நாயே..!

எனக்கு நண்பன் ஒருவன் இருக்கிறான். இருவருக்கிடையிலும் வாயில் நாய் மாடு பண்டி குரங்கு என்று சகல மிருகங்களும் தாராளமாக வந்து போகும்.

ஒரு நாள் அவன் சொன்ன/செய்த எதற்கோ பதிலாக நான் கொஞ்சம் இரைந்து கதைத்து விட்டேன். அவன் என்னை கேட்டான் "ஏன் இப்பிடி நாய் மாதிரிக் குலைக்கிறாய்?"

அவன் அப்படி கேட்டதற்கு நான் சொன்னேன்: நீ என்னை நாய் என்று திட்டுவதால் தான் நான் குலைக்கிறேன்"

அதற்கு அவன்: "உன்னை எப்பவாவது அப்பிடி ஏசியிருக்கிறனா நாயே!"


அதைக் கேட்டதும் எனக்குச் சிரிப்பு வந்தது. நான் சிரிக்கத் தொடங்கியதும் கோபம் வந்து விட்டது அவனுக்கு. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு தான் அவனுக்கே தான் சொன்னது உறைத்தது. பிறகென்ன..ஒரே சிரிப்புத்தான்!

6 படகுகள் :

துளசி கோபால் June 10, 2005 5:43 pm  

எந்த மாதிரி நாய்? தன்னைத்தானெ நக்கிக் கொள்ளும் வெரைட்டியா?

லதா June 10, 2005 5:51 pm  

சிங்கம் இல்லையா ? :-))

Thangamani June 10, 2005 6:10 pm  

எனக்கு எனது தோழியையும், நான் அடித்த கமெண்ட்டுகளையும் நினைவுக்குக் கொண்டுவந்தது. நன்றி!

`மழை` ஷ்ரேயா(Shreya) June 11, 2005 12:37 pm  

அது என்ன வெரைட்டி துளசி?

சிங்கம் எல்லாம் அவனை கிண்டல் பண்ணும் போது மட்டும் ..ie: "பெரிய ஆண் சிங்கம் என்டு நினைப்பு"

நன்றி தங்கமணி.

துளசி கோபால் June 12, 2005 12:42 pm  

ஷ்ரேயா ஷ்ரேயா,

நாய்களிலே மட்டும் எத்தனை வகை இருக்குன்னு உங்களுக்குத் தெரியாதா?

நீங்க குறிப்பிட்டுள்ளது அல்சேஷியனா, டாபர்மெனா, பூடூலா இத்தியாதி:-)))

அல்லது தன்னைத்தானே நக்கிக் கொள்ளும் நாயா?

`மழை` ஷ்ரேயா(Shreya) June 14, 2005 5:25 pm  

துளசி, நீங்க தெருநாய், சொறி நாயைச் சொல்லாம விட்டதே பெருங்காரியம்! ;o)

பெட்டகம்