நன்றிகள் நான்கு உங்கள் பொறுமை. ஒரு பூச்சி முகவரியாக்கப்படுகிறது ஆல் அபிவிருத்திக்குழு தீர்க்க இதழ்/வெளியீடு நீங்கள் எதிர்கொள்ளும். விருப்பம் தேனி ....
இல்லை..வேண்டாம், ஏற்கெனவே என் விளையாட்டு வினையாகி ஒரு சிலரைக் கிட்டத்தட்ட பாயை விறாண்டும் நிலைமைக்குக் கொண்டு வந்தது. இன்னும் கொஞ்ச நாளைக்கு விசப்பரீட்சைகள் வேண்டாம்! :o) (அதற்காக எதிர்காலத்தில் விஷப்பரீட்சைத் திட்டங்கள் கைவிடப்படும் என்பது பொருளல்ல!)
மேலே நான் பெயர்த்தது Blogger இன் தொழினுட்ப உதவியணி எனக்கு அனுப்பிய பதிலைத்தான். எதற்குப் பதில் போட்டார்கள்? கொஞ்ச நாளாவே எங்களைக் (கேட்காமலே) கேள்விக்குறியாக்குவது பற்றி அவர்களிடம் கேட்டிருந்தேன். அதற்குத்தான் பதில். பொதுமக்கள் பார்வைக்காக இங்கு வலையேற்றப்பட்டுள்ளது!
//Thanks for your patience. A bug is being addressed by the development team to resolve the issue you're having. Please be assured that the bug will be fixed soon. I apologize for any inconvenience it may have caused.//
என்ன அழகாக "உங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இடையூறுகளுக்கு வருந்துகிறோம்" என்று சொல்கிறார்கள். இதைத்தான் "டிப்ளமசி" என்பதா? (அது எப்படி "dip"ல மசி? என்று கேட்க மாட்டேன்!!கேட்டா புதிசா பாய் வாங்க வேண்டி வந்திரும்!) ;o)
9 படகுகள் :
தகவலுக்கு நன்றி.
புதுப் பாய்களுக்கு இப்பத்தான் ஆர்டர் கொடுத்திருக்கேன். வர நாள் செல்லுமாம்.
துளசி.
ஆகா..
இருங்க இருங்க...கைவசமுள்ள பாய்களுக்கு வைக்கிறேன் ஆப்பு! ;o)
(Just kidding, Don't worry!)
அற்புதமான வலைப்பதிவு...சிங்களத் தமிழ் மண் வாசனை தருகிறது. அப்படியே என் வீட்டுக்கும் வந்துட்டு போங்க...
பி.கு. நான் முன்று வீடு வசுருக்கேன், மூனுக்குமே வரனும்!!
உங்கள் முயற்சிக்கு நன்றிகள்!!
இந்த தகவலை அப்படியே தமிழ் மணம் மன்றத்துல போட்டீங்கனா நல்லா இருக்கும் இல்லையா?.
இது நல்ல யோசனையா இருக்கே! போட்டாப் போச்சு! நன்றி பாலாஜி-பாரி!
I have posted the above as a reply. see:
http://thamizmanam.com/phpBB2/viewtopic.php?p=432
ஹ்ம்ம்...உங்களை பற்றி அதிகம் தெரியாது, எனவே, slightly difficult to interview...எதோ என்னால் முடிந்தது!!
1. சிங்களத்துச் சின்னக் குயிலாய் இருக்கிரீர்கள்...எனவே இந்தக் கேள்வி, கன்னத்தில் முத்தமிட்டால் ஷ்யாமா (நந்திதா தாஸ்...படம் பார்த்து இருப்பீர்கள் என்று நம்பிக்கை) போல் தீவிரவாதி ஆனால் என்ன செய்வீர்கள்?
2. மழை என்றால் எது நினைவுக்கு வரும்? மின்னலா, மேகமா, மண் வாசனையா? ( என்னைக் கேட்டால் இன்னும் சில நாளைக்கு, mazhai.blogspot.com தான் :-))
3. பகல் கனவா, ராக் கனவா? எது பிடிக்கும்? எது வரும்?
4. கடவுள் உங்களிடம் தோன்றி, 'உன்னிடம் உள்ள எதாவது ஒன்றை எனக்குக் கொடு' என்றால் எதைத் தருவீர்கள்?
5. ஒருக்கால், நீங்கள் என்னை interview செய்ய நேர்ந்தால், முதல் கேள்வி என்னவாக இருந்திருக்கும்? (இது தான் போட்டு வாங்கறதா? ;-))
பதிலைப் பதிவாய்ப் போட்டு, என் சார்பில் இன்னொருவரையும் வம்புக்கு இழுத்து விடுகிறேன்...மிக விரைவில்! :o)
(கடவுளே! நாளைக்கு அக்னிபாரதிக்குப் பதிலாய் பதிவு போட வசதியாய், வேலை குறைவாயும் மேலதிகாரி வராமலும் இருக்கணும்)
Post a Comment