பிரேமலதாவுக்குச் சொன்னாலுஞ் சொன்னன்.. இப்பத்தான் படம் போட நேரம் வந்திருக்கு! எல்லாமே செல்.பேசில எடுத்த படங்கள்.
நிறைய நாளாகுது பணியாரஞ் செய்து சாப்பிட்டு. பணியார உதவி: கஸ்தூரிப்பெண். (பக்கத்தில இருக்கிறது கரட் அல்வா, சப்பாத்தி):
வடிவாயிருக்கும் என்டு தோணினா போக வரேக்க செல்.பேசில சுடுறதுதான். அப்பிடிச் சுட்ட பூக்கள்:
சீசனில முதன் முதலா எங்களுக்கு இரையாகப் போகுதெண்டு தெரியாமலே (ஒருதருஞ் சொல்லிராதீங்க!!)ஒருக்காத் தொட்ட கையில வாசம் மிச்சம் வைச்சிட்டுப் போற மாம்பழம். ம்ம்... புட்டவிக்கிறதா இல்லாட்டி சாப்பிட்ட பிறகு சாப்பிடுறதா?
நா. ப. கா 2
Posted by
`மழை` ஷ்ரேயா(Shreya)
08 October 2006
வகை: படம் பார்
17 படகுகள் :
/நிறைய நாளாகுது பணியாரஞ் செய்து சாப்பிட்டு/
உங்கட ஊரிலையும் உதை பணியாரம் எண்டா சொல்லுவினம்?
....
/வாசம் மிச்சம் வைச்சிட்டுப் போற மாம்பழம். ம்ம்... புட்டவிக்கிறதா இல்லாட்டி சாப்பிட்ட பிறகு சாப்பிடுறதா?/
மாம்பழம் கொய்யாப்பழம் சைஸில் இருப்பதால் உங்களுக்குப் போதாமல் இருக்கும். எனவே இங்கால் பக்கம் அனுப்பிவிடவும். உண்மையில் இது மாம்பழமா இல்லை கொய்யாப்பழமா என்று ஆராய்ச்சி செய்ய :-).
சனிக்கிழமைக்கு இன்னும் நாள் இருக்கே.
இப்பவே பணியாரம் செஞ்சு வச்சுட்டா ஆறிப்போயிறாதா? :-)))))
உந்தப்பணியாரம் எல்லாம் எங்கட வலைப்பதிவாளர் சந்திப்புக்கும் வருமே
டிசே - ஊரில இப்பிடியொண்டு சாப்பிட்டதேயில்ல. ஏதோ பிரேமலதாவும் கஸ்தூரிப்பெண்ணும் "குழிப் பணியாரம்" எண்டு சொல்லிச்சினம். அவ்வளவுதான்.
மாம்பழத்தை ஆராய்ச்சிக்கு அனுப்பிறதோ..ஆசை தோசை.. காத்திருந்து காத்திருந்து இப்பத்தான் ஒரு மாதிரிக் கைக்கு வந்திருக்கு. அதுவும் மதி மாம்பழங்களைப் பெட்டி பெட்டியாப் படமெடுத்துப் போட்டதிலேருந்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தனான்!! :O)
துளசி - சனிக்கிழமைக்குனு செஞ்சு வைச்சிருந்தா இவ்வளவுக்கும் புதுசா ஒரு நாகரிகமே அந்தப் பணியாரங்களில உருவாகி பல்கிப் பெருகியிருக்கும்.
இதெல்லாத்தையும் safeஆ அப்பவே எங்க வயித்துக்குள்ள அனுப்பியாச்சு. :O)
பிரபா - பணியாரம் வருமோ எண்டு அதைச் செய்தவவைத்தான் கேட்கோணும்.. நான் உதவியாளர் பணி மட்டுமே. :O)
இந்தப் பணியாரம் இல்லாம சந்திப்பா? அன்னதானக் கியூவில கால்கடுக்க நிக்கப்பண்ணப் போறீங்கள் போல கிடக்கு.
