விசரியென்கிற நான்...

விளையாடக் கூப்பிட்ட ராதா ஸ்றீராம், பிரபா, மலைநாடருக்கு நன்றி.. விசர்க்குணங்கள் இருக்குது என்டு தெரிஞ்சுதான் கூப்பிட்டிருக்கிறீங்க போல!! :O))

முதல்ல விளையாட்டுக்கு ஆள் சேர்த்திட்டு வாறன்..

யோகன் (பாரிஸ்)
சினேகிதி
மதி
கலை
அஞ்சலி

தங்களது சித்திர விசித்திர குணாம்சங்களைச் சொல்லுமாறு மேற்கூறியவர்களை இத்தால் அழைக்கிறேன்.


எனக்கு இருக்கிற சில விசித்திர குணம் (என்டு எனக்குப் படுபவை)

5. எதாவதொன்றில் ஆர்வம் வந்தால் அதுவே கதி. எப்படியும் 5- 6 வாரமெடுக்கும் அந்த அலை ஓய! பிறகு இன்னொருமுறை அதிலே ஆர்வம் வரும் வரை திரும்பிப் பார்ப்பதேயில்லை. மாறாத ஆர்வம் சிலவற்றில் இருக்கிறது. உதாரணத்துக்கு:

* ஆவணப்படங்கள் கண்டால் பார்க்கவே வேண்டும். வேற ஒன்றும் அந்த நேரத்தில் ஓடாது. பார்க்க முடியாவிட்டால் பதிவு செய்து பிறகு பார்ப்பேன். தொ.காவில சில நிகழ்ச்சிகளை அவற்றின் தலைப்பு/முடிவு இசைக்காகவே பார்க்க ஆரம்பித்ததும் உண்டு. (Sitting Ducks சலனக் கேலிச்சித்திரம், House தொடர்.. இன்னும் சில நிகழ்ச்சிகள்). தொ.கா. நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு அடிமையாகவே கிடப்பதும் ஒரேயடியாய் அவற்றைப் பார்ப்பதை நிறுத்துவதும் உண்டு.

* அனுப்பும் வாழ்த்து மடல் அனேகமாக நானே செய்ததாய் இருக்கும். இதற்காகவே, காண்கிற பூக்கள், வித்தியாசமான அமைப்புடைய இலைகள் சேகரிப்பேன். பேரங்காடிக்குப் போய் என்னைத் தவற விட்டால் வந்த வழியில் எங்காவது புத்தக/கைவினைப் பொருள் கடை இருக்கிறதா என்று பார்த்து அதற்குள் நுழைந்தால் என்னைக் கண்டு பிடிக்கலாம். அந்தளவு புத்தக/கைவினை வெறி.


4. கோவம் வரும். ஏன் எதுக்கெண்டெல்லாம் இல்லை. சுள்ளென்று எரிந்து விழுவேன். ஆனால் மற்ற நேரங்களில், அமைதியின் உருவமாய் இருப்பவர்களுக்கே கோவம் வரும் சந்தர்ப்பத்தில், எனக்கே ஆச்சரியம் வரும் வகையில் அமைதியாய் பொறுமையாய் பொறுமையின் சிகரம் ஒரு எருமையாய் இருப்பேன். ஆக, கோவம் வரும். ஆனா எப்ப என்டு தெரியாது.

