குறுக்கால போற எழுத்துப் போட்டிவலைப்பதிவர்களை வைத்து சும்மா ஒரு சின்ன விளையாட்டு. இதை உருவாக்குவது லேசுப்பட்ட காரியமில்லை என்று இன்றைக்குத்தான் விளங்கிச்சு. அலுவலகத்தில வேலை செய்யிறதை விட்டிட்டு இதைத்தான் முக்கியமாகச் செய்தனான். விடை காண உதவிக் குறிப்புகள் கீழே:


சரியாக விடை சொல்வோருக்கு ஒரு சிறப்புச் சுட்டி பரிசு! (நெத்திச் சுட்டியெல்லாம் இல்லைங்கோ..இது உங்களை ஒரு வலைப்பதிவுக்கு அழைத்துச் செல்லும்). அப்பிடியென்ன சிறப்பு என்று கேட்கிறீங்களா? (தமிழ்) வலைப்பதிவருக்கு வயது 6.இடமிருந்து வலமாக:

1அண்டங்காக்கா கொண்டைக்காரி..(ரண்டக்க x 3)...16 பதிவுக்கு சொந்தக்காரி (ரண்டக்க x 3) :o)

4 சினேகிதியின் போட்டிகளின் பரிசு "இவரது" சமையல்

5 செல்ல(செல்வங்கள்)ங்கள் உடையவர்

7 முகத்தை மறைக்கப் போடுவது(திரும்பியுள்ளது)

11 பசு+அலை. குழம்பியுள்ளது.

13 பல்லவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராகக் (முதலில்) குரல் கொடுத்தவர்.

14 போனவார நட் - சத்திரம்(<--இது அவரே சொன்னது!) ;O)

16 அலுவலக க்ராபிக்ஸ் டிசைனர் பொய் சொல்கிறார் என்று முறையிடுபவர்.

18 படிக்கப் போறேன் என்று வலைப்பதிவுக்கு கைகாட்டி விட்டா. கொஞ்ச நாள் கவிதைப் போட்டிகள் நடத்தினவ.

19 வலைப்பதியும் ஒரு "தமிழ"னின் அடைமொழி

20 கோடு என்றும் அறியப்படும்

21 "தவம்" செய்து கவிதையெழுதி "சந்தைப்படுத்து"வார்.

22 "நறை"யில் ஒரு துளியில் நடப்புகள் சொல்லிப் போவார்

25 "குமிழி"களுக்கும் "சிதறல்"களுக்கும் சொந்தக்காரர்.

26 வலையில் "தமிழ்மணம்" வீசக் காரணமாயிருப்பவர்.

28 தோழன்(குழம்பியுள்ளார்)

30 இவரது வலைப்பதிவின் தலைப்பின் பொருள் "கடல் அலை"மேலிருந்து கீழாக:


1 வசந்தனும் இவரும் ஒருவரே என்று மயக்கம் வருவதுண்டு

2 துளசி, இவரது மகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்னா

3.சக்தி என்னும் மதுவை உண்போமடா என்று கொஞ்ச நாளைக்கு முன் வரை சொல்லிக் கொண்டிருந்தார்

5 கடலுக்குள் தேடியெடுப்பது.(கீழிருந்து மேலாக)

6 பவித்ரா - இப்படியும் அறியப்படுவார்

8 வல்லமை தாராயோ என்கிறார், சீனத்தைப் பற்றி எழுதுகிறார்.

9 நுனிப்புல் வெட்டுகிறார், "விடியல்" என்பது வடமொழியில் இவர் பெயருக்கு அர்த்தம்.

10 "கீர்த்திக்கு" இவரது பெயர் rhyme பண்ணும்

12 பன்மொழி அறிவார். மகர நெடுங்குழைகாதனின் பக்தர்

14 திருவாளர் அநாமதேயம். இவர் எழுதுவது பலசமயங்களில் இலகுவில் புரிவதில்லை.

15 வள்ளல் ஒருவர்

17 மண்டபத்திலே சிவனைக் கண்டு கதைத்தவர்.

18 பத்தி எழுத்தாளினி, கீழிருந்து மேலாக

20 தமிழில்: அறிவு, நிலவு; மலையாளத்தில்: போதும்; சிங்களத்தில்:போதாது

23 நிலவோடு கதைத்த பைத்தியம் (என்று கதை எழுதினார்) ;O)

24 யாழிசைக்கும் வலைப்பதிவர்

27 Mykirukkals என்று கவிதை எழுதுகிறார்

29 விவசாயி.

29 படகுகள் :

துளசி கோபால் August 09, 2005 11:11 am  

மனுசனைச் சும்மா இருக்க விட்டாலும்....

இப்பத்தான் ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கையிலே வச்சுக்கிட்டு உக்காந்திருக்கேன்

தலைமுடியைப் பிச்சுக்கணும்:-)))))

கண்டுபிடிச்சுட்டு அப்புறமா வாரேன்.

