வணக்கம்,
இன்றைய அறிக்கை, வாசிப்பது நீங்கள்.
தென் துருவ வலைப்பதிவர் சங்கத்தின் சுயம்புத் (தான் தோன்றி) தலைவர் வசந்தனின் குணாதிசயங்கள் ஒரு அரசியல்வாதியினதைப் போன்றே இருப்பதைக் கண்டு தென் துருவ வலைப்பதிவர் பலரும்(!!!) அதிர்ச்சியடைந்துள்ளதாக அறியப்படுகிறது.
கடந்த மாதம் மெல்பேண் நகரில் இவர் கூட்டிய சந்திப்பொன்றில் தென் துருவ வலைப்பதிவர் சங்கத்திற்குத் (தான் தோன்றி) தலைவராக தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டது யாவரும் (சரி சரி..அநேகமானோர்) அறிந்ததே! இதனையடுத்து ஏனைய நகரங்களில் இருப்பவையனைத்தும் கிளைச்செயலகங்களெனவும் அவை சந்திப்புகளை நடத்த முன்னர் தம்மிடம் அனுமதி பெற வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார். இவர்களது அறிவிப்புக்கு முதலேயே சந்திப்பொன்றை க்றைஸ்ட்சர்ச் நரகத்தில் மன்னிக்கவும் நகரத்தில் ஒழுங்கு செய்திருந்த துளசிக்கு இது பேரிடியாக அமைந்தது. துளசி, தென் துருவத்திலிருந்து வலைப்பதிவுலகிற்கு அளப்பரிய சேவையாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரால் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்திப்பைக் குழப்ப/திசைதிருப்ப சிட்னியில் ஒழுங்கு செய்யப்பட்ட வலைப்பதிவர் சந்திப்பொன்றின் சூத்திரதாரி தான் தோன்றி தலைவர் வசந்தனேயாவார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. தன்னிடம் அனுமதி பெறாமல் வலைப்பதிவர் சந்திப்பொன்று தென் துருவத்தில் நடக்கவிருந்தமை இவருக்குப் பொறுக்கவில்லை என மேலும் அறியப்படுகிறது. (சிட்னி சந்திப்பைப் பற்றியதொரு விபரம் பிந்தியதொரு அறிக்கையில் தரப்படும்)
இச்சந்திப்பினை உண்மையான ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த ஷ்ரேயாவுடன் தனிமடலில் தொடர்பு வசந்தன் அவர் 16ம் திகதி இரவு சிட்னி வருவதாயும் தொலைபேசுவதாயும் தெரிவித்திருக்கிறார். அச்சந்திப்பிற்கான நாள், நேரம், இடம் என்பவற்றிற்குரிய தீர்மானங்களை வசந்தனிடமே விட்டிருந்த ஷ்ரேயாவுக்கு நேற்றுக் காலை மின்னஞ்சலில் அதிர்ச்சி காத்திருந்தது. அதன் உள்ளடக்கத்தைப் பற்றி ஷ்ரேயா சொன்னதாவது:
முதலில் தான் வந்து சிட்னியில் ஒரு கிழமை தங்கப்போவதாயும், எப்போது சந்திப்பை வைத்துக் கொள்ளாலாமென்றும் கேட்டார். எனக்கு வசதியான நேரத்தை அவருக்குத் தெரியப்படுத்தினேன். தலைவர் என்ற மரியாதையிலும், சிட்னி விருந்தோம்பற் பண்பிலும் சந்திப்பைக் குறித்த கடைசித் தீர்மானங்களை அவரிடமே விட்டிருந்தேன். யோசித்துச் சொல்வதாய்ச் சொல்லியிருந்தார். இந்த தகவற் பரிமாற்றமெல்லாம் தனிமடலிலேயே நடைபெற்றது. இம்மடல்களிலே தனது ஆலோசகர்கள் சரியில்லை எனவும், அவர்களை @#$%^!* எனவும் விளித்திருந்தார். சங்கத்தின் தலைமைக் குழுவில் இல்லாத ஏனைய உறுப்பினர்களைச் சந்திப்பதில் வசந்தனுக்கிருந்த தயக்கம் அவரது தனிமடலில் நன்கு வெளிப்பட்டது. மேலும் "தலைவர்" என்கிற கெறுவில் தான் அவரது மடல்களும், தொடர்பாடலும் அமைந்திருந்தன.