குறிப்பாக எரிச்சல் வருவது மேற்கத்தேய 'பெண்' வரையறையை தங்களுக்குக் கற்பித்துக் கொண்ட பல்கலைக் கழகம்/வேலை செல்லும் இங்கிருக்கும் பெண்களிடம்(அறிவு சார்பாய் இல்லாமல் தோற்றத்தில் அதிக ஈடுபாடு கொள்வது அதைக் கொண்டே மற்றவர்கள் மதிப்பிடுவது என்பதைச் சொல்கிறேன்.). உடைகளுக்கான கடைகளை விட புத்தகக் கடை பிடிக்கும் என்றும் பேருந்தில் நான் சுவர்ப்பூச்சு கொள்கலன்கள், உலக்கை மற்றும் தகரம் கொண்டு போனதையும் சொல்லி (முழுக்க முழுக்க "நான் எனது தேவைக்காக செய்திருக்கிறேன் பார், ஒரு வெட்கமும் இல்லை" என்று காட்ட என்று சொல்லிக் கொண்டாலும், அப்படிப்பட்ட தேவைகள் இங்கு 99% பேருக்கு வராது என்பதும் நினைவுக்கு வரும்) அவர்கள் முகம் ஆச்சரியத்தில் விரிவதைப் பார்க்க & அவர்களுடன் தர்க்கித்து கற்பிதங்களை உடைக்கப் பிடிக்கும்.


3. சில இடங்களுக்கு முதல் முறையாகப் போனாலும் அவ்விடத்திற்கு முதலும் வந்திருந்த மாதிரித் தோன்றும். நண்பர்களிடம் சொன்னால் போன பிறப்பில் வந்திருப்பாய் என்று கேலி பண்ணுவார்கள். ஏனோ தெரியவில்லை பழைய காலத்து வீடுகள் கட்டிடங்கள் என்பவற்றிற்குப் போனால் அதிகமாகத் தோன்றும். வந்த மாதிரி இருக்கிறது தானே என்று அவ்விடத்தின் உள்ளமைப்புப் பற்றிக் கேட்டால் அம்போ! ஆக வெளியில மட்டும் பார்த்துப் போயிருக்கிறன் போல போன பிறப்பில!!! :O\


2. முந்தினதின் நீட்சியாக யாரைப் பார்த்தாலும் முதல்லே எங்கேயோ கண்ட மாதிரி இருக்கே என்று யோசிப்பது. எப்படியும் இதுவரை வாழ்நாளில் சந்தித்த/பார்த்திருந்த ஒருவருடன் புது முகத்தை ஒப்பிட்டுக் கொள்வது. அப்படி யாரையும் ஒத்திராத முகமா? கண்ணையோ மூக்கையோ காதையோ நெற்றியையோ ஒப்பிடத் தொடங்குவேன்!! புத்தம் புதிதாயே முகம் இருந்தால் மனதில் தேக்கிக் கொள்வேன்.. இன்னொரு ஆளைச் சந்தித்தால்/பார்த்தால் ஒப்பிடுவதற்கு!! :O))

இந்த வியாதி வர வர முற்றுகிறது என்று நினைக்கிறேன்.. வார இறுதியில் சந்தித்த ஒரு வயதுக் குட்டிப் பெண்ணைப் பார்த்து இவளை மாதிரியே யாரைத் தெரியும் என்று யோசித்து, கடைசியில் கண்டு பிடித்தேன்!!!


1. யாரோட கதைச்சாலும் அவங்கட வட்டார வழக்கில/ வேற்று நாடாயிருந்தா அந்த அக்சன்ற்றுடைய ஆங்கிலம் கதைப்பது. மாற்ற வேண்டும் என்டு முயற்சித்திருக்கிறேன். ஆனாலும் கவனிக்காம விட்ட பொழுதொன்றில மூளையும் குரல்வளையும் சதி பண்ணி விடும். சீனாக்காரனிட்டக் கதைச்சா அவன் சொல்லுற மாதிரியே "த்ரீ"க்குப் பதிலா "ட்ரீ/ட்லீ"யும், "ப்ரைட் ரைசு"க்குப் பதிலா "ப்லை லை" யும் தான் என்ட வாயில இருந்து வரும். இதே இத்தாலியனோட என்டா "இட்" "இத்" ஆகிறதும் நடக்கும். வேலையிடத்திலே பல நாடுகளைச் சேர்ந்த ஆட்கள் இருப்பதால் எனக்கும் வசதியாய் அமைந்து விடுகிறது!!(என்ன இதுவரை இந்த ஐரிஷ்/ஸ்கொட்டிஷ்/வெல்ஷ் அக்க்சன்ற்றுகள்தான் வராதாம்.) புதுசு புதுசாய் அக்சன்ற் கற்றுக்கொண்டு வீட்டே போய்/குட்டித்தோழர்களிடம் பேசிக்காட்டுவது பொழுது போக்கு. என் வீட்டு இல்லத்தரசன் யாரோடு பேசினாலும் தனது அக்சன்ற் / 95% இலங்கைத் தமிழிலேயே கதைப்பார். நான் அப்படியில்லைத்தானே.. ஒரு நாள் தமிழக நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த ஒரு (தமிழக)முதியவவுடன் பேசினேன். "உன்னோட வீட்டுக்காரர் பேசறது புரியலே, ஆனா நீ சரியா பேசறே" என்றாரே!!

