நினைவில் பறவைகள்

ஏதேதோ யோசித்துக் கொண்டேயிருந்தேன். சங்கிலியின் கண்ணிகளாய் தொடுத்துத் தொடுத்துப் பறவைகளில் வந்து நின்றது. தெரிந்த பறவைகளைப் பட்டியலிட்டுக் கொண்டு போன போதுதான் பலதையும் மறந்து போனது உறைத்தது. (நல்லகாலம் கணினி பக்கத்திலிருக்கிறதில் பதிவிடுகிறேன்) ஞாபகம் வந்த பறவைகள்:

  • காகம்
  • சிட்டுக்குருவி
  • மயில்
  • குயில்
  • மைனா
  • பருந்து
  • வாத்து
  • கோழி
  • தாரா
  • அன்னம்
  • Cockatoo
  • மீன்கொத்தி
  • மரங்கொத்தி
  • தூக்கணாங்குருவி
  • ஆள்காட்டிக்குருவி
  • புறா
  • தீக்கோழி
  • Lyre Bird
  • அண்டங்காக்கா
  • Robin
  • கிளி
  • செண்பகம்
  • நாரை
  • கொக்கு
  • ஆந்தை
  • Humming bird
  • வான்கோழி
  • Kiwi
எவை மேலே இல்லாமல் பறந்து போயின?

14 படகுகள் :

சந்தனமுல்லை February 01, 2010 12:25 am  

/எவை மேலே இல்லாமல் பறந்து போயின?/ ரசித்தேன்! :-)

எனக்கு நினைவுக்கு வந்தது காடை.
'நொள்ளமடையான்' என்று ஒரு குருவி உண்டென்று நினைக்கிறேன். பேரைக்கேட்டு சிரித்த சிரிப்பு இன்னும் நினைவில் இருக்கிறது. :-))

சந்தனமுல்லை February 01, 2010 12:26 am  

அப்புறம், ஏரோப்பிளேன்.....மீதியை சின்ன பாண்டி வந்து சொல்லுவார்...ஹிஹி! ;-))

தமிழன்-கறுப்பி... February 01, 2010 1:27 am  

ரொம்ப நாளைக்கப்புறம் பறவைகளோடு வந்த ஷ்ரேயாவுக்கு நன்றி.

:)

தமிழன்-கறுப்பி... February 01, 2010 1:30 am  

ஓ....நான் தான் ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிறன் போல.

:)

கலை February 01, 2010 3:59 am  

கழுகு, நத்து, வல்லூறு, கரிக்குருவி, penguin, நீர்க்காகம்

ஏதோ, பலரின்ரை உதவியோட என்னாலான சேகரிப்பு :)

கலை February 01, 2010 4:00 am  

அட, இதைச் சொல்லாம விட்டிட்டன் எண்டு அஞ்சலி பேசுறா, flamingo :)

கலை February 01, 2010 4:00 am  

வயலில இருக்கிற ஆட்காட்டிக்குருவி

`மழை` ஷ்ரேயா(Shreya) February 01, 2010 9:02 am  

ஏரோப்பிளேனா!!! அவ்வ்..

'நொள்ளமடையான்' கேள்விப்பட்டதில்ல. பெயரை வாசித்ததும் சிரிப்பு வந்திச்சு.

`மழை` ஷ்ரேயா(Shreya) February 01, 2010 9:03 am  

வாங்க தமிழன்-கறுப்பி.. இந்த ஆண்டு கொஞ்சம் பதிவிட்டிருக்கிறன்.

`மழை` ஷ்ரேயா(Shreya) February 01, 2010 9:04 am  

நன்றி கலை மீதிப் பெயர்களுக்கு. ஆள்காட்டிக்குருவி என்ட பட்டியல்ல இருந்திச்சு.

`மழை` ஷ்ரேயா(Shreya) February 01, 2010 9:06 am  

அதுதானே... எப்பிடி பெங்குவினை மறக்க ஏலும்? Flemingo வுக்கும் நன்றி (அஞ்சலிக்கு). அவவுக்கு Flamenco நடனம் பற்றித் தெரியுமா என்டு கேளுங்களன்.

யசோதா.பத்மநாதன் February 01, 2010 10:29 am  

மாம்பழக்குருவி,பிலாக்கொட்டைக் குருவி,புலுனி,லவ் பேர்ட்ஸ்,காட்டுக் கோழி,காடை,கெளதாரி,வானம் பாடி...

மேலும் maniyinpakkam.blogspot.com இல் மணி படங்களோடு சில பறவைகளைப் பட்டியலிட்டிருக்கிறார்.

`மழை` ஷ்ரேயா(Shreya) February 01, 2010 12:37 pm  

நன்றி மணிமேகலா. காடையை சந்தனமுல்லையும் சொல்லியிருந்தார். புலுனியை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

பழமைபேசியின் பதிவை நான் ரீடரில் பார்த்துவிட்டு சுட்டியோடு வந்தேன். நீங்களும் அதையே தந்திருக்கிறீர்கள். நன்றி.

முதலும் வேறெங்கோ ஒரு வலைப்பதிவில் பறவைகள் பற்றிய குறிப்பு இருந்த ஞாபகமாயிருக்கு. தேட வேண்டும்.

`மழை` ஷ்ரேயா(Shreya) February 01, 2010 12:52 pm  

விக்கிப்பீடியா

பெட்டகம்