ஈழநாதனின் பதிவிலிட்ட பின்னூட்டத்தை இங்கும் பதிக்கிறேன்.
தமிழ்மணத்திலே பலரும் வழங்குவர் பதிவுகளை வாரி
வாசிக்கையிலே இருக்கையை விட்டெழுவார் மேலதி காரி
சாளரத்தைச் சொடுக்காவிட்டால் மாறி
கண்மணியே - வேலையிலே எல்லாம் நாறிவிடும் நாறி!
இன்னுமொன்று:
இன்னொரு வெள்ளியுடன் வருது வார இறுதி
இரண்டே நாளில் திங்கள் வருவதும் உறுதி
அளவின்றிச் சோமபானம் பருகி
புதுக்கிழமையும் உடல்கள் தள்ளாடும் வெறி பெருகி
குடிப்பது ஏனென்றால் stressஸை இளக்க
கைமேற் பலன் தலைவலி மண்டை பிளக்க!
பி.கு: இந்த நேரிசை , சொத்தி இசை எண்டெல்லாம் சொல்லுறாங்களே, அப்பிடியெண்டா என்ன?
(பரவாச்)சோதியில் நானும்!
Posted by
`மழை` ஷ்ரேயா(Shreya)
23 September 2005
வகை: இப்பிடியும் நடந்துது
14 படகுகள் :
ஷ்ரேயா,
நல்லாத்தானே இருந்தீங்க? இப்ப என்ன ஆச்சு?
உடம்பு சுகமில்லையா?
தமிழ்வலைப்பதிவுகளுக்குச் சோதனைக்காலம் தொடங்கீட்டுதெண்டு நினைக்கிறன்.
//இந்த நேரிசை , சொத்தி இசை எண்டெல்லாம் சொல்லுறாங்களே, அப்பிடியெண்டா என்ன? //
உதுமட்டுமில்ல,
நேர், நிரை,
தேமா, புளிமா,
கருவிளம், கூவிளம்,
தேமாங்காய், புளிமாங்காய்,
பூவிளங்காய், கருவிளங்காய் (விளாங்காயில்ல),
தேமாங்கனி, புளிமாங்கனி,
கருவிளங்கனி, கூவிளங்கனி,
(தேமாந்தண்பூ, புளிமாந்தண்பூ எண்டு நாலசைச்சீர் பதினாறு வரும்)
காசு, பிறப்பு.
எண்டெல்லாம் இருக்கு.
உதுகளப் பாத்தா உங்களுக்குக் கவிதை எழுதிற எண்ணமே போயிடும். பேசாமல் வாழைக்காய் கத்தரிக்காய் எண்டு ருசியாச் சமைச்சுச் சாப்பிடுங்கோ.
உதையும் தாண்டி யாப்புப்படிச்சுக் கவிதை எழுதிறதெண்டு வெளிக்கிட்டா, அதுக்கும் ஒரு வரி சொல்லிவச்சிருக்கினம் எங்கட மூதாதையர்.
"காரிகை படித்துக் கவிபாடலிலும்
பேரிகை கொட்டிப் பிழைத்தல் நன்று"
கவிதையெண்டு எழுதவெளிக்கிட்டா பேரிகைகொட்டிற சத்தம் மாதிரித்தான் கிடக்கெண்டது வேற விசயம்.
நான் மேலபோட்ட விளக்கத்துக்கும் நீங்கள் பயப்பிட்டுப் பின்வாங்கேலயெண்டாச் சொல்லுங்கோ இன்னும் கொஞ்ச விசயங்கள எடுத்துவிடுறன். எப்பிடிப்பட்டாவது உங்கள யாப்புப் படிச்சுக் கவிதை எழுத விடுறேலயெண்டதில நான் உறுதியா நிக்கிறன்.
மீறி எழுதினா 'எங்கள்' பாணியிலயே அதை எப்பிடி நிப்பாட்டுறதெண்டு எங்களுக்குத் தெரியுமெண்டதச் சொல்லி வைக்கிறன்.
குறைந்தபட்சம் செயலாளர் 'மீண்டு' வரும்வரைக்காவது வாயப்பொத்திக்கொண்டு இருக்கிறது நல்லது.
துளசி - பூரணை இப்பத்தானே கொஞ்ச நாளைக்கு முதல் முடிஞ்சது! அதனுடைய விளைவுகள் இன்னும் ஓயல்ல.
அதுசரி! நீங்களும் "எடுத்து விடுறது"!!
வசந்தன் - மேல சொன்ன விளாங் காய் கனியெல்லாம் பற்றிப் படிப்பியுமன்; பாப்பம்.. கொஞ்சமாவது விளங்குதோ என்டு! :O)
செயலாளர் எப்ப "மீண்டு" வந்து.. (மிச்சத்தைச் சொல்லாம விடுறன்! அதையும் சொல்ல வேண்டிக்கிடக்கு!:O) )
//விளாங் காய் கனியெல்லாம் பற்றிப் படிப்பியுமன்// & //விளங்காய், கருவிளங்காய் (விளாங்காயில்ல)//
என்ட பிழை. சரியா வாசிக்கேல்ல. :O(
விளங்காமல் போகும் என்டதுக்காகவே "விளங்காய்" என்டு வைச்சிருக்கோ பெயரை?
:)) குறும்பா நல்லாயிருக்கு. எப்ப மேலதிகாரியிட்டை மாட்டப் போறீங்க எண்டுதான் தெரியேல்லை.
விளங்காய்.... ம்ம்ம்ம்ம் எனக்கும் விளங்கேல்லை.
//நல்லாத்தானே இருந்தீங்க? இப்ப என்ன ஆச்சு//
kali thinna effect .. correct a shreya??
வசந்தன் இந்த யாப்பை மனனம் செய்ய ஒரு பாட்டு போல சொல்லி தருவாங்களே நினைவிருந்தால் சொல்லுங்களேன். 7-8 வகுப்புகளில் படித்தது. மறந்துவிட்டது. அப்பாவும், அம்மாவும் ராகத்தோடு சொல்லிகொடுத்தார்கள்.
வேறு யாருக்காவது தெரிந்தாலும் சொல்லுங்களேன்....
கலை - மாட்டாம இருக்க வாழ்த்துக்கள் என்டு சொல்லுவீங்க என்டு பாத்தா நீங்கள் இப்பிடிச் சொல்லுறீங்களே! நியாயமா?தலைக்கு மேல பறக்கிற தேவைதைகள் அப்பிடியே நடக்கட்டும் என்டு நீங்க பின்னூட்டத்தை தட்டச்சேக்க சொல்லிப்போயிருந்தா? :O(
வீ.எம்.. இந்த "களி"யாட்டத்துக்கு நான் வரல்ல. :O)
சோழநாடன் - எங்களுக்கு இதெல்லாம் பள்ளிக்கூடத்தில சொல்லித்தந்த ஞாபகமில்ல. உயர்தர(A/L) தமிழ் வகுப்பில தான் சொல்லிக்குடுப்பாங்க என்டு நினைக்கிறன்.
மழையக்கா,
எங்களூரில் அசையெல்லாம் மேநிலைப்பள்ளியிலே சொல்லித் தந்தார்கள்.
எனக்கும் ஒரு வாத்தியார் கிடைச்சிருக்கிறார்! அவரிட்டதான் படிக்க ஆரம்பிச்சிருக்கிறன்.
Post a Comment