இப்போதைக்கு இவ்வளவுதான் ஞாபகம் வந்தது. இந்த விசர் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? :O))

30 படகுகள் :

Anonymous March 28, 2007 12:11 pm  

---இன்னும் கொஞ்சம் வேணுமா?---

இன்னும் கொஞ்சம் வேணும்

வி. ஜெ. சந்திரன் March 28, 2007 12:17 pm  

//கோவம் வரும். ஏன் எதுக்கெண்டெல்லாம் இல்லை. சுள்ளென்று எரிந்து விழுவேன். ஆனால் மற்ற நேரங்களில், அமைதியின் உருவமாய் இருப்பவர்களுக்கே கோவம் வரும் சந்தர்ப்பத்தில், எனக்கே ஆச்சரியம் வரும் வகையில் அமைதியாய் பொறுமையாய் பொறுமையின் சிகரம் ஒரு எருமையாய் இருப்பேன். ஆக, கோவம் வரும். ஆனா எப்ப என்டு தெரியாது.//

இப்பிடி தான் நானும் :)

கொஞ்ச பேரொட பதிவை வாசிச்சு வெட்டி ஒட்டினா என்னோட கிறுக்கு குணங்கள் முழுதும் வரும் போல ;)

சினேகிதி March 28, 2007 12:20 pm  

ஐயோ ஸ்ரேயா...அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி....

பூ இலைகளைச் சேர்த்து வச்சு அதை ஒரு கறுப்பு மட்டையில் ஒட்டி பிறேம் பண்ணுறது என்ர கிறுக்குத்தனங்களிலொன்று.என் கஸின்களுக்கும் அந்தப் பழக்கத்தை பழக்கிட்டன்.

அடுத்தது கட்டிடங்கள் ஆக்களை ஏற்கனவே பார்த்துப் பழகினது போல எனக்கும் தோன்றுவதுண்டு.சிலநேரம் வீட்டுக்காரர் நண்பர்களோட வாக்குவாதப்படுவதுமுண்டு.

அப்புறம் ஒரு விசயத்தில ஆர்வம் வந்த அதிலயே முனைப்பா இருக்கிறது பிறகு அதை மறந்துபோறது முற்றிலும் உண்மை.

நானிப்பதான் என்ர விசித்திரங்களைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறன்.

`மழை` ஷ்ரேயா(Shreya) March 28, 2007 12:24 pm  

அடடா.. கேட்டது பிழையாப் போச்சே..

