பெயர்கள் பலவிதம்

பெயர்..இது இல்லாமல் ஒரு பணியாரப் படிவமும் நிரப்ப இயலாது. அதிலயும் இந்த குடும்பப்பெயர் இருக்கே..அதைப் போல தலையிடி பிடிச்ச விஷயம் வேற இல்ல. வெள்ளைக்காரனுக்கு குடும்பத்துக்கென்றே ஒரு பெயர் இருக்கும். அவனுக்கு என்று ஒரு பெயர் வைத்தாலும் திரு."குடும்பப்பெயர்" என்று கூப்பிட்டால் கட்டாயம் திரும்பிப் பார்ப்பான். ஆனால் எங்கள் நிலமை வேறு, குடும்பத்துக்கென்று (சில விதி விலக்குகள் உண்டு)தனிப் பெயர் இல்லை. அவரவருக்கென்று வைத்த பெயர்தான் அவர் சார்ந்த குடும்பத்துக்கும் பெயராகிறது. வெளிநாட்டில் படிவம் நிரப்புகையில் எப்படிப் போடுகிறீர்கள்? ஆண்களுக்குத் தான் தலை போகும் பிரச்சனையா இது தென்படுகிறது. (உதாரணத்துக்கு அப்பா:சின்னத்தம்பி, மகன்: யோகன் என்று வைத்துக் கொள்வோம்)மகன் தனது குடும்பப்பெயராய் அப்பாவின் பெயரைப் போட்டால் திரு. சின்னத்தம்பி என்று தான் விளிக்கப்படும். யோகனும் அப்பாவைத்தான் கூப்பிடுகிறார்கள் என்று தேமே என்று உட்கார்ந்திருப்பான். மாறிப்போடுவது தான் அவனுக்கு தன்னை விளிக்கிறார்கள் என்பதை உணர்த்தும். இங்கே பலர் அப்படித்தான் அப்பாவின் பெயரை முதல்/வைக்கப்பட்ட பெயராயும் தன் (உண்மையாக) வைக்கப்பட்ட பெயரை குடும்பப்பெயராகவும் இடம் மாற்றிக் கொள்கிறார்கள். அப்படி மாற்றாமல் தன் பெயர் தனக்கும் அப்பா பெயர் குடும்பப்பெயராகவும் வைத்துக் கொண்டிருக்கும் நம்மவரும் உளர்.

இந்த குடும்பப்பெயர் வழக்கம் எங்கிருந்து எதற்காகத் தோன்றியயது? ஒரே இனத்தவர்/ குடும்பத்தினரை இனங்காணவேண்டிய தேவை சண்டை/சொத்து இவற்றைத் தவிர வேறே எதற்கு இருந்தது? அந்தக் காலத்தில் பெண்களுக்கு இது ஒரு முக்கியமான அடையாளமாக இருந்திருக்க வேண்டும் என் நினைக்கிறேன். இப்பெண்கள், இன்னாருடைய மனைவி/மகள் என்று (அப்பெண்களின்) வாழ்வில் காணப்படும் ஆண்களை வைத்தே நோக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணானவள் எடை போடப்படும் போது முதலில் இன்னாருடைய மகள்/மனைவி என்று குடும்ப விவரம் அலசப்பட்ட பின்னரே அவளது accomplishments பார்க்கப்படுகின்றன. பெண்கள் ஒரு ஆணைச் சார்ந்து நின்ற காலத்திற்கு வேண்டுமானால் இது பொருந்தியிருக்கலாம். ஆனால் பெண்கள் சுயமாக நிற்கிற இந்தகாலத்தில் இப்படிப்பட்ட பார்வை பொருத்தமானதாகத் தோன்றவில்லை.

எங்கள் ஊரில் வெள்ளைக்காரன் வரமுதல் பெண்களுக்கு நிர்வாகத் தேவைகள் இருந்ததா என்பது சரியாகத் தெரியவில்லை. அப்படியே இருந்திருந்தாலும் செல்வி.சின்னத்தம்பி, திருமதி.தங்கத்தம்பியுமாக அடையாளங் காணப்பட்டிருக்க மாட்டார்கள் என்று (நான்) நினைக்கிறேன். ஒரு பெண் வெள்ளைக்காரனின் வழக்கப்படி திருமணத்திற்குப் பின் திருமதியாகிறாள்.அதாவது தன் குடும்பப்பெயராக இவ்வளவு நாளும் உபயோகித்த தந்தையின் பெயரை விட்டு, கணவனின் குடும்பப் பெயரைத் தன் குடும்பப் பெயராக ஏற்கிறாள். இதப் பழக்கம் எப்போதிருந்து எங்கள் சமூகத்துக்குள் புகுந்தது?

