ஏ ஆராரோ...நீ யாரோ!

வாங்க வாங்க என்று அழைப்பிதழ் அனுப்பிக் கூப்பிட்டேன்..வந்திருக்கிறீங்க. நன்றி. ஏற்கெனவே கதிரையிலே இருப்பீங்க என்பதால உங்களை இருங்கோ என்று சொல்லப் போறதில்லை. சரி பதிவுக்கு வருவோம்..அதான் வந்திட்டோமே என்றெல்லாம் சொல்லாம..நான் சொல்றதைக் கேளுங்க.

இந்தப்பதிவு ஒரு சின்ன விளையாட்டா இருக்கப் போகுது. நீங்களெல்லாரும் கெட்டிக்காரர்தானே..இது ஒரு சுலபமான விளையாட்டு. இந்த விளையாட்டை "தொகுக்க" உதவிய ப்ரவீணாக்கும் (சு)நாமிக்கும் ;o) எனது நன்றிகள்.

சரி அடிப்படை இதுதான்: கட்டங்களுக்குள்ளே தரப்பட்டிருக்கும் தடயங்களை உபயோகித்து விடைகளைக் கண்டு பிடிக்கணும். பிறகு கட்டங்களுக்குக் கீழே நீங்க கண்டுபிடிச்சதை வச்சு என்ன செய்ய வேணும் என்று சொல்லியிருக்கிறேன். உதாரணம் தந்தா விளையாட்டின் சுவாரசியம் கெட்டுவிடும்(அதுக்காக குளிர்சாதனத்தில எல்லாம் சுவாரசியத்தைத் தூக்கி வைக்க முடியாது)(அடேயப்பா எவ்வளவு பெரிய பகிடி விட்டிருக்கிறன், ஏன் ஒருத்தரும் சிரிக்க மாட்டனென்டுறீங்க!)

அ) நபிகள் நாயகம் சொன்ன ஒரு பிரபல பொன்மொழி? சீனா சென்றாயினும் சீர்கல்வி தேடுக
ஆ) எதற்கும் அடித்தளம்/ஆதாரம் என்றதொன்று இருக்க வேண்டும் எனச் சொல்லும் பழமொழி? சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்


அ)விற்கும் ஆ)விற்கும் விடையைக் கண்டு பிடியுங்கள். இரண்டு விடைகளையும் ஒன்றாக வைத்துப் பார்த்தால் என்ன கிடைக்கிறது?சீனா+சுவர் = சீனப்பெருஞ்சுவர்
ஷ்ரேயாவுக்கு உதை என்பது சரியான பதில் அல்ல! :o)

ஒரு பிரபல பயணி இருந்தார். அவர் தன்னுடைய பயணங்களைப் பற்றி விரிவான குறிப்புகள் எழுதியிருந்தாலும், (அ + ஆ)வின் விடை பற்றி அக்குறிப்புகளில் மூச்சுக் கூட விடவில்லை. இந்தப்பயணி யார் எனக் கண்டு பிடிக்க வேண்டும். மார்க்கோ போலோ


இ) அந்தப் பயணியின் நாடு எது? இத்தாலி

ஈ)அரசன்/பசு + (அரசியர் உறைவிடம் - அந்தப்) = ??? கோ + (அந்தப்புரம் - புரம்)= கோபுரம்

இ) & ஈ) யின் விடைகளையும் (முன்னரைப் போலவே) சேர்த்துப் பார்த்தால், கிடைக்கும் விடை என்ன? இத்தாலி+கோபுரம் >> பீசா கோபுரம்
இப்ப நாங்க இன்னொரு இடத்திற்குப் போக வேண்டும். அதற்கு கண்டு பிடிக்க வேண்டியது:


உ) பாலைவன/வறள் பிரதேசங்களும் அவற்றின் பெருகும் தன்மைக்குமான சர்வதேச ஆண்டு (உதவி:- இதைப் பிரகடனப் படுத்திய குழுவில் ஒருவர் 'குளம்பி' தமையன்) 2006

