ஓ போடுங்க!

சில நாட்கள்/வாரங்கள்/மாதங்கள் மிகவும் விரைவாக ஓடி மறைகின்றதா? இல்லாட்டி நான் அதனுடன் போட்டி போடுற வேகம் குறையவா? (சுசந்திகா / பீ.டி உஷா / மரியன் ஜோன்ஸ் / கதி ஃப்ரீமன் தரவழியா இருக்க வேணுமோ!!)

வீட்டில் இருக்கும் போது இப்படி இருப்பதில்லை (9 மணிக்கு பள்ளியெழுகின்ற வார இறுதிகள் இதற்குள் சேர்த்தியில்லை!!) ஒருவேளை வேலைக்குப் போவதால்தான் காலம் இப்படி (என் மாட்டேற்றுச் சட்டத்தில்..என் சார்பாக..ம்ம்..relativly :o) )கடுகதியில் ஓடி மறையுதா?

ஒரு வேலையை செய்யும் போது, அதாவது செய்யும் ஒரே விடயத்தையே கருத்தொருமித்துச் செய்யும் போது நேரம் போவது தெரிவதில்லை. இதற்கு, புத்தகம் வாசிப்பது(பாடப் புத்தகம் அல்ல), நித்திரை கொள்வது போன்றவை நல்ல உதாரணங்கள். (பி.கு: கலர் தெரப்பியும் இதிலே சேர்த்துக் கொள்ளப்படலாம் ;o) ). எதிர்மறையாக, இதெல்லாம் செய்ய வேண்டுமே என்று 4 - 5 விடயங்களை பட்டியல் போட்டுக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்படாது, நேரம் மட்டும் விட்டது தொல்லை என்று காணாமல் போயிருக்கும்.இது என் சார்பான நேரம் கழிதலின் வேகம் மட்டுமே. எனக்கு விரைவாக ஓடி மறைந்த ஒரு நாள் மற்றொருவருக்கு மிக நீண்டதான ஒன்றாக தோன்றலாம்..அது அவர் சார்பான நேரத்தின் வேகம். எல்லாருக்கும் பொதுவாக செலவழிந்து கொண்டிருக்கும் நேரமோ ஒரே வேகத்தில் தான் கழிகிறது.( உ+ம்: எனக்கு வேகமாக கழிந்த ஒரு நாளும் மற்றவரது நீ..ஈ..ண்ட நாளும் அதே 24 மணி நேரத்தைத் தான் கொண்டவை!)

எப்படி இவளிடமிருந்து தப்பியோடலாம்(உங்களைப் போலவே?)என்று சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தை இழுத்துப் பிடித்து, அலுவலகத்தில் பணியும், வீட்டில் "தார்மீகக் கடமைகளும்"(அடக்கி வாசிக்கிறதப் பற்றி ஷ்ரேயா கேள்விப்பட்டதேயில்லை!!) என்று செய்ய வேண்டியிருக்கிறது. ஆக இப்பிடியெல்லாம் நேரத்துடன் மல்லுக்கட்டும் போது, என்னுடைய இந்த வலைப்பதிவில் செலுத்தும் கவனம் மிகக் குறைவே. அதைப்பற்றி மனவருத்தமாக இருக்கிற போதெல்லாம் கை கொடுப்பது என்னுடைய "நாளைக்குச் கட்டாயம் செய்ய வேண்டும் / செய்து விடுவேன்" என்கிற சோம்பேறி மனப்பாங்கு தான்.(யாரது "நன்றே செய்வார்; அதை இன்றே செய்வார்" ங்கறது? ஷ்ஷ்!!).

அலுவலகம் / வீட்டுவேலைகள் /குடும்பம் இதெற்கெல்லாம் மத்தியில் பதிவுகளையும் கவனித்துக் கொள்ளும் எல்லா வலைப்பதிவாளர்களுக்கும் ஒரு பெரீ..ய்ய்..ய "ஓ"!.

6 படகுகள் :

Pavals March 10, 2005 4:54 pm  

ஓ..!!!

Anonymous March 10, 2005 7:46 pm  

அது யாரு அது கொஞ்சம் முகத்தைக் காட்டுங்க? ஹலோ, இங்க பாருங்க!

அலுவலகம், வீட்டுவேலைகள், குடும்பம் எல்லாத்தையும் பணியகத்துலயே பாத்துக்கற பாவப்பட்ட இனத்துக்கு 'எ'தான் போடணும். :-((

இனம்=ஆண் இனம்

Vijayakumar March 10, 2005 8:54 pm  

O

`மழை` ஷ்ரேயா(Shreya) March 11, 2005 8:37 am  

க்ருபாவுக்கும், அவரது சக பேச்சுலர்ஸ்க்கும் எல்லாருமா சேர்ந்து ஒரு "எ" போடுவமா? ஓகே ..ரெடி...1 - 2 - 3..."எ" ;o)

Anonymous March 11, 2005 9:02 am  

'எ'க்கு நன்றி. ஆமாம், உங்களுக்கு வலைப்பதிக்க போதுமான நேரம் கிடைக்கறதில்லையா நெஜமாவே? ஏன், உங்க கைத்தொலைப்பேசி-ல WAP (or) GPRS தொழில்நுட்பம் இல்லையா? அப்படியே எங்கயாவது பயணிக்கும் போது கூட எங்களையெல்லாம் இம்சைப் படுத்தலாமே, வந்து... வலைப்பதிக்கலாம்ல அதை வெச்சு? தனியாக கணினி முன்னாடிதான் இருக்கணுமா என்ன?

`மழை` ஷ்ரேயா(Shreya) March 11, 2005 12:58 pm  

ம்ம்..க்ருபா. நல்ல ஐடியா தான் !!
என்னிடமிருப்பது ஒரு MS-DOS இன் தரத்தில் ஒரு கைத்தொலைபேசி. (கணவர் winXP ரகம் வைத்திருக்கிறார்!:o)

என்னுடையதிலே இணையம் மேயலாம்.ஆனால் கையைக் கடித்துவிடும். வேறு சேவை வழங்குநரைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். பதிவையும் ஒரு முறை முயன்று பார்க்க வேண்டும்..ஐடியாவுக்கு நன்றி.

பெட்டகம்