பொய்யெனப் பெய்யும் மழை

காரியங்கள் ஆக வேண்டியிருந்தால் சின்னதோ பெரிதோ பொய் சொல்லிவிட நேரும். (பொய்யென்றால் பொய்தானே..பிறகென்ன சின்னதும் பெரியதும்!)

யாரையாவது "நோக்கும்" படலம் நடைபெற்றால் அடுத்த கட்டத்துக்கு உதவும் என்று மின்னஞ்சலில் வந்தவற்றைத் தருகிறேன்.

  • அவளி(னி)டம் போய் "You are under arrest" என்று சொல்லுங்க. எதற்கு என்று கேட்கும் போது "என் உள்ளத்தைத் திருடியதுக்காக"

  • என்னுடைய தொலைபேசி இலக்கத்தைத் தொலைச்சிட்டேன்..உங்களுடையதை கடன் பெறமுடியுமா?

  • அவருடைய சட்டையில் இருக்கும் tag ஐத் திருப்பிப் பாருங்கள். என்ன செய்கிறீர்களெனக் கேட்கையில் "இல்ல..நீங்க "made in heaven" ஆ என்று பார்த்தேன்"

  • ஒரு பூவைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அவளுக்கு முன்னாலே நடந்து போய் சொல்லுங்க: "நீ எவ்வளவு அழகாயிருக்கிறாய் என்று இந்தப் பூவுக்குத் தெரியவில்லை..அதுதான் காட்டக் கொண்டுவந்தேன்"

  • ஆங்கில எழுத்துகளில் வரிசையை மாத்தீட்டாங்களே..தெரியுமா? "U"வையும் "I" யையும் சேர்த்துட்டங்களாம்

  • வழி தெரியாம தடுமாறி நிற்கிறீங்களா? ஏன் கேட்கிறேன் என்றா தேவதைகளை சொர்க்கத்திலிருந்து இவ்வளவு தூரத்தில் பார்ப்பது அரிது

  • "கண்டதும் காதல்" ல் உங்களுக்கு நம்பிக்கையுண்டா அல்லது நான் இன்னுமொருமுறை உங்களுக்கு முன்னால் நடக்க வேணுமா?

  • உங்கட இதயத்துக்கு வழி சொல்ல முடியுமா? உங்கட கண்ணிலே நான் காணாமப் போயிட்டன்.


>>உடல் /மன நலத்துக்குக் கேடு விளைவிக்கும் விதமான பின்விளைவுகளேற்படின் நான் பொறுப்பல்ல!<<

22 படகுகள் :

துளசி கோபால் August 19, 2005 12:25 pm  

என்னம்மா? 'அனுபவம்' பேசுதா?

துளசி.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 19, 2005 12:38 pm  

ஏன் கேட்க மாட்டீங்க!

உங்களைப் போல எல்லாருக்கும் இப்பிடி அனுபவம் வாய்க்குமா! ;O)

ச.சங்கர் August 19, 2005 1:31 pm  

""உங்கட இதயத்துக்கு வழி சொல்ல முடியுமா? உங்கட கண்ணிலே நான் காணாமப் போயிட்டன். """

இதை சொல்லி try பண்ணினதில் கிடைத்த பதில்

"அப்படியா...ரொம்ப சந்தோஷம்...அப்படியே கண் காணாம போய்டு ...திரும்ப வராதே...நான் நிம்மதியா இருக்கேன்.

