பாட்டொன்று கேட்டேன்..

பிரபாவிடம் அல்ல.(கேட்க வேண்டிய ஒரு பாடல் இருக்கிறதுதான்..) :O)

நான் சொல்ல வந்தது யூரோவிஷன் பாட்டுப்போட்டி. மே 12ம் திகதி போட்டியில் சேர்பியா வென்றுமாயிற்று. எங்களூரில் நேற்றைக்கும் இன்றைக்குமாகத்தான் SBS ஒளிபரப்புகிறது. எனக்குப் பிடித்திருந்த பாடல் 6ம் இடம் கிடைத்த பல்கேரியாவினுடையது. டம் டம்மென்று நல்ல அடி.. நீங்களும் பாருங்களேன்:


(மு.பி.கு: பயணக்கதையை அடுத்த பாகத்தோடு முடிக்கிற எண்ணம், சினேகிதி வேறே ஏன் இன்னும் விசரியாவே இருக்கிறீங்க என்றும் கேட்டுவிட்டா.. கெதியில பதிவுகளோட வாறேன். )

13 படகுகள் :

துளசி கோபால் May 14, 2007 9:11 am  

என்ன ரொம்ப நாளா ஆளைக் காணொம்?

`மழை` ஷ்ரேயா(Shreya) May 14, 2007 9:24 am  

அலுவலகத்துலே வேலை செய்ய வேண்டியதாப் போச்சு! :O(

கஸ்தூரிப்பெண் May 14, 2007 9:34 am  

பாட்டு கேட்க முடியல, அடிக்கறதப்பார்த்து அனுபவிக்க வேண்டியததுதான்.

கானா பிரபா May 14, 2007 9:40 am  

நீங்கள், செல்லி, யோகன் அண்ணை, சிறீ அண்ணை எண்டு ஆளை ஆள் பார்த்துக் காணாமல் போனவுடனை என்னமோ ஏதோ எண்டு யோசிச்சன். சகோதரங்கள் அடிக்கடி வந்து தலையைக் காட்டுங்கோ, இல்லாட்டி கொழுவியிற்ற சொல்லி தேடவேண்டியிருக்கும்.

`மழை` ஷ்ரேயா(Shreya) May 14, 2007 10:03 am  

பிரபா - கொழுவியார் என்ன ஹெலியிலயா தேடுதல் நடத்துவார்? :O))

கஸ்தூரிப்பெண் - தனிமடல்லே சுட்டி அனுப்புறேன் பாருங்கோ. இல்லாட்டி youtubeஇல Eurovision 2007 Bulgaria என்று தேடினால் கிடைக்கும்.

Anonymous May 14, 2007 10:13 am  

//பிரபா - கொழுவியார் என்ன ஹெலியிலயா தேடுதல் நடத்துவார்? :O))//

அப்பா நினைச்சால் வீட்டுக்கு முன்னாலயும் பிளேனை கொண்டு வந்து நிப்பாட்டுவார் தெரியுமோ..?

மதி கந்தசாமி (Mathy Kandasamy) May 14, 2007 11:48 am  

suprise! that's my favourite too.

-Mathy

மதி கந்தசாமி (Mathy Kandasamy) May 14, 2007 11:52 am  

//நீங்கள், செல்லி, யோகன் அண்ணை, சிறீ அண்ணை எண்டு ஆளை ஆள் பார்த்துக் காணாமல் போனவுடனை என்னமோ ஏதோ எண்டு யோசிச்சன். சகோதரங்கள் அடிக்கடி வந்து தலையைக் காட்டுங்கோ, இல்லாட்டி கொழுவியிற்ற சொல்லி தேடவேண்டியிருக்கும். //

ஸ்ஸ்ஸ்ப்பா.. கண்ணைக்கட்டுதே! ;)


:D இன்னொரு வானர.. சொறி, சகோதரம்!

`மழை` ஷ்ரேயா(Shreya) May 14, 2007 12:44 pm  

அப்பு.. ராசா! கொழுவியின்ட மூத்த பெடி.. உங்கடை அப்பா என்ட வீட்டுக்கு முன்னால கொண்டு வந்து நிறுத்திறதெண்டால் விளையாட்டு விமானந்தான் நிறுத்தலாம்.. பலகணியில அவளவு்தான் இடமிருக்கு.

`மழை` ஷ்ரேயா(Shreya) May 14, 2007 12:46 pm  

மதி :O))

உங்கட கீரைப் பதிவை ஒண்டோ ரெண்டு கிழமைக்கு முன்னம் பாத்தனான்.. ஆய்ஞ்சு முடிச்சிட்டீங்களா?

Anonymous May 14, 2007 1:17 pm  

பாடுற பாப்பாவாவை பாத்து என் மனசு டம்டம் எண்டு அடிக்கு இதை தாத்தாவிடம் சொல்லவேணாம்

தருமி May 14, 2007 1:55 pm  

என்ன ரொம்ப நாளா ஆளைக் காணொம்?

என்று துளசி கோபால் சொல்கிறார்.//

தருமியும்தான்!

`மழை` ஷ்ரேயா(Shreya) May 17, 2007 7:11 pm  

அலுவலகத்துலே வேலை செய்ய வேண்டியதாப் போச்சுங்க தாத்தா! :O(

பெட்டகம்