நட்சத்திரம் பார்க்கலையோ..நட்சத்திரம்!

எழுதுகிறவர்களை ஊக்குவிக்கவும், அவர்களது பதிவுகளுக்குக் கொஞ்சம் கூடுதல் கவனிப்பு அளிக்கப்படவுமாக என்று "மண்டைக்குள் & பதிவில் சரக்கு உள்ளவர்கள்" வாராவாரம் தமிழ்மண நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பெருந்தலைகளெல்லாம் வந்து போகிற இடத்தில, என்னை நட்சத்திரமாக்கி வேடிக்கை பாக்க நினைச்சிருக்கிறாங்க! ம்ம்..வாற சந்தர்ப்பத்தை ஏன் விட? மதி எனக்கு முதலில் அஞ்சல் அனுப்பிக் கேட்ட போது உண்மையான பெயரைச் சொல்ல வேண்டும் என்கிற காரணத்தினாலும் (ஏதோ சாட்சி பாதுகாப்பு திட்டத்துல இருக்கிறவ மாதிரிக் கதைக்கிறா!:O) ) என்ன எழுதப்போகிறேன் என்று தெரியாத காரணத்தினாலும் முடியாது என்று சொல்லிவிட்டேன். இந்த முறை, இனிமேல் அடுத்த வாய்ப்பு வருமோ இல்லையோ என்று தெரியாததால் ஓமென்று தலையாட்டிவிட்டேன். இப்பவும் என்ன எழுதப் போகிறேன் என்று தெரியவில்லை.

( "ஐயோ..ஷ்ரேயாவா இ.வா.ந!! யாராரை நட்சத்திரமாக்கிறதெண்டு யோசிக்கிறதில்லையா" என்பவர்கள் மதியை தொடர்பு கொள்ளலாம்!! நீங்க அப்பிடி நினைக்கிறீங்களோ இல்லையோ..எங்கட கணினிக்கே நான் நட்சத்திரமாகிறது பிடிக்கல்ல. படுத்து விட்டது! அப்பாடா! என்றெல்லாம் அவ்வளவு கெதீல மூச்சு விடாதீங்க. இருக்கவே இருக்கு..அலுவலகக் கணினி!!! ) யாரங்கே!!..ஓட முயற்சிக்கிறவங்களையெல்லாம் பிடித்துக் கட்டி வையுங்கள்! ஓட முயற்சிக்காதவர்களுக்கு "க்ருபா" செலவில் கரும்புச்சாறு! ;O)


வலைப்பதியத் தொடங்கின புதிதில் என்னென எழுதலாம் என்று யோசித்த போது, மனதுக்கு வந்தது, நடந்த/கேள்விப்பட்ட சில நகைச்சுவைச் சம்பவங்களை எழுதலாமென்று. ஆனாலும் அதை முசிப்பாத்தியாக எழுதும் கலை இன்னும் எனக்குக் கைவரவில்லை என்றே தோன்றுகிறது. தொடர்ந்து எழுத எழுத, என்ன எழுதலாம் என்பது தன்னாலேயே பிடிபட்டு விடும் என்றார்கள் முன்னோடிகள். நானும் ஒன்றரை வருடமாக எழுத முயற்சிக்கிறேன். ஓரளவுக்கு என் பதிவுகளில் இடுபவை பற்றிய தெளிவு இருந்தாலும் இன்னும் "என்ன எழுதலாம்" என்கிற அந்த ஆரம்ப கால மயக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகவே ..நீங்கள் எதிர்பார்த்தது போல எனது பதிவுகள் அமையாதிருந்தால் குறை கொள்ள வேண்டாம்..இப்போது எழுதுவதை/எழுதப்பட்டுள்ளதைப் பார்த்து, வாசித்து அதை எப்படி இன்னும் சிறப்புறச் செய்யலாம், என்று சொல்லுங்கள். என் எழுத்தையும் என்னையும் சீர்ப்படுத்திக் கொள்ள உங்கள் கருத்துக்கள் உளிகளாய் உதவும்.

