நல்லகாலம் , மூச்சு விடுவது ஒரு தன்னிச்சையான செயல்... இல்லாட்டி இருக்கிற வேலைக்குள்ளே அதைச் செய்ய மறந்து போய், நிறைவேறாத ஆசை உள்ள ஆவி/பேயாய் (<--இப்பவே இதுதான் என்டு பெயர்!!) உலாவாமல்(நன்றி சில பல சினிமா & கதைகள்)..உங்களைப் பாட வைக்க (வேறென்னத்தை.. "சோதனை மேல் சோதனை" தான்!) திரும்பவும் வந்திருக்கிறேன்.
தெ.து.வ.ப.ச.செ. - மன்னிப்புக் கேட்கிறேன்.. எனக்குத் தொலைபேச முயற்சித்தீர்கள். ஆனாலும் அந்த நேரத்துச் சூழ்நிலைகளால் பதிலளிக்க முடியவில்லை! விரைவில் தொடர்பு கொள்கிறேன்.
------------------------------------------------------------------
சரி, விதயத்துக்கு வருவோம்...இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை என்று வானொலி, தொ.காவில் சொல்வது போல வாசிக்கவும்! >>> இன்றைய எரிச்சல்..வழங்குவோர்: பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையம். (கலை - hint, hint!! ;o)
முக்கியமாக இவர்கள் கடைப்பிடிப்பதில் இரண்டை (என் பார்வையும் கலந்து சொல்கிறேன்) தாமே அல்லது "7 நாள் உபதேசம் பெற்ற" தங்கள் கூட்டத்தினர் சமைத்தாலொழிய இவர்கள் வேறிடத்தில், வேறு யார் வீட்டிலும் "சமைக்கப்பட்ட" உணவை உண்பதில்லை. பழமோ, பொதி செய்யப்பட்டிருப்பதிலிருந்து எவ்வித மாற்றமுமின்றிப் பரிமாறக்கூடியதாய் இருக்கும் உணவு/பானங்களைத் தவிர "ஞானம்" பெறாதவர் வீட்டில் உண்ணார்கள். ஏனா? நல்ல கேள்வி கேட்டீர்கள்!
"ஞானம்" பெறாதவர்கள் 1. உணவு தயாரிப்பு முறை அறியாதவர்கள் (அதாவது நல்ல எண்ணங்களோடே சமைக்க வேண்டும் என அறியாதவர்கள்) 2. அதனால், என்ன எண்ணங்கள் மனத்தில் ஓடிக்கொண்டிருக்க சமைத்தார்கள் என்று தெரியாமையால், தற்செயலாய், தேவையற்ற/வீணான எண்ணவோட்டம் அந்த நேரத்தில் அவர்கள் மனதில் இருந்திருந்தால் அது உணவு மூலமாக தம்மை வந்தடையும். இது இவர்களது "தூய்மையைக் கெடுக்குமாம்". உடன்படுகிறேன்.. எண்ணங்கள் உணவின் தன்மையில் மாற்றமேற்படுத்துமென.
இவர்களே சமைப்பார்கள்..ஆனால் உள்ளி (பூண்டு), வெங்காயம் - இவை சமையலில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டா. ஏனென்ற கேள்வி வருகிறதா? இந்த உள்ளி, வெங்காயம் இவை பாலுணர்வைத் தூண்டுமாம். அந்தந்த வயதில் இயல்பாய் நிகழ்வதற்கு, இவர்கள் ஏன் வலுக்கட்டாயமாக அணைபோட முயற்சிக்கிறார்கள்? அல்லது வெங்காயம், உள்ளி போட்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்தவரை இவர்களுக்கு அதீதமான பாலுணர்ச்சிதான் இருந்ததா!
வெள்ளை ஆடைதான் அணிவார்கள். அதிலும் முழுக்கைச் சட்டை. அதிலும் சேலை அணிவோர் - கேட்கவே வேண்டாம். கழுத்தோடு ஒட்டிய இரவிக்கைக்கழுத்து, முழுக்கை, சாதாரண இரவிக்கை போன்று இடுப்படியில் நிற்காமல் இன்னும் நீளமாய். ஆக மொத்தம் இரவில பார்த்தீர்களோ - தெரியாத ஒருவருக்கு lift கொடுத்து, அவர் காரை விட்டு இறங்கி நுழைந்த இடம் றொக்வூட் சவக்காலை என்று கண்ட ஒரு மாமாவுக்குப் போல - உங்களுக்கும் காய்ச்சல் வருவது சர்வ நிச்சயம்.
