கவிதை...கவிதை!!

எல்லாரும் கவிதை எழுதிறாங்க, நானும் எழுதுவம் என்டு முயற்சி செய்து பாக்கிறன் ..ஒன்டும் வருதில்ல.(முயற்சி இல்லாம வாறதுதான் கவிதை என்டு எனக்கும் தெரியும்..என்டாலும் மேதாவிலாசம் காட்டிற ஆசை யாரை விட்டது!!) இப்ப போன வாரக்கடைசியில் 2 - 3 பெட்டி தேவையில்லாத புத்தகம், சில/பல தாளுகள் என்டு கொஞ்சம் குப்பை (குப்பைதான்) ஒதுக்கியெடுத்து, எறிய முதல் ஆராய்ஞ்சதில ( பெரிய ஹரப்பா அகழ்வாராய்ச்சி என்டு நினைப்பு..உங்களுக்குத் தெரியுமோ, நான் அஸ்கொ பர்போலாக்கு மின்னஞ்சல் அனுப்ப, அவர் பதிலும் போட்டவரெண்டு கொஞ்ச நாள் ஆனந்தக் கூத்தாடி கொண்டிக் கொண்டு திரிஞ்சன். சரி சரி..பெருமைய விட்டிட்டு கதைக்கு..இல்லல்ல கவிதைக்கு வாறன்) என்ன சொன்னனான்..பெட்டிய ஆராய்ஞ்சன் தானே. அதிலே ஒரு சின்ன குறிப்புப் புத்தகத்தில இருந்தது .. ஒஸ்ரேலியாக்கு வந்த புதிசில மனம்/புத்தி பேதலிச்சுப் போய்(இப்பவும் கொஞ்சம் லூஸ்தான்!) எழுதின "கவிதை". ஒரு பகிடி தெரியுமா...எழுதினது 2001ம் ஆண்டு யூலை மாதம் 3ம் திகதி!! சரியா 4 வருசம்.


உணராமல் வழிந்தோடும் மழைநீரைப்போல,

என்னையறியாமல் கால் இயங்கும்

மனம் நிரம்பித் தளும்பி ஞாபங்களால் கலங்கலடைந்து

கடந்து போவோரில் அறிந்த முகம் தேடும்

நிறுத்து போதும்! என்று கடிவாளம் நிகழ்காலம் போட

மனம் இன்னும் இன்னும் எனக் கேட்டு

அடங்காக் குழந்தை போல் அலை மோதும்.


'எழுதின' கவிதாயினி எனக்கே தெரியாது...அதால ஒருத்தரும் என்னெ அர்த்தமெண்டெல்லாம் கேட்கக்கூடாது. ஒன்டு மட்டும் நல்லாத் தெரியுது, அன்டைக்கு நான் பனியில நனைஞ்சிருக்கிறன்!!

22 படகுகள் :

Anonymous July 04, 2005 5:49 pm  

எனக்கு விளங்கேல. (கவிதயச் சொல்லேல). நீங்கள் எழுதினதெண்டு சொல்லிறியள். பிறகு கீழ நானெழுதேல எண்ட மாதிரிச் சொல்லிறியள்.
மழை மேல 'பைத்தியம்' போல கிடக்கு.

Anonymous July 04, 2005 5:51 pm  

விளங்கீட்டுது விளங்கீட்டுது. சின்ன ஒரு குழப்பம் தான். (உங்கட கவிதய வாசிச்ச உடன எல்லாம் குழம்பீட்டுது.)

Ganesh Gopalasubramanian July 04, 2005 6:46 pm  

கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு கொஞ்சம் புரியாத மாதிரியும் இருக்கு..
ஏன்னு மட்டும் எனக்கு சத்தியமா புரியல...

`மழை` ஷ்ரேயா(Shreya) July 04, 2005 9:44 pm  

நான்தான் எழுதினனான். என்னத்தை நினைச்சுக் கொண்டு எழுதினதெண்டு மறந்திட்டன். இப்ப வாசிக்க ஒரு மண்ணும் விளங்கேல்ல, அதோட இப்பிடி எழுதியிருக்கிறன் என்டு நினைக்க சிரிப்பாக் கிடக்கு! :oD

கணேஷ் - வசந்(தன்): நீங்க 2 பெரும் கூட்டணி அமைச்சாவது என்ன அர்த்தமெண்டு கண்டு பிடிச்சுச்சொல்லுங்க! :o)

சினேகிதி July 04, 2005 11:02 pm  

அப்ப ஷ்ரேயாக்கு ஜன்னியா??
நல்லா இருக்கு கவிதை.