பின்னூட்டத்தில் சந்திப்போம்.

27 படகுகள் :

பினாத்தல் சுரேஷ் August 08, 2005 2:39 pm  

மழையை யாரும் வரவேற்காமல் இருக்க முடியுமா?

நாங்கள் விவசாயிகள், எங்கள் நிலத்தை ஈரப்படுத்துங்கள் மழையே!

இந்த வாரம் உங்களுக்கும், எங்களுக்கும் இனிமையாக அமைந்திட வாழ்த்துக்கள்.

துளசி கோபால் August 08, 2005 2:42 pm  

அட்டாடாடா...

இந்த வார நட்சத்திரம் நீங்களா?

ஹா.... அதுதான் இங்கே எங்க ஊருலே ஒரே வெளிச்சம் அடிக்குதா?

தூள் கிளப்புங்க ஷ்ரேயா!!!

வாழ்த்துக்கள்!!!!

இளங்கோ-டிசே August 08, 2005 2:50 pm  

இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்து :-)

Chandravathanaa August 08, 2005 3:10 pm  

இவ்வாரம் நீங்களா? வாழ்த்துக்கள்!

Narain Rajagopalan August 08, 2005 3:31 pm  

congrats & looking forward.

முகமூடி August 08, 2005 3:56 pm  

பட்டைய கெளப்புங்க...

Sud Gopal August 08, 2005 4:11 pm  

ஆஹா!!!
நடத்துங்க.வாழ்த்துக்கள்.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 08, 2005 4:53 pm  

எல்லாருக்கும் நன்றி.

துளசி - இங்கேயும் வெளிச்சம்தான்..ஆனா இரவுல ஒரே குளிர். 3 - 7 தான். காலையில் எழும்பவே மனம் வராது(இல்லாட்டி மட்டும் எழும்பிடுவீங்களாக்கும் என்று சொல்றது யாருப்பா!;O)

Anonymous August 08, 2005 5:05 pm  

இவ்வார நட்சத்திரமாம் எங்கள் மழையக்காவுக்கு வாழ்த்துக்கள்! உற்சாகமாகப் படையுங்கள் தோழி.

Anonymous August 08, 2005 5:06 pm  

இவ்வார நட்சத்திரமாம் எங்கள் மழையக்காவுக்கு வாழ்த்துக்கள்! உற்சாகமாகப் படையுங்கள் தோழி.

Suresh August 08, 2005 5:12 pm  

வாழ்த்துக்கள் ஷ்ரேயா !!

enRenRum-anbudan.BALA August 08, 2005 5:50 pm  

ஷ்ரேயா,
மழைக்கால மேகம் ஒன்று மணி ஊஞ்சல் ஆடியது ....
சின்ன சின்ன தூறல் என்ன ? ...
வான் மேகங்களே, வாழ்த்துங்கள், பாடுங்கள் ...


---- என்று "மழை"ப் பாடல்கள் பாடி உங்களை 'வருக, வருக' என வரவேற்கும்

என்றென்றும் அன்புடன்
பாலா

Sud Gopal August 08, 2005 6:11 pm  

//என்று "மழை"ப் பாடல்கள் பாடி//

பாலா,
இந்த மழைப்பாடல்ன்னு படிச்ச உடனே சட்டுன்னு எனக்கு நெனவுக்கு வர்ரது தெலுங்கு சினிமாவில வரும் மழைப்பாடல்கள் தான்.

ஹூம்..அது மாதிரி கலையம்சத்தோட இங்கேல்லாம் யாரு மழைப்பாடல்கள எடுக்கிறாங்க???
;)

கலை August 08, 2005 7:18 pm  

இந்த வார நட்சத்திரம் நீங்களா, வாழ்த்துக்கள் ஷ்ரேயா. கலக்குங்க ஒரு கலக்கு. என்னது
//ஆனாலும் அதை முசிப்பாத்தியாக எழுதும் கலை இன்னும் எனக்குக் கைவரவில்லை என்றே தோன்றுகிறது.//
அது எல்லாம் ஒன்றுமில்லை, உங்களுக்கு அந்தக்கலை நன்றாகவே கை வருது. யோசிக்காமல் எழுதுங்கோ.