ஏன் இந்த நீட்டு ப்ளவுஸ்? சேலை கட்டினால் இடுப்புத் தெரியுமல்லவா? அப்பிடி இடுப்புத் தெரிவது கூடவே இருந்து தியானம் பயில்வோர்க்கு(பெண்கள் முன்னால் அமர ஆணகள் பின்னாலாம், மாறியே அமர்ந்தாலும் தியான நிலையத்தில் காண்கிற மற்ற நேரங்கள்!!) இடைஞ்சலாக..கவனத்தைக் குலைப்பதாக இருக்ககூடாதாம்.
எனக்கு விளங்கவில்லை, ஏற்கெனவே உள்ளி, வெங்காயமின்றிச் சாப்பிடுபவர்கள் & தியானத்திற்கென வருபவர்கள், கேவலம் ஒரு சின்னத்துண்டு தசையால் கவனம் சிதறுவதா? அப்ப இவர்கள் கவனம் தியானத்தில் இல்லையா? அப்படியானால் (இவர்கள் சொற்படி பார்த்தால்) உள்ளி, வெங்காயம் சாப்பிடுபவருக்கும், "பாலுணர்வு தூண்டப்படாமல் இருக்கும்" இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? மனிதன் மனிதன் தான். அவனது அடிப்படை இயல்புகளைக் குலைத்து, அதற்குச் சாயம்
பூசுவானேன்?
36 படகுகள் :
OM SHANTHI SHANTHI SHANTHI
//தெ.து.வ.ப.ச.செ. - மன்னிப்புக் கேட்கிறேன்//
அந்தப் பதவியிலிருந்து நான் விரட்டியடிக்கப்பட்டு அனைத்துப் பதவியையும் ஒருவரே பிடுங்கிக்கிட்டு.. போதாதற்கு என்னை மெல்போணை விட்டே துரத்தியடிக்க ஒருவர் முயல்கிறார்.. அது தெரியாதா உங்களுக்கு!...
நான் ஏற்கனவே ஒரு வெங்காயம் என்ற படியால்.. வெங்காயம் மேல் விருப்பேதும் இல்லை.. ஆனால்.. உள்ளி அதிகம் சேர்த்துக் கொள்வேனே.. அப்ப குறைக்கணுமா..?
ஷ்ரேயா.
பதிவிருக்கட்டும்....
நீங்க வந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
அதனாலே இன்னிக்கு உள்ளி, வெங்காயம் எல்லாம் சேர்த்துச் சாப்பிடப்போறேன்.
துளிசியம்மாவின்ர கதையப்பாத்தால், ஏதோ சாவின்ர விளிம்பிலயிருந்து தப்பி வந்தமாதிரி ஒரு feeling வருது.
என்ன கோதாரிக்கு உந்த தியானம் அது இது எண்டு வெளிக்கிடுறியள்?
மேற்குறிப்பிட்ட ஊட்டத்தை வழங்கியது நான்தான்.
-வசந்தன்.-
ஷ்ரேயா ,
எங்க ஊரில் `உள்ளி'ன்னாலும் வெங்காயம்தான்.
சித்தன்கிட்டே சொல்லி வெங்காயத்தின் கீர்த்திகளை விலாவாரியாகப் போடச் சொல்லலாம்!!
நல்ல கருத்து ஷ்ரேயா.....
பாருங்க வெங்காயம் சாப்பிடுகிறவன் இதெல்லாம் தெரியாமல் உண்மையிலேயே வெங்காயமாகத்தான் இருப்பான் ஆனா இவங்க என்ன செய்யும் ஏது செய்யும்னு சொல்லியே பாலுணர்வை பற்றி நிறைய பேசிறுவாங்க....
வேற என்ன சொல்றது... மனதில் குறையிருந்தால் எல்லாம் அழுக்காகத்தான் தெரியும்
சொல்ல மறந்துட்டேன்... திரும்ப வலைப்பூவிற்கு வந்ததற்கு சந்தோஷம்... ஆனா சென்னையில் பெய்யற மாதிரி சுத்தி சுத்தி அடிக்கக் கூடாது எங்க ஊரில் பெய்யற மாதிரி அழகா மழை பொழியணும்.....
