு!

1. ஒரு முகிலைப் பிடித்து தராசில் வைத்து, அடுத்த பக்கத்தில் எடைக்கல்லை வைத்து எடை போடுவார்கள்.

2. க-வின் பிரச்சினைகள் + ம-வின் பிரச்சினைகளைக்கூட்டிப் பார்த்து அந்த துர்பாக்கியசாலி மகிழ்ந்து கொள்வான்.

3. (பகடிக்காக மட்டும்) எப்படி இருப்பினும் ஆண்தான் வாழ்க்கை கொடுப்பவன் - பெண் உயிரை (வாழ்க்கை) எடுப்பவள்!!

வசந்தன்(Vasanthan) June 06, 2005 9:01 pm  

அட நானும் எழுதிறதுக்கு ஒண்டுமில்லயே எண்டு யோசிச்சுக் கொண்டிருந்தன். வாசகர்களை இழக்கக்கூடாதெண்டால் தொடர்ந்து ஏதாவது எழுத வேணும். விசயங்கள் இல்லாட்டியும் என்னெண்டு பதிவுகள் போடலாமெண்டு காட்டித்தந்திட்டியள். நன்றி. இனி உங்கட வழியில் தொடர வேண்டியதுதான்.

`மழை` ஷ்ரேயா(Shreya) June 07, 2005 12:57 pm  

சுரேஷ்...உங்கட விஞ்ஞான அறிவை என்னெண்டு புகழுறதென்டு தெரியவில்லையே!! ஆனாலும் உங்கட 3ம் பதில்...என்னதான் இருந்தாலும் பகிடிக்கும் இப்பிடிச் சொல்லக்கூடாது!! :o|

வசந்தன்..உமக்கு எழுத்துப் பஞ்சமோ?..நான் நம்ப மாட்டன்.

பி.கு:முதலாம் கேள்விக்கு உண்மையான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

வசந்தன்(Vasanthan) June 07, 2005 2:57 pm  

//வசந்தன்..உமக்கு எழுத்துப் பஞ்சமோ?..நான் நம்ப மாட்டன்.//

இல்லை. எழுத விசயம் தான் பஞ்சம். அனா 'பஞ்சி' மட்டும் பஞ்சமில்ல.

`மழை` ஷ்ரேயா(Shreya) June 09, 2005 11:01 am  

பஞ்சிக்கு எப்பவாவது பஞ்சம் வந்தா என்னிடம் கேட்கலாம். கையிருப்பு தாராளம். :o)

அதுசரி..உண்மையா முகிலின் நிறை அளக்கிறதில்லையா?

பெட்டகம்