சரி. பொடிச்சி கேட்டதுக்காகவே இன்னும் ஒரு weird குணம்: வாயுவேகம் மனோ வேகம் என்டுறதை சோதிக்கிறது. சிட்னில இருந்து கொண்டு, இது வரை போயிருக்கிற (எந்த நாடெண்டாலும்) ஒரு இடத்தை கற்பனை செய்யிறது. பிறகு அங்கயிருந்து இன்னொரு இடத்துக்குத் தாவிறது. எவ்வளவு தூரத்தை அந்த நொடியில கடந்திருப்பன் என்டு அண்ணளவாக் கணிச்சிட்டு அப்படி உண்மையிலேயே பயணப்படுறதுக்கான (விண்வெளிப்பயண விமானங்கள் அல்லாதவை மூலம்) சாத்தியக் கூறுகள் பற்றி யோசிக்கிறது!! :O))

`மழை` ஷ்ரேயா(Shreya) March 28, 2007 12:26 pm  

வி.ஜெ.சந்திரன், சினேகிதி - குறைந்தது ஒரு ஒற்றுமையாவது இருக்குமெண்டு நினைக்கிறேன்.

கெதியில பதிவைப் போடுங்க சினேகிதி.(இன்னும் உங்கட குரற் பதிவுகளைக் கேட்க நேரம் கிடைக்கவில்லை.) :O(

கானா பிரபா March 28, 2007 12:30 pm  

தலைப்பைப் பார்த்துப் பயந்து போனன், நடப்பது நடக்கட்டும் எண்டுதான் பதிவை வாசிக்க ஆரம்பித்தன்.

//கோவம் வரும். ஏன் எதுக்கெண்டெல்லாம் இல்லை. சுள்ளென்று எரிந்து விழுவேன்//

இனிமேல் கவனமாகத் தான் பின்னூட்டம் போடவேணும்.

;-)வித்தியாசமான பிறவிதான்

`மழை` ஷ்ரேயா(Shreya) March 28, 2007 12:42 pm  

//தலைப்பைப் பார்த்துப் பயந்து போனன், //
என்ன செய்யிறது பிரபா, உண்மை ஒரு நாளைக்கு வெளில வரத்தானே வேணும்.. :O))

//இனிமேல் கவனமாகத் தான் பின்னூட்டம் போடவேணும்.//
சீச்சீ.. பயப்பிடாதிங்க, பின்னூட்டங்களுக்குக் கோவப்படுறல்ல நான். (சில வகைப் பின்னூட்டங்கள் இருக்குதுதான் கடுப்பைக் கிளப்புறதுக்கெண்டு, ஆனா உங்கடதெல்லாம் அந்த வகையில அடங்காது!!)

//;-)வித்தியாசமான பிறவிதான்//
நன்றீ நன்றீ :O)

மலைநாடான் March 28, 2007 2:34 pm  

//கெதியில பதிவைப் போடுங்க சினேகிதி.(இன்னும் உங்கட குரற் பதிவுகளைக் கேட்க நேரம் கிடைக்கவில்லை//

கேட்காதையுங்கோ.. கேட்காதையுங்ங்கோ.. இப்பிடித்தான் அவ ஒரு றேடியோவுக்கு ஆப்பு வைச்சவாவாம்... தன்வினை ...:))

நீங்களும் ஒரு நல்ல விசர் என்டு சொல்லியிருக்கிறியள்.:))

வசந்தன்(Vasanthan) March 28, 2007 3:12 pm  

//சில வகைப் பின்னூட்டங்கள் இருக்குதுதான் கடுப்பைக் கிளப்புறதுக்கெண்டு//

என்னுடைய பின்னூட்டங்கள் நிச்சயமாக அந்த வகைக்குள்தான் வருமென்பதால் பின்னூட்டம் அளிக்காமலே போறன்.
(இந்தப் பின்னூட்டம் எழுதியது நானில்லை.)

