பிறந்தநாள் இன்று பிறந்தநாள்

தமிழ்மணத்துக்கு இன்று பிறந்த நாள். வலைப்பதிவர்களை மனதில் கொண்டு சொந்த நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு & போராடி (வீட்டில் பெற்ற "விழுப்புண்கள்" எத்தனையோ? ;O) )அந்த உழைப்பின் பயனாக தமிழ்மணத்தை உருவாக்கிய காசிக்கும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனைத்து வலைப்பதிவர் சார்பிலும் நன்றி.

தமிழ்மணத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்கின்ற இந்த நேரத்திலே, ஒரு வேண்டுகோள்: கொஞ்ச நாளைக்கு முன்பு போன்றதான அசிங்கங்கள் அன்றி அழகியவைகள் மட்டும் உலாவ வேண்டும் வலைப்பதிவுலகத்தில். சிந்திக்க வைப்பதாயும் தெளிவிப்பதாயும் கருத்துகள் வரவேண்டுமேயன்றி, தேவையற்று ஒருவரையோ அல்லது அவரது நம்பிக்கைகளையோ/கொள்கைகளையோ இழிவு படுத்தும் வண்ணமிராது கருத்துச் செறிவுள்ள (நாகரீகமான) விவாதங்களுக்குப் பதிவுகள் இட்டுச் செல்ல வேண்டும்.

மீண்டும் தமிழ்மணத்துக்கு வாழ்த்துக்கள்.

7 படகுகள் :

துளசி கோபால் August 24, 2005 11:23 am  

Well said

NambikkaiRAMA August 24, 2005 2:13 pm  

எனது வாழ்த்துக்களையும் உங்கள் வலைப்பூ மூலமாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Raja August 24, 2005 2:41 pm  

வாழ்த்துக்கள்

தருமி August 24, 2005 2:55 pm  

எனது வாழ்த்துக்களையும் உங்கள் வலைப்பூ மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்

கலை August 25, 2005 3:02 am  

அப்படியே எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்கிறேன்.

கிவியன் August 25, 2005 12:09 pm  

"தானக்கும் கூட எழுதவரும்" என்று பலருக்கு தங்களையே அடையாளம் காட்ட காசியும் முகம் தெரியா ஏனைய மற்றோரும் செய்திருக்கும் மிக உண்ணதமான ஒரு ஊடக்ம "தமிழ்மண்ம்". இதன் ஆரோக்கியமும் வளர்ச்சியும் நம் எல்லோர் கையிலுமிருக்கிரது. மேன்மேலும் விரிவடைய வாழ்த்துகிறேன்.

நினவோடு வாழ்த்திப் பதித்த ஷ்ரேயாவுக்கு ஒரு "ஓ" போடுங்க மக்களே.

தெருத்தொண்டன் August 25, 2005 1:26 pm  

காசி மற்றும் நண்பர்கள் குழுவிற்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். வாழ்த்துக்களும்..

பெட்டகம்