தனது பாதுகாப்பிற்கு சிட்னியில் உத்தரவாதமில்லையெனவும் தனக்கு இப்போது சோதனைக் காலமென்ற படியாலும் தான் சிட்னிக்கு வருவதற்கில்லை எனவும் தனக்குப் பதிலாக @#$%^!* என ஏளனமாகக் குறிப்பிடப்பட்ட ஆலோசகர்/ சங்கச் செயலாளர் சயந்தனை அனுப்பி வைப்பதாயும் வசந்தன் அறிவித்துள்ளார். க்றைஸ்ட்சர்ச் மாநாட்டிற்கு ஆதரவாக நடந்து கொண்டமைக்காக சிட்னி சந்திப்பு ஏற்பாட்டாளரைக் குறித்து அதிருப்தி கொண்டிருந்த வசந்தன், சிட்னி சந்திப்பைப் பற்றித் தொடர்ந்து மடல்களெல்லாம் அனுப்பியது, அவரைக் குழப்பி, ஏமாற்றி, அவர் முகத்தில் கரி பூசுவதற்காகவே எனப் பரவலாக நம்பப்படுகிறது.
சங்க உறுப்பினர்களைச் சந்திப்பதில் தயக்கமும் சிட்னி அலுவலகம் அவரது பாதுகாப்பை உறுதி செய்யாதது போன்றதொரு பொய்மைத் தோற்றமும் காட்டும் தலைவரின் வார்த்தைகள் குறித்து கிளைச் செயலகங்கள் விசனம் தெரிவித்துள்ளன. தலைவருக்குக் கண்டனம் தெரிவிக்கும் அதேவேளை அவருடைய சோதனைகளை எதிர்கொள்ள நல்வாழ்த்துக்களையும், சிட்னிக்கு வருகை தரவிருக்கும் அன்பிற்கும் பெருமதிப்புக்குமுரிய செயலாளர் சயந்தனை மகிழ்வுடன் வரவேற்பதாகவும் சிட்னி அலுவலகம் வெளியிட்டுள்ள இவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
இக்கண்டன அறிக்கை வெளியிடப்படுகிறதெனத் தெரிய வந்ததும் வசந்தன் சிட்னிக் கிளையலுவலகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்வறிக்கை வெளிவராது தடுக்க முயற்சித்தார். அது கைகூடாமற் போனதினால் தனது பெயரில் களங்கமேதும் வந்து விடாவிடாதிருக்கும் பொருட்டே (சுயநல நோக்கிலேயே) தனது வலைப்பதிவில் ஒரு ஒரு கற்பனையான உள்ளிடுகையை இட்டுள்ளார் என்பதை இத்தால் சிட்னி கிளையலுவலகம் உறுத்திப்படுத்துகிறது.
23 படகுகள் :
ஆகா,
சபாஷ் சரியானபோட்டி.
அதுசரி, அந்தச் செயலாளரை எப்படிக் கேவலமான வார்த்தையால் திட்டினார் என்று தமிழில் போடலாமே?
நாங்களும் சேர்ந்து திட்டலாம். அதுக்குத்தான்.
எந்தப்பக்கம் உண்மையெண்டு தெரியேல.
ஆனாலும் பெண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற என் நீண்டகாலக் கணிப்பில் உங்கள் கதையை நம்புகிறேன்.
சிட்னியில் மாநாடு நடக்கப்போகுதா இல்லையா? அத முதலில சொல்லுங்கோ.
//பெண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற என் நீண்டகாலக் கணிப்பில்//
நன்றி கொழுவி.