மழையே...மழையே..ஓடிவா..
நீங்கள் எழுதியுள்ளது எல்லாமுமே எல்லா மதத்திற்கும் பொருந்துமே..வேறு வேறு வேஷங்கள்; மாறுபட்ட விளக்கங்கள்; அவ்வளவுதான்.
மழித்தலும், நீட்டலும்...?
அருமையாகக் கேட்டீர்கள் ஷ்ரேயா. ஒலகம் பூரா இப்படித்தாங்க. witch hunter என்ற புத்தகம் படியுங்கள். அதுல மேலை நாட்டு இந்த விஷயங்களும் வரும். நாட்டுக்கு நாடு வாசப்படி போல.
கணேஷு, நான் சொல்ல வந்தத எனக்கு முந்திக்கிட்டியே.....
இன்னமும் சில வீடுகளில் வெங்காயம் சேர்த்து சமைப்பது இல்லை, அதேபோல பூண்டும். உணர்ச்சிகளை கோபத்தை தூண்டிவிடும் என்ற கருத்துதான். சில உணவு பொருட்கள் செரடோனின் போன்றசில வேதிப்பொருட்களை தூண்டிவிடுவது உண்மையே. ஆனால் இது போன்ற வேதிப்பொருட்களுக்கும் பாலுணர்வுக்கும் தொடர்பு உண்டா அல்லது அப்படியே பாலுணார்வு இருந்தால் அது தவறாகுமா, இல்லை கணவனை இழந்ததால் உடலை கட்டு படுத்த இந்த நடைமுறையா என்று தெரியவில்லை. இதன் வன்முறை, ஆணுக்கு இந்த திட்டங்கள் இல்லாதது என பதிவே எழுதலாம்.
அடடே!
அருமையானவொரு "வெங்காயப்" பதிவு.
மழை நாயகியே, இரண்டு மாதத்திற்கு முன்னால் மவுண்ட் அபு, அங்க தாங்க பிரம்ம குமாரிகள் சங்கத்தின் தலைமையகம் உள்ளது.
சின்ன பெண் ஒருத்தி, ஹிந்தியில் விளக்கினாள். யாரோ ஒரு ஆண் ஒருவர்தான் அதை நிறுவியிருக்கிறார். அவர் புகழ் பாடப்பட்டது.
மேலும் அங்கு மிக பிரமாண்டமான பூங்கா உள்ளது. மேற்பார்வை என்ற பெயரில் நிறைய ஆண்கள்- டிவோட்டீஸ் வெள்ளையுடையில் அங்கங்கு உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். கூலி தொழிலாளர்கள் வேலை செய்துக் கொண்டு இருந்தார்கள். அந்த பிரமாண்ட பூங்காவை மட்டும் பராமரிக்க மாதம் எத்தனை லட்சங்கள் வேண்டும்?
சினேகிதி - LOL!!! :oD
சயந்தன் - என்ன!! உங்களுக்கு இப்பிடி ஒரு நிலையா?
இதுக்குத்தான் சொல்றது.. (தலைவரைப்பற்றி பதிவு போட்டனான் தானே!!) சரி சரி - சிட்னிக்கு வாங்க!
உள்ளியை நீங்க குறைக்கோணுமா இல்லையா என்பதை நீங்க உள்ளியைச் சாப்பிட்ட பிறகு பக்கத்தில நின்டு கதைக்கிற ஆளிட்டத்தான் கேட்கோணும்! :o)
//என்ன கோதாரிக்கு உந்த தியானம் அது இது எண்டு வெளிக்கிடுறியள்?//
நான் வெளிக்கிடேல! "ஞானம்" பெற்றவர் ஒருவரிட்டக் கேட்டதற்கு வந்த பதிலுகளை வைச்சுத்தான் இதை எழுதினனான்!
ஏன் செயலாளரை பதவியிலயிருந்து தூக்கின்னீங்க? (அல்லது அவர் விசமப் பிரச்சாரம் செய்யிறாரோ?)
//எங்க ஊரில் `உள்ளி'ன்னாலும் வெங்காயம்தான். //
தாணு - அப்ப உள்ளி? - பூண்டு என்பீர்களா? இலங்கையில் சிலர் உள்ளியை (வெங்காயம் இல்லைங்க.. பூண்டு)வெள்ளைப் பூடு என்பார்கள்.