இதென்ன கனக்ஸ் திட்டமெல்லாம் இப்பிடிப் போட்டுடைக்கிறீங்க!! :O))
சூப்பர். நானும் அன்னையிலேருந்து என்ன போடப்போறீங்களோ, ஏது போடப்போறீங்களோன்னு பயந்துக்கிட்டேயிருந்தேன்.
பணியாரமா. சூப்பர்:))
இதுக்கெல்லாமா பயப்படுவாங்க! "மறத் தமிழச்சி".. "வீராங்கனை"னு உங்களப்பத்தி நினைச்சிட்டிருக்கேன்.. :O)) இப்பிடி சொல்லிட்டீங்களே.
Hi
Sorry for the spam, but I think you will be interested in www.pdstext.com, an online Unicode word processor for Tamil and English that we have developed.
You can also use the site search Google, Yahoo! and MSN in Tamil.
I look forward to your feedback. If you like the service, do spread the word among Tamil-speaking friends.
C Ramesh
எல்லாருக்கும் அனந்த கோடி நமஸ்காரமுங்க!
வேல தலைக்குமேல இருக்கறதால தலமறைவா இருக்காலாமுன்னா உடமாட்டேங்கறாங்கப்பா!!!!!!
அரவமில்லாம ஆச்சரியம் தரலாமுன்னாலும் உடமாட்டேங்கிறாங்க!!!!
இதுக்குதான் சந்திப்ப எங்கட வீட்டுல வைக்கலாமுன்னது. யாரு நம்ப பேச்ச கேக்குறது!!!!
இப்படி அங்கலாயிக்கிறதே பழக்கமாயிட்டது, என்ன பண்றது????
தின்ன பணியாரமும், மாங்கனியும் இப்பதான் செரிச்ச மாதிரி இருக்கு
/டிசே - ஊரில இப்பிடியொண்டு சாப்பிட்டதேயில்ல. ஏதோ பிரேமலதாவும் கஸ்தூரிப்பெண்ணும் "குழிப் பணியாரம்" எண்டு சொல்லிச்சினம். அவ்வளவுதான்/
ஏன் கேட்டேன் என்றால், நாங்கள் வேறு பெயரில்தான் ஊரில் இருக்கும்போது இதை அழைப்போம்...அதுதான்....
http://padamm.blogspot.com/2006/06/blog-post_114934635973409505.html
அட பணியாரத்த!! :O))
குண்டுத் தோசையை மறந்து போனனே...
அப்ப இதை நான் முன்னமே சாப்பிட்டிருக்கிறன்! நன்றி டிசே. (எனக்கு ஞாபகப் படுத்தியதற்காக இன்றைக்கு(ம்) அசின் கனவில வரக் கடவது! ;O)
ம்.
'பச்சைத்தண்ணியில பணியாரம் சுடுறது' எண்ட சொலவடை ஞாபகம் வருது.
வலைப்பதிவிர் சந்திப்பில பாப்பம் உண்மயில அப்பிடிப்பட்ட கேசுகள் தானோ எண்டு.
என்ன இப்பிடிச் சொல்லிப் போட்டீங்க தெ.து.வ.ச தலைவரே...
வரக் கிடைக்கேல்ல என்டு எரிச்சலோ? ;O)
//தெ.து.வ.ச தலைவரே.../
ஏன் இடையில 'த' விட்டிட்டியள்?
"தென் துருவ 'தமிழ்' வலைப்பதிவாளர் சங்கம்" எல்லோ?
மன்னியுங்கோ தெ.து.த.வ.ச.தலைவரே.
(நீங்க பதவி விலகின செய்தி வெறும் வதந்தி போல!!)
:O)
தோழி,
வீராங்கனையெல்லாம் மஹாரஷ்ட்ராக்காரங்களாச்சே. அதான், லக்குமிபாய்தானே வீராங்கனைன்னு சொல்றது?
:D (ஸோக்கடிக்க முயற்சியெடுத்தேன். ஹி. ஹி. சரியா வரலைன்னா கண்டுக்காதீங்கோ. :D )
Post a Comment