நன்றி சொல்லிப் பொழியும்

கடந்த 7 நாட்களும், அதற்கு முன்பும் என் பதிவுக்கு வந்து, நான் கிறுக்குவதையெல்லாம் வாசித்து கருத்துக்கள் சொல்லி ஊக்கப்படுத்தி வரும் அனைவருக்கும், தமிழ்மண நட்சத்திரமாக ஒளிர விட்ட மதி & தமிழ்மணத்தாருக்கும், சொந்த வேலை காரணமாக வலைப்பக்கம் வரமுடியாதென ஆகிய போது, கடைசி இரண்டு பதிவுகளையும் வலையேற்றிய துளசிக்கும் நன்றி.

மற்றுமொரு விளையாட்டுடன் மழை இன்னும் பொழியும்.

17 படகுகள் :

Anonymous August 15, 2005 12:16 pm  

நன்றாகக் கொண்டு சென்றீர்கள் மழையக்கா.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 15, 2005 1:37 pm  

நன்றி மூர்த்தி.

இந்த வாய்ப்பை நான் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. :O(

Narain Rajagopalan August 15, 2005 4:18 pm  

பின்னூட்டமிடாமல் போனாலும் நன்றாக போனது இந்த வாரம்.

Voice on Wings August 16, 2005 12:25 am  

ஷ்ரேயா, உங்கள் நட்சத்திரப் பதிவுகளுக்குப் பாராட்டுக்களும் நன்றிகளும். நான் உங்கள் பதிவுகளை என்றுமே விரும்பிப் படிப்பவன்தான். தொடர்ந்து கலக்குங்க. :)

Voice on Wings August 16, 2005 12:26 am  
This comment has been removed by a blog administrator.
ஒரு பொடிச்சி August 16, 2005 1:32 am  

நான் உங்கள் பதிவுகளை என்றுமே விரும்பிப் படிப்பவன்தான்.//
me too; continue shreya!

பத்மா அர்விந்த் August 16, 2005 2:32 am  

ஷ்ரேயா
குறுக்கெழுத்து போட்டி, அம்மாவின் கடிதம் என நன்றாக இருந்தது. மழை மேலும் பொழியட்டும்

கலை August 16, 2005 4:29 am  

உங்கள் பதிவுகள் யாவும் நன்றாகவே இருந்தன. வாழ்த்துக்கள் ஷ்ரேயா.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 16, 2005 8:57 am  

நன்றி - எல்லாருக்கும்.

// //நான் உங்கள் பதிவுகளை என்றுமே விரும்பிப் படிப்பவன்தான்//

me too; continue shreya!//

பொடிச்சி - எப்ப பொடியன் ஆனீங்க? ;O)

Anonymous August 16, 2005 9:21 am  

இப்படி ஒன்னு நடந்துருக்கா இந்த 10 நாளுக்குள்ள?

சரி, சரி. தொடர்ந்து 7, 8 ஒரே பதிவுல! பேசாம மனசுக்குள்ளயே நட்ச்சத்திரமா நெசச்சுக்கோங்க, தெனமும் எழுதத் தோணும். :-)

சரி, எல்லாத்தயும் படிச்சுட்டு வரேன்.

Agnibarathi August 16, 2005 2:37 pm  

Me too back, after stuffing myself with vada, pAyasam, aviyal, poriyal, sAmbAr, etc at home!!! Congrats on becoming a natchaththiram!! New posts on soundaryam!!

`மழை` ஷ்ரேயா(Shreya) August 16, 2005 3:58 pm  

//தெனமும் எழுதத் தோணும். :-)//

எனக்கு சொல்றதெல்லாம் சரி க்ருபா...நீங்க எப்ப தொடர்ந்து பதிவு போடுற உத்தேசம்? :O)

வீ. எம் August 17, 2005 6:58 pm  

//சொந்த வேலை காரணமாக வலைப்பக்கம் வரமுடியாதென ஆகிய போது//
கடந்த 3 நாளா இங்கே சென்னை பக்கம் வந்து சற்று தலை காட்டி போனதுக்கு நன்றி மழையக்கா!! :)
தொடரட்டும் இந்த பொற்காலம்...சாரி, மழைக்காலம்... !!
பி கு:
அடுத்த குமுதம் இதழில் வர இருக்கும் ஒரு கதையை முன்னமே படிக்க வீ எம் வலைப்பூவுக்கு வாங்க, வாங்க , வாங்க
வீ எம்

வசந்தன்(Vasanthan) August 18, 2005 12:58 am  

உடனடியா வந்து வாழ்த்துச் சொல்லாததுக்க மன்னிக்கோணும்.
ஆனா நான் எதிர்பாத்தது இன்னும் கொஞ்சம் அதிகம்.

கயல்விழி August 18, 2005 1:03 am  

//இப்படி ஒன்னு நடந்துருக்கா இந்த 10 நாளுக்குள்ள?//

எனக்கும் தெரியாது. தமிழ்மணம் முகப்புக்கு செல்வது குறைவு. வாழ்த்துக்கள் ஷ்ரேயா.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 18, 2005 10:38 am  

நன்றி.

மன்னிப்புக் கேட்க ஒன்றும் இல்லை வசந்தன். எனக்கே கொஞ்சம் ஏமாற்றமாத் தான் இருக்கு.

(மனதிலே சின்னதாக "சட்டியிலே இருந்தாத்தானே அகப்பையில் வரும்" என்று சத்தமொன்டும் கேக்குது!) :O(

Ganesh Gopalasubramanian August 18, 2005 2:33 pm  

காலம் தாழ்ந்து வாழ்த்து தெரிவிப்பதற்கு மன்னிக்கவும்.

பெட்டகம்