ஊ) "ச" வருடங்களுக்கு ஒருமுறை வரும் கோலாகலம் ச=4, ஒலிம்பிக் போட்டி


உ)வும் ஊ)வும் கொள்ளையடித்தால் 'எங்கே'யென்று அர்த்தம்?? 2006 ஒலிம்பிக் -> டூரின்
கிரேக்கத்துக்கு வெளியே அதிக கிரேக்கர்களைக் கொண்டது அவுஸ்திரேலியாவிலுள்ள மெல்பேர்ண் நகரம். அதே போல நாம் அடுத்ததாகப் போக வேண்டிய தேசத்திலுள்ளதற்கு அடுத்தபடியாக அதன் முக்கிய அருங்கலைப் பொருட்கள் கொண்ட பிரபல அருங்காட்சியகம் (உ+ஊ)வின் விடையில் இருக்கிறது. அந்த நாடு எது?எகிப்து


எ)இந்த நாட்டின் பெயரைச் சொன்னதும் எல்லாருக்கும் நினைவு வருவதும் ஒன்றாகத்தான் இருக்கும். நினைவு வருவதில் "ஐந்து, முக்கால் உடன் தகரத்தில் மெய்யும் உகரமும் அத்துடனே வசந்தன் சின்ன வயதில் குடித்த பானமும் சேர்த்தால் வரும்" சொல் சிலவும் இருக்கின்றன. அதற்கு ஆங்கிலப் பெயர் என்ன? 5-எ, 3/4 = ழு, த், து, கள் >> ஹைரோக்ளிஃப்

ஏ)அவை சொல்வதைப் புரிந்து கொள்ள உதவிய முக்கிய பொருள் என்ன?(உதவி:இப்போது அது லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது) ரொசெட்டா கல்

ஐ)தான் இறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன், 1822 இல் (ஏ)யின் விடையாக வரும் பொருளில் இருந்ததை ஆராய்ந்து "பொழிப்புரை/விளக்கம்" வெளியிட்டவரின் பெயரென்ன? Jean Francois Champollion


அவருடைய நாட்டுக்குத் தான் போக வேண்டும்.


ஒ) ட்ரோய் போருக்கு காரணம் என்ன? பரிஸ், ஹெலனைக் கவர்ந்து சென்றமை

ஓ)அமெரிக்காவிலுள்ள சுதந்திரதேவி சிலையின் சட்ட வடிவமைப்பைச் செய்தவர்களுள் ஒருவர் கஸ்டாவ் ஈஃபிள்


ஒ)வும் ஓ)வும் போட்டா என்ன வருது?பரிஸ் நகரத்தில் ஈபிள் கோபுரம்

அதுக்கு முன்னாலே நின்று நடனமாடி காதல் பாட்டுப் பாடினவங்க இங்கேயும் போனாங்க...எங்கே??அதை நீங்கதான் கண்டுபிடிக்கணும்!


ஒள)காடு, மலை, நதிகள் எல்லாம் காதலின் சின்னமாம், அதனால குறிப்பா "இதை" தேவை இல்லை என்று அசித்து (அதான் "தல") பாடியிருக்கிறார். எதை தேவையில்லை என்று சொல்கிறார்? தாஜ்மகால்

ஃ)கேள்வி (ஒள)க்கு விடையாகக் கண்டுபிடிச்சதுக்குக் கிட்ட சலசலக்கும் ஆற்றைப் பற்றி ஒரு பாடல்,மிகப்பிரபலமான நடிகர் நடித்த,மணிரத்னத்தின் ஆஸ்தான (மாதவனுக்கு முதல்) நடிகரின் அறிமுகப்படத்தில் இடம்பெற்றது. ஆஸ்தான நடிகரின் பெயர்? பாடல்: யமுனையாற்றிலே... படம்: தளபதி நடிகர்:அரவிந்த்சுவாமி

(குறிப்பா ஏன் இவர் என்று விளங்கியிருக்கோணுமே ...ஹி..ஹி) ;o)

க்)அவரை கதாநாயகனாக பதவி உயர்த்திய திரைப்படம் எதுங்கோ? ரோஜா

ச்)அதே படத்திலேயே தமிழ்த் திரையுலகுக்கு முக்கியமான 2 பேர் அறிமுகமானாங்க. அவங்க யார் யார்? ஏ ஆர் ரஹ்மான், ஹரிஹரன்


கண்டுபிடிச்சிட்டீங்களா...அவங்கதான்..அவங்களேதான்..இவங்களுக்காக, இவங்க கூப்பிட்டு இங்கே வாறாங்களே!!..! (பார்க்கிறதுக்கு நானும் போறேனே!)