`மழை` ஷ்ரேயா(Shreya) March 28, 2007 4:18 pm  

//கேட்காதையுங்கோ.. கேட்காதையுங்ங்கோ.. இப்பிடித்தான் அவ ஒரு றேடியோவுக்கு ஆப்பு வைச்சவாவாம்... தன்வினை ...:))

நீங்களும் ஒரு நல்ல விசர் என்டு சொல்லியிருக்கிறியள்.:))//

அலுவலகத்தில இருப்பதால் அக்கம் பக்கம் பார்த்துச் சிரிக்க வேண்டியிருக்கு!! :O))
__________

வசந்தன், எனக்கு வாற பின்னூட்டங்களைச் சொல்லவில்லை.. வேற பதிவுகளில கண்டவற்றைத் தான் சொன்னேன். சரி, இது வசந்தன் அல்லாத வசந்தன் சொன்னது தானே.. பரவாயில்லை :O)))

கொழுவி March 28, 2007 6:42 pm  

//மேற்கூறியவர்களை இத்தால் அழைக்கிறேன்.//

இத்தாலிக்கெல்லாம் வரமுடியாது.

துளசி கோபால் March 28, 2007 6:43 pm  

பதிவுலகம் பூரா விசரிகளும் விசரன்களும்:-)))))

யோகன் பாரிஸ்(Johan-Paris) March 28, 2007 11:12 pm  

ஷ்ரேயா!
தங்கள் ;முதலாவது "விசர்" எனக்கிருக்கிறது. ஆனால் பல நண்பர்களிடம் என் பொது அறிவு பற்றிய மதிப்புயர அவ்விசர் காரணமானது; எனில் மிகையில்லை.
ஏனைய ரசிக்கும்படியானது, அடுத்தவருக்குத் தொல்லையில்லாதது.

`மழை` ஷ்ரேயா(Shreya) March 29, 2007 9:29 am  

//இத்தாலிக்கெல்லாம் வரமுடியாது.//
இத்தால் தானே.. இத்தாலிக்கல்லவே கொழுவியாரே? சரிதான், கொழுவியின் மகன் என்று ஒருவர் பதிவுகளில் பின்னூட்டிக் கொண்டு திரிவதால் கொழுவிக்கு வயதாகிவிட்டுதெண்டும் அதனால் கண்ணாடி போடவேண்டிய நிலமையில் இருக்கிறீரெண்டும் நினைத்துக் கொள்கிறேன்.. :O))

`மழை` ஷ்ரேயா(Shreya) March 29, 2007 9:33 am  

துளசி - :OD

யோகன் - உண்மைதான், பல விதயங்களை அறிந்து கொள்ளலாம்.

[சம்பந்தமில்லாமல்.. என்ன விசைப்பலகை பாவிக்கிறீர்கள்? இடையிடையே நிறைய ' ; ' வருகிறதே?]

Radha Sriram March 29, 2007 11:27 am  

. //யாரோட கதைச்சாலும் அவங்கட வட்டார வழக்கில/ வேற்று நாடாயிருந்தா அந்த அக்சன்ற்றுடைய ஆங்கிலம் கதைப்பது. மாற்ற வேண்டும் என்டு முயற்சித்திருக்கிறேன். ஆனாலும் கவனிக்காம விட்ட பொழுதொன்றில மூளையும் குரல்வளையும் சதி பண்ணி விடும்.//

அய்யொ ஷ்ரேயா இது எனக்கும் உண்டு!! நான் போன்ல பேசரத வச்சே நான் யாரோட """கதைக்கரேன் எண்டு"" என்கள்டைய வீட்டில் சொல்லிடுவாங்க!!! பேசரது மட்டும் இல்ல அவங்கள மாறியே சிரிக்கவும் செய்வேன்!!

`மழை` ஷ்ரேயா(Shreya) March 29, 2007 1:08 pm  

//பேசரது மட்டும் இல்ல அவங்கள மாறியே சிரிக்கவும் செய்வேன்!!//

அட! நல்ல weirdதான் நீங்க!! :O))

நானும் இதை முயற்சிக்கலாமான்னு யோசிக்கிறேன்.. ஏற்கெனவே எப்பபாரு பல்லக் காட்டிட்டே இருக்கறதுன்னு திட்டு.. :O|

கானா பிரபா March 29, 2007 2:27 pm  

//என் வீட்டு இல்லத்தரசன் //

யூ மீன் ரஜினி சார்?

