என் கணவருக்கு சின்னதொரு இன்ப அதிர்ச்சி கொடுக்க, அவருக்கு பிடித்த/முக்கியமான பெண்மணியைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இலங்கையில் வடபகுதி காரைநகரில் யூனியன் கல்லூரியில் படிப்பிக்கிறாவாம். திலகம்/திலகவதி என்ற பெயர். இவவைத் தெரிந்தால், தொலைபேசி இலக்கம் பெற்றுத் தரமுடியுமா? மேலும் விபரத்திற்கு தனிமடல் அனுப்புங்க. நன்றி.
11 படகுகள் :
கணவருக்கு பிடித்த பெண்மணிய நீங்க தேடறீங்களா... எங்கியோ உதைக்கிதே...
அன்பின் அக்கா,
மற்றவர்களை சந்தோசப்ப டுத்துவதில்தான் நம் ஆனந்தமே இருக்கிறது. கணவரின் கல்லூரித் தோழியா அவர்? எத்தனை மனைவிமார்கள் சந்தேகம் கொள்ளாமல் உங்களைப் போல் திருமணத்துக்குப் பின்னரும் பழக விடுவார்கள் என்று தெரியவில்லை.
ஐயோ..முகமூடி!! எதுவும் எங்கேயும் உதைக்கத் தேவையில்லை. :o)
இல்லை மூர்த்தி , அவரது கல்லூரித் தோழியல்ல. கல்லூரித்தோழியென்றாலும் எனக்குப் பிரச்சனையில்லை. வாழ்க்கையில் நான் மட்டுமே என்று நல்லாவே தெரியும்! :o)
இன்னும் சொல்லப் போனால் கல்லூரித் தோழிகளென்றால் சந்திக்க விருப்பம்..பழைய வண்டவாளங்களைத் தெரிந்து கொள்ளவும், கலாய்க்கவும் வசதியா இருக்கும்!! ;o)
தேடும் இவ, இவரது அம்மாவின் தோழி.
இப்போது யாழ்ப்பாணத்திலிருக்கும் ஒரே வலைப்பதிவாளர் யாழ் கோபி தான். அவருடன் தொடர்பு கொண்டால் முயற்சிப்பார். அத்தோடு ஈழநாதனும் அங்க தான் நிக்கிறார் எண்டு நினைக்கிறன். தொடர்பு கிடைச்சால் சொல்லலாம்.
கண்டு பிடிக்க ஆசிகள்.
அப்படியே, யோகேசுவரன் (இப்பொழுது 27 வயதிருக்கும்) என்பவரைப் பற்றி யாரையாவது பார்த்தாலும் எனக்கும் தனி மடல் அனுப்புங்கள்.
அமைதி மீண்டதும் மீண்டும் தாய்நாடு திரும்பிய சமயம் முகவரியை என் பள்ளி ஆசிரியையிடம் கொடுத்து விட்டுப் போனானாம். அந்த வயதில் "முகவரி" பற்றி எதுவும் தெரியவில்லை. இப்போ முகவரி கேட்க அந்த ஆசிரியையின் முகவரி தெரியவில்லை. :-)
27 வயசு யோகவரன் தெரியும்..யோகேசுவரனைத் தெரியாதே! :o\
எந்தப்பள்ளிக்கூடம் என்று ஞாபகமிருந்தால் ஆசிரியையின் முகவரி கண்டுபிடிப்பது எளிது க்ருபா. ஆனா உங்கட நண்பன் தனது முகவரி எழுதிக் கொடுத்த துண்டுக்கடதாசியை அவ இன்னும் வைச்சிருப்பாவா என்பது சந்தேகம். எதுக்கும் முயற்சிக்கலாமே? :o)
நண்பனின் ஊர், அப்பா பெயர் இதுகளாவது ஞாபகம் இருக்கா? எத்தனையாம் ஆண்டு தாயகம் திரும்பினார்?
எந்தப்பள்ளிக்கூடம் என்று நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் அந்தப் பள்ளிக்கூடம் இப்போ இல்லை. பின்ன நான் படிச்ச ஸ்கூள் ஆச்சே, இன்னுமா இருக்கும் ;-)
திருச்சி போனா அப்பப்போ அந்த ஸ்கூல் அங்க இருக்கற நண்பர்கள், வேப்பமரம், புளியமரம், ஏரி, எல்லாம் போய்ப் பார்ப்பேன் (கட்டிடம்தான்). ஆனால் இந்தப் பழக்கம் ஆட்டோக்ராஃப் படம் வரும்முன்பிருந்தே எனக்கு இருந்தது என்பதறிக. :-))
அந்த மிஸ் நான் அந்த ஊர்ல இருக்கும்போதே கல்யாணம் ஆகி பெங்களூர் எங்கயோ போய்ட்டாங்க.
நண்பனின் ஊர் இலங்கை. :-) அவ்வளவு தூரம்தான் அப்போ எல்லாம் இலங்கைன்னா தெரியும். நான் இலங்கையை சென்னை, மதுரை, மாதிரி ஒரு ஊர்ன்னுதான் நெனச்சிருந்தேன். என்ன ஒன்னு, இது "வெளிநாட்டு"ல இருக்கற ஒரு ஊர். ஆனா எழுத்து வழக்குல இருக்கற மாதிரியே பேசறாங்களேன்னு அந்த மக்கள்னு வித்யாசமா இருக்கும். :-)
சொல்ல மறந்துட்டேனே, தாயகம் திரும்பிய ஆண்டு 1988 வாக்குல.
சத்தியமா உங்கள் நண்பனைத் தெரியவே தெரியாது. இனிமே யாராவது யோகேசுவரனை சந்திச்சா "இந்தியால படிச்சீங்களா? 1988 அளவில இலங்கை திரும்பினீங்களா" என்று கேட்கிறேன். :o)
Hi, Union College is in Tellippalai and not in Kaarainagar ... theep
தெல்லிப்பளை யூனியன் கல்லூரி - நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் தேடுவது காரைநகரில் உள்ளதைத்தான்.
Post a Comment