மகிழும் வாழ்க்கை

ஒருவர் சிலாகித்துச் சொன்னதன் பெயரில் ஒரு புத்தகம் (மின் வடிவத்தில்) வாசித்தேன். மர்மக் கதையோ, விஞ்ஞானப் புனைகதையோ அல்ல. பொலிஅனா என்னும் ஒரு சிறு பெண் எப்படி தன் வாழ்வில் உள்ள & ஏற்படும் எல்லாவற்றிலும் மகிழ்ச்சியைக் காண்கிறாள் என்பதே கரு. அதை ஒரு விளையாட்டாகவே அவள் பார்க்கிறாள். அவளது அந்த "மகிழ்ச்சி காணும்" விளையாட்டு எப்படி அவளைச் சுற்றியிருக்கிறவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை. கதை மாந்தரில் அவள் ஏற்படுத்தும் மாற்றங்கள் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டது / கதையில் சொல்லப்படுவது போன்று திடீரென்று ஏற்பட முடியாதவை போல எனக்குத் தோன்றினாலும், அம்மாற்றங்கள், ஒருவர் சில விஷயங்களை உணர்ந்ததும் அவரில் ஏற்படக்கூடியவையே.

பொலிஅனாவைப் போலவே சின்ன விடயங்களிலே நானும் சந்தோசப்பட்டுக்கொள்கிறேன் என்பது மகிச்சியாக இருக்கிறது. ஆனாலும், "மகிழ்ச்சி காணும்" விளையாட்டை நான் என் வாழ்வின் எல்லாத் தளங்களிற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதை இப்புத்தகத்தை வாசித்த பின் உணரத் தலைப்பட்டுள்ளேன். பொலிஅனாவின் கதையை இங்கே வாசிக்கலாம். வாசிப்பை ஒரு நாளில் முடித்து விட்டாலும், வாசித்ததை, வாசிப்பு நமக்கு உணர்த்துவதை, மறக்க முடியாதென்றே தோன்றுகிறது. இன்னும் பிறக்காத என் பிள்ளை(களு)க்கு ஒரு வாசிப்பு அனுபவமாக இதை நான் கொடுப்பேன். :o)

3 படகுகள் :

Anonymous April 15, 2005 3:41 pm  

>இன்னும் பிறக்காத என் பிள்ளை(களு)க்கு ஒரு வாசிப்பு அனுபவமாக இதை நான் கொடுப்பேன். :o)

அட அப்படியா? நல்ல விஷயம். Congrats!!!

வாசிப்பு அனுபவமாக உங்கள் வாழ்க்கையையும் உங்க பிள்ளைக்கு குடுங்க.

அதைவிட, வாசிப்பு அநுபவமாகக்குடுக்க இன்னொரு நூலும் இருக்கு: பொன்னியின் செல்வன்.

நீங்க படிச்சாச்சா?
சு. க்ருபா ஷங்கர்

`மழை` ஷ்ரேயா(Shreya) April 15, 2005 3:43 pm  

க்ருபா ..நீங்க ஹேலோஸ்கானில் போட்ட பின்னூட்டதை இங்கே பிரதி பன்னியுள்ளேன்.

பொன்னியின் செல்வன் 11 - 12 வயதில் முதலில் வாசித்தேன். இப்பவும் வாசிக்கிறேன். புத்தகத்தை வாங்கித்தந்த குகாண்ணாவுக்கு நன்றி!

`மழை` ஷ்ரேயா(Shreya) April 15, 2005 5:10 pm  

சின்னப்பிள்ளைகளுக்கான Classics ல் இதுவும் ஒன்றாம்! இன்றைக்குத் தான் தெரியும்!

பெட்டகம்