சனிக்கிழமை படமொன்று பார்த்தேன். பலருக்கும் பல நினைவுகளைக் கிளறிவிட்ட "ஆட்டோகிராஃப்". நல்ல படம்தான். ஆனாலும் ஒரு சின்ன மனவருத்தம். என்னவா? லத்திகாவைக் காதலித்து அது தோல்வி(!?)அடைந்ததினால் சேரன் புகைபிடித்து மது அருந்துவதாகக் காட்டியிருந்தார்கள் தானே. இந்தப்படம் மட்டுமல்ல நிறைய தமிழ்ப்படங்களில் இப்படித்தான் காட்டுகிறார்கள். கொஞ்சம் நெருடலாகக் கூட இருந்தது. காதல் தோல்வியா "பிடி சிகரெட்டை..குடி சாராயத்தை" என்று default ஆக்கப்பட்டிருக்கிறது தமிழ்த் திரைப்படங்களில். அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. கேட்டால் உணமையைத்தானே சொல்கிறோம்..காட்டுகிறோம் என்பார்கள். கொஞ்சம் வித்தியாசமாக யோசியுங்களேன்!! வேறே உதாரணம் காட்டுங்களேன்!!
மது குடித்து/புகைபிடிப்பதால் மனதில் ஏற்பட்ட காயம் ஆறிவிடுமா? சரி..காதல் தோல்வியடைகிறான் கதாநாயகன் என்று வைத்துக் கொள்வோம் - அவன் ஏன் அந்தக் கவலையை மறக்க ஏதாவது உழைப்பைத் தேடிக்கொள்வதாக/செய்வதாகக் காட்டக் கூடாது? அநேகமான கதாநாயப் பாத்திரங்கள் கல்லூரி மாணவர்கள். பகுதி நேர வேலை செய்வது போலக் காட்டலாம் தானே? உடலை வருத்தி வேலை செய்து அதிலே ஒன்றிப் போகின்ற வேளைகளில் மன ஆறுதல் பெறுவதாகக் காட்டலாம் தானே????? இதைப் பார்த்தாவது கொஞ்சம் முயற்சி செய்ய வேணும் என்கிற உந்துதல் இளைஞர்களுக்கு வராமலா போய்விடும்?
நீங்க என்ன நினைக்கிறீங்க?
30 படகுகள் :
நல்ல point தான்! Stereotypes...என்ன செய்யறது!! என்னைக் கேட்டா காதல் தோல்விக்கு best remedy கமலஹாசன் styleல ஆள்வார்பேட்டை ஆளுடா தான்!!! ;)
நல்ல சிந்தனை. அக்னி பாரதி சொன்ந்துபோல் ஆழ்வார்பேட்டை பாட்டு காதல்தோல்விக்கு அற்புதமான ரெமிடி!
ஏங்க ஷ்ரேயா,
காதல் தோல்வி அடைஞ்ச பொண்ணு
சிகெரெட், மது எல்லாம் அருந்துறமாதிரி எடுத்தா நல்லா இருக்காது?
ஜஸ்ட் ஒரு ச்சேஞ்சுக்குத்தான்:-)
தேவதாஸ் காலங்களில் இருந்து காலம் காலமாகத் தொடர்ந்து வரும் இந்த இம்சையை இனியாவது நிறுத்திடுவாங்கன்னு நம்புவோம்.
அடுத்து சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்கவேண்டியது, நிறைய ஆட்டோக்கள் பின்னாடி எழுதியிருக்கும் கீழ்க்கண்ட திருவாசகம்
"சீறி வரும் பாம்பை நம்பினாலும் நம்பு;
சிரித்து வரும் பெண்ணை நம்பாதே".
ஊதர சங்கை ஊதிட்டேன்.பூனைக்கு எப்போ மணி கட்டப் போறாங்களோ???
1. உண்மையிலேயே சேரன் வாழ்வில் அப்படி ஒன்று நடந்திருந்தால்...