தவறான advice தந்த் ஷ்ரேயா மிது கேஸ் போடலாமா என யோசித்துக் கொண்டிருக்கும்

அன்புடன்...ச.சங்கர்

Agnibarathi August 19, 2005 2:10 pm  

Best enna theriyumA? Sethu Vikram stylela enakku ok. Unakku OKvA thaan!!! ;)

இளங்கோ-டிசே August 19, 2005 2:30 pm  

ஸ்ரேயா, 'நோக்கும்' படலத்துக்கான உதவிக்குறிப்புக்களுக்கு நன்றி.
//உடல் /மன நலத்துக்குக் கேடு விளைவிக்கும் விதமான பின்விளைவுகளேற்படின் நான் பொறுப்பல்ல//
'நோக்கும்' படலம் வெற்றியடைந்தால், இதைத்தான் இரண்டுபேரும் மாறி மாறி தங்களுக்குள் கூறிக்கொள்வார்கள் என்று நினைக்கின்றேன். அதையும் நீங்கள் முன்கூட்டியே உதவிக்குறிப்பாய் தந்தமைக்கு இன்னுமொரு விசேட நன்றி :-)

வீ. எம் August 19, 2005 2:56 pm  

அட இப்படியெல்லாம் வழி இருக்கா..ரொம்ப நல்லா இருக்கே.. try பன்னி பார்த்துட்டு சொல்றேன் ஷ்ரேயா..

வீ எம்

`மழை` ஷ்ரேயா(Shreya) August 19, 2005 3:12 pm  

ச. சங்கர்: நீங்க வழக்குப் போட்டுப் பிரயோசனமில்ல. நான்தான் disclaimer போட்டிருக்கிறேனே!! :O)

முயற்சி திருவினையாக்கும் வீ.எம்!!

Unknown August 19, 2005 3:12 pm  

அவளுடைய சட்டையில் இருக்கும் tag ஐத் திருப்பிப் பார்த்தேன். என்ன செய்கிறீர்களெனக் கேட்கையில் "இல்ல..நீங்க "made in heaven" ஆ என்று பார்த்தேன்" என்றேன். "You are under arrest" என்றாள் அவள். நான் இப்போது சென்ட்ரல் ஜெயிலில். அவள்.. பெண் போலீஸ் அதிகாரி!

`மழை` ஷ்ரேயா(Shreya) August 19, 2005 3:39 pm  

அடடா...சிறையிலெல்லாம் இணைய இணைப்பு இருக்குதா என்ன! ;O)

என்னதான் இருந்தாலும் என் மேல வழக்குப் போட்டுப் பலனில்லையே.. டண் டண் டண் டண் டண்டணக்க டண்டணக்க!!! :OD

`மழை` ஷ்ரேயா(Shreya) August 19, 2005 4:26 pm  

//'நோக்கும்' படலம் வெற்றியடைந்தால், இதைத்தான் இரண்டுபேரும் மாறி மாறி தங்களுக்குள் கூறிக்கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.//

டிசே.. யாருடைய அனுபவம் பேசுது? ;O)

Ganesh Gopalasubramanian August 19, 2005 6:56 pm  

ஷ்ரேயா !! நல்ல நல்ல காதல் ஹைக்கூக்களை இப்படி அட்வைஸ்களாக மாத்திட்டீங்களே...

பார்ப்போம் ஏதாச்சும் ஒர்க்அவுட் ஆச்சினா நீங்க தான் எனக்கு குல தெய்வம் !!

தருமி August 20, 2005 3:22 am  

ச்சே..! எப்படிதான் இந்த மாதிரி adults only விஷயங்களையெல்லாம் வலைப்பதிவுகளில் போடுராங்களோ, தெரியலை. ச்சே..ரொம்ப மோசப்பா இந்த உலகம்!!!

கலை August 20, 2005 6:58 pm  

:))))

`மழை` ஷ்ரேயா(Shreya) August 22, 2005 8:55 am  
This comment has been removed by a blog administrator.
`மழை` ஷ்ரேயா(Shreya) August 22, 2005 8:55 am  

//நீங்க தான் எனக்கு குல தெய்வம் !!//

ஆஹா...சாமியாக்க திட்டம் போடுறாங்க. (அதுசரி..படையல் என்ன? எனக்கு கொஞ்சம் சலட், அப்பப்ப கொஞ்சம் மீன், இறால் வகையறா நல்லா உறைக்க உறைக்க குழம்பு (இறைச்சி வேண்டாம் ;O),

ஸ்னிக்கர்ஸ் சொக்லட், (ஃபெரேரொ ரொஷே என்றாலும் பரவால்ல ;O),
பிறகு கொஞ்சம் பயத்தம் பணியாரம் & முறுக்கு.