துளசி கோபால் August 08, 2005 7:37 pm  

ஷ்ரேயா,

//எழுதுகிறவர்களை ஊக்குவிக்கவும், அவர்களது ...//

எழுதுகிறவரை 'ஊக்கு' விக்க ஒரு நாளும் நாங்கள் 'பின்' வாங்கமாட்டோம் என்று உறுதியாகக் கூறி விடை பெறுவது உங்கள் அபிமான வாசகி துளசி.

வலைஞன் August 08, 2005 7:42 pm  

rain rain come again...

பி.கு.
பின்னூட்டமிடுபவர்களுக்கு:
இதை இப்படியே எழுதினால் தான் சரியாக இருக்கும்.
இது தான் சாக்கென்று வரிசையா ஆங்கிலத்தில் பின்னூட்டம் போட்டுடாதீங்க..

ஜோ/Joe August 08, 2005 7:56 pm  

வருக! வருக! பதிவு மழை பொழிக!

Anonymous August 08, 2005 8:31 pm  

என்ன்ன்ன்னது? க்ருபா செலவில் கரும்புச்சாறா? ஆசயப்பாரு ஆசய.

ஓடுகிறவர்களைப் பிடித்து கட்டிவையுங்கள், ஏனையோர் மாட்டிக்கொண்டதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

(சரி சரி. என்ன இருந்தாலும் வலைப்பதிவுன்னு இருந்தா மாற்றுக்கருத்து ஒன்னே ஒன்னாவது இருக்கணுமே, அதான் அப்படி சொல்லி வெச்சேன். டென்ஷன் ஆகிடாதீங்க).

வசந்தன்(Vasanthan) August 08, 2005 8:44 pm  

வாழ்த்துக்கள்.

மு. மயூரன் August 08, 2005 9:34 pm  

வாங்க ஷ்ரேயா அக்கா...

வாழ்த்துக்கள்

Sud Gopal August 08, 2005 9:42 pm  

//rain rain come again...//

சிங் இன் த ரெய்ன்.சாங் இன் த ரெய்ன்.
சிங் இன் த ரெய்ன்.அயம் ஸ்வைங் இன் த ரெய்ன்.

மனதை லவட்டிய வடிவேலு ஸ்டைலில் பாடவும்.
;)

கிஸோக்கண்ணன் August 09, 2005 8:45 am  

வாழ்த்துக்கள் ஷ்ரேயா.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 09, 2005 9:01 am  

நன்றி நன்றி...
இன்னும் கொஞ்ச நேரத்தில் நட்சத்திரப் பதிவு #1 வலையேறுது.

ஊக்கு, பின்!! ம்ம்ம்.. துளசி ..சமீபத்துல சீலை கட்ட இதெல்லாம் தேடினீங்க போலருக்கு!! :O)

Ramya Nageswaran August 09, 2005 9:43 am  

வாழ்த்துக்கள், ஷ்ரேயா.. ஆவலா எதிர்பார்த்துகிட்டிருக்கேன் உங்க நட்சத்திர பதிவுகளை!

குசும்பன் August 09, 2005 12:06 pm  

வாங்க வாங்க ஷ்ரேயா !!! தூள் கிளப்புங்க... பின்னூட்டத்த நானும், ஸ்டார் வேல்யுவ முகமூடியும் பாத்துக்கறோம்.

தருமி August 13, 2005 1:42 pm  

சந்தோஷம்; வாழ்த்துக்கள்;
சும்மா, செமையா 'பரத்தீருங்க' - சரியா?

`மழை` ஷ்ரேயா(Shreya) August 16, 2005 2:23 pm  

பரத்தினேனா தருமி? ;O)

பெட்டகம்