கலை July 05, 2005 1:17 am  

புரியுதோ, புரியேல்லையோ, கவிதை நல்லாவே இருக்கு. வாழ்த்துக்கள். கவிதையிலும் கலக்குங்கோ.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 05, 2005 8:53 am  

சினேகிதி - உங்கட கண் கன பேருக்கு கவிதை சொல்லும் போல கிடக்குது! உண்மையா? ;o)

எனக்கு அப்ப ஜன்னியோ(காய்ச்சல்??)என்னவோ தெரியல்ல. அப்பவும் இப்பவும் கொஞ்சம் மறை கழண்டிட்டுது என்டுதான் "சான்றிதழ்" கிடைக்கிறது! :o(

சக்தி - முயற்சி செய்யாம இயல்பா வரவேணும். முயற்சி செய்து எழுதினால் அது செயற்கையாகாதோ?

கலை(அக்கா) - உங்களுக்குமே விளங்கல்ல...சரிதான்! :o\

இது இருந்த குறிப்புப்புத்தகத்தில இன்னும் 2 - 3 இருக்கு...பதிவுக்கு பஞ்சம் வரேக்க 'எடுத்து' விடுறன். இவ்வளவு பேர் இருக்கிறீங்க விளங்கிக்கொள்(ல்)றதுக்கு!...

சினேகிதி July 05, 2005 9:50 am  

அக்கா அப்படியெல்லாம் இல்லீங்கோ….நான் ஒருவருக்கும் கதை சொல்றது இல்லை.

சினேகிதி July 05, 2005 10:05 am  

oops..கவிதை சொல்றேல்ல

`மழை` ஷ்ரேயா(Shreya) July 05, 2005 10:58 am  

மிஸ்..இங்க பாருங்கோ சினேகிதி அக்கா என்டுறா!! :oP

நீங்க (கதை/கவிதை)சொல்லாட்டாலும் வாசிக்கிறவை வாசிப்பினம். நல்ல வடிவான கண்கள். இல்லல்ல..நான் கண் வைக்கவில்லை யுவர் ஆனர்! :o)

துளசி கோபால் July 05, 2005 11:40 am  

ஷ்ரேயா,

நான் 'கவிதை' ஆள் கிடையாது. ஆனால் நல்லா எழுதியிருக்கீங்கன்னு சொல்றேன்.
ஏன்?

Love Thy Neighbours!!!!!

என்றும் அன்புடன்,
துளசி.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 05, 2005 1:50 pm  

//Love Thy Neighbours!!!!!//

அடடா துளசி! உங்கள் அன்பு கண்டு புல்ல்ல்லரிக்குதே!! ;o)

நன்றி..நன்றி.

சினேகிதி July 06, 2005 7:22 am  

ஷ்ரேயா என்னடிம்மா...இதுக்கெல்லாம சின்னப்பிள்ளையாட்டம் அழுவுறது?? தங்கச்சி என்னு சொல்லிட்டாப்போச்சு ...கண்ணைத் தொடச்சுக்கோ முதல்ல.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 06, 2005 8:51 am  

//...கண்ணைத் தொடச்சுக்கோ முதல்ல.//

ம்ம்..சரி..(மூக்கை உறிஞ்சுதல்) :o)

சினேகிதி July 06, 2005 10:15 am  

\\ம்ம்..சரி..(மூக்கை உறிஞ்சுதல்) :o)\\

அச்சச்சோ அது தப்பு மூக்கைச் சீறணும்

`மழை` ஷ்ரேயா(Shreya) July 06, 2005 10:22 am  

ஐயோ சினேகிதி..கடி தாங்கல்ல! :o)

Anonymous July 06, 2005 12:56 pm  

அட ஒரு பின்னூட்டத்துக்கிடையில சிநேகிதி ஓடிப்போய் கண்ணுக்குக் கறுப்படிச்சுக்கொண்டு வந்திட்டா. (எண்டாலும் முதலாவது படம் தான் வடிவா இருக்கு). இந்தப் பொம்பிளயள என்ன செய்யிறதெண்டே தெரியேல.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 06, 2005 4:10 pm  

சினேகிதி..உமக்கு அப்பவே சொன்னன்.. நீர் கேட்கேல்ல...உம்மட கண்ணைக் கனபேர் கவனிக்கிறாங்கள்!

சினேகிதி July 07, 2005 1:52 am  

Vasanthan i was just playing with photoshop n liked the freso effect so yeah...

`மழை` ஷ்ரேயா(Shreya) July 07, 2005 9:14 am  

சிகிரியா ஓவியமும் ஈரச்சுதை(fresco) தான்! ம்ம்...ம்ம்...நடத்துங்கோ..நடத்துங்கோ ;o)

Aruna September 19, 2008 11:27 pm  

இவ்வ்ளோ அழகான கவிதையைப் போய் புரியலைன்னு சொல்றீங்களே????
அன்புடன் அருணா

`மழை` ஷ்ரேயா(Shreya) September 22, 2008 7:14 pm  

கவிதையை இன்னொருக்கா நானும் வாசித்துப் பார்க்கிறேன்..நீங்க சொல்லுங்க, உங்களுக்கு என்ன புரிஞ்சுது? :O)

3ஆண்டுகளுக்குப் பிறகும் பின்னூட்டம் தேடித்தருது பதிவு..

பெட்டகம்