சந்திப்பில் உண்மையான ஆர்வத்துடன் கலந்து கொள்ள (என நம்பப்படுகிறது!!) நினைத்திருக்கும் செயலாளர் வசந்தனுடனான சிட்னி வலைப்பதிவர் மாநாடு இந்த வார இறுதியில் நடைபெறவிருக்கிறது.
///சந்திப்பில் உண்மையான ஆர்வத்துடன் கலந்து கொள்ள (என நம்பப்படுகிறது!!) நினைத்திருக்கும் செயலாளர் வசந்தனுடனான சிட்னி வலைப்பதிவர் மாநாடு இந்த வார இறுதியில் நடைபெறவிருக்கிறது.
///
குழப்பிறியளே?
செயலாளர் வசந்தனா சயந்தனா?
சிட்னி வாறது வசந்தனா சயந்தனா?
பதிவில ஒரு மாதிரியும் பின்னூட்டத்தில ஒரு மாதிரியும் கதைக்கிறியள்.
அல்லது அவங்கள் ரெண்டுபேரும் ஒராள் எண்டத நீங்களும் சேந்து மறைக்கிறியளோ?
அல்லது நீங்களும் அதே ஆள்தானோ?
இப்பதானே பெண்கள் பொய் சொல்ல மாட்டினம் எண்டு ஒரு 'கதை'விட்டன்.
அதுக்குள்ள சறுக்கிப்போட்டியளே?
இப்பவும் என்ர 'கூற்றில' எனக்கு நம்பிக்கையிருக்கிறதால, நீங்கள் பெண்தானோ எண்ட சந்தேகம்தான் வந்திருக்கு.
என்னத்தைச் சொல்ல,
நீங்களும் உந்தக் கோமாளிக் கூட்டத்தோட சேந்திட்டியளோ.
இனி வலைப்பதிவுகள் உருப்பட்ட மாதிரித்தான்.
கொழுவி மன்னிக்க வேண்டும். செயலாளர் சயந்தன் என்றிருந்திருக்க வேண்டும். தலைவரைப் பற்றிய ஒரு திடுக்கிடும் செய்தி எனக்குக் கிடைத்துள்ளது. அதை வெளியிடுவது எனக்குப் பாதுகாப்பல்ல என பயமுறுத்தப்பட்டுள்ளேன். அந்தப்பதட்டத்தில் உங்கள் பின்னூட்டத்திற்கான பதிலை இடுகையில் பெயர்க்குழப்பத்தை ஏற்படுத்தி விட்டேன். தலைவர்: வசந்தன், செயலாளர்: சயந்தன்.
//அவங்கள் ரெண்டுபேரும் ஒராள் எண்டத நீங்களும் சேந்து மறைக்கிறியளோ? அல்லது நீங்களும் அதே ஆள்தானோ?//
அவர்களிருவரும் (சயந்தன் & வசந்தன்) ஒருவரா என்றெனக்குத் தெரியாது. நான் அவர்களல்லள்.
அதெல்லாம் இருக்கட்டும், இப்படி அறவிப்ப ஒழுங்கா பாக்காம இருந்தா எப்படி?இப்டில்லாம் இருந்தா அப்புறம் ஒழுங்கு நடவடிகை எடுக்க வேண்டியிருக்கும்
சபாஷ்! அப்படிப்போடு அருவாளை!!!
எல்லாம் இங்கே நியூஸி மகாநாடு கூடப்போகுதேன்ற வயித்தெரிச்சல்:-))))
தென் துருவத்தையே எடுத்துக்கிட்டாங்களாமே... ஹே....