2. எனக்கென்னவோ [தேவதாஸிலிருந்து வாழ்வே மாயம் வரைக்கும்] வெறும் negative ஆக இருந்த இந்த விஷயம் இந்தப் படத்தில் கொஞ்சம் positive ஆகச் சொல்லப்பட்டதாகவே தெரிகிறது - விழுந்து எழுவதாகக் காண்பிக்கப் பட்டிருப்பதால்.
"காதல் தோல்வி அடைஞ்ச பொண்ணு
சிகெரெட், மது எல்லாம் அருந்துறமாதிரி "
அவ்வளவு எதுக்கு, துளசி. ஒரு பெண்ணின் வாழ்விலும் romance இருந்திருக்காதா என்ன? அதைப் படமாக்கினால் 'தமிழ்கூறு நல்லுலகம்' அதை எவ்வாறு ஏற்கும்? சும்மா, அப்படி ஒரு கதை எழுதினா என்னன்னு தோணும்; ஆனா, அதுக்கும் திறமை வேணுமே. ஆனா அநேகமா நீங்கெல்லாம் பிறக்கிறதுக்கு முந்தி 'பணிதீரா வீடு'ன்னு (i am not very sure of the title; heroine was jeyabarathi?)ஒரு மலையாளப்படம் இந்த கருத்தோடு வந்ததாக நினைவு.
ஐயா நீங்க சொல்றத நான் ஏத்துக்க மாட்டேன். காதல்ல தோல்வி அடைஞ்ச ஒருத்தன் சிகரெட் பிடிக்கறது, ஒயின் ஷாப்புல விழுந்து கிடக்கறது எல்லாம் சாதாரணமா நடக்கற விஷயம்தானே... இன்னைக்கு ஒயின்ஷாப்புலயும், ரோட்டுலயும் விழுந்து கிடக்கறவங்கள்ள பாதி பேர், ஒண்ணு காதல்ல தோல்வி அடைஞ்சு விழுந்துகிடப்பான், இல்ல கல்யாணத்துல தோத்துப் போய் விழுந்து கிடக்கிறவனா இருப்பான். ஆட்டோ கிராஃப்ல வர்ற சேரன் கதாபாத்திரம் 25 வருஷங்களுக்கு முன்னால சித்திரிக்கப்பட்டிருக்கு. அப்பல்லாம் இப்ப இருக்கற மாதிரி ஒண்ணு போனா வேறொண்ணுன்னு நினைக்கிற மனுஷங்க குறைவு. எனக்குத் தெரிஞ்சு வேலூர்ல இருக்கற ஒருத்தர் தான் காதலிச்ச பெண்ணை வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்ட பிறகும் வேற எந்த பெண்ணையும் கல்யாணம் பண்ணிக்காம, உடலாலயும் மனசாலயும் இன்னைக்கும் பழைய காதல் நினைவுகள்லயும், சினிமா ஆசையிலயும் வாழ்ந்துக்கிட்டிருக்காரு. அவருக்கு இப்ப வயசு 70. இப்படியெல்லாம்கூட இருக்காங்க. தயவு செஞ்சு உங்க கருத்தை மாத்திக்கங்க.
இப்படிக்கு...
காதலில் படுதோல்வியடைந்த பழனியப்பன்
±ÉìÌõ ¸¡¾Ä¢ø ÀΧ¾¡øÅ¢¾¡ý. ²¦ÉýÈ¡ø ±ý ¸¡¾Ä¢¾¡ý ±ý Á¨ÉÅ¢. :-)
எனக்கும் காதலில் படுதோல்விதான். ஏனென்றால் என் காதலிதான் என் மனைவி. :-)
தருமி, அந்தப் படம், கதை ஞாபகம் இல்லை. ஆனா பாட்டுங்க நினைவு இருக்கு.