இங்கே, எனக்கு நடந்த 2 சம்பவங்கள் சொல்கிறேன்:

முதலாவது, திருமணம் முடித்தவுடன் வந்த வம்பு. எனக்கோ அப்பாவின் பெயர் இருந்த இடத்தில் கணவர் பெயரைப் போட விருப்பமில்லை. அம்மா(இத்தனைக்கும் படித்தவர்.வைத்தியர்) சொன்னா அது கட்டாயமாம் என்று. எங்கேயிருந்து அவவுக்கு அந்த எண்ணம் வந்ததோ தெரியவில்லை. தாங்கள் எல்லாம் அந்தக் காலத்திலேயே எப்ப கலியாணம் முடிய கணவரின் பெயரைத் தன் பெயருடன் இணைப்பது என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பர்களாம்.(வேறே நினைவே இருக்கவில்லை போல என்று கிண்டலடித்தேன்!)இது தான் முறை என்றெல்லம் பெரிய்ய்.ய்..ய்ய விரிவுரை. எனக்கோ விருப்பமில்லை. என் மச்சானின் மனைவி பெயர் மாற்றம் செய்து கொள்ளாதவர். அவரிடம் பேசுவது என்று முடிவாயிற்று. அவ இருக்கவில்லை, என் மச்சானுடன் தான் கதைக்க முடிந்தது. அவர் சொன்னார், அப்படி பெயர் மாற்றச் சொல்லும் ஒரு சட்டமும் இல்லை என்று. அவர் என் கணவரிடம் கேட்டார் "ஷ்ரேயா உம்முடைய பெயருக்கு மாறுவது உமக்கு விருப்பமா?" அதற்கு கணவர் சொன்னார்.."மாறிறது விருப்பம். ஆனா அது அவட விருப்பம்" என்று. இதற்குப் பின்னும் அம்மாவின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு "-" போட்டு அப்பாவின் பெயரையும் கணவர் பெயரையும் இணைத்துக் கொள்ளச் சம்மதித்தேன். ஆனால் இங்கே எல்லா உபயோகத்திற்கும் பாவிப்பது அப்பாவின் பெயரை மட்டுமே. அலுவலர்கள் கேட்டால் "உங்கள் படிவங்களில் என் குடும்பப்பெயர் முழுவதும் அடங்காது" என்று சொல்லிவிடுவேன்.அவர்களும் விட்டு விடுவார்கள். கணவர் இதப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. உள்ளே அரிக்குமோ என்னவோ! :o)

சம்பவம் 2: இங்கே

ஆக எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள் ஒரு பெண் கல்யாணமானால் பெயரை மாற்ற வேண்டுமென்று.அது அந்தப்பெண்ணின் தெரிவு என்பது புரிவதில்லையா? பலவந்தமாக மாற்றச் செய்வது தனிமனித சுதந்திரத்தில்/உரிமையில் தலையிடுவதாகும் அல்லவா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?திருமணமாகும் போது பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டுமா? நீங்கள் ஆணாக இருக்குமிடத்து உங்கள் மனைவி உங்கள் பெயரை தன் குடும்பப்பெயராக இணைத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பீர்களா? ஏற்கெனவே திருமணமாகி, மனைவி பெயர் மாறியுள்ளவர்களின் கருத்து என்ன?பெயர் மாற்றிய/மாற்றாத/மாற்ற விரும்பாமல் மாற்றிய மனைவியரின் கருத்து என்ன? கொஞ்சம் சொல்லுங்களேன்..

9 படகுகள் :

வசந்தன்(Vasanthan) March 04, 2005 5:01 pm  

நீங்களும் சரியாக் கஸ்டப்பட்டிருக்கிறியள் போலக் கிடக்கு. நான் இப்ப தான் துவங்கியிருக்கிறன். இன்னும் பட்டு முடியேல. ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு மாதிரி நிரப்பி மாட்டுப்பட்டிருக்கிறேன். அதுக்க என்ர இலங்கைக் கடவுச்சீட்டில வேறு பெயர் (Other Name) எண்ட பகுதியிலதான் என்ர பேரப் போட்டிருக்கிறாங்கள். உந்தப் பேர் விசயத்தில நல்லா வேண்டிக்கட்ட வேணும்போல.