கணேசா - சரியாச் சொன்னீங்க. மறைச்சு மறைச்சு வைக்கிறதாலேதான் இவ்வளவு கூச்சலும்!
மற்ற மதங்களைப் பற்றி மேலோட்டமாகத் தான் தெரியும். இது என் வாழ்க்கையில் நிறையவே சம்பந்தப்பட்ட ஒருவர் என்பதால் இவ்வளவுக்கு எரிச்சல் தருகிறது. என்னைச் சாராத விதயமென்றால் இந்தளவிற்கு எரிச்சல் வராதுதானே தருமித்தாத்தா?
G. ராகவன் - வீ.வீ.வாசல்படி போய், நா.நா. வாசல்படியா? :o)
எல்லாமும் எல்லா இடத்திலும் இருக்கும். தோற்றம் மட்டுமே வித்தியாசப் படுகிறது .. இல்லையா?
கணவனை இழந்தவர்கள் மட்டுமே இதற்குப் போகவில்லையே பத்மா. எல்லாரும் தானே போகிறார்கள்? ஆணுக்கு சட்டமில்லாதது பெண்ணுக்குச் சட்டமாயிருப்பது எனக் காணுகிற பலதில் இதுவும்.. :o(
உஷாக்கா - ஏன் தொழிலாளர்களை வைத்து வேலை செய்விக்கிறீர்கள் என்று கேட்டால் - வேலை வாய்ப்புக் கொடுக்கிறோம் என்று பதில் வரும் போல!! இதை நிறுவிய ஆண், வாழ்க்கையை நல்லா அனுபவித்த பிறகே இதை ஆரம்பித்திருக்கிறார். "பாபா" என்பார்கள் அவரை. சிவன் "சாமி வருவார்" என்றெல்லாம் சொல்லவில்லையா அவர்கள்?
என் புத்தி விடாதாம்.. கேள்! கேள்!! என்கிறது - மவுண்ட் அபுக்கு கிட்டே சில நுட்பமான சிற்ப வேலைப்பாடுள்ள பளிங்குக் கூரைகள்/கட்டடங்கள் இருக்காமே? அதெல்லாம் பாத்தீங்களா? :o)
வரவேற்ற எல்லாருக்கும் நன்றி.
துளசி - இப்போதைக்கு முதல் மாதிரி துளசிதளத்துலே "டேரா" முடியாது. அப்பப்ப எட்டிப்பார்த்தல் மட்டுமே.. :o(
மழையும் கொஞ்சம் விட்டு விட்டுத்தான் பெய்யும்.. :o|
ஷ்ரேயா... ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திகி...
// இந்த உள்ளி, வெங்காயம் இவை பாலுணர்வைத் தூண்டுமாம். அந்தந்த வயதில் இயல்பாய் நிகழ்வதற்கு, இவர்கள் ஏன் வலுக்கட்டாயமாக அணைபோட முயற்சிக்கிறார்கள்? // காந்தி எழுதிய புலனடக்கம் புத்தகம் படித்திருக்கிறீர்களா? அதில் வெங்காயம், பூண்டு மட்டுமல்ல மசாலா, காரம் மிகுந்தவை என்று ஒரு லிஸ்டே இருக்கும்.
// மனிதன் மனிதன் தான். அவனது அடிப்படை இயல்புகளைக் குலைத்து, அதற்குச் சாயம்
பூசுவானேன்? // இதத்தான் நம்ம தலைவர் ரஜனீஷ் கேட்டாரு. அவர நம்ம நாட்டுல பாடா படுத்திட்டாங்க...
// இதன் வன்முறை, ஆணுக்கு இந்த திட்டங்கள் இல்லாதது என பதிவே எழுதலாம். // தேன் துளி, இது ஆண்களுக்கும் பொதுவானதுதான். பெண்கள் மட்டும் வெங்காயம் பூண்டு இல்லாமல் சாப்பிடுகிறார்கள்/அல்லது நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்றா சொல்கிறீர்கள்..
***
இத படிச்சி ஒரே கெரோன்னு ஆயிடுச்சி... நல்லா காரஞ்சாரமா சாப்பிடணும் இன்னிக்கி... ஆமா இவ்ளோ பேரு இருக்கீகளே, ஆராவது வீட்டு சமையல் குறிப்புகள் போட்டு ஒரு பதிவு ஆரம்பிங்களேன். ஆரும் ஆரம்பிக்கலையின்னா நானே நாளக்கி ஒன்னு ஆரம்பிச்சிடுவேன் சொல்லிப்புட்டேன்...