இது 1972 லே வந்தது. சேதுமாதவனோட படம். இசை நம்ம எம்.எஸ். விஸ்வனாதன்.
'நீலகிரியுடே சசிகளே ஜ்வாலா முகிகளே' ( சரியா எழுதினேனா?) அப்படின்னு ஒரு
பாட்டு ரொம்ப பிரசித்தம்.
எனக்கும் உங்கள் கருத்தில் உடன்பாடு உண்டு. உள்ளம் கேட்குமே படத்திலும் இதே போல் நாயகன் மது அருந்தி தற்கொலைக்கு முயல்கிறான். பின்னர் திருந்தி உழைத்து கிரிக்கெட் வீரனாவது போல் காட்டியிருக்கிறார்கள். ஆனாலும் பழைய படங்களைக்காட்டிலும் புது படங்களில் காதல் தோல்வியை sportive-ஆக காட்டும் போக்கு அதிகரித்து வருகிறது
இத்தனை பேர் படகு வுட்ருக்காங்களே இன்னிக்கு பெஞ்ச மழைல.. எத்தனை பேருங்க காதல்ல தோல்வி அடைஞ்சிருக்காங்க? அத கேட்போம் முதல்ல!
என்னை கேட்டா இதெல்லாம் சாதாரணமா நடக்கற விஷயம் தான் எல்லாரும் சொல்றத போல.. இழப்போட தீவிரத்த விட.. மது அருந்தற போது ஏற்படற துன்பத்தோட தீவிரம் அதிகம் தான்.. ஆனா மனநிலை வேறுபாடு தான் இதை செய்ய வைக்குது! நிறைய பேர பார்த்திருக்கிறேன் அந்த மாதிரி.. எல்லாம் Psychology தாங்க! வேற எதாவது பண்ணலாமேன்னு easy யா சொல்றீங்களே.. மது அருந்தறதாவது பரவாயில்ல! தற்கொலை பண்ணிக்கறாங்களே அது ஏனுங்க?? உயிர்! ஒருமுறை போனா மறுமுறை வராதே... ஆனாலும் அத பண்றாங்களே! :-)
"இது 1972 லே வந்தது"
அம்மாடியோ..துளசி,என்னங்க இது இப்படியொரு நினைவாற்றல்?! கொன்னுட்டீங்க போங்க.
அடேயப்பா!! முதல்ல துளசி & தருமியின் ஞாபகசக்திக்கு ஒரு "ஓ". (அந்தப்படத்தில் கதாநாயகி காதல் தோல்வியால் சிகரெட் பிடித்து மது அருந்துறாவா? :o)
ஆட்டோக்ராஃபில் கொஞ்சம் "உணர்ந்து" முன்னேறத்தலைப்படுவதாகக் காண்பிக்கப்படுகிறது.அது நல்ல விஷயம். ஆனால் அந்த "உணர்தல்" மது& புகை படலத்திற்குப் பின்தானா வரவேண்டும்? நான் படத்தைக் குறை சொல்லவில்லை. மற்றப்படங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் தேவையான மாதிரிக் காட்டியிருக்கிறார் சேரன்.
அப்பா..காதலில் தோல்வியடைந்த பழனியப்பா...//உடலாலயும் மனசாலயும் இன்னைக்கும் பழைய காதல் நினைவுகள்லயும், சினிமா ஆசையிலயும் வாழ்ந்துக்கிட்டிருக்காரு//
காதல் நினைவுல வாழ்கிறார் ..சரி. அதென்ன "சினிமா ஆசையிலும்"?
