கேளுங்கள் - (ஒருவேளை) தரப்படும்!

சில கேள்விகளுக்கு பதிலளிக்கலாம் என்று யோசித்தேன். இலகுவாய் அலுவலகத்திலிருந்து பதிவு போட வேற ஒன்றும் ஞாபகம் வருதில்லையே! கேள்விகளை நானே கேட்டு பதிலையும் நானே போட்டா நல்லாயிருக்காது. அதனாலே...

டும்டும்டும் (வேற ஒன்றுமில்ல..முரசொலி)

"மீரா ஜஸ்மின் - சதா" ஒப்பிடுக என்று (அறிவுபூர்வமாக!!) கேட்காமல் சும்மா கேள்விகளைக் கேளுங்க. இங்க பின்னூட்டத்தில கேட்டாலும் சரி..தனிமடலிலே கேட்டாலும் சரி.

இங்கே முக்கியம்: கேட்டல் மட்டுமே^ (^ என்றால் நிபந்தனைகளுக்குட்பட்டது என்றும், அவை கீழே நுண்ணிய எழுத்தில் தரப்பட்டுள்ளன என்றும் அர்த்தம்)(நிபந்தனைகள் சின்ன எழுத்திலதான் இருக்கணும் என்பது நிபந்தனைகளின் சொல்லப்படாத நிபந்தனை. அதற்கேற்ப சின்ன எழுத்தில் தரப்பட்டுள்ளது!)


^கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் இந்த வாரக்கடைசியில் அல்லது அடுத்த வாரம் இங்கே பதிக்கப்படும். கேட்கப்படும் எல்லாக் கேள்விகளும் பதில் பெறும் என்றில்லை. (தலைப்பை ஒருமுறை பார்க்கவும்!)

அதாவது: கடமையைச் செய்..பலனை எதிர்பாராதே! ;o)

11 படகுகள் :

துளசி கோபால் August 02, 2005 11:37 am  

//டும்டும்டும் (வேற ஒன்றுமில்ல..முரசொலி)//

எது? தி.மு.க வின் அதிகாரபூர்வமான பத்திரிக்கையா?

`மழை` ஷ்ரேயா(Shreya) August 02, 2005 11:58 am  

ஐயோ இல்லை...

சரி "பறையொலி" என்றே வைத்துக் கொள்வோம். எனக்குத் தேவை கவனத்தை ஈர்க்கும் ஒலி தரும் ஒரு வாத்தியம். அவ்வளவுதான்! "ஏன், மற்ற வாத்தியமெல்லாம் தரும் இசை கவனத்தை ஈர்க்காதா?" என்றெல்லாம் கேட்கக் கூடாது.

துளசி..இந்தப்பதிவிலயிருந்தே கேள்வி கேட்கணும் என்கிற அவசியமில்லை!! ;O)

டண்டணக்கா August 02, 2005 12:37 pm  

>>>> கேள்வி(க்கு ஐடியா) தந்த ஷ்ரேயா அவர்களுக்கு நன்றி <<<<<
"மீரா ஜஸ்மின் - சதா" ஒப்பிடுக ?

Sud Gopal August 02, 2005 1:23 pm  

ஷ்ரேயா,இங்கே நிறையக் கேள்விகள் பதில்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியாதா???

http://konjamkonjam.blogspot.com/2005/08/blog-post_02.html

`மழை` ஷ்ரேயா(Shreya) August 02, 2005 1:59 pm  

உங்கட கேள்விக்குப் பதில் தெரியாதே சுதர்சன்!! ;O)

(அதுசரி..நீங்க ஏன் சரியான விடைகளைப் பின்னூட்டத்தில் போடவில்லை?)

Sud Gopal August 02, 2005 2:10 pm  

//உங்கட கேள்விக்குப் பதில் தெரியாதே//
கூகிள் அப்படின்னு ஒரு அட்சய பாத்திரம் இருப்பது உங்களுக்குத் தெரியாதா என்ன???

//நீங்க ஏன் சரியான விடைகளைப் பின்னூட்டத்தில் போடவில்லை?//
இன்னும் கொஞ்சம் பேரு முயற்சி செய்யட்டுமே.இன்னைக்கு மதியம் விடைகளைப் பின்னூட்டத்தில் போட்டு விடுவேன்.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 04, 2005 8:52 am  

யாருக்கும் ஒரு கேள்வியும் இல்லைப்போல!

ஒரு பொடிச்சி August 04, 2005 1:25 pm  

ஷ்ரேயா என்பது உங்களுடைய சொந்தப்பெயரா? நீங்கள் மட்டக்களப்பில் இருதயபுரம் (கிழக்கு) பகுதியைச் சேர்ந்தவரா? வேற தோணும்போது வந்து பதிகிறேன் ;-)

Sud Gopal August 04, 2005 1:29 pm  

1.ஷ்ரேயா அக்காவிற்கு மழை ஏன் பிடிக்கும்?
2.மழையில் நனைந்த உடன் ஒரு சிலருக்கு ஜல்ப்பு பிடிப்பது ஏன்?
3.செயற்கை மழை எப்படி உருவாக்கப்படுகிறது?
4."மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே,மழை நீராய் சிதறிப்போகின்றோம் அன்பே"-இப்பாடல் வரும் திரைப்படம் என்ன??

இந்தக் கேள்வி போதுமா???இன்னும் கொஞ்சம் வேணுமா???

`மழை` ஷ்ரேயா(Shreya) August 04, 2005 2:54 pm  

நன்றி நன்றி..உங்கள் கேள்விகளுக்குப் பதில் விரைவில் தரப்படும்... :O)

சுதர்சன் கோபால் - 4 வது கேள்விக்கு தருமியா அல்லது துளசியா பதில் சொல்லணும்? ;O)

`மழை` ஷ்ரேயா(Shreya) August 04, 2005 3:55 pm  

சுதர்சன் கோபால் - என்ன ஒரே கேள்வி'மழை'யா இருக்கு?? ;O)

பெட்டகம்