ஷ்ரேயா, மவுண்ட் அபுவில் பார்த்தது தில்வாரா ஜெயின் கோவில். என்ன சொல்ல? பார்க்க பார்க்க அலுக்கவேயில்லை. மிக பழைய கோவில். ஆனால் புகைப்படம்
எடுக்க அனுமதிப்பதில்லை. இன்னும் அடாலஜ் கிணறு, துவாரகா, சோமநாத் என்று இந்த முறை செம்ம சுற்றல். குஜராத் பயண கட்டுரை எழுதவில்லை. விரைவில் விவரமாய் எழுதுகிறேன்.
காஞ்சியார், நம்மையெல்லாம் இதெல்லாம் எதுக்கு சமையல் குறிப்பு போடுங்கள் என்று மறைமுகமாய் சொல்வதைக் கடுமையாய் கண்டிக்கிறேன். ஸ்மைலி போடலைங்க :-)
திருத்தம், காஞ்சியார் இல்லை முகமூடியார்
முகமூடி அண்ணாச்சி - நீங்களுமா!!! நளபாகம் என்று நளனின் பெருமை சொல்றாங்களே.. அப்ப தந்தைக்குலம் கொஞ்சம் சமையல் குறிப்பை எடுத்து விடுறது! உஷாக்கா சொன்னது சரி - கனம் வாசகர்களே.. முகமூடி ஸ்மைலி போடல்ல!!
ஆகா...நமக்கு இந்தியா போனா பார்க்க வேண்டிய இடங்களைச் சொல்ல நிறையப் பேர் இருக்கிறாங்க. புதிதாய் நீங்களும் உஷாக்கா. :o)
அந்த வேலைப்பாடுள்ள கூரையின் பெருமையை justify பண்ணாத புகைப்படம் ஒன்று பார்த்தேன். அதான் ஞாபகத்திலிருந்து கேட்டேன்! உஷாக்கா - பயணக்கட்டுரை + படம் போடறதை விட வேற தலைபோற வேலை என்ன உங்களுக்கு?ம்ம்ம்?
// நம்மையெல்லாம் இதெல்லாம் எதுக்கு சமையல் குறிப்பு போடுங்கள் என்று // - உஷா
// அப்ப தந்தைக்குலம் கொஞ்சம் சமையல் குறிப்பை எடுத்து விடுறது! // - ஷ்ரேயா
***
ஆஹா தாய்க்குலங்கள் கூட்டணி சேர்றீங்களா... ஆபத்தாச்சே...
ஆமா நான் "இவ்ளோ பேரு இருக்கீகளே, ஆராவதுன்னு எல்லா வலைஞர்களையுந்தானே சொன்னேன்.. நீங்க ஏன் தாய்க்குலங்கள மட்டும்னு நினைக்கிறீங்க.. தாய்க்குலங்களுக்கு சமைக்க தெரியாதுன்னு (களி புகழ் துளசியக்கா தவிர) எனக்கு தெரியாதா?? ஆகவே வலை வாழ் மக்களே ஆராவது சமையல்குறிப்பு பதிவு போடுங்கப்பா (என்ன மாதிரி ஆளுங்க அத வச்சித்தான வாழ்ந்தோம்/துகிட்டு இருக்கோம்)
விரைவில் எதிர்பாருங்கள் முகமூடியின் அறுசுவை சமையல் பதிவு (வலைஞர்களின் உதவியுடன்)
ஏற்கெனவே இந்துராணி என்கிறவ சமையல்குறிப்பு போட்டுட்டுத்தானே இருக்கிறாங்க! நீங்களும் ஆரம்பிங்க!! நானும் புதுசாக் கிடைச்ச ஜப்பான் சமையற் குறிப்புப் புத்தகத்திலேருந்து எதையாவது இழுத்து விடுறேன்!
அதுசரி, உங்கட சமையற் குறிப்பிலே "தேவையான பொருட்கள்" பட்டியலிலே வெங்காயம்/உள்ளி இருக்கா? ;O)
அட ஆமா... இப்பத்தான் பாத்தேன். ஆனா அவங்க பண்டிகைக்கு பண்டிகைதான் பதிவு போடறாங்கோ..