கார்திக்வேலு March 29, 2007 2:35 pm  

The piano interlude where he plays the "Air Piano" in his room is cool stuff .
The script is getting over dramatic though this season .. but its a decent
watch nonetheless.

1.mirroring -- not weird நல்ல பழக்கமே ..crucial for a good listener
usually this does not stop with the accent it goes to the extent that one might start mirroring the others body posture/language..like standing / shaking head / hand gestures etc
-------------
something more important is that 4

//அறிவு சார்பாய் இல்லாமல் தோற்றத்தில் அதிக ஈடுபாடு கொள்வது அதைக் கொண்டே மற்றவர்கள் மதிப்பிடுவது என்பதைச் சொல்கிறேன்.). உடைகளுக்கான கடைகளை விட புத்தகக் கடை பிடிக்கும் என்றும் பேருந்தில் நான் சுவர்ப்பூச்சு கொள்கலன்கள், உலக்கை மற்றும் தகரம் கொண்டு போனதையும் சொல்லி (முழுக்க முழுக்க "நான் எனது தேவைக்காக செய்திருக்கிறேன் பார், ஒரு வெட்கமும் இல்லை" என்று காட்ட என்று சொல்லிக் கொண்டாலும், அப்படிப்பட்ட தேவைகள் இங்கு 99% பேருக்கு வராது என்பதும் நினைவுக்கு வரும்) அவர்கள் முகம் ஆச்சரியத்தில் விரிவதைப் பார்க்க & அவர்களுடன் தர்க்கித்து கற்பிதங்களை உடைக்கப் பிடிக்கும்.//

This can be really classed as a weirdness especially in the context of being a women in the western society."Solely" judjing a person based on ones appearence is the most common and cruelest of the prejudices.All we see is this hollow people walking about in their designer clothing.

Well, I am not suggesting one should'nt take any care in how they dress and present themselves but things like being unable to cry without worrying about the eyeliner or getting obsessed over spending a princely sum for a pair of shoe indicates the lack of internal worth and strength.

This is a nice example of how ones worth in arrived at from within self
[intrinsic] rather than from external cues and assertions [extrinsic].

This also applies to our behaviour and communication which is completly
geared to meet the extrinsic demand and being a pavlovian slave of it,
leading the individual to be a voodoo puppett in the hand of the monster myth called society.

This is a rare and precious quality

கார்திக்வேலு March 29, 2007 2:39 pm  

http://www.have-dog.com/house/

above link has the sound track bits from House

`மழை` ஷ்ரேயா(Shreya) March 29, 2007 3:07 pm  

//யூ மீன் ரஜினி சார்?//
இல்லையே..மம்முட்டி என்றல்லவா நினைத்தேன். சரி போகட்டும். :O)

(இந்த விளையாட்டுக்கெல்லாம் நான் வரமாட்டனே..) :OD

`மழை` ஷ்ரேயா(Shreya) March 29, 2007 3:38 pm  

சுட்டிக்கு நன்றி கார்திக். ஆமாம்.. ஒவ்வொரு வாரமும் போடறதுக்கு நோய்கள்/குறைபாடுகளை எப்படித்தான் யோசிக்கிறார்களோ!! (என்னிடமும் அவர்களுக்குச் சொல்ல 2- 3 யோசனை இருக்கிறது!)

ஏன் கார்திக் ரெண்டு மூணு வரியிலே பதில் சொல்லுகிற மாதிரியான பின்னூட்டம் போடறதில்ல நீங்க? இப்ப பாருங்க மூளையைக் கசக்க வேண்டியதாப் போச்சு!! இதிலே //extrinsic demand and being a pavlovian slave of it,// யப் படிச்சு pavlova கேக் ஞாபகம் வேறே! :O))

முதல் கேள்வி, இசைவாக்கம் பற்றிச் சொன்ன இவர் கருத்தோட்டத்தையா சொன்னீங்க? (இவான் பவ்லோவ் பற்றிய ஆரம்ப அறிமுகமாக அமைந்தது எனக்கு! நன்றி.)