ஆனா ஒண்ணு. தமிழர்க்குரிய 'உண்மையான குணத்தை' வெளியே காட்டிட்டாரேன்னு இருக்கு:-)))))))))))))))))))))))
கொழுவி,
//பெண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற ..//
அப்படிச் சொன்னாலும் அந்தப் பொய்யை பொய் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிலே உண்மைபோலவே சொல்வார்கள்:-)))))))
வசந்தனின் பயமுறுத்தல் கடிதத்தை வெளியிடலாமா என்று ஆலோசனை நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நியுஸி வலைப்பதிவர்களின் ஆதரவு தராப் போக்கு மிகவும் கவலை தருவதாக இருக்கிறது. :O(
//எல்லாம் இங்கே நியூஸி மகாநாடு கூடப்போகுதேன்ற வயித்தெரிச்சல்:-))))//
துளசி நீங்க அறிக்கையை சரியா வாசிக்கலையா? வயிற்றெரிச்சல் தலைவருக்குத்தான்!
//அப்படிச் சொன்னாலும் அந்தப் பொய்யை பொய் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிலே உண்மைபோலவே சொல்வார்கள்:-))))))) //
u too துளசி????? :O|
என்ன நடக்குது இங்கே?
செயலாளர் வாங்கோ.
தலைவரிடமிருந்து வெளிப்படுவன சில இங்கே பகிரங்கப்படுத்தப் படுகுது அவ்வளவுதான்.
நீங்களும் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்றன்.
//நீங்களும் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்றன்.
//
பொறுங்கோ.. தலைவரை கேட்டுட்டு..
//பொறுங்கோ.. தலைவரை கேட்டுட்டு//
உங்களை @#$%^!* என்று தலைவர் குறிப்பிட்ட பின்னுமா சயந்தன்?
----------------------------------------------------------------------
பிந்திய செய்தி: நிறைவேற்று அங்கத்தினரின் செயற்பாடுகளில் அதிகாரம் செலுத்தும் தலைவரும் அதை உணராத அக் குழுவினரும்!
ஷ்ரெயா,
//u too துளசி????? :O|//
நம்ம ரெண்டு பேரையும்தவிர, என்னத்துக்கு வம்பு வலை பதியுற மாதர்குல மாணிக்கங்களைத்தவிர ன்னு சேர்த்திருக்கணும். விட்டுப் போச்சு:-)))))
//வயிற்றெரிச்சல் தலைவருக்குத்தான்! //
தலவர்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கறவருடைய வேசம் கலைஞ்சு போச்சோ?
//நம்ம ரெண்டு பேரையும்தவிர, என்னத்துக்கு வம்பு வலை பதியுற மாதர்குல மாணிக்கங்களைத்தவிர//
அதானெ பார்த்தேன்! :OD
//தலவர்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கறவருடைய வேசம் கலைஞ்சு போச்சோ? //
பின்னே! எனக்குப் பயமுறுத்தல் எல்லாம் விடுத்திருக்கிறாரே! நியூஸீ மாணிக்கமே, நீங்க சொல்லுங்க, இது நியாயமா? வலைப்பதிவு தர்மத்துக்கு அடுக்குமா (பத்திரிகை தர்மம் என்று நிறையத்தரம் சொல்லியாச்சே!!)
:))))) பதிவு கலக்கல்.
//அப்படிச் சொன்னாலும் அந்தப் பொய்யை பொய் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிலே உண்மைபோலவே சொல்வார்கள்:-))))))) //
ஏன் பாவம் ஷ்ரேயாவை பற்றி இப்பட் சொல்றீங்க துளசியக்கா... இது நல்லாவா இருக்கு.. :)
நாரா,,.,.,, நாரா....
இல்ல தெரியாமதான் கேக்கறேன்,எ ன்ன நடக்கிறது இங்கே? :-)
வீ...ஈஈ.. எம்ம்ம்ம்ம்!!!!!
உங்களுக்கே நல்லாருக்கா? :oD
அது ஒன்டுமில்ல க்ருபாண்ணே, அறிக்கையையும், அதில தந்திருக்கிற சுட்டிலயும் போய் வாசிச்சா என்ன நடக்குது என்று விளங்கும். ;O)
வசந்தன்.சயந்தன்.ஷ்ரேயா
- சில வலைக்குறிப்புக்கள்
எழுதியவர் வசந்தனாசாமி
என்று சாதாரணன் சொல்கிறார்
:OD
Post a Comment