இலக்கக்குறுவட்டில் படம் பார்க்கிறேன்

இதுவரை சில/பல காரணங்களுக்காக இப்போதைக்கு வேண்டாமென்று யோசித்திருந்த டிவீடி ப்ளேயரை போன கிழமை வாங்கியாச்சு. கடைக்குப் போன நேரம் கண்ணில் பட்ட இலக்கக்குறுவட்டையெல்லாம் ஆராய்ந்ததில் கிடைத்த ஒன்று "சிந்துபைரவி & மனதில் உறுதி வேண்டும்" இரண்டும் கொண்ட ஒரு வட்டு. முதலாவதாக ம.உ.வே. யைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

"50 - 50", "நான் ப்ராக்டிகலாப் பேசறவன்", "கெட்ட வார்த்தையால திட்டணும் போல இருக்கு" என்ற வசனங்கள் :o)

வைத்தியசாலை ஊழியராக வரும் அந்த நகைச்சுவை நடிகரின் பெயரென்ன? இள வயது (நோஞ்சான்) விவேக்குடன் (இதுதானாமே அறிமுகப்படம்?) கூடவே "எங்கேயோ பார்த்த" முகங்கள் - எஸ்பிபி, ரமேஷ் அர்விந்.

சுஹாசினி அழுத்தமாக "மிஸ். நந்தினி" என்று சொல்லிவிட்டுப் போக, பத்திரிகையாளர்/எழுத்தாளர் "Thankyou for the good news" என்பாரே..அப்போது சுஹாசினியின் முழியே முழி! அதோட நிற்பாட்டியிருக்கிறோம், இன்றைக்குப் போய் மிச்சம் பார்க்க வேணும்.

அரைகுறையாய்ப் பார்த்த தைரியத்தில் கேட்கிறேன், இந்தப் படத்தில் மீதிக்கதை என்கிற சாயத்திலா பிரகாஷ்ராஜ், சுஹாசினி, வினீத் நடித்து "நந்தினி" படம் வெளிவந்தது? கதாநாயகியின் பெயர் ஒரே பெயராக இருக்கிறதே..! அது சரி, அப்படியென்றால் வெளிவந்த படமெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா?..ராதா/ப்ரியா & ராஜா என்று நாயக நாயகிக்குப் பெயர் இருப்பதால்!

கட்டாயம் பார்க்க வேண்டிய, வித்தியாசமான படைப்புகளின் (என்ன மொழியென்றாலும்) பெயர்களை அறியத்தரமுடியுமா?

9 படகுகள் :

Ganesh Gopalasubramanian June 28, 2005 7:00 pm  

அன்பே சிவமும், நந்தாவும் பாருங்கள்.

Voice on Wings June 28, 2005 7:01 pm  

//கட்டாயம் பார்க்க வேண்டிய, வித்தியாசமான படைப்புகளின் (என்ன மொழியென்றாலும்) பெயர்களை அறியத்தரமுடியுமா?//

உங்க பக்கத்தூர்காரர் துளசியை கேக்கலாமே. :)

எனக்குப்பிடித்தவை:

English:

- American Beauty
- Life is Beautiful
- Schindler's list
- Jurassic Park(s I, II & III)
- Matrix (first one, didnt see the others)
- Dead man (Johnny Depp அருமை)
- Arizona Dream (Johnny Depp again)
- What's eating Gilbert Grape (Johnny Depp & Leonardo DiCaprio)
- Titanic (if you dont have it already)
- Exorcist / Omen / 6th Sense (இரவில் தனியாக இருக்கும்போது பார்க்கவேண்டாம், அல்லது காட்சிகளை நினைத்துப் பார்க்க வேண்டாம்)
- A few good men / As good as it gets (Jack Nicholsonனின் நடிப்பு அபாரம்)
- Pride & prejudice (BBCயில் 6 பகுதிகள் கொண்டத் தொடராக வந்ததன் தொகுப்பு. அருமை!)

தமிழில்:

- மைக்கேல் மதன காமராசன் (சிரிப்பு மழை)
- தெனாலி / கன்னத்தில் முத்தமிட்டால் (அரசியல் காரணங்களைக் கடந்து இவை எனக்குப் பிடித்தன, முன்னது நகைச்சுவைக்காகவும், பின்னது உருக்கமான கதைக்காகவும்)
- பிதாமகன், அழகி (நன்றாக இருப்பதாகக் கேள்வி. இன்னும் பார்க்கவில்லை.)
- காக்க காக்க - முதல் பாதி நன்றாயிருந்தது. பிற்பாதி ஒரே வன்முறை, வன்முறை என்று பயமுறுத்தி, பார்க்கும் ஆர்வமில்லாது செய்துவிட்டாரென் தாயார்.
- எங்கேயோ கேட்ட குரல், இராகவேந்திரா, முள்ளும் மலரும் (இரஜினி நடிப்பில்)
- முதல் மரியாதை (சிவாஜி நடிப்பில்)
- கடலோரக் கவிதைகள், பூவிழி வாசலிலே, நடிகன் (சத்யராஜை எனக்குக் கொஞ்சம் பிடிக்கும் :) )

Chez June 29, 2005 1:41 am  

வீட்டுக்கு முதல் முறையா வந்துட்டு ஒண்ணுமே எழுதாம போனா எப்டி?? ன்னு கேட்டுட்டிங்களே..

