கொஞ்ச நாளாய் [26ம் மாடிக்கு வேலையில் குடி பெயர்ந்ததிலிருந்து என்று வாசிக்கவும் :O) ]கட்டடங்கள்/சாளரங்களைப் படமெடுக்கும் வியாதி வந்திருக்கிறது.
எடுத்தவற்றில் இரண்டு:
பட்டுத்தெறித்ததில் நெளிந்த யன்னல்
கொஞ்ச நாளாய் [26ம் மாடிக்கு வேலையில் குடி பெயர்ந்ததிலிருந்து என்று வாசிக்கவும் :O) ]கட்டடங்கள்/சாளரங்களைப் படமெடுக்கும் வியாதி வந்திருக்கிறது.
எடுத்தவற்றில் இரண்டு:
பட்டுத்தெறித்ததில் நெளிந்த யன்னல்
வகை: படம் பார்
Copyright 2009 - மழை - funcionando con orgullo en Blogger
Theme designed by: Ray Creations , HostingITrust.com , Raycreations.net
18 படகுகள் :
Not bad at all !!
Both photos had very good composition
படங்கள் நல்லா இருக்கு.
ஆமா, திங்கக்கிழமைவேலைக்கு வந்தவுடனே பதிவு?
ஓஓ.. இது போட்டபிறகு நேரம் இருந்தா அப்புறம் ஆஃபீஸ் வேலையோ?:-))))))))))))))))))))
நன்றி கார்திக் வேலு. எடுத்த படங்களைக் கணினியில் சேமித்தவுடன் இன்னும் சிலவற்றைப் பதிய உத்தேசம். எடுப்பது அநேகமாக செல். பேசியிலேயே.. அதனால் தெளிவில்லாமலிருக்க வாய்ப்புண்டு.
துளசீஈஈ...
இல்லைங்க. அதிசயமா நேத்து வீட்லேருந்து பதிஞ்சேன். ஆனா வகைப் படுத்த முடியவில்லை. அதான் அலுவலகம் வந்ததும், எட்டிப் பார்த்து வகைப்படுத்திட்டேன்... ;O)
வீட்டுலே கணினி சரியாப்போச்சா?
அப்ப இன்னும் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கலாமா?
பட்டுத்தெறித்தது நல்லாக இருக்கிறது.
26 ஆம் மாடியிலே படமெடுக்கோணுமெண்ட வியாதி வந்தால், பரவாயில்லை. பாயோணுமெண்ட வியாதி வந்தாத்தான் யோசிக்கோணும் ;-)
வாழ்க்கையே பல படங்களின் கோர்வைதானே ஷ்ரேயா... !!!
(சும்மா தத்துவார்த்தமா ஏதும் சொல்ல எண்டு....)
:-)
படங்கள் ஒரு ரைப்பா இருக்கு.
துளசி - அதெல்லாம் சரியாப் போச்சு. ஆனா கைவைக்கத்தான் நேரங்கிடைக்குதில்ல. அலுவலகமிருக்கப் பயமேன்? ;O)
நன்றி பெயரிலி. பாயோணுமெண்டு நினைச்சாலும் பாயேலாது. திறக்க முடியாத கண்ணாடி யன்னல்கள்.. :O)
பொடிச்சி - நானே ஒரு மார்க்கமாமெண்டு கனபேர் சொல்லியிருக்கினம்.. ;O) படங்கள் அப்பிடியிருக்கிறதில ஒன்டுமில்லத்தானே..
பி.கு: தத்துவம் நல்லாருக்கு. logoவா எடுத்துக் கொள்ளட்டுமா?? :O)
படங்கள் நன்றாயிருக்கின்றன.
ஷ்ரேயா, படங்கள் வித்தியாசமாயிருக்கின்றன. இன்னும் கொஞ்சம் பெரிதாய்ப் போட்டு படங்காட்டினால் நன்றாகவிருக்கும் போலத்தோன்றியது. படங்களைப் பார்க்கும்போது சிக்கலான arithmetric பின்னணியில் இருக்கின்றது போலத்தோன்றுகிறது :-).
Not sure if everyone is facing this problem, your blogs seems to not use Unicode UTF-8 encoding.
Evertime ..I need to change the encoding in the browser .
I dont see this problem with many other tamil blogs.
டிசே: எனக்குக் கணக்குக் கொப்பிதான் ஞாபகம் வாறது :O)
கார்திக்வேலு: ரெம்ப்ளேட்டைப் பார்க்கிறேன். சொன்னதற்கு நன்றி.
கார்திக்வேலு: //Not sure if everyone is facing this problem, your blogs seems to not use Unicode UTF-8 encoding.//
இப்ப சரியாத் தெரிகிறதா என்றொரு முறை பார்த்துவிட்டு mazhaipenn.shreya at gmail.comஇற்கு மயில் தூது விடுறீங்களா?
படங்கள் அருமை, அது சரி வைகாசி மாதத்தில் 28 நாட்கள் ஆகிவிட்டனவா?
ஓமோம். கார்த்திக் வேலுவின் பிரச்சினை இவ்வளவு காலமும் எனக்கும் இருந்து வந்தது தான்.
இண்டைக்கு எல்லாம் சரியா இருக்கு.
சரியாகிட்டுதெண்டாச் சரி. :O)
Post a Comment