***
நான் வெங்காயம் இல்லையின்னா சமையலே ஆரம்பிக்கிறதில்லை... உள்ளிக்கு பதிலா உள்ளி பேஸ்ட்தான் உபயோகிக்கிறது.. (புளிக்கு பதிலாவும் புளி பேஸ்ட்தான்)
உதென்ன கதை?
மெல்பேணிலயிருந்து சிட்னி வந்து "கத்தரிக்காய்ப் பச்சடி செய்வது எப்படி?" எண்டு வானொலியில நிகழ்ச்சி செய்திருக்கிறார் எங்கட ஆண்குல வலைப்பதிவாளர் ஒருவர்.
ஏதோ பொம்பிளைகளுக்குத்தான் சமையல் தெரியுமெண்ட மாதிரிக் கதைச்சுக்கொண்டிருக்கிறியள்
'மழை' ரொம்ப சூடா இருக்கு. :-))
நான் கல்லூரியில் படிக்கும்போது எங்க வீட்டுப்பக்கத்துலயே ப்ரஹ்மகுமாரிகள் camp நடந்துது. நானும் என் நண்பனும் 10 நாளும் போனோம், அப்புறமும் போனோம்.
'சிவன்' என்பதைவிட 'சிவம்' என்ற அளவில் அறியப்படுத்துகிறார்கள். இவர்கள் குறிப்பிடும் சிவன் புராணங்களினூடான பிம்பக்கடவுள் இல்லை.
எல்லோரும் 'ப்ரதர், ப்ரதர்' என்று விளித்தது பிடித்திருந்தது. :-)
முகமூடி - நீங்களும் புளி பேஸ்ட்தானா? :O)
வசந்தன் - அவரிட சமையல் அறிவைப் பற்றிக் கேள்விப்பட்டுத்தான் ஒரேயடியா சிட்னிக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறம். சயந்தன்ட திறமையை நீங்களாவது உபயோகப் படுத்துறீங்களோ?
க்ருபா - உண்மையைச் சொல்லுங்க -எல்லாரும் ப்ரதர் என்று கூப்பிட்டது பிடிச்சிருந்ததா? உதைக்குதே!! ;O)
கமான், ப்ரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்,
இப்ப என்ன நடந்து போச்சு?
பத்து நாளும் போனவருக்குப் பிடிக்காமயா இருந்திருக்கும்?:-)
வருடம் 1968. நாங்கள் திருவல்லிக்கேணியில் 15, வெங்கடாசல செட்டித் தெருவில் குடியிருந்தோம். அந்த வீட்டின் சொந்தக்காரர் W.P.K. ஐயங்கார். எங்கள் வீட்டு சமையற்காரர் வேலையிலிருந்து நின்று விட நானும் என் தந்தையும் சரியான சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். W.P.K. அவர்கள் மிக நன்றாக சமைப்பார். அவரிடம் எனக்கு சமையல் கற்றுத் தரச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன்.
சமையலைச் சொல்லிக் கொடுத்ததில்தான் அவர் செய்தப் புரட்சி அடங்கியுள்ளது.
முதல் பாடம்: சமையல் கஷ்டமே இல்லை. இந்தப் பொம்மனாட்டிகள்தான் தேவையில்லாது பந்தா செய்கிறார்கள்.
இரண்டாம் பாடம்: சாமான்கள் போடும் அளவுகள் ஒரு தகவலுக்காகவே கொடுக்கப்படுபவை. சிறிது முன்னே பின்னே இருந்தால் ஒன்றும் குடி முழுகிப் போகாது. சுவையில் மாற்றம் ஏற்படும். சில சமயம் அதுவே நமக்குப் பிடித்தும் போகலாம்.
மூன்றாம் பாடம்: சமையல் ஆரம்பிக்கும் முன்னர் வெவ்வேறு நிலைகளை மனதில் ஒத்திகைப் பார்த்துக் கொள்ளல் நலம். அதாவது அடுப்பு பற்ற வைப்பது, அரிசி களைவது, பருப்பு நனைப்பது, அரிசி மற்றும் பருப்பை இட்லிப்பானையில் ஒன்றாகச் சேர்த்து வேக வைப்பது, இதற்கிடையில் புளியை ஊற வைத்துக் கொள்ளல், கறிகாயை நறுக்கிக் கொள்ளல் ஆகிய நிலைகள் மனதில் குழப்பமின்றி அதனதன் வரிசையில் இருக்க வேண்டும். வேகவைக்க வேண்டியிருந்தால் கறிகாயையும் அரிசியுடன் கூடவே வேகவைத்துக் கொண்டால் நேரம் மிச்சமாகும்.