மற்றது நீங்கள் கடிசியாக் கேட்டது நல்ல ஒரு கேள்வி. ஒரு முக்கியமான சுவாரசியமான விவாதமாப் போகுமெண்டு நினக்கிறன். காலங்காலமா பாவிச்சுவந்த பேர திடீரெண்டு மாத்திறதிண்ட வேதனை எனக்கு நல்லாத் தெரியும். அதுவும் விருப்பமில்லாமல் மாத்திறது சுத்த மோசம். ஆனா நிர்வாகம் சம்பந்தமா சில தேவையள் இருக்கோ தெரியேல. ஆரென் இது சம்பந்தமாத் தெரிஞ்ச ஆக்கள் தான் சொல்லோணும். உதாரணமா, ஒரு குடும்பமெண்டு வரேக்க எல்லாருக்கும் ஒரே பேர் பொதுவா இருக்கிறது சில அனுகூலங்களைத் தரலாம். இது உறுதியில்ல. ஏனெண்டா கணவணிண்ர பேர மாத்தாம தகப்பன்ர பேரோடயே இருக்கிற ஆக்கள் கனபேர பாத்திருக்கிறேன். ஏதும் சிக்கல் வந்ததாத் தெரியேல. இதுபற்றி அறிய ஆவல். மேலும் தாயின் பெயரை முதற்பெயராய்க் கொள்ளும் முறையும் உண்டு. அதுபற்றியும் அறிய ஆவல். ஏதும் சிக்கல்கள் இல்லாதவிடத்து வழமைபோன்றே தந்தையின் பெயரைப் பாவிப்பதே சிறந்ததென்பது என் கருத்து.

துளசி கோபால் March 04, 2005 5:43 pm  

அன்பு ஷ்ரேயா,

எங்க வீட்டுலே நான், என் மகள், என் வீட்டுக்காரர் ஆகிய மூணுபேருக்கும் மூணு ஸர்நேம் இருக்கு!
அவருக்கு அவுங்க அப்பாபேரும், எனக்குக் கணவரோட முழுப்பேரும், மகளுக்கு அப்பாவோட பேருலே பாதியுமா
வச்சிக்கிட்டு இருக்கோம்.
ஏர்லைன் டிக்கெட்டு 'புக்' பண்ணறப்ப பாக்கணுமே கூத்தை!

என்றும் அன்புடன்,
துளசி.

ரவி ஸ்ரீநிவாஸ் March 04, 2005 6:04 pm  
This comment has been removed by a blog administrator.
ரவி ஸ்ரீநிவாஸ் March 04, 2005 6:04 pm  

to avoid confusions it is better not to change the name after marriage.i know many women who have not changed their names officially post marriage.to expect that a woman should drop her fathers name and add husbands name is crazy.but if a woman strongly feels that she would prefer to have her husband-s name as a suffix that is her choice.

in case of women who do research or write this name change creates
confusion.suppose her name is ramya
raman before marriage and after marriage if it is ramya rajesh
when you search in bibliographies
or databases it will give a misleading impression.

ரவி ஸ்ரீநிவாஸ் March 04, 2005 6:04 pm  

to avoid confusions it is better not to change the name after marriage.i know many women who have not changed their names officially post marriage.to expect that a woman should drop her fathers name and add husbands name is crazy.but if a woman strongly feels that she would prefer to have her husband-s name as a suffix that is her choice.
ravi srinivas
in case of women who do research or write this name change creates
confusion.suppose her name is ramya
raman before marriage and after marriage if it is ramya rajesh
when you search in bibliographies
or databases it will give a misleading impression.

`மழை` ஷ்ரேயா(Shreya) March 04, 2005 7:06 pm  

வசந்தன்: இப்பத்தானா படத் தொடங்கியிருக்கிறீங்க? எந்தப் பெயர் எந்தப் பகுதியில போடுறதென்று கெதீல முடிவெடுங்க. இல்லாட்டி பிச்செடுத்திடுவான்கள்.

துளசி: எங்கள் வீட்டில் இன்னும் பிள்ளை(கள்) இல்லை. அதனால பிள்ளைக்கு குடும்பப்பெயராக என்ன வை படுமோ தெரியவில்லை :ஒ) . கணவரது பெயர் உங்களுக்கு "ஸர்நேம்"ஆகிய போது உங்களால் அதை இலகுவாக ஏற்றுக் கொள்ள முடிந்ததா?

வசந்தன்(Vasanthan) March 05, 2005 12:08 am  

//கணவர் இதப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. உள்ளே அரிக்குமோ என்னவோ! :o)//

ஷ்ரேயா!
அந்த மனுசன் இஞ்சால் பக்கம் வாறேலயே? இப்பிடி எழுதிறியள்?

`மழை` ஷ்ரேயா(Shreya) March 06, 2005 2:47 pm  

நான் ஏதோ இணையத்தில கிறுக்குகிறேன் என்பது தெரியும். எனக்குத் தெரிந்தவரை இந்தப்பக்கம் வருவதில்லை. :o)

Anonymous March 09, 2005 4:19 pm  

I dont believe in such unwanted complications. As Thulasi said, me, my wife and kiddie have different surnames, and every now and then I have to explain others that I dont have a surname. Hopefully, if my future descendents would use my name as their surname and get along easily with their lives ;) hahahahaha
TCD

பெட்டகம்