வழமை போலவே என் பிற்பகல் பழச்சாற்றை உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன். அப்பிள், வாழைப்பழம், கரட், இஞ்சியுடன் எப்போதேனும் தோன்றினால் மாம்பழமும் அரைத்த சாறு. இதைத் தட்டச்ச ஆரம்பிக்க இரண்டு மூன்று நிமிடங்களுக்கு முன்பு உள்ளெடுத்த ஒருவாய்ச்சாறு மின்னல் போன்று ஒரு ஞாபகத்தைக் கிளப்பிப் போனது. வந்த ஞாபகம் மின்னல் போல என்று சொல்கிறேன் ஏனென்றால் வந்த வேகத்திலேயே மறைந்தும் விட்டதனால்.
குழாயூடாக வாய்க்குள் வந்த அந்தக் கொஞ்சச் சாறு தட்டியெழுப்பிய ஞாபகம் எனது சிறுபருவத்துப் பரிச்சய வாசனைகளிலோ அல்லது சுவையிலோ ஒன்று என்பது மட்டும் தெரிகிறது. என்னவென்று ஞாபகப்படுத்திக் கொள்ள மீண்டும் மீண்டும் உறிஞ்சிச் சுவைக்கிறேன். வலுக்கட்டாயமாகச் செய்யப்படும் எதுவும் இயல்புமில்லை அத்துடன் எதிர்பார்க்கும் பலனைத் தருவதுமில்லை என்று உணர்த்திச் செல்கிறது என் தொண்டையில் இறங்கிக் கொண்டிருக்கும் பழச்சாறு.
8 படகுகள் :
nice :-)
பழச்சாறா?
சாத்துக்குடிச் சாறுதான் பாத்துக்குடி
உன் தாகம் தீர இஷ்டம்போல ஊத்திக்குடி:-)
போட்டதுதான் போட்டியள், ரெண்டு மூண்டு சொல்லுகளா உடைச்சுப்போட்டிருக்கலாமே?
ஷ்ரேயா இது போல எனக்கும் தோன்றும். சட்டென்று ஒரு வாசனை எங்கிருந்தோ வரும். அது ஏதோ ஒரு மறந்து போன நினைவினை நினைவூட்ட முயற்சிக்கும். ஆனால் நினைவு வராது. பட்டென்று எழும் சந்தோஷமே அப்பொழுதைய இன்பம்.
எனக்கு தோன்றியதை வசந்தன் சொல்லியிருக்கிறார் (ஒருவேளை இப்படியோ, வசந்தன் சொன்னதே எனக்கும் தோன்றியது, :))
துளசி - புதுக்கவிதையா? ;O)
(சாத்துக்குடி என்டா என்ன? தோடம்பழமா?)
வசந்தன் & கலை - என்னத்தை உடைக்கச் சொல்லுறீங்க? விளங்கல்ல :O(
நன்றி உஷா, ராகவன். அந்தக் கணத்து இன்பம் நிலைப்பதில்லை.. என்ன ஞாபகம் என்று ஆராயத் தொடங்கும் போது அது ஓடி விடும். :O|
ஒவ்வொரு வரியும் ரெண்டு அல்லது மூண்டு சொல்லுகளாக இருக்கக்கூடியமாதிரி உடைச்சுடைச்சுப் போட்டிருந்தா நல்லம் எண்டு சொன்னன்.
அடுத்த முறை எழுதும்போது கவனத்திற் கொள்கிறேன் வசந்தன் (& கலை). சுட்டியதற்கு நன்றி.
Post a Comment