shallow ஆக(பொருத்தமான ஒரு நல்ல தமிழ்ச்சொல் சொல் தொண்டை வரையிலும் வந்து சிக்கிக் கொண்டு நிற்கிறது!! grrr)இருப்பவர்கள் அப்படி அல்லாதவர்களை மாற்றுக் குறைந்தவர்கள் போலப் பார்ப்பது தான் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

அடுத்த கேள்வி: புறக்காரணிகளாலேயா சிலர் shallow ஆக இருக்கிறாங்க? அது அவர்களுடைய இயல்பு இல்லையா? (எல்லா இயல்புமே சமூகத்தின் தாக்கத்தினால் வரையறுக்கப்படுவதில்லை என்ற விளக்கத்தினூடாக என் பார்வை இருக்கிறது..)

கார்திக்வேலு March 30, 2007 2:09 am  

இசைவாக்கம் - நல்ல தமிழ்.Yes its about the Pavlovian Reflex /conditioning.
shallow = மேம்போக்கு ?
-----------------
//புறக்காரணிகளாலேயா சிலர் shallow ஆக இருக்கிறாங்க? அது அவர்களுடைய இயல்பு இல்லையா? //

This is a vicious circle.The shallowness does not originate from outside but the external factors glorify this shallowness .Self worth starts with the knowledge of self.

அந்த சுய அலசல் இல்லாததால் , நம்மை நாம் அறியாததால், நமக்குள்ளே நாம் நுழைய முடியாததால் அந்த சுய மதிப்பீடு நடைபெறாது போய்விடுகிறது.பின் அங்கு உருவாகிவிட வெறுமையை நமக்கு வெளியே உள்ள விஷயங்களால் இட்டு நிரப்ப வேண்டியுதாகிவிடுகிறது.

The lack of self-esteem makes us more and more dependent on external factors for reinforcement and hence we have to accept the value system from others, the society which is very judgmental and prone to prejudices.As the person becomes more and more shallower his own personal value system is replaced completely with the value system borrowed from outside.

He/She then just become a "cog in the wheel" and start defending the very own system thats enslaving him/her and perpetuating the myth.

//தோற்றத்தில் அதிக ஈடுபாடு கொள்வது அதைக் கொண்டே மற்றவர்கள் மதிப்பிடுவது என்பதைச் சொல்கிறேன்//

what else can they do they use the same scale "others" use to measure them :-)

As the world is getting "connected" it becomes a smaller and smaller place, everything including culture/ values / morals are getting globalised /corporatised /pop culturaised/ broadcasted/ influenced and reinforced.The external factors are having a much stronger influence and hold on us than ever before.
------------------------------
we need to realise that the individual is as important as the society. Understand and accept people not just judge and categorise them.

`மழை` ஷ்ரேயா(Shreya) March 30, 2007 4:27 am  

தூங்கப் போக முன்னாலே தோணின கேள்வி:

ஒருத்தரைப் பற்றி ஒர் கணிப்பும் இல்லாமே அந்தக் கணம் பார்க்கிறதை அப்படியே உள்வாங்கி அதுக்கேற்ப வினை/எதிர்வினையாற்றும் (act/react)பார்வை/பக்குவம் (பயிற்சி மூலம் அல்லாமல்) இயல்பாகவே ஒருத்தருக்கு இருப்பது முடியுமா?

கார்திக்வேலு March 30, 2007 11:02 am  

சிறுவயதில் அப்படித்தானே இருந்தோம்?
ஒரு சிறு குழந்தையை நாம் கண்டிப்பதால் அது நம் மேல் வன்மம் பாரட்டுவதில்லை அடுத்த நாளும் அதே சிரிப்போடுதான் நம்மிடம் வரும்.