Superசுப்ரா - வீட்டுல வலைப்பதிவுகள் வாசிக்கறதில்லை என்கிற தைரியம்தானே உங்களுக்கு? :o)
ரவிசங்கர் & Magnus Astrum - காதல் தோல்வியை sportive ஆக எடுத்துக்கொள்வது போலக் காட்டினா நல்லம்தானே..காதல் வாழ்க்கையின் ஒரு அங்கம் மட்டும்தான் என்று விளங்குமல்லவா? (இப்பிடிக் காட்டினாலாவது வாழ்கை இருந்தால்தான் அதாவது தற்கொலை பண்ணாமல் இருந்தால்தான் அடுத்த சந்தோசம் நம்மிடம் வரும் என்று உறைக்கும். தற்கொலை என்பது இறப்பவருக்கு ஒரு (கோழைத்தனமான) முடிவே தவிர அவரது சுற்றத்திற்கு மிகவும் கொடுமையான ஒன்று)
ஷ்ரேயா,
இந்த ஞாபகசக்திங்க என்னை ஆட்டுவிக்கறதாலேதானே கொசுவத்திச் சுருளை ஏத்தி ஏத்தி உங்களையெல்லாம் இம்சை பண்ணிக்கிட்டு இருக்கேன்.
தமிழ் சினிமாவுலே பொதுவா உணர்ச்சிப்பூர்வமா எடுக்கிறது தானே வழக்கம். Practical solutions தர படம் ரொம்ப கம்மி. காதால் தோல்வியை சாதாரணமா எடுத்துக்கிற மாதிரி கதையை கொண்டு போனா ஆயிரக் கணக்கான படங்கள் ரிலீசே ஆகியிருக்காது..:-)
துளசி..கொசுவர்த்திச் சுருள் நிறைய்ய்ய்ய்ய ஏத்துங்க!! கதை கேட்கத்தான் நாங்கள் இருக்கிறோமே!
ரம்யா - //காதல் தோல்வியை சாதாரணமா எடுத்துக்கிற மாதிரி கதையை கொண்டு போனா ஆயிரக் கணக்கான படங்கள் ரிலீசே ஆகியிருக்காது.:-) //
உண்மைதான் . ஆனால் பாருங்கள்.. வித்தியாசமா செய்தா "அட" என்று பார்ப்பார்கள் தானே..அந்த surprise factor ஆவது சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டுவராதா? :o|
puthu post in soundaryam!! Awaiting your comments!!
ஐயோ முகமூடி!!! :o)
வலைப்பதிவு உலகத்திலே உங்க கடி தாங்கமுடியவில்லை!!
அப்ப தமிழ் திரைப்படங்களின் படி தண்னி அடிப்பவன், தம் அடிப்பவன் எல்லோரும் காதல்ல தோல்வியுற்றவனா????
இரு கொஞ்சம் ரூமச்!!!!
"இந்தப்படம் மட்டுமல்ல நிறைய தமிழ்ப்படங்களில் இப்படித்தான் காட்டுகிறார்கள்."
நீங்கள் பார்பது தமிழ் படம் இப்படி பட்ட கேள்விகள் எல்லாம் நீங்கள் எழுப்பக்கூடாது!!
மூர்த்தி - காதலில் தோல்வி கிடையாது என்பது என் கருத்து. நிறைவேறவில்லையெனில் சோகம் வருவது இயல்பு..அதிலும் மது அருந்தாமல் புகை பிடிக்காமல் இருந்த உங்களுக்கு ஒரு "ஓ".( உடம்புக்குக் கெடுதல் செய்யும் மது புகையை இப்போதும் தவிர்க்கிறீர்களென நம்புறேன்!)
//நீங்கள் பார்ப்பது தமிழ் படம் இப்படி பட்ட கேள்விகள் எல்லாம் நீங்கள் எழுப்பக்கூடாது!! //
நோநோ ..நீங்க சொல்வது சரிதான்! (இப்பிடிச் சொல்லிச் சொல்லியே தமிழ்ப்படங்களில் யதார்த்தம் இல்லாமல் எடுப்பதை அனுமதித்துக் கொண்டிருக்கிறோம்!) :o)
இன்னும் எவ்வளவு நாள்தான் நம் கவிஞர்கள் (வலைப்பதிவு கவிஞர்கள் உட்பட)
நான் தந்த மல்லிப்பூவ நட்டாத்தில் விட்டுபுடு அரளிப்பூச்சூடி போறவளே ன்னு பாட்டு எழுதுவாங்களோ,
கொஞ்சம் மாத்தி
நான் தந்த பேனாவ விட்டுபுட்டு லேப்டாப் தேடி 'போறவனே'ன்னு என்னிக்கு எழுதுவாங்களோ?
