துக்கச்செய்தி

மலேசியாவிலிருந்து எழுதும் மீனாவின் தாயார் காலமானதாக நா.கண்ணனின் வலைப்பதிவில் அறியக்கிடைத்தது. மீனாவுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாக்களின் பிரிவு வலிக்கும். நிரந்தரப்பிரிவு இன்னும் அதிகமாகவே. என்னென்னவோ நினைக்கிறேன்..சொல்லத்தெரியவில்லை.

அம்மாவின் நினைவுகளும் பாசமும் மீனாவையும் குடும்பத்தாரையும் தேற்றட்டும்.

4 படகுகள் :

துளசி கோபால் September 08, 2005 2:47 pm  

ஷ்ரேயா,

அது நம்ம 'ரங்க மீனா'வான்னு சந்தேகமாஇருந்தது. கண்ணன்கிட்டேயே கேட்டிருந்தேன். அதுக்குள்ளே உங்க பதிவுலே இருந்து விளாக்கம் வந்துருச்சு.

வயசான சாவா இருந்தாலும் தாய், 'தாய்' இல்லையா?

மீனாவுக்கும் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த அனுதாபங்கள்.

என்றும் அன்புடன்,
துளசி.

`மழை` ஷ்ரேயா(Shreya) September 08, 2005 3:22 pm  

என்னால கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்ல இப்படியான இழப்பின் வலியை. தாங்குற சக்தி கிடைக்கட்டும்.

மரணம் பற்றின நம் தனிமடல் தான் ஞாபகம் வருது. :O(

Chandravathanaa September 08, 2005 7:33 pm  

ஆழ்ந்த அனுதாபங்கள்

வீ. எம் September 12, 2005 10:31 pm  

மீனாவுக்கும் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த அனுதாபங்கள்

பெட்டகம்