அருமையான பதிவு... மழை ஷ்ரேயா.. பெயர் கூட நன்றாக இருக்கிறதே..

அதான் எனக்கு பிடிச்ச மறக்க முடியாத படங்களை எனக்கு முன்னரே 2 பேர் சொல்லிவிட்டார்களே

அதோடு என்னுடைய பட்டியலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்...

1.A beautiful Mind
2.Catch me if u can
3.Cast Away

அதோட.. கணேஷ் சொன்ன 'அன்பே சிவம்' படத்தை மறந்துடாதிங்க!!

Voice on Wings June 29, 2005 4:28 am  

மேலும் சில:

- Scent of a woman (Al Pacino ஒரு கடவுள் மாதிரி.)
- Insider (Al Pacino & Russel Crowe)
- Gladiator (optional :) )
- The Hurricane (Denzel Washington)

இசையில் விருப்பமிருந்தால் இசை நிகழ்ச்சிகளின் ஒளிப்பதிவுகளையும் வாங்கிப் பார்க்கலாம். (Just a suggestion). Joe Satriani, Steve Vai போன்றவர்களின் விரல்களின் நர்த்தனங்களைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று ஆசைதான். ஆனால் அதெல்லாம் இங்கே (இந்தியாவில்) கிடைப்பதில்லை.

`மழை` ஷ்ரேயா(Shreya) June 29, 2005 9:00 am  

Voice on Wings - பட லிஸ்ட்க்கு நன்றி. பல பார்த்தவை.சில பார்க்காதவை.
எனக்கும் What's eating Gilbert Grape படம் பிடித்தது. லியோ டி கப்ரியோவின் நடிப்பு அருமை. மீண்டும் பார்க்கணும். முள்ளும் மலரும் பார்க்கணும்..ஒரே hype ஆக இருக்கிறது!

//கடலோரக் கவிதைகள், பூவிழி வாசலிலே, நடிகன்(சத்யராஜை எனக்குக் கொஞ்சம் பிடிக்கும் :) )// உண்மையாவா? ;o)
"பூவிழி வாசலிலே" எனக்கும் பிடிக்கும்

//Exorcist / Omen / 6th Sense(இரவில் தனியாக இருக்கும்போது பார்க்கவேண்டாம், அல்லது காட்சிகளை நினைத்துப் பார்க்க வேண்டாம்)//

லொள்ளா? :o)? படம் மட்டுமல்ல, சிலவேளைகளில் வாசிக்கும் புத்தகத்திலுள்ள காட்சிகளும் இரவிலே மனத்திரையில் விரியுமே...(மனதின் default setting போல!)

இசை நிகழ்ச்சிகளில் யானியை மறந்திட்டீங்க..அந்த மீசை..அந்த சிரிப்பு! இசை = WOW!

`மழை` ஷ்ரேயா(Shreya) June 29, 2005 9:04 am  

go ganesh & magnus astrum

நன்றி. நீங்கள் சொன்ன தமிழ்ப்படங்களை ஏற்கெனவே பார்த்து விட்டேன். ஆங்கிலத்தில் இன்னும் 3ல் ஒன்றையும் பார்க்கவில்லை. விரைவில்.

நன்றி.

துளசி கோபால் June 29, 2005 2:20 pm  

ஷ்ரேயா,
இங்கே 'சூப்பர் மார்கெட்'லே கூட இப்ப டிவிடி ப்ளேயர் விற்பனைக்கு வந்துருச்சு! 60$க்கு உப்புப்புளி மிளகாய் வாங்கறப்பவே அதையும்வாங்கிக்கிட்டு வந்துறலாம்:-)))

என்றும் அன்புடன்,
துளசி.

`மழை` ஷ்ரேயா(Shreya) June 29, 2005 4:02 pm  
This comment has been removed by a blog administrator.
`மழை` ஷ்ரேயா(Shreya) June 29, 2005 4:04 pm  

எங்கேடா ஆளைக் காணோம் என்று பார்த்தேன். பல்லங்காடிக்குப் (அதான் supermarket) போயிருந்தீங்க போல!

பெட்டகம்