இப்போதைக்கு இது போதும்! :O)

`மழை` ஷ்ரேயா(Shreya) August 22, 2005 8:58 am  

தருமி தாத்தா...நான் இப்ப "ஆத்தா". :O)

சொல்றதை கேட்கணும். இல்லாட்டி க்றிஸ்மசுக்கு உங்களுக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டாமென்று Santaவிடம் சொல்லிவைப்பேன்! :OD

கிவியன் August 23, 2005 8:44 am  

வீ.எம்மு, வீடல சொல்லீடீங்களா?
தருமிக்கு ஆனாலும் குசும்புதான், வந்து அத்தனையும் படிசுப்போட்டு சே, சே - யாம்.

ஷ்ரேயா இன்னும்,

ரோட்டைக்கடக்கும் போது "ப்ளீஸ் வேண்டாம் ட்ரஃபிக் ஜாமாயிரும்னு" சொல்லலாம்"

"எனக்கு ஹார்ட் ப்ராப்ளம்னு நெனக்கிரேன்னு சொல்லலாம்" ஏன்னு கேட்டா உங்கள பாக்ரப்பெல்லாம் பட படன்னு அடிச்சுக்குதுன்னு சொல்லலாம்.

"நாம ஏன்டா பொறந்தோம்னு ரொம்ப நாளா எனக்கு கேள்வி இருந்துச்சு உங்கள கண்டவொடன சட்டுனு புரிஞ்சுபோச்சுங்க"

என்னமோ போங்க love makes the world go around..

`மழை` ஷ்ரேயா(Shreya) August 23, 2005 9:03 am  

இங்க பாருங்களேன்..
சுரேஷுக்கு அனுபவம் பேசல்ல.. பாடுது.. இல்லல்ல அருவி மாதிரிக் கொட்டுது!

நல்ல நல்ல "பொய்கள்" தந்ததுக்கு நன்றி சுரேஷ். ஒரு சின்ன சந்தேகம்..இதெல்லாம் நீங்க trial பார்த்ததா? ;O)

தருமிக்கு கொஞ்சம் over குறும்புதான். :o)

கிவியன் August 23, 2005 9:35 am  

குடும்பத்துல கொழப்பம் பண்ணீடுவிங்க போல்ருக்கே. நம்ம விவேக் ஷ்டைல்ல "அது தானே வருதுங்க". அதான் "பொய்"ன்னு போட்டீங்களே தலைப்பு.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 23, 2005 10:03 am  

இல்ல சுரேஷ்..நீங்க "உண்மைகள்' சொல்லித்தான் குடும்பஸ்தன் ஆனீங்களா என்று தெரியாததில கேட்டேன். :O)

தானே வருதா.. வரட்டும்..வரட்டும். அதான் நீங்களே சொல்லிட்டீங்களே.."love makes the world go around.."

ம்ம்ம்..ம்ம்..பொய்கள் வளரட்டும்! :O)

தகடூர் கோபி(Gopi) August 23, 2005 7:51 pm  

ஹூம்.. இனி என்னத்த நான் பொய் சொல்லி... என்னத்த அம்மணி அதக் கேட்டு...

ஒரு அஞ்சி வருசம் முன்னால இந்த ஐடியா எல்லாம் குடுத்திருந்தீங்கன்னா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்!

`மழை` ஷ்ரேயா(Shreya) August 24, 2005 10:10 am  

கோபி - காதலிக்கு மட்டும்தானா பொய் வேலை செய்யும்?... திருமணத்துக்குப் பிறகும் நீங்க மனம் தளராம(!?) சொல்லலாம்.. விளைவுகள் கொஞ்சம் மாறும் சாத்தியம் இருக்குதான்...எதுக்கும் முயற்சி பண்ணிப் பாத்துட்டு வந்து சொல்லுங்க! :O)

பெட்டகம்