நேர்முக விளையாட்டு

புத்தக விளையாட்டு மாதிரி இதையும் ஆக்கலாம். வாறீங்களா? என்னிடம் அக்னிபாரதி கேட்டிருக்கிற கேள்விகளும் என் பதிலும் இதோ.

1. சிங்களத்துச் சின்னக் குயிலாய் இருக்கிரீர்கள்...எனவே இந்தக் கேள்வி, கன்னத்தில் முத்தமிட்டால் ஷ்யாமா (நந்திதா தாஸ்...படம் பார்த்து இருப்பீர்கள் என்று நம்பிக்கை) போல் தீவிரவாதி ஆனால் என்ன செய்வீர்கள்?
என்னது குயிலா? ரத்தம் சதையாய் ஒரு பெண்! பறவையாக்குகிறீர்களே... :o) அதிலும் ஒரு நன்மைதான், பறவை என்றால் பயணச்சீட்டு எடுக்காமலே, அடுப்பை நூத்தோமா..வீட்டுக் கதவு பூட்டினோமா என்றெல்லாம் யோசிக்காமலே பயணம் போகலாம்.

தீவிரவாதி ஆனால் என்ன செய்வேன்? தீவிரவாதம்தான்! ;o)


2. மழை என்றால் எது நினைவுக்கு வரும்? மின்னலா, மேகமா, மண் வாசனையா?
நனைந்த பொழுதுகள் சில ஞாபகம் வரும்.


3. பகல் கனவா, ராக் கனவா? எது பிடிக்கும்? எது வரும்?
பகல்கனவு பிடிக்கும் ஆனா அடிக்கடி வருவது ராக்கனவு. என் கனவிலே வரும் சம்பவெல்லாம் வைத்து நான் ஒரு த்ரிலர் கதையே எழுதலாம். ஒருமுறை யாரோ என்னை துரத்திக் கொண்டு வர நானும் ஓட, என்னைச் சுட்டு விட்டார்கள். கழுத்தில் தோட்டா பாய்ந்திருக்கிறது. புண்ணில் ஒரே எரிவு...முழித்தால் snug as a bug ஆக என் கம்பளிக்குள்ளே. சந்தேகத்தில் கழுத்திலே கையும் வைத்துப் பார்த்த ஞாபகம்... என் கனவுகள் சொல்லி முடிவதில்லை.

அடிக்கடி எங்கேயாவது மலை உச்சி போன்ற இடங்களில் இருந்து ஓடிக்கொண்டிருக்கும் மிதிவண்டி சகிதம் காற்றில் மிதப்பது போலக் கீழே விழுவேன். காயம் வராது. என்ன அர்த்தம்?


4. கடவுள் உங்களிடம் தோன்றி, 'உன்னிடம் உள்ள எதாவது ஒன்றை எனக்குக் கொடு' என்றால் எதைத் தருவீர்கள்?
என் மறதியை தூக்கிக் கொடுத்துவிடுவேன்.


5. ஒருக்கால், நீங்கள் என்னை interview செய்ய நேர்ந்தால், முதல் கேள்வி என்னவாக இருந்திருக்கும்?
கடைசித் தேர்தலில் வாக்களித்தீர்களா? சரியாகவா அல்லது செல்லாத வாக்கா?


என் பங்குக்கு வசந்தன், துளசி, சாகரன், ஈழநாதன், மதி இவர்களைக் கேட்கிறேன்:

1. யாருடைய கண்ணிலும் தெரிய மாட்டீர்கள் (invisible) என்றால் என்னென்ன செய்வீர்கள்?


2. புதிதாய் எதோ ஒன்றைக் கண்டு பிடிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். என்னவாக இருக்கும்?

3. உங்களுடைய முதல் ஞாபகம் என்ன?

4. உலக வரலாற்றிலே எந்தக் காலகட்டத்திற்குமோ, அல்லது குறித்த ஒரு சம்பவத்திற்கோ 'செல்ல' முடிந்தால், எந்தக் காலம்/சம்பவத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

5.கரப்பான் பூச்சிகளைப் பற்றி உங்கள் கருத்து?

எங்கே..பிள்ளைகள் ஐந்து பேரும் ஓடிப்போய் உங்கட வலைப்பதிவில வடிவா எழுதுங்கோ பாப்பம். நான் வந்து பாப்பன்..வடிவா எழுதியிருக்கிற ஆ(க்க)ளுக்கு ஒரு பின்னூட்டந் தருவன். :o)

10 படகுகள் :

Unknown June 29, 2005 2:39 pm  

சுவாரஸ்யாமான பதில்கள்! கனவுகளுக்கு அர்த்தம் தெரியாது - நான் படுத்தால் நேறே நித்திரா தேவியின் மடி தான்!!! விவகாரமான கேள்வி கேட்டு விட்டீர்கள்... நான் வாக்களித்து பல நாட்கள் ஆகின்றன...I know, சொல்ல வெட்கமாய் இருக்கிறது, but இன்னும் சில நாட்களக்கு, வாக்குப் பெட்டியிடம் செல்ல இயலாது!

Ganesh Gopalasubramanian June 29, 2005 2:58 pm  

நல்ல வித்தியாசமான சிந்தனை ஷ்ரேயா. வாழ்த்துக்கள். ஆனால் நீங்களேளொரு ஐந்து பேரை இந்த மீமீக்குப் பரிந்துரை செய்யுங்கள்.