இதைச் சொல்லத்தான் உங்கள் எல்லாருக்கும் அழைப்பிதழ் வச்சு விளையாடக் கூப்பிட்டனான்!! :o). வர்ட்டா!

16 படகுகள் :

துளசி கோபால் June 23, 2005 11:04 am  

ஷ்ரேயா,

இந்த விளையாட்டுலே எனக்கு தலையும், வாலும்( காலும்) ஒண்ணூமே புரியலே(((-:

ஆனா, நீங்க ஏ.ஆர். ரஹ்மான். கான்சர்ட்டுக்குப் போறது புரிஞ்சுட்டது!!!

என்றும் அன்புடன்
துளசி.

`மழை` ஷ்ரேயா(Shreya) June 23, 2005 12:04 pm  

சுட்டி போய் பாத்தீங்க என்று நல்லாவே தெரியுது!! :o)

விளையாட்டுலே என்ன விளங்கவில்லை? உதாரணத்துக்கு முதலாவது "பெட்டிய" பாருங்க:

அ) க்கு விடை முகம்மது நபி சொன்ன ஒரு பொன்மொழி

ஆ)க்கு விடை ஒரு தமிழ்ப் பழமொழி.

இப்ப இரண்டையும் சேர்த்துப் பாருங்க...விடை "என்னைப்பார்!..நாந்தான் அது!" என்று துள்ளிக் குதிச்சு உங்க கண்ல படும். அதுக்கும், அடுத்த வரியில சொல்லியிருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்து அங்கேயும் விடை கண்டுபிடிக்கணும்.

இப்ப விளங்கிச்சா?? இப்பிடியே முழு விளையாட்டையும் சும்மா விளையாடிப்பாருங்க!

துளசி கோபால் June 23, 2005 12:52 pm  

ஐய்யோ ஷ்ரேயா,

முகம்மது நபி அப்படி என்னதான் சொன்னாரு?
அதைச் சொல்லிடுங்க ப்ளீஸ்!!!!

என்றும் அன்புடன்,
துளசி

`மழை` ஷ்ரேயா(Shreya) June 23, 2005 1:38 pm  

துளசி!!!..ஆசை தோசை அப்பளம் வடை! நானே சொல்லிட்டா விளையாட்டுல ஏது சுவாரசியம்? ;o)

Unknown June 23, 2005 2:49 pm  

கோபுரம்., தாஜ்மஹால், அரவிந் சாமி. இவைகள் மட்டும்தான் அவசர., அவசரமகப் படித்ததில் பிடிக்க முடிந்தது. விடிந்ததும் விடைகள் அனைத்தையும் சொல்கிறேன்....

Pavals June 23, 2005 3:05 pm  

சத்தியமா ஒன்னுமே புரியலை.. :-(

துளசி கோபால் June 23, 2005 3:12 pm  

என்னங்க மரம்,

நபிகள் நாயகம், எப்ப அரவிந்தசாமியைப் பத்திச் சொன்னார்?

கோபுரத்தைப் பத்தியும் சொல்லியிருக்காரா?
தலை நிஜமாவே சுத்துது!!!

எழுதியது துளசி

`மழை` ஷ்ரேயா(Shreya) June 23, 2005 3:23 pm  

உண்மையாவே ஒருத்தருக்கும் விளையாட்டு விளங்கவில்லையா?இன்னுமொருமுறை விளங்கப்படுத்தவா? சொல்லுங்க.

ஐயோ துளசி! முகம்மது நபிக்கும் அரவிந்த சாமிக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல. நபிகளார் கோபுரத்தப்பற்றி என்னவும் சொல்லியிருக்கிறாரா என்று சத்தியமா எனக்குத் தெரியவில்லை.

(பி.கு:உங்களுடைய அஞ்சல் பெட்டியைத் திறந்து பாருங்க....!)

துளசி கோபால் June 24, 2005 6:50 am  

ஷ்ரேயா,

எப்பவாவது நீங்க இந்தப் பக்கம் (நியூஸி) வந்தால், இங்கே எங்கெயாவது ஒரு பைத்தியம்
பாயைச் சுரண்டிக்கிட்டு இருக்கறதைப் பார்த்தீங்கன்னா, அது நான் தான்!!!!

