ஒரு புத்தகத்திலிருந்து..

கெமரூஜ் உடனான தனது அனுபவங்கள் பற்றி Francois Bizot எழுதிய The Gate புத்தகம் வாசித்தேன். நான் வாசித்த மற்றைய போர்க்காலப் புத்தகங்கள் போல் இது இருக்கவில்லை. கெமரூஜினரால் சிறைப்பிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஒரேயொரு வெளிநாட்டவர் இவராம்.

கம்போடியாவை விட்டு நீங்கியதை இப்படிக்குறிப்பிடுகிறார்: வார்த்தைகளில் சொல்ல முடியாத மிகுந்த வலியினூடாக, பிறக்கும் ஒரு சிசுவைப்போல நான் வெளித்தள்ளப்பட்டேன்..(I was expelled, like the newborn, in the torments of an unspeakable pain).

கடைசியாய்ச் சொல்கிறார்:

But on this Earth, there is no place of permanent refuge

"ஆனால், இந்தப்பூமியில் பாதுகாப்பான இடமென்றொன்று நிரந்தரமாக இல்லை"

18 படகுகள் :

`மழை` ஷ்ரேயா(Shreya) September 14, 2005 1:56 pm  

ஆங்கிலத்தில் உள்ளவைகளின் (என்) தமிழ்ப்படுத்தல்களுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் எழுதியிருப்பதை விடச் சரியாக எப்படிச் சொல்லலாமெனச் சொல்லித்தாருங்கள். நன்றி.

ஜோ/Joe September 14, 2005 2:06 pm  

ஷ்ரேயா,
நான் கூட சமீபத்தில் 'The big brother' என்ற போல்பாட் பற்றிய புத்தகம் வாசித்தேன் .கம்போடியாவில் வேலை காரணமாக நிறைய நாட்கள் செலவிட்டுள்ளேன் .'Killing field' போன்ற படுகொலைக்களங்களை சென்று பார்த்தேன் .மக்களின் துயரத்தையும் நேரடியாக அறிந்திருக்கிறேன் .இது பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதலாமென்றிருக்கிறேன்.

Ganesh Gopalasubramanian September 14, 2005 2:18 pm  

ஷ்ரேயா !!!

அனுபவத்தால் கண்ட உண்மையாக இருக்கும்.

ஆனா பாருங்க எப்பவுமே சொந்த ஊருல கால வச்சதும் ஒருவித திமிரும் பாதுகாப்பும் உணரப்படுகின்றது. அது எனக்கு வாய்த்த அனுபவம்.

எனக்கு புரியுது உங்க மொழிபெயர்ப்பு :-))

`மழை` ஷ்ரேயா(Shreya) September 14, 2005 2:23 pm  

கட்டாயம் எழுதுங்க ஜோ. எனக்கு அங்கோர் வாட் போய்ப் பார்க்கணும் என்று தணியாத ஆசை. இந்த அஞ்சலீனா ஜோலி வேறே இன்னும் கிளறி விட்டுட்டாங்க.

`மழை` ஷ்ரேயா(Shreya) September 14, 2005 2:24 pm  
This comment has been removed by a blog administrator.
`மழை` ஷ்ரேயா(Shreya) September 14, 2005 2:25 pm  

//எனக்கு புரியுது உங்க மொழிபெயர்ப்பு :-))//

நன்றி கணேஷ் :O)

ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் ஊரில் (சொந்த ஊரேயானாலும்) பாதுகாப்பு?

ஜோ/Joe September 14, 2005 3:09 pm  

ஷ்ரேயா,
அங்கோர் வாட் பார்க்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது .கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்.அது பற்றியும் எழுதுகிறேன்.

Ramya Nageswaran September 14, 2005 3:25 pm  

ஷ்ரேயா.. துளசிதளம் தவிர மிச்ச விஷயங்கள் படிக்க உங்களுக்கு நேரம் இருக்கா?? :-)))

___________

நீங்க சொல்வதைப் பார்த்தால் அந்த புத்தகம் படிக்கும் தைரியம் எனக்கு வராதுன்னு நினைக்கிறேன்.

தருமி September 14, 2005 3:36 pm  

முதல் ஆங்கிலச் சொற்றொடொருக்குத் தந்துள்ள தமிழாக்கம் மிக மிக அழகு;பொருந்தியுள்ளது; மூலத்தைவிடவும் அருமை. ஆனால் இரண்டாவதற்கு அவ்வளவு நல்லா இல்லை; மேம்படுத்தவும் தெரியவில்லை. (பிறகு என்ன வந்தாச்சு பெருசா.. அப்டில்லாம் திட்டாதீங்க)

`மழை` ஷ்ரேயா(Shreya) September 14, 2005 3:51 pm  

//துளசிதளம் தவிர மிச்ச விஷயங்கள் படிக்க உங்களுக்கு நேரம் இருக்கா?? :-)))//

:O)

கண்ட காட்சிகள், நடந்தவைகளையெல்லாம் மிதமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். வாழ்க்கைத்தத்துவங்களும் ஆங்காங்கே சிந்தனையைத் தூண்டுகின்றன. சில சில இடங்களில் அவர் வர்ணிப்பது நேரே பார்க்குமாற் போல இருக்கிறது. கிடைத்தால் வாசியுங்கள்.

தருமி - நன்றி!