ஆதிரை நீங்க சொல்றது நியாயமா (எனக்கு) படுது. ஆனா "நான் தந்த பேனாவ விட்டுபுட்டு லேப்டாப் தேடி 'போறவனே" இப்பிடிக் கவிதை எழுதிக் குடுத்தா இயக்குநர் வேற பாடலாசிரியரைத் தேடிப் போயிருவார் என்று நினைக்கிறேன்.
இரண்டு பகுதியையும்(ஆண் & பெண்) சமமாகப் பார்த்து அதற்கேற்ப பாத்திரப்படைப்புச் செய்து திரைப்படங்கள் வரும்வரை "நான் தந்த மல்லிப்பூவ நட்டாத்தில் விட்டுபுடு அரளிப்பூச்சூடி போறவளே" தான்! :o(
சரி... சரி.. சரி.....
அப்ப எனக்கு கவிஞர் ஆகும் வாய்ப்பு இல்லேன்னு சொல்றீங்க :(
பு.ப.ம.க.வின் உ.பி.ச எழுதிய பாட்டுல குத்தம்னு இங்க
(http://mazhai.blogspot.com/2005/07/blog-post_18.html )
சொல்லிட்டாங்க.
கழக கண்மணிகளே, ரெண்டு பஸ்ஸாவது எரிக்க வேண்டாமா?
என்ன குற்றம் கண்டீர் இந்த வரிகளில்..
செல்போன் மணி போல பெண்கள் சிரிக்கலாம்.
பேக்ஸில் வந்த பெண் கவிதையாய் இருக்கலாம்,
கண்கள் நோக்கியா போன் போல இருக்கலாம்
ஆனால் லேப்டாப்பை பற்றி எழுதினால் தப்பா ?
பாடல் படித்து பெயர் வாங்குவர் சிலர்
குற்றம் கண்டுபிடித்து புகழ் பெறுவர் சிலர்
நீர் எந்த வகை?
உங்கள் வீட்டு வாசலில் இப்பவே ஒரு கட்சி கூட்டம் போட்டு இதை நீங்கள் திரும்ப பெறும் வரை போராடுவோம்..
----
அகில உலக புதிய பமக தொண்டர் படை..
அது எதுக்கு..சும்மா பஸ்ஸையெல்லாம் எரிச்சுக் கொண்டு..வீணாய்ப்ப் போகும் & சூழலும் மாசடையும். அதை விட்டிட்டு நீங்க பாட்டெழுதுங்க! :o)
என் வீட்டிற்கு வந்து போராட்டம் நடத்தப்போறீங்களா? வாங்க வாங்க..ஒரு வலைப்பதிவர் சந்திப்பே நடத்திடலாம். :o)
அப்படி போடுங்க அனானிமஸ்.
தமிழ்நாட்டில் உ.பி.ச. எழுதுவதுதான் இலக்கியம்.
விரைவில் முக்காலா முக்காபலா வுக்கு உரை எழுதுவேன்.
கழக உறுப்பினர்கள் கட்டாயம் புத்தகம் வாங்க வேண்டும்.
அட!அட!!அட!!!உங்களைப்பெற இந்தத் தமிழ் கூறும் நல்லுலகு என்ன தவம் செய்ததோ! உங்கள் இலக்கியச் சேவைதான் என்னே!
ஆதிரையே வருக..ஆ!வென்று திரை பார்ப்பவர்களுக்கு உரை தருக! :o)
Post a Comment