துளசி.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 09, 2005 11:30 am  

பாயை பிக்கிறத விட்டுட்டீங்க போலருக்கு! ;O)

முயற்சி செய்து பாருங்க!கண்டுபிடிக்கலாம் சுலபமா!

துளசி கோபால் August 09, 2005 11:55 am  

//பாயை பிக்கிறத விட்டுட்டீங்க போலருக்கு! ;O//

எங்கே பாய் இருக்கு? அதுதான் போன முறை புதிர் போட்டே கிழிக்க வச்சுட்டீங்களே!

முகமூடி August 09, 2005 12:52 pm  

சரி இதுக்கு எப்படிங்க விடை சொல்றது... அப்படியே கீழிறிந்து மேல், இடமிருந்து வலம்னு எழுத வேண்டியதுதானா??

Anonymous August 09, 2005 1:31 pm  

பேப்பர் பேனா கைல எடுத்துட்டோம்ல...

Unknown August 09, 2005 2:00 pm  

நல்ல விளையாட்டு. இன்னிக்கு தூங்கறதுக்கு போகுமுன்னாடி முடிக்க முயற்சி செய்யப்போறேன். என்ன பரிசு?

பினாத்தல் சுரேஷ் August 09, 2005 2:02 pm  

can you send me the image (potti) thru email to sudamin at gmail dot com?

Blogger images are forbidden in UAE. I cant see it, so i could not participate (now)

வசந்தன்(Vasanthan) August 09, 2005 2:13 pm  

Vidaikalai enke anuppa?
email or as comment?

பினாத்தல் சுரேஷ் August 09, 2005 2:32 pm  

In case if Shreya doesnt see it, i Request anybody who can see this image to send it me thru mail ASAP

Unknown August 09, 2005 3:23 pm  

ஒரு மணிநேரம் உட்கார்ந்து ஞாபகசக்தி, தமிழ்மணம் தேடல் வசதி, கூகிள் தேடல் வசதின்னு எல்லாத்தையும் உபயோகிச்சு பெரும்பாலும் முடிச்சுட்டேன். இன்னும் குறுக்கெழுத்துப்புதிரை (குறுக்கால போறதுக்கு பேரு பூனை ஷ்ரேயா!) பார்க்காத வேற timezone வலைப்பதிவர்களை நினைச்சு இங்க விடைகளை வெளியிடாம என் வலைப்பதிவுல போட்டிருக்கேன். ஷ்ரேயா, கீழ்க்கண்ட முகவரிக்கு போய் எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க.

http://silandhivalai.blogspot.com/2005/08/blog-post.html
முதல்ல (கிட்டத்தட்ட) முடிச்சதுக்கு எனக்கு பரிசு வேணும் வேணும், ஆமா சொல்லிட்டேன்.

Unknown August 09, 2005 3:27 pm  

Suresh, I have sent the image to you. aana naan mudichachey!!!!

Anonymous August 09, 2005 3:40 pm  

shreya unga mail adress enna?

`மழை` ஷ்ரேயா(Shreya) August 09, 2005 4:00 pm  

விடையை இங்கே பின்னூட்டத்தில போடுங்க அல்லது சிலந்தி மாதிரி உங்கட பதிவிலயும் போடலாம்!

சிலந்தி - சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்தங்களுடன் மீண்டும் வலையேற்றுகிறேன். இப்ப மே.கீழ் 15க்கு க்ளூ இருக்கும். சரியா :O)

`மழை` ஷ்ரேயா(Shreya) August 09, 2005 4:26 pm  

திருத்திட்டு வலையேத்தினது வர்ற மாதிரித் தெரியல்ல. அதனாலே:

மேலிருந்து கீழ் 15க்கு க்ளூ: வள்ளல் ஒருவர்

பினாத்தல் சுரேஷ் August 09, 2005 4:44 pm  

தப்பு பண்ணிட்டேன் தப்பு பண்ணிட்டேன்..

நான் என்ற ஆணவம் இல்லாத காரணத்தால் தப்பு பண்ணிட்டேன்.

my id = sudamini at gmail dot com

last time, i left out the last I...

`மழை` ஷ்ரேயா(Shreya) August 09, 2005 5:19 pm  

அனுப்பிட்டேன் சுரேஷ்.

மற்றாக்களுக்கு எப்பிடிப் போகுது?? கஷ்டமா இருக்காது என்று தெரியும். :O)

தருமி August 09, 2005 7:22 pm  

துளசியை இவ்வளவு பிடிக்குமா?

பினாத்தல் சுரேஷ் August 09, 2005 8:02 pm  

என் விடைகளை இங்கே காணலாம்.

சில குறிப்புகள் : 24க்கு க்ளூ கொடுக்கப்படவில்லைம் எனவெ ஜோத்திகா என எழுதிவிட்டேன்:-)
14 - இடமிருந்து வலம் குறிப்பை சற்றே மாற்றி அமைக்க வேண்டும்: தமிழின் மிகச்சிறந்த வலைப்பதிவாளர் என:-)

ஷ்ரேயா, கேள்விகள் அமைக்கும் துறையிலேயே நானும் இருப்பதால், இது போன்ற ஒரு குறுக்கெழுத்தை வடிவமைப்பது எவ்வளவு கஷ்டம் என உணர்ந்தே உள்ளேன். நல்ல பணி. தொடரட்டும்.