தலையைச் சுத்திக்கிட்டு வந்து, பைத்தியம் முத்திப் போச்சு! எல்லாம் உங்க 'விளையாட்டாலே
வந்த வினை'!!!

சித்தம் கலங்கிய
துளசி.

`மழை` ஷ்ரேயா(Shreya) June 24, 2005 9:18 am  
This comment has been removed by a blog administrator.
`மழை` ஷ்ரேயா(Shreya) June 24, 2005 9:19 am  

துளசி :o(
இப்பிடிச் சொல்லிட்டீங்களே!
என்னதான் இருந்தாலும் விடிய வெள்ளன (early in the morning!)வந்து பின்னூட்டம் தந்ததற்கு நன்றி. அவ்வளவு கஷ்டமாகவா இருக்கு விளையாட்டு?

சும்மா எடுத்த எடுப்புல "ஏ ஆர் ரஹ்மானுடைய கச்சேரிக்குப் போறேன்" என்று சொல்லாம சும்மா குட்டி விளையாட்டா எழுதுவோமே என்று எழுதுனதில உங்கள சித்தம் கலங்க வைச்சிட்டேன்.

ஒரு சின்ன வேண்டுகோள்: தயவு செய்து வீட்டில குடும்பத்தாக்களுக்கு முன்னிலையில "குளம்பி தமையன் என்பது யாரு? ஐந்து, முக்கால் உடன் தகரத்தில் மெய்யும் உகரமும் அத்துடனே வசந்தன் சின்ன வயதில் குடித்த பானமும் சேர்த்தால் வரும் சொல் என்ன? " என்றெல்லாம் 'சத்தமாக' உங்களைக் கேட்டுக் கொள்ளாதீங்க...ப்ளீஸ்? உங்க குடும்பமே என்னத் தேடி அடிக்க வந்திருவாங்க! :o)

Anonymous June 24, 2005 10:18 am  

எ) த்து(க்)கள் எண்டு கடைசியில வரும்.
ஒள) தாஜ்மகால்
ஃ) அரவிந்தசாமி
க்) பம்பாய்
ச்) ஏ.ஆர். ரகுமான், மனிஷா.

இதுக்குள்ள என்ர பேரயும் இழுத்துவிட்டிட்டியள்.

சரியான கஸ்டமாத்தான் இருக்கு. குறிப்பா, முதலாவதிலயே நபிகளின்ர மொழி தெரியாமக்கிடக்கு. ஆராவது மார்க்க அறிஞர்களிடம்தான் கேட்க வேணும்.

அதுசரி, 'க்' க்குப்பிறகு 'ங்' தானே வரும்.
'மெல்லினத்தை' நீங்கள் புறக்கணிச்சாலும் எங்களால புறக்கணிக்க ஏலாது தானே.

-வசந்தன்-

`மழை` ஷ்ரேயா(Shreya) June 24, 2005 10:47 am  

ஓமென்ன!..சொன்னதுக்கு நன்றி வசந்தன் ! எல்லாரும் மன்னிச்சுடுங்கோ!

வசந்தன் மிச்ச விடைகள் எப்ப சொல்லுவீங்கள்? ..."க்" பதிலும் "ச்"இல மனிஷா என்டுறதும் பிழை. எப்ப இருந்து மனீஷா தமிழ் திரையுலகில முக்கியமான ஆள்?

`மழை` ஷ்ரேயா(Shreya) June 24, 2005 11:11 am  

அ) நபிகளாரின் பொன்மொழி கல்வி சம்பந்தப்பட்டது.

ஆ)"என்னவோ" இருந்தாத்தான் "என்னத்தையோ" வரையலாம் என்று சொல்லியிருக்கிறாங்க!

இதுக்கு மிஞ்சி ஒரு க்ளூவும் தரேலாது. :o|

வசந்தன்(Vasanthan) June 24, 2005 3:00 pm  

அப்ப என்னவோ இருக்கிற நீங்களே அந்த என்னத்தையோவ வரைஞ்சுகொண்டிருங்கோ.
எனக்கு நிறைய வேல கிடக்கு.
-வசந்தன்-

`மழை` ஷ்ரேயா(Shreya) June 24, 2005 3:34 pm  

இதென்ன இப்பிடிச் சொல்லிப் போட்டீர்? :o(

'சித்திரப்'பாடம் பள்ளிக்கூடத்திலை எடுத்தனீரோ? :o)

பெட்டகம்