`மழை` ஷ்ரேயா(Shreya) June 29, 2005 3:37 pm  

நன்றி அக்னிபாரதி. கனவுக்கு அர்த்தம் சொல்லுவீங்க என்று பார்த்தேன்.. :o\

Go. Ganesh.. இது என் ஐடியா இல்லை. அக்னிபாரதியை யாரோ கேட்டு.. அதுக்கு அவர் பதில் சொல்லி... பிறகு அவர் என்னிடம் கேட்டதற்குப் பதில்கள். ம்ம் நீங்க சொல்வதும் சரி..ஒரொருவராகப் போய்க் கொண்டிருந்தால் இந்த விளையாட்டுக் கட்டுப் படியாகாது தான். 5 பேரின் பெயர்களுடன் பதிவை மீண்டும் பதிக்கிறேன்.

வசந்தன்(Vasanthan) June 29, 2005 4:23 pm  

கட்டாயம் நான் எழுதுவேன்.
ஏற்கெனவே புத்தகம் பற்றி எழுத சிலர் விடுத்த அழைப்பு அப்பிடியே இருக்கு. இதுக்க இதுவுமொண்டு. ஆனா கட்டாயம் எழுதுவேன்.
-வசந்தன்-

`மழை` ஷ்ரேயா(Shreya) June 29, 2005 4:35 pm  

//கட்டாயம் நான் எழுதுவேன்//

எப்ப? நீர் எழுத முன்னம் நான் இன்னொரு விளையாட்டுக் கண்டு பிடிச்சிடுவன் என்டு நினைக்கிறன்! :o)

துளசி கோபால் June 29, 2005 6:10 pm  

ஐயோ ஐயோ,

இந்த ஆட்டத்துக்கு நான் வரலை! எனக்கு இப்போதைக்குத் 'தொண்டை கட்டியிருக்கு!

சட்னு நல்ல காரணமா அகப்படலை!

ஒளிஞ்சுக்கிட்டு இருக்கேன்.

என்றும் அன்புடன்,
துளசி.

`மழை` ஷ்ரேயா(Shreya) June 30, 2005 9:18 am  

இப்ப எதுக்கு இப்பிடி பயப்பிடுறீங்க துளசி?;o)

நீங்களே என்ன பதிலென்றாலும் சொல்லலாம். தொண்டை தானே கட்டியிருக்கு..கையில பிரச்சனையில்லயே? தட்டச்சிடுங்க! :o)

கலை July 01, 2005 7:49 pm  

ஆகா, இது நல்ல சுவாரசியமான விளையாட்டாக இருக்கே. :)

ஷ்ரேயா! கனவு பற்றிய உங்கள் பதில்களைப் பார்த்த போது ஏதோ நானே பதில் சொன்ன மாதிரி இருக்கு, ஹி ஹி. இப்படித்தான் நானும் விசித்திரமான கனவெல்லாம் (இரவில்தான்) காணுவேன். யாராவது என்னைத் தாக வந்தால் உடனே மேலெழும்பி பறக்கத் தொடங்கி விடுவேன். என்னை யாருமே பிடிக்க முடியாதாக்கும், ஹி ஹி.

Anonymous July 15, 2005 6:12 am  

Highly Thoughtful Questions.

Anonymous September 19, 2006 7:03 pm  

ஷ்ரேயா,

ஒரு வருடத்தையும் தாண்டி இன்று தான் உங்களின் இந்த பதிவு (http://mazhai.blogspot.com/2005/06/blog-post_29.html) என் கண்ணில் பட்டது :-(
மன்னியுங்கள்!

1. யாருடைய கண்ணிலும் தெரிய மாட்டீர்கள் (invisible) என்றால் என்னென்ன செய்வீர்கள்?

அடடா, என்ன அருமையான கனவு. எனக்கு அடிக்கடி தோன்றும் கனவுகளில் இதுவும் ஒன்று. சில்லியாக நிறைய செய்ய தோன்றும் என்றாலும்,
சிறப்பாக ஏதேனும் செய்வதிலும் அடிக்கடி மனம் செல்லும். அதில் முக்கியமாகச் சொல்ல... வேண்டாம். அப்புறமா என்றாவது தனிமடலில் விருப்பங்களின் விரிவை விளக்க முயற்சிக்கிறேன்:-)

2. புதிதாய் எதோ ஒன்றைக் கண்டு பிடிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். என்னவாக இருக்கும்?

டெக்னாலஜி - என்னுடைய விருப்பங்களில் ஒன்று. என் கண்டு பிடிப்பு அதனைச் சார்ந்ததாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

3. உங்களுடைய முதல் ஞாபகம் என்ன?

தாயும், அவர்களுடைய அரவணைப்பும்.

4. உலக வரலாற்றிலே எந்தக் காலகட்டத்திற்குமோ, அல்லது குறித்த ஒரு சம்பவத்திற்கோ 'செல்ல' முடிந்தால், எந்தக் காலம்/சம்பவத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். சங்க காலத்தில் அமிழ்ந்து விட்டதாகச் சொல்லப்படும் அந்த இலக்கியப் புதையலை எடுத்துவர முடிந்தால் அதைவிடச் சுகம் எதுவுமில்லை.
இல்லையென்றால், உலகப் பொதுமறை தந்த வள்ளுவரின் சீடராக மாற வேண்டும்.

5.கரப்பான் பூச்சிகளைப் பற்றி உங்கள் கருத்து?

ஒரு கருத்தும் இல்லை. முடிந்தால் விளக்குமாறு தேடி அடித்துவிட விருப்பம் :-)

அன்புடன்,
சாகரன்.

பெட்டகம்