//(பிறகு என்ன வந்தாச்சு பெருசா.. அப்டில்லாம் திட்டாதீங்க//
நான் அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். நீங்களாகவே உங்களைக் கேட்டுக் கொண்டால் நான் என்ன செய்வது! :oP

துளசி கோபால் September 14, 2005 3:55 pm  

ஷ்ரேயா,

இது என்ன பார்த்தீங்களா?

ஜனங்க 'பெருமூச்சும், புகையுமா' விட்டுக்கிட்டு இருக்கு.

தருமி சொன்னதுபோல முதல் மொழிபெயர்ப்பு அருமை. ரெண்டாவது 'சரியா வரலை'. ஆனா எப்படி வரணுமுன்னு என்னக் கேக்காதீங்கோ ப்ளீஸ்.

`மழை` ஷ்ரேயா(Shreya) September 14, 2005 4:09 pm  

"ஜனங்களும்" அங்கே வர்றதினாலதானே என் "டேரா பத்தி தெரிய வருது & 'பெருமூச்சும், புகையுமா' வருது.. :O)

பெருந்தலைகள் ரெண்டுபேருமே சரியா வரல்ல என்டு சொல்லிட்டு, எப்பிடி எழுதணும் என்று சொல்லாமப் போறது நியாயமா? :O(

தருமி September 14, 2005 6:54 pm  

தருமிக்கு கேள்வி மட்டும்தான் கேக்கத் தெரியும்னு எல்லருக்குமே தெரியுமே! ஆனா, துல்சி..et tu, thulasi!?

Aruna Srinivasan September 15, 2005 12:56 am  

அது பாருங்க ஷ்ரேயா, ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஒன்பதுலே நான் டில்லிலேயிருந்து எழுதிகிட்டு இருந்தப்போ, ( ஐயையோ, இந்த மாதிரி எல்லாம் வயசானவங்கதானே பேசுவாங்க ??!!)

சரி. ஒண்ணுமில்லீங்க... 1989 ல் அங்கோர் வாட் கோவிலைப் புதுப்பிக்க ( Restoration works) பல டாலர் செலவில் ஆறு வருடத் திட்டம் ஒன்று இந்திய அகழ்வாராய்ச்சி வல்லுனர்களின் தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இது இப்போது முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அது தொடங்கப்பட்ட சமயம் இந்திய வல்லுனர்கள் உபயோகிக்கும் பாதுகாப்பு முறைகளே அந்த அற்புதமானக் கோவிலில் உள்ள சிலைகளுக்குக் கேடு விளைவிக்கலாம் என்று ஒரு சர்ச்சை எழுந்தது. ஆனால் பல வருடங்கள் கெமரூஜ் கொரில்லாப் போரினால் ஏற்பட்ட சேதங்கள் தவிர, மழைத்தண்ணீரிலும் கோவிலில் உள்ள கழிவு நீர் தடங்கள் Drains) அடைத்துக்கொண்டதால் தண்ணீர் தேங்கி ஏற்பட்ட சேதங்கள் இவற்றை சரிபடுத்துவது எவ்வளவு கடினம் என்று விளக்கி, தாங்கள் உபயோகிக்கும் முறைகள் பற்றியும் விரிவாக விளக்கினார் ஒரு அகழ்வாராய்ச்சி துறை அதிகாரி.

இந்தப் பதிவைப் படித்ததும் அந்த நினைவு வந்தது. அதான் மறுபடி ஆரம்பிச்சுட்டேன் - ஆயிரத்து தொள்ளாயிரத்து.....என்று :-)

`மழை` ஷ்ரேயா(Shreya) September 15, 2005 8:50 am  

தருமி, உங்களுக்கு கேள்வி கேட்க மட்டுந்தான் தெரியும். சரி ஒத்துக் கொள்கிறேன். நான் Sam uncle இடம் கேட்கிறேன்.. Sam uncle .. Sam uncle, 2வதா நான் "பெயர்த்திருக்கிறது" நல்லால்லே என்று தருமித் தாத்தா சொல்லிட்டுப் போறார். கூடவே துளசியும். அதனாலே நீங்க சொல்லுங்க, எப்பிடி சொன்னா நல்லா இருந்திருக்கும்? :O)

`மழை` ஷ்ரேயா(Shreya) September 15, 2005 8:54 am  

அருணா - இந்த அங்கோர் வாட் தொடர்புடைய ஆட்கள் நிறையப்பேர் இருக்கிறாங்க போலிருக்கே! :O)

அகழ்வாராய்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும். எப்பிடியாவது ஒரு (ஆராய்ச்சிக்) களத்துக்குப் போய்ப் பார்க்கிறதுதான் என்று தீர்மானித்திருக்கிறேன். நம்மூர் சம்பந்தப்பட்டதாய் இருந்தால் இன்னும் நல்லம்.

காம்போஜம் என்று ஒரு நாடு இருந்ததா வாசிக்கிறோம் தானே, அதே நாடுதானா இந்தக் கம்போடியா?
காம்போஜம் >> கம்பூச்சியா >> கம்போடியா???

வசந்தன்(Vasanthan) September 15, 2005 10:50 am  

ஷ்ரேயா,
'அங்கோர் வாட்' பற்றிய படங்களும் பதிவும் கண்ணன் இட்டிருந்தாரே பார்க்கவில்லையா?

`மழை` ஷ்ரேயா(Shreya) September 15, 2005 12:10 pm  

வசந்தன் - பாத்தனான் தான். அது எரியிற நெருப்பில எண்ணெயை வார்த்த மாதிரி! இன்னும் ஆவலைத் தூண்டீட்டுது.

பெட்டகம்