அக்காலக் கட்டத்தில் திரி ஸ்டவ்தான் உபயோகித்தோம். அதை எவ்வாறு பராமரிப்பது என்பதும் அவர் சொல்லிக் கொடுத்தப் பாடத்தில் அடங்கும். இதன் பலனாக நானும் என் தந்தையும் மிக விரைவாக சமையலில் தேர்ச்சி பெற்றோம்.
எல்லாவற்றையும் விட ஐயங்கார் அவர்கள் மனநிலையைத்தான் புரட்சிகரமானது என்றுக் குறிப்பிடுவேன். நங்கநல்லூரில் அப்பாவுடன் இருந்தக் காலத்தில் வீட்டில் எங்கள் இருவரில் யார் முதலில் வீட்டுக்கு வந்தாலும் சமையல் செய்து வைத்து விடுவோம். முக்கால் மணியளவில் ஒரு முழு சாப்பாடு தயார். ரேடியோவில் சினிமா பாட்டு கேட்டுக் கொண்டு, கையில் ஒரு ஜெர்மன் நாவலுடன் சமையல் செய்தக் காலம் நிஜமாகவே பொற்காலம்தான். உடம்பும் கண்ட ஹோட்டல் சாப்பாடு சாப்பிடாததால் பிழைத்தது.
இப்போது கூட அவ்வப்போது சமையல் செய்யும்போது அவரை நன்றியுடன் நினைத்துக் கொள்வேன். ஆனால் சமைக்கத்தான் வாய்ப்புகள் தருவதில்லை என் வீட்டம்மா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: மேலே கொடுத்தப் பின்னூட்டம் நான் ஏற்கனவே போட்ட பதிவாகும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/03/wpk.html
//சமையல் கஷ்டமே இல்லை//
டோண்டு ராகவன் - "சமையல் கஷ்டம்" இப்பிடிச் சொன்னாத்தான் கொஞ்சமாவது "பாவம்" பார்த்து உதவி கிடைக்கும். இல்லாட்டி முன்ன சொன்னமாதிரி நான் போட்ட ஒப்பந்தம் backfire ஆகிருது!! LOL!
துளசி - க்ருபா சொல்றார் என்றதுமே நம்பிடுறதா? ;O)
ஷ்ரேயா, எல்லாரும்னா எல்லாரும்தான், சந்தேகமே இல்லை.
அப்போ அங்க இருந்த எல்லாருக்குமே 16-23/24 வயசு rangeதான(்னாலும் இப்போ இருக்கற 'தெளிவு' அப்போ இல்லை). :-))
துளசி கோபால், ஒரு வேளை பத்து நாளும் போனதாலதான் புடிச்சுதோ என்னமோ தெரியலை(ன்னு யாராவது சொன்னா நம்பாதீங்க).
சரி சரி. இப்படி எல்லாம் பேசினா எங்க அவங்க தப்பா நெனச்(சாலும் கவலை இல்லை)சுப்பாங்க. ஆ(ஏன்)னா அந்த அவங்க யாருன்னே இன்னும் தெரியலை (அந்த அவங்க இனிமேல் அந்த அவங்க இல்லையாம்).
அண்ணே..க்ருபாண்ணே.. காலைக் காட்டுங்ணே!!
//துளசி கோபால், ஒரு வேளை பத்து நாளும் போனதாலதான் புடிச்சுதோ என்னமோ தெரியலை(ன்னு யாராவது சொன்னா நம்பாதீங்க).//
அதைத்தான் நானும் சொன்னேன்.. கேட்கிற மாதிரித் தெரியல்லயே!!(<< சிவாஜி ஸ்டைல்ல வாசிக்கணும்) :O)
//அந்த அவங்க இனிமேல் அந்த அவங்க இல்லையாம்//
அச்சச்சோ!!
நிறைய code எழுதிட்டீங்களோ? அடைப்புக்குறி மயமா இருக்கு!! ;O)
Post a Comment