சொல்ல விரும்புவது

என் அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய வலைப்பதிவாளர்களே, வணக்கம்.

இன்றைக்கு நான் சொல்லப்போவது உங்களுக்கு முக்கியத்துவமில்லாத செய்தி.. ஆனாலும் நீங்கள் "சொல்லவில்லையே நீ" என்று சொல்லிவிடாமல் இருப்பதற்காக நான் சொல்வது என்னவென்றால்: ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தபடி சரியாக அவுஸ்திரேலிய நேரம் 12 ஒக்டோபர் 2005, 02:00 முதல் நடைமுறைப்படுத்தப்படும் சில செயற்பாடுகள்/நடைமுறைகள் காரணமாக கிட்டத்தட்ட 2 - 3 கிழமைக்கு இந்தப்பக்கம் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உங்களுக்கு (நிகழ சந்தர்ப்பமே இல்லாத) மனவருத்தங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.(அடடே.. யாராவது வந்து corporate report எழுத கூட்டிட்டுப் போங்களேன்!! ;O)

புதிய செயற்பாடுகளை சரிவர மண்டைக்குள்ளே செலுத்தி (வசந்தன் - அந்த குளுக்கோசும் வீவாவும் இப்போ பயன்படும்! அன்பளிப்பு தாராளமாக ஏற்றுக்கொள்ளப்படும்!!) என்னென்ன செய்ய வேண்டும், எவ்வெப்போது செய்ய வேண்டும் என்பதையும் பழகியெடுத்து, சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது. அதனால்... "இரண்டு கிழமையாவது நிம்மதி" என்று சந்தோசப் படுகிறவர்களும் "ரொம்ப முக்கியம் இது" என்று அங்கலாய்ப்பவர்களும் "அடடா!!" என்று கவலைப்படுபவர்களும் (இது ஒரே ஒருவர் தான் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!! ;O) ) ஒரு சில கோப்பை ரசங்களை (ரசம் - அவரவர் விருப்பத்தைப் பொறுத்து சுவை/நிறம்/மணம்/குணம் வேறுபடலாம்) அருந்தி மனதை ஆற்றிக்கொள்ளுங்கள்!

மீண்டும் கொஞ்ச நாளையால் சந்திக்கலாம்.

சம்பந்தமில்லாத பின்குறிப்பு: 125ம் பதிவு இந்த அறிவித்தலா!?! :O(

6 படகுகள் :

தாணு October 12, 2005 5:41 pm  

முதல் தடவையா பின்னூட்டப் பெட்டியில் ஓட்டுப் போட வந்த என்னை ஏமாத்திட்டீங்களே ஷ்ரேயா!

துளசி கோபால் October 13, 2005 11:06 am  

ஷ்ரேயா, இப்படி ஓடோடிவந்த தாணுவை ஏமாத்தலாமா?

"எழுது ஷ்ரேயா எழுது. உன் எழுத்து என்ற இன்பவெள்ளத்தில் நீந்துவதற்கு ஓடோடிவந்த தாணுவை ஏமாற்றிவிடாதே'

தனிமெயில் அப்புறம் அனுப்பறேன்.

முதல்லே வயித்துப் பிழைப்பைக் கவனிக்கணுமுல்லே.

ரெண்டுவாரம் மட்டும்தான் நான் லீவு சாங்ஷன் செஞ்சிருக்கேன். மறந்துறாதீங்க.

27 அக்டோபர் ஒரு போஸ்டிங் போடலே, அப்ப இருக்கு:-)

துடிப்புகள் October 14, 2005 10:42 pm  

சிவாஜி படத்துல கதாநாயகியாமே! வாழ்த்துக்கள்!
:-)

தருமி October 18, 2005 3:38 am  

கிழமைன்னா, வாரமா, மாதமா என்று முழிச்சிக்கிட்டு இருந்தப்போ, தனி ஒருவராக வந்து (ரெண்டுவாரம் மட்டும்தான் நான் லீவு சாங்ஷன் செஞ்சிருக்கேன். மறந்துறாதீங்க.)
என் சந்தேகத்தைத் தீர்த்துவைத்த துளசி அவர்களே, நீவீர் வாழ்க.

ஷ்ரேயா, மழை சீக்கிரம் பெய்யட்டும்.

வீ. எம் October 19, 2005 10:44 pm  

நல்லபடியா போயிட்டு வாங்க ஷ்ரேயா!

கயல்விழி October 21, 2005 3:19 am  

ஷ்ரேயா நல்ல படியாப்போயிட்டு வாங்க. நலமாய் மறுபடியும் நல்ல பதிவுடன் வாங்க. :D

பெட்டகம்