பினாத்தல் சுரேஷ் August 09, 2005 8:03 pm  

http://tinypic.com/view/?pic=a9p7w8

கலை August 10, 2005 12:42 am  

புதிது புதிதாக சிந்தித்து, வித்தியாசமான வலைப்பதிவுகளை போடுகிறீர்கள் ஷ்ரேயா. வாழ்த்துக்கள். சிந்தனைச் சுரங்கம்தான் நீங்கள் :). எனக்கு இந்தக் குறுக்கால போற போட்டியைப் பார்த்தாலே தலை சுத்துது. நீங்க அதை எப்படித்தான் உருவாக்கினீங்களோ தெரியேல்லை. வலைப்பதிவாளர்கள் எல்லோரையும் தெரிந்திருக்காததால் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. (தெரிந்திருந்தால் மட்டும்..... என்று அங்கே ஏதோ முணுமுணூப்பு கேக்குதே, யாரது? ஷ்ரேயாவா? நான் எஸ்கேப்)

Unknown August 10, 2005 12:48 am  

ஆமாம். எனக்கும் குறுக்கெழுத்துப்புதிர் அமைத்த அனுபவம் இருக்கறதால அதுல இருக்கற கஷ்டம் தெரியும். நல்லா இருந்துச்சு.

Anonymous August 10, 2005 3:51 am  

Nice work Shreya. Check this out:http://www.edhelper.com/crossword.htm

Chandravathanaa August 10, 2005 7:00 am  

http://manaosai.blogspot.com/2005/08/blog-post_09.html

`மழை` ஷ்ரேயா(Shreya) August 10, 2005 8:52 am  

சுட்டிக்கு நன்றி பத்மா.

கலை(அக்கா) - தமிழ்மணமிருக்கப் பயமேன்???

பெ.சுரேஷ் - என்னது தமிழில் மிகச் சிறந்த வலைப்பதிவாளர் என்று குறிப்ப மாத்தணுமா! ஆசை தோசை..துளசி சண்டைக்கு வந்துடப்போறாங்க (பாத்து, கட்சியில முக்கிய புள்ளி அவ!)

24க்கும் உதவிக் குறிப்பை காணல்ல. இதான் சொல்றது .. அலுவலகத்துலேருந்து கள்ள வேலை செய்யக் கூடாது என்று...ஏனா? செய்வன திருந்தச் செய்ய முடியாதே!! :O)

மக்களே...மன்னிச்சுக் கொள்ளுங்க. மேலிருந்து கீழ், 24 க்கு க்ளூ: "யாழிசை"க்கும் வலைப்பதிவர்.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 10, 2005 8:59 am  

அச்சச்சோ...மேலிருந்து கீழ் 28க்கு குறிப்பைக் காணவில்லையே!

முதல் தரம் என்பதாலே அப்பிடி இப்பிடித்தான் இருக்கும்... கண்டுக்காதீங்க! ;O)

`மழை` ஷ்ரேயா(Shreya) August 10, 2005 9:21 am  

சில பல உதவிக்குறிப்புகள் இல்லாமலிருந்ததும், அதை இருத்தப் போய் இருந்ததை இல்லாமலாக்கியதும் என் பிழை. :O|

பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி.

பரிசு

விடைகள்:

இடமிருந்து வலம்:
1. சந்திரவதனா 4. கறுப்பி 5. துளசி 7. முகமூடி 11. ஆதிரை 13. குழலி 14. பெனாத்தல்சுரேஷ் 17. க்ருபா 18. சினேகிதி 19. டிசே 20. மரம் 21. மீனாக்ஸ் 22. பத்மா 25. குழைக்காட்டான் 26. காசி 28.நண்பன் 30. சாகரன்

மேலிருந்து கீழ்:
1. சயந்தன் 2. ரம்யா 3. தங்கமணி 5. முத்து 6.இளவரசி 8. ஜெயந்தி 9. உஷா 10. மூர்த்தி 12. டோண்டு 14.பெயரிலி 15. பாரி 17. தருமி 18. பொடிச்சி 20. மதி 23. கிஸோக்கண்ணன் 24. காயத்ரி 27. கலையரசி 28. நற்கீரன் 29. ராசா

சினேகிதி August 10, 2005 9:26 am  

ada ada Shreya aka... kurukala niraya perai poga vachirukiringa pola.nan than miss panitan

Ramya Nageswaran August 10, 2005 10:12 am  

நட்சத்திரமா ஆரம்பமே எங்க எல்லார் பெயரோடையும் ஆரம்பிச்சுடீங்க!! கலக்கல்!!

`மழை` ஷ்ரேயா(Shreya) August 10, 2005 10:30 am  

சினேகிதி - விடைகளைப் பார்க்காம விளையாடிப் பார்க்கலாமே.

நன்றி ரம்யாக்கா.

பெட்டகம்