அழைப்பிதழ்

திருமண அழைப்பிதழ் இல்லை. (அது அனுப்பிய போது, வலைப்பதிவென்றாலே என்னென்றே தெரியவே தெரியாது!)இது வேற!

அன்புடையீர்,

நடக்கும் ஆங்கில 2005ம் ஆண்டு, தமிழுக்கு ஆனி மாதம், ஆங்கில 23ம் திகதி இணையத் தொடர்பு, விசைப்பலகையில் சுரதாவின் செயலி கொண்டு தட்டச்சும் கைகள் ஆகிய லக்கினங்கள் கூடும் சுபநேர சுப வேளையில் பதிவொன்றை வலையேற்ற ஷ்ரேயாவினாலும், அவருக்கு உதவும் ப்ளொகரினாலும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இத்தருணம் தாங்களையும் தங்கள் கண்கள் மற்றும் இணையத்தொடர்பு சமேதராக இவ்வலைப்பதிவுக்கு வருகை தந்து, பதிவினைப் பார்வையிடவும், பின்னர் நடக்கவிருக்கும் பின்னூட்ட உப(தை)சாரத்திலும் பங்குபற்றிச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இங்ஙனம்,

ஷ்ரேயா & Blogger

(இருவீட்டார் அழைப்பு)


சத்தியமா இது வரைக்கும் எழுதிய பதிவெல்லாத்தையும் குடந்தைச் சோதிடரிடம் போகாமல் நானாகவே எக்ஸெல் ஓலையில் சோழிகளைக் குலுக்கிப் போட்டு ஆராய்ந்ததில் தெரிய வந்ததாவது...

இதுவரை(79 பதிவுகளில்) பதிவுகள் அதிகமாக எழுதப்பட்டுள்ள

    திகதி: 4, 6, 10, 15, 16, 23

    நாள்: வியாழன் & வெள்ளி

    மாதம்: ஆனி


ஆனி மாதத்திற்குரிய 4, 6, 10, 15, 16ம் திகதிகள் ஏற்கெனவே கடந்து விட்டதால், அடுத்து இவை பொருந்தும் எனக் கணிக்கப்பட்ட நாளே அடுத்த பதிவிற்காகச் சிறப்பாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே..அழைப்பிதழை கொஞ்சம் வாசிச்சிட்டு..அடுத்த பதிவுக்கு ஒரு ஐடியாவையும் தந்திட்டு இப்ப போய்ட்டு, மறக்காம திரும்பி வாங்க!:o)

மி.மு.பி.கு: திகதிகள் ஆங்கிலத்தில் இருப்பதற்காகவோ அல்லது அழைப்பு விடுக்கும் ஒரு பகுதியினரின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதற்காகவோ என்னை யா..ஆ..ஆ..ரும் கண்டிக்கவோ, இப் பதிவைப் புறக்கணிக்கவோ முடியாது என தடைச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது!! அன்றைக்கு ஹர்த்தால்/பந்த் எனக் கூறி வலைப்பதிவை இழுத்து மூடுபவர்கள் மேல் இப்போதே கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

6 படகுகள் :

Unknown June 20, 2005 3:38 pm  

ம்... ஆபிஸ்ல வேலையில்ல?., நல்லயிருக்குது அழைப்பிதழ்.

`மழை` ஷ்ரேயா(Shreya) June 20, 2005 3:42 pm  

அட...எப்பிடி கண்டுபிடிச்சீங்க?? :o)

நன்றி!

>>ஷ்ரேயா<<

துளசி கோபால் June 20, 2005 5:21 pm  

ஷ்ரேயா,

இதுதான் லொள்ளா?

`மழை` ஷ்ரேயா(Shreya) June 20, 2005 10:46 pm  

ஹி ஹி...லொள்ளா..அது நாய் செய்யிற/சொல்லுறது! நான் இல்லை!துளசி ;o)

என்ன இது? யாருமே அடுத்த பதிவுக்கு ஐடியா சொல்லுறீங்க இல்லையே! :o(

>>ஷ்ரேயா<<

`மழை` ஷ்ரேயா(Shreya) June 22, 2005 9:19 pm  

சிலருக்கு இந்த அழைப்பிதழ் என்ன/எதுக்கு என்று விளங்கவில்லை என்று கேள்விப்பட்டேன்.
வேறொன்டுமில்ல, சும்மா publicity stunt தான்! ;o)
நாளைக்கு நீங்க ஆர்வக் கோளாறுல வந்து பாக்கும் போது, காத்து இறங்குன பலூன் மாதிரி "புஸ்" என்று போய் விடும் :o) Don't hold me liable!

கலை July 01, 2005 8:55 pm  

அழைப்பிதழ் ரொம்ப நன்றாயிருக்கு. :)

பெட்டகம்