ஆனால் நாம் வளர வளர பல வித சூழ்நிலைகளாலும் , நிபந்தனைகளாலும் [இதில் பலது இயல்பானதும் / அவசியமானதும் கூட] இது மறக்கப்பட்டு விடுகிறது.அந்தப் பக்குவத்தை திருப்பப் பெற மிகுந்த பிரயத்தனப்பட வேண்டியுள்ளது.

இது அனைவராலும் முடியுமா , அனைத்து சமயங்களிலும், எல்லோரிடத்திலும் முடியுமா என்று கேட்டால் ...மிகக் கடினம் என்று தான் சொல்லமுடியும்.

அவரவர் சூழ்நிலைக்கும் / இயல்புக்கும் ஏற்றவாறு செய்யும் எந்த ஒரு சிறு முயற்சியும் அவரளவிலும் சாலச்சிறந்ததே.

[When I read back In my previous comment the last few lines sounded too idealistic to me its easier said then done ,but thats the fact ]

Anonymous March 30, 2007 5:42 pm  

கடைசியாக சொல்லிய முதல் விசரியை நம்புவதில் எனக்கு ஒரு ஐயப்பாடும் இல்லை.

தருமி April 21, 2007 3:17 pm  

//இந்த வியாதி வர வர முற்றுகிறது என்று நினைக்கிறேன்..//

இந்த வியாதியில் இன்னொரு கோணம் எனக்குண்டு... எங்கேயோ ஒவ்வொரு மனித முகத்திலும் ஏதோ ஒரு விலங்கின் முகம் தெரியும் என்று படித்ததிலிருந்து, புது முகங்களில் ஏதாவது ஒரு விலங்கின் முகம் தெரியுதான்னு பார்க்கிறது...பார்த்து பக்கத்தில் இருக்கிறவங்ககிட்ட சொல்லி அப்ரூவல் வாங்குறது...

very long time...........no see........ நல்லா இருக்கீங்களா? எங்க வீட்டு ஷ்ரேயா நல்லா இருக்கா ..ஆனா ..இப்ப ரொம்ப தூரத்தில ..
மொதல்ல தாத்தான்னு கூப்பிட்டு ஆரம்பிச்சீங்க...இப்ப ரெண்டு மூணு பேரு அப்படி கூப்பிட்டுட்டாங்க...(sigh!) :)

`மழை` ஷ்ரேயா(Shreya) April 23, 2007 10:07 am  

நன்றி க்ருபா.. அத்தாட்சிக்கு!!

தாத்தா.. ;O)) எப்பிடியிருக்கீங்க? ஆமா.. verrrry loooong time no see. கிட்டத்தட்ட 3 வாரத்துக்கு அப்பறமா இந்தப் பக்கம் வந்திருக்கேன்.

//மொதல்ல தாத்தான்னு கூப்பிட்டு ஆரம்பிச்சீங்க...இப்ப ரெண்டு மூணு பேரு அப்படி கூப்பிட்டுட்டாங்க ...(sigh!) :)//

ஏதோ என்னால முடிஞ்சது! :O). ஷ்ரேயாவைக்
கேட்டேன்னு சொல்லுங்க.

//புது முகங்களில் ஏதாவது ஒரு விலங்கின் முகம் தெரியுதான்னு பார்க்கிறது...பார்த்து பக்கத்தில் இருக்கிறவங்ககிட்ட சொல்லி அப்ரூவல் வாங்குறது...//

omg!! அப்ரூவல் வேறயா!! :O)

சினேகிதி April 23, 2007 10:15 am  

innum visarilaye nikireengal:-))) alakiya maarungovan:-)))

காரூரன் July 27, 2007 6:30 am  

எமது நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு விசர்த்தனமாக தெரியலாம். மற்றவர்களை நாம் பைத்தியக்காரர்களாக மாற்றாத வரை நாம் செய்வது சரி தான். தொடர்ந்து எழுதுங்கள்

பெட்டகம்