ஆடிக்கொண்டார்.. அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ..
ஆர நவமணி மாலைகள் ஆட, ஆடும் அரவம் படம் பிடித்தாட...
மீதிப்பாட்டு என்னதான் யோசித்தும் ஞாபகம் வரவில்லை. தெரிந்தால் சொல்கிறீர்களா?
அதோடு சேர்த்து இந்தப்பாட்டும்: கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி.. கையிலே வேல் பிடித்த கருணை சிவபாலனை.. (படத்தில வந்த அதேதானுங்கோ..)
நன்றி.
8 படகுகள் :
ஆடிக்கொண்டார்...அதை
சுதா பாடிக்கொன்றார்;-)
நன்றி அனோனிமஸ்
தனி மடல் பார்க்கவும்.
ஏன் ஸ்ரேயா இப்போது ஆஸ்திரேலியாவில் 'மழை' பெயவதில்லையா? உங்களை வலைப்பதிவு பக்கம் காண்பது குறைவாக இருக்கிறதே. இல்லை உங்கால் பக்கம் வந்த சயந்தன் தான் உங்களை வெருட்டி வைத்திருக்கின்றார் என்றால் கூறுங்கள்... மிச்சத்தை நான் பார்த்துக்கொள்கின்றேன் :-)
http://www.shaivam.org/tamil/sta_tandavar_u.htm#adikkondar
துளசி, superசுப்ரா - நன்றி.
டிசே - சயந்தன் வெருட்டேல்ல. வசந்தன் தான்! ;O)
அப்படியெல்லமொன்றுமில்லை. வேலை கொஞ்சம் அதிகமாகிப் போனதில் நேரம் கிடைப்பதில்லை / அப்படியே கிடைத்தாலும் எழுத யோசித்திருப்பதும் மறந்து போய்விடுகிறது. (ஏதாவது மருந்திருக்கா இதுக்கு?? )
என்ன ஷ்ரேயா இது? இருக்கவே இருக்கு நீங்க எனக்கு சொல்லித் தந்த மருந்து. :))
ஒரு குறிப்பெழுதும் கொப்பியுடன் எப்போதும் இருங்கோ. எழுத வரும் யோசனைகளை உடனுக்குடன் அந்த கொப்பியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நேரம் கிடைக்கும்போது எழுதுங்கோ.
என்ன சரிதானே? நீங்க சொன்ன மருந்தைக் கூட நீங்களே மறந்து விட்டீர்களே. :)
//இல்லை உங்கால் பக்கம் வந்த சயந்தன் தான் உங்களை வெருட்டி வைத்திருக்கின்றார் என்றால் கூறுங்கள்..//
நானே வெருண்டு போய்க் கிடக்கிறன்.. இதில இவர் வேறை..
Post a Comment