பள்ளிக்கூடத்தில் ஆட்டோகிராஃப் பரிமாறிக் கொள்வது வழக்கம். அதிலே சிலவேளைகளில் இப்படி எழுதி வைப்போம்:
"நீ மட்டுந்தான் ????? என்று நினைக்காதே. நானும் ?????தான். நீ தனித்துப் போய் விடக்கூடாதே என்று!"
அதுதான் ஞாபகம் வந்தது - பின்னூட்டமிட்டுப் பார்த்தால், "சொன்னவர் ?????" என்று வந்திருக்கிறதைப் பார்க்க. நான் பெயர் மாத்தவில்லையே என்று வேறு கொஞ்ச நேரம் யோசித்தும் வைத்தேன். பொதுவான பிரச்சனையாக் கிடக்கு. Bloggerக்கு எழுதிப் போடுறதுதான் வழி போல!
இன்னொரு பிரச்சனை..இது எனக்கு மட்டுந்தான். (எனக்கு மட்டுமான பிரச்சனைகள் நிறைய இருக்கு!அதெல்லாம் சொல்லி உங்களை எதுக்கு பயப்பிடுத்துவான் :o)
இந்தச் சுட்டிக்கு போகேலாமக் கிடக்கு: http://www.balaji_ammu.blogspot.com. கனக்க கொம்பினேசனில எல்லாம் சுட்டிய மாத்திப் பாத்திட்டன்...வலையுலாவிக்குப் பிடிக்கேல்ல. எப்பிடி மாத்தி எழுதினாலும் உன்னை இந்த முகவரிக்குக் கூட்டிக் கொண்டு போகேலாது என்று முடிவாய்ச் சொல்லிவிட்டுது! தமிழ்மணத்தில முறையிட்டன்...பதில் சொன்ன 'செல்வா'க்கும் இந்தப் பிரச்சனை இருந்ததாம், ஆனால் சரியாகிட்டுதாம். பிரச்சனை ஏனென்று யாருக்காவது தெரியுமா? எப்பிடி நான் பாலாஜிட வலைப்பதிவை வாசிக்கிறது? வழி சொல்லுங்கோ!
11 படகுகள் :
கேள்விக்குறி பிரச்சின எனக்கும் இருக்கு. பாலாஜியின்ர பக்கத்துப்பிரச்சின, அந்த முகவரியில இருக்கிற _ அடையாளம்தான் எண்டு நினைக்கிறன். கணினி வல்லுநர்கள் தான் சொல்ல வேணும்.
ஷ்ரேயா,
மிக்க நன்றி, என் வலைப்பதிவுக்கு செல்வதற்கு இவ்வளவு ஆர்வமாக இருப்பதற்கு ! இதற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ :-)
சரி விடயத்திற்கு வருவோம்:
இந்த (என் வலைத்தளம் குறித்த)பிரச்சினை சென்னையில் என் நண்பனுக்கும் இருந்தது. அது 'தீச்சுவர்' சம்மந்தப்பட்டது.
எனக்கென்னவோ, இந்த balaji_ammu-இல் உள்ள "_" இப்பிரச்சினைக்கு காரணமோ என்ற ஐயம் இருக்கிறது.
"மழை" --- மிக அழகான தலைப்பு !!!!
//எனக்கென்னவோ, இந்த balaji_ammu-இல் உள்ள "_" இப்பிரச்சினைக்கு காரணமோ என்ற ஐயம் இருக்கிறது//
நன்றி பாலாஜி. வலையுலாவி சொல்கிறது - Illegal character in hostname; underscores are not allowed
ஷ்ரேயா.
எனக்கும் இதெய்ய் பிரச்சினை தான்...ஏற்கனவே என் பெயரில் இவர் பின்ணூட்டம்.. நான் சொல்லபா .. என் பேர்ல யாரோ சொல்டாங்க... அப்படினு பிரச்சினை .. இதுல இந்த ??? வேற வருது ..ஒரேய் கொலப்பமா இருக்கு ..
வீ எம்
எல்லாம் இந்த blogger தேசத்தின் ஆங்கிலக்குடிதாங்கியின் தொண்டர்கள் வேலையாக இருக்குமோ ?:-)))
பின்னூட்டம் எழுதிவிட்டு, ஒருவரி கடைசில,
இந்த பின்னூட்டத்தை வழங்கியவர்: உங்கள் அபிமான ஞானபீடம் அப்டீன்னு இப்போதக்கி, சொல்லிக்கிட்டு இருக்கேன்.
எல்லாரும் கோபிக்கு ஒரு "ஓ" போடுங்க. அவருடைய புண்ணியத்தில என்னால இப்ப பாலாஜிட வலைப்பதிவுக்குப் போக முடியுது. ( underscoreக்கு பதிலா %5ஐ போடச் சொல்லியிருந்தார். நன்றி கோபி.)
எங்களெல்லாரையும் கேள்விக்குறிகளாக்கிறதப் பற்றி Blogger இடம் கேட்டிருக்கிறேன்..பாப்பம், என்ன சொல்றாங்க என்று!
>>ஷ்ரேயா<<
இதில் ஒரு சதி இருக்கிறது ..
இன்னுமே நாங்க கேள்விக்குறிகள்தானா? சோதனைடா சாமி!
>>ஷ்ரேயா<<
//( underscoreக்கு பதிலா %5ஐ போடச் சொல்லியிருந்தார். நன்றி கோபி.)//
அது %5 இல்லீங்க, %5f . _க்கு URL Encoding மதிப்பு. (மென்பொருளாளர்களுக்கே வரும் typo error உங்களுக்கும் :-P)
??? பிரச்சனை Blogger Profileலில் மட்டும் வருகிறது. Anonymous/other ஆகியவற்றில் யூனிகோடில் எழுதும் போது வருவதில்லை
இதைத் தற்காலிகமாய் தவிர்க்க, வலைப்பதிவர்கள் Anonymous/other பின்னூட்டங்களை அனுமதிக்கலாம் (உங்களைப் போல)
பின்னூட்டம் இடுவோர் Blogger Profileல் தன் பெயரை அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்திலும் குறிப்பிடலாம்
அல்லது ஞானபீடம் போல பின்னூட்டத்தின் இறுதியில் பெயர்/விளம்பரம் பொறிக்கலாம்
சுட்டிக்காட்டியதற்கு நன்றி கோபி.
இந்த வலைப்பதிவுக்காட்டு கங்காரு (பனக்காட்டு நரி என்பதெல்லாம் பழசாகிப் போச்சு!;o) )பெயர் கேள்விக்குறியாகிறதுக்கு அஞ்ச மாட்டா என்பதை அவவையும் சக வலைப்பதிவர்களையும் கேள்விக்குறியாக்கும் Bloggerக்கு தெரிவிக்கிறா! என்றாலும், தன்னலம் கருதாமல் சேவை வழங்கும் Blogger அண்ணாச்சிக்காக, தன் பெயரை ஆங்கிலத்தில் இட யோசித்திருக்கிறா! :o)
>>ஷ்ரேயா<<
Post a Comment